வலைச்சரத்தில் மூன்றாம் நாள்
➦➠ by:
ஜெயந்தி ரமணி
நேற்று இங்கு வருகை
புரிந்து வாழ்த்திய, பாராட்டிய அன்பு உள்ளங்களுக்கு மனமார்ந்த நன்றி.
எண் சாண் உடம்பிற்கும்
எது பிரதானம்?
என்ன சிரசா?
ஐ. இப்ப இப்படித்தான்
சொல்லுவீங்க. ஆனா அடுக்களையில இருந்து அம்மாவோ,
மனைவியோ சமைக்கும் போது வரும் வாசம் அப்புறம் ஹோட்டல்ல பக்கத்து டேபிள்ள இருந்து சுடச்சுட
ஆவி பறக்கற வெங்காய பஜ்ஜியின் வாசம், இல்ல
உங்களுக்கு பிடிச்ச ஒரு உணவுப் பண்டத்தை பார்த்தா உங்களை சொல்ல வைக்கும். என்ன சொல்ல
வைக்கும்? ‘எண் சாண் உடம்பிற்கும் வயிறே பிரதானம்’ அப்டீன்னு.
நம்பள்ளாம் யாரு. அறுசுவையோட எதையாவது கலந்து, ஏழாவது சுவை கண்டு
பிடிக்கிற ஆளு, என்ன நான் சொல்றது சரிதானே. பசி கொண்ட நேரம் தாளிக்கும் ஓசை கூட சங்கீதமா தானே
தெரியும்.
அதனால இன்னிக்கு
அறுசுவை தளங்களைப் பார்ப்போமா?
இவருதான் உண்மையா
இத செய்தாரா இல்ல இவர் மனைவியார் செய்தாரா என்பதை அடுத்த முறை அவங்களை சந்திக்கும்
போது ரகசியமா கேட்டு உங்களுக்கு சொல்றேன். அதுவரைக்கும் பொறுமையா இருங்க.
அறுசுவை.காம்.
இந்தத் தளத்தை பத்தி சொல்லியே ஆகணும். இந்தத்தளம் என்னைப்போல் நிறைய பேருக்கு தாய்
வீடு. என்னுடைய எழுத்து முதன் முதலில் அங்கீகரிக்கப்பட்டது
இங்கு தான். எத்தனை தோழிகள், எத்தை சமையல்
குறிப்புகள். அப்பப்பா. இங்கிருந்து வந்தவர்கள்தான்
நான் இனி குறிப்பிடப்போகும் வலைப்பூ உரிமையாளர்கள் நான் உட்பட.
1.
சாதிகா – பெயரைச் சொல்லும் போதே ‘மாமி’ என்று என்னை
அவர் அழைத்து சிரிப்பது என் காதில் ஒலிக்கிறது.
வலைப்பூ தொடங்க வேண்டும் என்று சொன்னதும் முதலில் ஊக்குவித்தது இவர் தான். http://shadiqah.blogspot.in/
2.
ஜலீலா
கமல் – நான் ப்ளாக் தொடங்கி இருக்கேன்னு சொன்ன உடனே எனக்கு மெயில் அனுப்பி, ‘மாமி,
நான் வலைச்சர ஆசிரியர் ஆகப் போகிறேன். உடனே
உங்கள் வலைப்பூவின் விவரங்களை அனுப்புங்கள்’ என்று கேட்டு என் வலைப்பூவை முதன் முதலாக
வலைச்சரத்தில் அறிமுகப் படுத்தியவர்.
3.
இவங்களோட
வலைப்பூவைப் பத்தி சொல்லலைன்னா எனக்கு தலையே வெடிச்சுடும். புதுசு புதுசா சமையல் குறிப்புகளை கண்டு பிடிச்சு
செய்யறதில இவருக்கு இணை இவரே தான்.
4.
நல்லதொரு தோழி இவர். ஆசியா உமர்.
இவர் வலைப்பூவுக்கும் கொஞ்சம் எட்டித்தான் பாருங்களேன்.
5.
என்ன
இவர்களின் வலைப்பூக்கள் கொஞ்சம் ஊர்வன, பறப்பன, நடப்பன, தாவுவன எல்லாவற்றாலும் நிறைந்திருக்கும். இருந்தாலும் பரவாயில்லை. நான் அன்னப்பறவையாகி எனக்குத் தேவையான சைவக்குறிப்புகளை
மட்டும் எடுத்துக் கொள்கிறேனே.
சரி
கடைசியாக ஒரு விலை மதிப்பில்லாத இணைப்பு:
கோபு
அண்ணாவின் அன்புப் பரிசு.
என்
எழுத்து, உங்கள் பார்வைக்கு
இன்னும் கொஞ்சம்
அறுசுவைத் தோழிகளின் வலைப்பூக்களை நாளை பார்க்கலாமா?
