அரட்டைக் கச்சேரி --3
➦➠ by:
ராஜலக்ஷ்மி பரமசிவம்
ஞாயிற்றுக் கிழமையன்று மதியம் மூன்று மணியிருக்கும் டிவியில் விருது வழங்கும் விழா ஒன்று பார்த்துக் கொண்டிருந்தேன். ஒவ்வொருவரின் திறமைகளைக் காணும் போதும் மலைப்பாக இருந்தது.எப்படி இவர்களால் முடிகிறது என்று ஆச்சர்யபட்டுத் தான் போனேன்.
பிரமிப்பு நீங்க சில நிமிடங்கள் ஆனது .
நம் பதிவர்கள் பலரின் பதிவுகளைப் படிக்கும் போது இதையே உணர்கிறேன்.நேரமும் இடமும் அனுமதிக்காததால் அதில் சிலரை மட்டுமே சொல்கிறேன் .
முதலில் என் இனிய தோழி திருமதி ரஞ்சனியின் பதிவுகளும்,அதை அவர் வெளியிடும் வேகமும் வியக்க வைக்கும். ஒரு பதிவை படித்து கருத்திடுவதற்குள் , டேஷ்போர்டில் அடுத்தப் பதிவு படிப்பதற்காகக் காத்திருக்கும். அவருடைய எழுத்து நடையோ வாசகர்கள் மனதைக் கொள்ளையடிக்கும்.
அன்புள்ள இந்தியர்களே என்று ஆரம்பித்து முன்னாள் ஜனாதிபதி திரு. அப்துல்கலாம் அவர்களின் கடித்தத்தை மொழி பெயர்த்து போட்டிருக்கிறார். இந்தியர்கள் அனைவருமே படிக்க வேண்டியப் பதிவு.
எப்படி குழந்தை வளர்க்க வேண்டும் என்று இவருடைய செல்வக் களஞ்சியமே
படித்துத் தெரிந்து கொள்ளலாம் .
உங்கள் பாஸ் வேர்டைத் திருட பத்து நிமிடங்கள் போதும் என்கிறார் இவர்..
சந்தேகம் இருந்தால் அவருடைய இன்னொரு தளமான இரண்டாவது எண்ணங்களில் படித்துப் பாருங்கள்.
இவரைப் போலவே பல்சுவை வித்தகர் மிகப் பிரபலமான பதிவர் வைகோசார், கோபு சார் என்று அன்புடன் அழைக்கப்படும் திரு. வை. கோபாலகிருஷ்ணன் அவர்கள். விமரிசனப் போட்டி ஒன்று வைத்து நடத்தி அதற்கு சன்மானமும் வழங்கும் மிகப்பெரிய மனதுக்காரர் இவர்.
அடை ரெசிபியை இதைவிடவும் அருமையாக யாராவது சொல்ல முடியுமா என்று படித்துப் பார்த்து சொல்லுங்கள்.
மஹா பெரியவரைப் பற்றியதொடர் ஒன்று எழுதியிருக்கிறார். அதில் அன்னதான மகிமைப் பற்றிப் படித்து தான் பாருங்களேன்.
இவருடைய தேடி வந்த தேவதை கதையைப் படித்துப் பாருங்கள். அவருடைய சமூக அக்கறை வெளிப்படும்.
போட்டி வைத்து சன்மானம் வழங்குவதே பெரிது. அதிலும் வித்தியாசமான போட்டிக்குள் போட்டி ஒன்றை வைத்திருக்கிறார்.அதற்கும் பரிசு தந்து விட்டார்.
முடிந்தால் இவருடைய விமரிசனப் போட்டியில் கலந்து கொண்டு பரிசு பெறுங்கள்.
திருமதி பக்கங்கள் என்னும் தளத்தில் எழுதும் திருமதி கோமதி அரசு அவர் சென்று பார்த்த ஊர்கள் பற்றி புகைப்பட ஆதாரத்துடன் சுவையாய் எழுதுகிறார். இவர் பின்னூட்டமிட்டால் முதலில் உங்களுக்கு ' வாழ்க வளமுடன் 'என்கிற வாழ்த்தோ /ஆசியோ(உங்கள் வயதைப் பொறுத்து) கண்டிப்பாக உண்டு .
மன்னன் மாளிகை மண் மேடு ஆனாலும் எப்படியிருக்கும் என்பதைப் .படத்துடன் அருமையாக விளக்குகிறார்.
படம் ஒன்றைப் போட்டு அது என்ன கேள்வியும் கேட்கிறார். உங்களுக்குத் தெரிந்தால் சொல்லுங்கள் . இல்லையானால் கவலையை விடுங்கள். அவருடைய அடுத்தப் பதிவிலேயே அதற்கான பதிலும் இருக்கிறது.
