அரட்டையின் அறிமுகம்.
➦➠ by:
ராஜலக்ஷ்மி பரமசிவம்
வாங்க .....வாங்க....... வாங்க.........ஆடிப் பதினெட்டு கொண்டாடி, கலந்த சாதம் சாப்பிட்டாச்சா ? இப்ப என்னோடு அரட்டை அடிக்க வருகிறீர்களா? எதைப்பற்றி வேண்டுமானாலும் அரட்டை அடிப்போம் வாங்க.....
சீனா ஐயா இந்த மண்டபத்தை ஒரு வாரத்திற்கு " அரட்டை "க்கு கொடுத்திருக்கிறாரே. பற்பல ஜாம்பவான்கள் ஆசிரியராக அமர்ந்த நாற்காலியில் நானா...... என்கிற என் தயக்கத்தை நாசுக்காக , ஜாடை மாடையாக சொல்லிப் பார்த்தேன். ஆனால் அவர் விடுவதாயில்லை. எனக்காக வலைச்சர மண்டபத்தின் கதவுகளைத் திறந்து விட்டுப் போய் விட்டார். அவரே ரிஸ்க் எடுக்கத் துணிந்திருக்கிறாரே. அப்புறம் நமக்கென்ன (நாற்காலி ஆசை யாரை விட்டது சொல்லுங்கள்). அவருக்கு நன்றி கலந்த வணக்கத்தை சொல்லிக் கொண்டு என் அரட்டையை ஆரம்பிக்கிறேன்.
இங்கே பலமுறை என்னை அறிமுகப்படுத்திய ஆசிரியர்கள் அனைவருக்கும் முதலில் என் நன்றியை சொல்லிக் கொள்கிறேன்.
இவ்வளவு அரட்டை என்கிற வார்த்தை வரும்போதே உங்களுக்குப் புரிந்திருக்குமே . ஆமாம்.......நீங்கள் யூகித்தது கரெக்ட். கடந்த ஒன்றரை வருடமாக " arattai " என்கிறத் தளத்தில் எனக்குத் தோன்றுவதை எல்லாம் கிறுக்கிக் கொண்டு வருகிறேன். இன்னமும் கற்றுக் கொள்ளும் நிலையில் தான் இருக்கிறேன் . அதனால் சொற்பிழை, பொருட்பிழை பொறுத்தருளுங்கள்.
எழுத வேண்டும் என்கிற ஆசை என் பணி ஓய்வுக்குப் பின்னரே சாத்தியமானது. பெண்ணும்,பிள்ளையும் திருமணமாகி பாட்டிப் பதவியும் ஓடி வந்து ஒட்டிக் கொண்ட பிறகு தான் அரட்டை அடிக்க ஆரம்பித்திருக்கிறேன்.
அரட்டை மட்டும் அடிப்பவள் என்று நினைத்து விடப் போகிறீர்கள். வேறு சிலருக்கும் இம்சை கொடுத்துக் கொண்டிருக்கிறேன். வீட்டில் எல்லோரும் என் சமையலை ரசித்து சாப்பிடுவார்கள். உண்மை..... நம்புங்கள். நம்பாவிட்டால்" அஞ்சறைப் பெட்டி "யில் இருக்கும் சிலவற்றை ( அஞ்சறைப்பெட்டியில் இருப்பதே கொஞ்சம் தான் ) சமைத்துப் பாருங்கள் ருசி தூக்கியடிக்கும் .அதையே ஆங்கிலத்தில் மொழிப் பெயர்த்து " Raji's Kitchen " இல் எழுதியிருக்கிறேன்.
தமிழில் மட்டும் என் இம்சை இருந்தால் போதாது என்று ஆங்கிலத்தில் குழந்தைகளுக்கு " My Story Court " இல் நம் புராணக் கதைகளை சொல்லி வருகிறேன்.
அரட்டையில் நான் எழுதிய சிலவற்றைப் பற்றி சொல்கிறேன் கேளுங்களேன்.....