இப்பொழுது தற்காலிகமாக விடை பெறுகிறேன். நன்றி.
|
|
அறுசுவைகள் மிளிரும்
ReplyDeleteஅருமையான தளங்களின்
அறிமுகங்கள்..
அனைவருக்கும் வாழ்த்துகள்.. பாராட்டுக்கள்..!
திருமதி இராஜராஜேஸ்வரி
Deleteவாழ்த்துக்கும், பாராட்டுக்கும் மனமார்ந்த நன்றி.
அன்புடன்
ஜெயந்தி ரமணி
வணக்கம்
ReplyDeleteஅம்மா.
இன்றைய வலைச்சர அறிமுகங்கள் அனைவருக்கும் வாழ்த்துக்கள் தொடருகிறேன் பதிவுகளை
-நன்றி-
-அன்புடன்-
-ரூபன்-
திரு ரூபன்
Deleteவருகைக்கும், வாழ்த்துக்கும் மனமார்ந்த நன்றி.
எண்சாண் உடம்பிற்கு எது பிரதானம்?..
ReplyDeleteசந்தேகமில்லாமல் வயிறுதான்!..
வயிறார உண்டு மனதார வாழ்த்துவது தான் - எத்தனை இன்பம்!..
இன்றைய சுவையான தொகுப்பில் - மகிழ்ச்சி!.. வாழ்க நலம்!..
திரு துரை செல்வராஜூ
Deleteவருகைக்கும், வாழ்த்துக்கும் மனமார்ந்த நன்றி.
அன்புடன்
ஜெயந்தி ரமணி
சமையல் பதிவர்களின் அறுசுவை விருந்தை பகிர்ந்தமைக்கு வாழ்த்துக்கள்! நன்றி!
ReplyDeleteஇன்றைய வலைச்சர அறிமுகங்கள் அனைவருக்கும் வாழ்த்துக்கள், அம்மா
ReplyDeleteஅண்புடன்
கில்லர்ஜி.
//சுடச்சுட ஆவி பறக்கற வெங்காய பஜ்ஜியின் வாசம், இல்ல உங்களுக்கு பிடிச்ச ஒரு உணவுப் பண்டத்தை பார்த்தா உங்களை சொல்ல வைக்கும். என்ன சொல்ல வைக்கும்? ‘எண் சாண் உடம்பிற்கும் வயிறே பிரதானம்’ அப்டீன்னு. //
ReplyDelete;) கரெக்டூஊஊஊஊஊ.
>>>>>
எங்கடா இன்னும் வெங்காய பஜ்ஜி வாசம் திருச்சிக்கு போய எட்டலயேன்னு நினைச்சேன்.
Delete//பசி கொண்ட நேரம் தாளிக்கும் ஓசை கூட சங்கீதமா தானே தெரியும்.//
ReplyDeleteநிச்சயமாக ..... அதே அதே ...... என்னைப்போலவே இதை மிகவும் ரஸித்து வெகு அழகாகச் சொல்லியுள்ளீர்கள் .... ’ஜெ’.
ஸ்பெஷல் பாராட்டுக்கள்.
>>>>>
ஆமாம். பசிக்கும் போதுதானே தெரியும்.
Delete//இவருதான் உண்மையா இத செய்தாரா இல்ல இவர் மனைவியார் செய்தாரா என்பதை அடுத்த முறை அவங்களை சந்திக்கும் போது ரகசியமா கேட்டு உங்களுக்கு சொல்றேன். அதுவரைக்கும் பொறுமையா இருங்க.
ReplyDeletehttp://gopu1949.blogspot.in/2012/12/blog-post_14.html//
இப்படியொரு சந்தேகமா ! பெரும்பாலும் என்னவளே செய்திருக்கிறாள்.
ஒருசில சந்தர்ப்ப சூழ்நிலைகளில் நானும் செய்திருக்கிறேன்.
ஆனாலும் எனக்கு இதையெல்லாம் சொல்லிக்கொடுத்த குருநாதர் அவளே.
அவளுக்குச்சொல்லிக்கொடுத்த குருநாதர் எங்க அம்மா.
அந்த சந்தர்ப்ப சூழ்நிலைகளைப்பற்றி விலாவரியாக இதோ இந்தப்பதிவினில் எழுதியுள்ளேன்.
http://gopu1949.blogspot.com/2011/03/blog-post_26.html
தலைப்பு “உணவே வா ! ...... உயிரே போ !!
[சமையல் பற்றிய நகைச்சுவை]
அந்த என் [தத்தித்தத்தித் தவழும்] வலையுலக ஆரம்ப காலத்திலேயே 105 கமெண்ட்ஸ் பெற்றுத்தந்ததாக்கும், அந்தப்பதிவு.