இவர் வீட்டுக் கொலுவிற்குப் போகலாம் வாருங்கள்.அது மட்டுமல்ல
முக்தி நாத் யாத்திரைக்கும் அவருடன் செல்லலாம்.
கூடியிருந்தால் கோடி நன்மை என்பதற்கு எங்கள் பிளாக் ஒரு உதாரணம் என்றே சொல்லலாம். ஐந்து பேர்களாக திருமதி Kasu shobana, திரு.Kg.Gauthaman, திரு.kg திரு.Sriram திரு. Raman எங்கள் பிளாகை நடத்துகிறார்கள்.
வாராவாரம் இவர்கள் தரும் பாசிடிவ் செய்திகள் நிஜமாகவே புத்துணர்ச்சி தரும். படித்துப் பாருங்கள்.
UFO பார்த்திருக்கிறீர்களா.இங்கே பாருங்கள். ஒரே மர்மமாய் இருக்கிறது..இது இவர்களுடைய வெள்ளிக்கிழமை வீடியோ.தவறவிடாதீர்கள்.
பிளாக் மேஜிக் பற்றி படிக்க இங்கே செல்லுங்கள்.
திரு தமிழ் இளங்கோ அவர்கள், பதிவுகள் பல்சுவை கொண்டதாக இருக்கும். இவர் நமக்குப் பயன்படும் தளங்களைப் பற்றி எனது எண்ணங்கள் என்கிறத் தளத்தில் பட்டியலிடுகிறார் பாருங்கள் .
சிந்துபாத் நினைவிருக்கிறதா? அதே தான் கன்னித் தீவு சிந்துபாத் தான் . என்ன சொல்கிறார் பார்ப்போமே சிந்துபாத் பற்றி.
அவர் சைவ சித்தாந்தம் பயின்றதை நமக்கும் விரிவாக விளக்குகிறார் பாருங்கள்
சில எண்ணங்கள் என்னும் தளத்தில் திரு. ராஜன் லோகநாத் ஓசையே இல்லாமல் முத்திரை பதித்து வருகிறார் .அருமையான இவருடைய தளம் பலருடைய பார்வையிலிருந்து தப்பியிருக்கிறது. நம்மோடு வம்படிக்க நாம் தான் அவரை இழுத்து வர வேண்டும் என்று நினைக்கிறேன்.
கம்பரைப் பற்றிய ஒரு சுவாரஸ்யமானக் கதை எழுதியிருக்கிறார் இங்கே அதை இங்கே படிக்கலாம்.
ராவணனை மாறுபட்ட கண்ணோட்டத்தில் எழுதியிருக்கிறார் இங்கே படித்துப் பார்ப்போம் வாருங்கள்.
சோழர்களின் காலம் பொற்காலம் என்று சொல்வது ஏன் என்று தெரிந்து கொள்வோமா?வாருங்கள்.
எல்லாத் தளங்களுக்கும் சென்று படித்து விட்டு வாருங்கள்....
நானும் இன்று போய்,நாளை வருகிறேன்.......... அரட்டைக் கச்சேரியைத் தொடர.......
image courtesy---google.
|
|
நீங்கள் சொல்லியுள்ள அனைத்துத் திறமையானவர்களையுமே நானும் வாசித்திருக்கிறேன் என்பதில் மகிழ்வு. அனைவருக்கும் என் வாழ்த்துக்கள்
ReplyDeleteகருத்துக்கு நன்றி எழில்
Deleteஇன்றைய அரட்டைக் கச்சேரியில் - அருமையான பல தளங்களும் பதிவுகளும் தொகுத்து வழங்கப்பட்டுள்ளன.
ReplyDeleteஅறிமுகங்கள் அனைவருக்கும் அன்பின் நல்வாழ்த்துக்கள்..
நன்றி துரை சார்.
Deleteதிறமையாளர்களின் அறிமுகங்களுக்கு வாழ்த்துகள்..பாராட்டுக்கள்..!
ReplyDeleteநன்றி மேடம்.
Deleteசிறப்பான அறிமுகங்கள் இன்றும். சிலர் தெரிந்தவர்கள். ஓரிரண்டு தெரியாத தளங்கள். பார்க்கிறேன். நன்றி.
ReplyDeleteநன்றி கணேஷ் சார்.
Deleteஇன்றைய அறிமுகங்கள் அனைவ்ருக்கும் வாழ்த்துக்கள்.
ReplyDeleteநன்றி உமையாள் காயத்ரி.
Deleteவணக்கம் ராஜலக்ஷ்மி பரமசிவம், வாழ்க வளமுடன்.