சரித்திரப் பாடத்தை பள்ளிகளில் எல்லோருமே படித்திருப்பீர்கள். என் தோழி
ராசி சரித்திரம் படைத்ததைப பற்றி இங்கே படித்து சிரிக்கலாம்.
இப்பொழுதெல்லாம் டிவியில் " விசில் பிளோயர் " என்று அடிக்கடி சொல்லிக் கொண்டே இருக்கிறார்கள். அதைப் பார்க்கும் போதெல்லாம் என் வீட்டில் விசில் சத்தம் நினைவிற்கு வரும். நீங்களும் படியுங்களேன்.
நான் மாமியாரிடம் பாட்டு வாங்கியதைப் பற்றித் தெரிந்து கொள்ள ஆசையா? " மாமியாரும் ஜாடியும் " என்னும் தலைப்பில் எழுதியிருக்கிறேன். படித்துத் தெரிந்து கொள்ளுங்கள்
முறத்தால் புலியை விரட்டியவர்கள் நம் சங்ககாலப் பெண்கள் . அது நம்மால் முடியாது. ஆனால் புலியோ தாம்பரம் வரை வந்து விட்டதாம் . வீட்டிற்குள் புலி வந்தால் சமாளிப்பது எப்படி என்பதை " புலியும் நானும் " சென்று படித்துக் கொள்ளுங்கள் உபயோகமாயிருக்கும்.
வெளிநாடு செல்கிறீர்களா? அவசியம் " உஷார் ரிபோர்ட் " படித்து விட்டு செல்லுங்கள்.
ரொமான்ஸ் எல்லா வயதினரையும் சுண்டியிழுக்கும் வார்த்தை . ராசியின் ரொமான்ஸ் ரகசியங்கள் இங்கே !
ராசியைப் பற்றி அடிக்கடி சொல்கிறேனோ? நான் எழுதிய அப்பாவி விஷ்ணு என்கிற மின்னூலில் ராசியின் லூட்டிகள் நிறைய படிக்கக் கிடைக்கும். நான் சொதப்பிய சம்பவங்கள் சிலவற்றையும் " சிரிக்க வைக்கும் சொதப்பல்கள் "/என்கிற மின்னூலில் தொகுத்திருக்கிறேன்.தரவிறக்கி படித்தால் ரசித்து சிரிப்பீர்கள்.
நான் எழுதிய சிறுவர்களுக்கான " Rama Story " ," Dhruva &other stories " என்கிற ஆங்கில மின்னூல்களையும் இங்கே தரவிறக்கிக் கொள்ளலாம் .
போதும் உன் தம்பட்டம் என்று நீங்கள் நினைப்பதுக் கேட்கிறது. வலைத் தளங்களை அறிமுகப்படுத்துவதற்கு எனக்குத் தகுதி இருக்கிறதா என்று தெரியவில்லை. அதனால் ,நாளை முதல் நான் படித்து ரசித்த சில வலைத் தளங்களைப் பற்றிய செய்திகளை உங்களுடன் பகிர்ந்து கொள்கிறேன்.
நாளை சந்திப்போம் .........
|
|
நீங்களும் ஒரு ஜாம்பவதிதான். இதிலென்ன சந்தேகம்..? உங்களின் சுயதம்பட்டம் (உங்கள் வார்த்தைகளில்) நன்றாகவே இருக்கிறது. இதேபோல சிறப்பாக வரும் நாட்களில் அறிமுகங்களும் இருக்கும் என்கிற எதிர்பார்ப்புடன் நாளையும் வருகிறேன் மேம்.
ReplyDeleteஉங்களின் கருத்துக்களுக்கு நன்றி கணேஷ் சார்.
Deleteகல்கலப்பான அறிமுகம் .. வாழ்த்துகள்..!
ReplyDeleteஉங்கள் வாழ்த்துக்களுக்கு நன்றி மேடம்.
Deleteவருக.. வருக.. தங்களுக்கு நல்வரவு!..