>>>>>
நீங்க யாரு?.. கிராமத்துல ஓடற ரயிலை இடது கையாலயே நிறுத்தினவருன்னு எனக்கு தெரியுமே.
Delete//அந்த என் [தத்தித்தத்தித் தவழும்] வலையுலக ஆரம்ப காலத்திலேயே 105 கமெண்ட்ஸ் பெற்றுத்தந்ததாக்கும், அந்தப்பதிவு.//
லைட்டா பொறாமதான். 1294 பேர்ல 50 பேர் கூட எட்டி பாக்க மாட்டேங்கறாங்களே. கெரகம். என்ன செய்ய. உனக்கும் ஒரு நேரம் வரும் ஜெயந்தி. பொறுமையா இரு.
ReplyDelete//சரி கடைசியாக ஒருஇலவச இணைப்பு:
கோபு அண்ணாவின் அன்புப் பரிசு.
http://gopu1949.blogspot.in/2014/03/blog-post_29.html //
ஆஹா, ஆடித்தள்ளுபடி, அதிரடித்தள்ளுபடி போல ..... இலவச இணைப்பு வேறா !
இலவச என்பதற்கு பதில் நம் மாண்புமிகு முதல்வர் சொல்வதுபோல, விலையில்லா இணைப்பு என்று சொல்லுவோம்.
விலைமதிக்க முடியாத நம் ஆதமார்த்த நட்பினைப் பற்றிய பதிவல்லவா !
அதனால் அந்தப்பெயர் மிகப்பொருத்தமாக இருக்கும்.
>>>>>
சரி. மாத்திடுவோம். எல்லாம் நம்ப கையில தான இருக்கு. (இன்னும் 4 நாள் தான்) அப்புறம் ஒண்ணும் செய்ய முடியாதே.
Deleteமாத்திட்டோமில்ல.
Delete//அறுசுவைகள் மிளிரும் அருமையான தளங்களின் அறிமுகங்கள்..
ReplyDeleteஅனைவருக்கும் வாழ்த்துகள்.. பாராட்டுக்கள்..!//
என் வருகையில் இன்று மிகவும் தாமதம் ஏற்படும் என நன்கு தெரிந்த ’எங்காளு’ மேற்படி கமெண்ட்ஸ் அதுவும் முதன் முதலாக இங்கு வந்து தெரிவித்து விட்டார்கள். சந்தோஷமாக உள்ளது.
மேலும் எனக்கும் இன்றைய வலைச்சர அறிமுகம் பற்றி வழக்கம் போல தகவல் அளித்து மகிழ்வித்து விட்டார்கள். மேலும் மகிழ்ச்சியாக உள்ளது.
அதே அதே ..... அவர்கள் சொல்லியுள்ளதை நானும் அப்படியே வழி மொழிகிறேன். அவர்களுக்கும் என் நன்றிகள்.
>>>>>
சிரம் தாழ்ந்த நன்றிகள். நீங்க வந்தாதான் அண்ணா ஏதாவது 10, 20 கமெண்ட் தேரும். இல்லைன்னா SINGLE DIGIT தான்.
Delete
ReplyDelete//இப்பொழுது தற்காலிகமாக விடை பெறுகிறேன். நன்றி.//
OK OK .... நானும் ..... நாளை சந்திப்போம். Bye for Now ' J '
oOo
நன்றி. மீண்டும் சந்திப்போம்.
Deleteபிழைத்திருத்தம்:
ReplyDelete//விலைமதிக்க முடியாத நம் ஆதமார்த்த நட்பினைப் பற்றிய பதிவல்லவா ! //
ஆதமார்த்த = ஆத்மார்த்த
பிரியமுள்ள கோபு அண்ணா
புள்ளி விட்டுப் போச்சு. பரவாயில்லை.
Deleteசிறந்த அறிமுகங்கள்
ReplyDeleteதொடருங்கள்
திரு யாழப்பாணம் காசிராஜலிங்கம்
Deleteவருகைக்கும், வாழ்த்துக்கும் மனமார்ந்த நன்றி.
அன்புடன்
ஜெயந்தி ரமணி
அனைத்து பகிர்வும் மிக அருமை ஜெ மாமி. என் வலைப்பூ இடுகையும் பகிர்ந்தமைக்கு மகிழ்ச்சி.நன்றி.
ReplyDeleteவாங்க ஆசியா,
Deleteவாழ்த்துக்கும், வருகைக்கும் நன்றி.
அன்புடன்
ஜே மாமி
ஐ.....மாமி என்னையும் அறிமுகப்படுத்தி இருக்காங்க்ரொம்ப சந்தோசமாக உள்ளது்இத்தனை நாளாக ஹாஸ்பிடல் வாசம்்இப்ப தான் பார்க்க முடிந்தது்
ReplyDelete