ReplyDeleteவலைச்சரத்தில் பணி சிறக்க நல்வாழ்த்துக்கள்!..
உங்களின் வாழ்த்துக்களுக்கு நன்றி சார்.
Delete***போதும் உன் தம்பட்டம் என்று நீங்கள் நினைப்பதுக் கேட்கிறது**
ReplyDeleteஎன்ன இப்படி சொல்லீட்டீங்க?
பதிவர்களைத்தானே அறிமுகம் செய்துகொண்டு இருக்கீங்க? முதல் பதிவராக நம்ம அரட்டை ராஜலக்ஷ்மி அவர்களை நீங்க வலைச்சர ஆசிரியை ராஜலக்ஷ்மியாக இருந்து அறிமுகம் செய்து இருக்கீங்க.
நல்ல ஆரம்பம்! தொடருங்கள்! :)
உங்கள் ஊக்குவிப்புக்கு மிக்க நன்றி வருண்.
Deleteவாழ்த்துகள் அம்மா!
ReplyDeleteவாழ்த்துக்களுக்கு நன்றி தியானா.
Deleteஉங்களின் சில பதிவுகள் படித்தேன். ரசனையாய் இருந்தது. வலைச்சர ஆசிரியப் பணிக்கு வாழ்த்துக்கள்.
ReplyDeleteஎன்பதிவுகளை ரசித்துப் படித்ததற்கும், வாழ்த்துக்களுக்கும் நன்றி எழில்
Deleteசுய அறிமுகம் அருமை. பாராட்டுக்கள். வாழ்த்துகள்.
ReplyDeleteஉங்கள் வாழ்த்துக்களுக்கும் பாராட்டிற்கும் நன்றி கோபு சார்.
Deleteஅழகான அரட்டையில் சுய அறிமுகம். தங்கள் தளம் சென்று பார்க்கிறேன். வாழ்த்துக்கள்.
ReplyDeleteஎன் தளத்திற்கு வருகை புரிவதற்கும் , வாழ்த்துக்களுக்கும் நன்றி உமையாள் காயத்ரி.
Deleteஏற்கனவே படித்து இருந்தாலும் மீண்டும் அவைகளைப் படிக்கச் சொல்லும் உங்கள் அறிமுகம் வெகு லாவகம்! வாழ்த்துக்கள்!
ReplyDeleteத.ம.2
உங்கள் வாழ்த்துக்களுக்கும், தமிழ்மண வாக்கிற்கும் நன்றி தமிழ் சார்.
Deleteவாருங்கள் அம்மா, சரியான வேலையை கொடுத்து விட்டீர்கள், அனைத்திலும் நுளைந்து பிறகு வருகிறேன்.
ReplyDeleteஎன் தளத்திற்கு வருகை புரிவதற்கும் , அன்பான் வரவேற்பிற்கும் நன்றி Killergee.
Deleteவணக்கம்
ReplyDeleteஅம்மா.
இந்த வாரம் வலைச்சரத்தில் சிறப்பாக அசத்த எனது வாழ்த்துக்கள்.
ரூபனின் எழுத்துப்படைப்புக்கள்: தீபாவளித் திருநாளை முன்னிட்டு உலகம் தழுவிய மாபெரும...: தீபாவளித் திருநாளை முன்னிட்டு ரூபன் &யாழ்பாவாணன் இணைந்து நடாத்தும் உலகம் தழுவிய மாபெரும் கவிதைப் போட்டி-2014 போட்டி...
-நன்றி-
-அன்புடன்-
-ரூபன்-
உங்கள் வாழ்த்துக்களுக்கு நன்றி ரூபன்.
Deleteஉங்கள் கவிதைப் போட்டி தகவல் அறிந்தேன்.எனக்கும் கவிதைக்கும் தூ...............................ரம் கொஞ்சம் அதிகம். அதனால் யாரையும் இம்சிக்க வேண்டாம் என்று தீர்மானித்திருக்கிறேன். பார்வையாளராய் இருந்து ரசிக்கிறேன். நன்றி ரூபன்.
அறிமுகம் சிறப்பு! சிலபதிவுகளை வாசித்தது இல்லை! வாசிக்கிறேன்! தொடருங்கள்! வாழ்த்துக்கள்!
ReplyDeleteஉங்கள் வருகைக்கும், வாழ்த்துக்களுக்கும் நன்றி சுரேஷ்.
Deleteஅட! இந்த வாரம் உங்களின் அரட்டை கச்சேரியா வலைச்சரத்தில்? வாழ்த்துக்கள்! அசத்துங்கள்!
ReplyDeleteஉங்களுடைய எல்லா பதிவுகளையும் படித்திருப்பதால் நாளையிலிருந்து உங்களின் மூலம் இங்கு வலம் வரப் போகிறவர்களை ஆவலுடன் எதிர்பார்க்கிறேன்.
அன்புடன்,
ரஞ்சனி
என்னுடைய அரட்டை கச்சேரியை ஆர்வத்துடன் எதிர்பார்ப்பதற்கும், உங்கள் வாழ்த்துக்கும் நன்றி ரஞ்சனி.
Delete( சொதப்பாமல் இருக்க வேண்டுமே என்று ஆண்டவனை வேண்டிக் கொண்டிருக்கிறேன் ரஞ்சனி)
///பற்பல ஜாம்பவான்கள் ஆசிரியராக அமர்ந்த நாற்காலியில் நானா...///
ReplyDeleteவலைச்சரத்தில் எழுதும் போது இப்படி ஒரு டெம்ப்ளேட் வரி கண்டிப்பாக எழுத வேண்டும் என்பது ரூல்ஸா?
காரணம் இங்கு எழுத ஆரம்பிக்கும் அனைவரும் பிள்ளையார் சுழி போட்டு எழுத ஆரம்பிப்பது போல சீனா ஐயாவிற்கு நன்றி தமிழ்வாசிக்கு நன்றி. ஜாம்பவான்கள் ஆசிரியராக இருந்த இடம் என்று எழுதுகிறார்கள்.
சரி சரி நான் கலாய்ப்பது கண்டு பயப்படாமல் தைரியமாக எழுதுங்கள்..
தைரியம் கொடுப்பதற்கு நன்றி MTG
Deleteபரமசிவன்... உங்கள் அறிமுகம் எதோ... "கருடா செளக்கியமா" என்று கேட்பதை போல் இருந்தது. அறிமுகம் அட்டகாசம். வாழ்த்துக்கள்!
ReplyDeleteவாழ்த்துக்களுக்கு நன்றி விசு சார்.
Deleteவலைச்சர ஆசிரியரானதற்கு இனிய நல்வாழ்த்துக்கள்!!
ReplyDeleteமனோ மேடம்,
Deleteநீங்கள் தான் என்னை முதன் முதலாக வலைச்சரத்தில் அறிமுகப்படுத்திய ஆசிரியர்.
உங்களுக்கு நினைவிருக்கும் என்று நினைக்கிறேன்.
என்னை இங்கே முதன் முதலாக அறிமுகப்படுத்தியதற்கும், வாழ்த்துக்களுக்கும் மிக்க நன்றி மேடம்.
இந்த வாரம் உங்கள் அரட்டை கச்சேரி களைகட்டப் போகிறது..... வாழ்த்துகள்....
ReplyDeleteவாழ்த்துக்கள் ராஜலக்ஷ்மி, உங்கள் பதிவுகள் எல்லாம் படித்து இருக்கிறேன்.
ReplyDeleteஉங்கள் பதிவின் ரசிகை.
இனி அருமையான கல கலப்புதான்.
தங்களின் அரட்டை சுவாரசியமாக அமைய வாழ்த்துக்கள்.
ReplyDeleteதங்களின் தளத்திற்கு சென்று பார்க்கிறேன்.
சிறந்த அறிமுகங்கள்
ReplyDeleteதொடருங்கள்