ReplyDeleteஎன் தளத்தையும் இன்று சிறப்பாகஅறிமுக படுத்தி தகவல் தெரிவித்தமைக்கும் நன்றி.இன்று இடம்பெற்ற ’சிலஎண்ணங்கள்’ திரு ராஜன் லோகநாத் தளம் மட்டும் தெரியாது போய் பார்க்கிறேன். அனைவருக்கும் வாழ்த்துக்கள்.
நன்றி கோமதி.
Deleteவணக்கம் எங்கள் ப்ளாக் - ப்ளாக் மேஜிக் பதிவு அறிமுகத்திற்கு!
ReplyDeleteஎங்கள் ப்ளாக் ஆசிரியர்கள் சார்பாக .... கௌதமன்
நன்றி கௌதமன் சார்.
Deleteசிறந்த அறிமுகங்கள்
ReplyDeleteதொடருங்கள்
நன்றி சார்.
Deleteநன்றி ராஜலக்ஷ்மி மேடம்.... ஒரே சமயத்தில் எங்கள் மூன்று வெவ்வேறு பதிவுகளைச் சொல்லியிருப்பது சந்தோஷம் தருகிறது. மிக்க நன்றி.
ReplyDeleteஎங்களுடன் சேர்ந்து குறிப்பிடப்பட்டு பாராட்டப் பட்டிருக்கும் சக பதிவுலக நண்பர்களுக்கும் 'எங்கள்' வாழ்த்துகள் + பாராட்டுகள்.
நன்றி ஸ்ரீராம் சார்.
Delete//பல்சுவை வித்தகர் மிகப் பிரபலமான பதிவர் வைகோசார், கோபு சார் என்று அன்புடன் அழைக்கப்படும் திரு. வை. கோபாலகிருஷ்ணன் அவர்கள். விமரிசனப் போட்டி ஒன்று வைத்து நடத்தி ....//
ReplyDeleteஆஹா, தன்யனானேன் !
எதையும் பல்சுவையாக வழங்குவதில் நீங்க ... நீங்கதான்.
>>>>>
உங்களைப் பற்றி சொன்னது அத்தனையும் உண்மை தானே சார்.
Deleteஎன்னை நீங்கள் பாராட்டுவதற்கு நன்றி கோபு சார்.
//அதற்கு சன்மானமும் வழங்கும் மிகப்பெரிய மனதுக்காரர் இவர்.//
ReplyDeleteஏதோ ’எத்கிஞ்சிது’ எனச்சொல்வார்கள்.
ஏதோ இந்த ஏழை எளிய அந்தணனால் இன்றளவு முடிந்த முதல் முயற்சியாக .. அதுவும் ஓர் சோதனை முயற்சியாக மட்டுமே .. இதை என்னால் அறிவிக்க முடிந்தது.
இதைப்போய் தாங்கள் இப்படி ஒரேயடியாக வானளாவிப் புகழ்ந்துள்ளது என்னைக் கூச்சப்பட வைக்கிறது.
எனினும் தங்களுக்கு என் மனமார்ந்த இனிய அன்பு நன்றிகள்.
>>>>>
சன்மானம் கொடுக்க வேண்டும் என்கிற மனோபாவம் பாராட்டுக்குரியது.அதைத் தான் செய்திருக்கிறேன் கோபு சார்.
Delete
ReplyDelete//அடை ரெசிபியை இதைவிடவும் அருமையாக யாராவது சொல்ல முடியுமா என்று படித்துப் பார்த்து சொல்லுங்கள்.//
’அடடா, என்ன அழகு ! அடையைத் தின்னு பழகு !!’ என்பதுபோல மிக அழகாக மிக ருசியாகப் பாராட்டி மகிழ்ந்து என்னையும் மகிழ்வித்துள்ளீர்கள்.
அடைஅடையாக அவ்வப்போது பல்வேறு வலைச்சர ஆசிரியர்களால் புகழப்பட்டதே இந்த என் பதிவு என்பதில் எனக்கும் மகிழ்ச்சியே.
>>>>>
உங்கள அடை ரெசிபி மிகவும் சுவையானது. சார்.
Delete//மஹா பெரியவரைப் பற்றியதொடர் ஒன்று எழுதியிருக்கிறார். அதில் அன்னதான மகிமைப் பற்றிப் படித்து தான் பாருங்களேன்.//
ReplyDeleteஇதைப்படிக்க வாய்ப்புக் கிடைத்தவர்கள் அல்லவோ பாக்யசாலிகள்!!!!!
இன்று பலருக்கும் அந்த வாய்ப்பை வழங்கியுள்ள
தங்களுக்கே இதனால் ‘அன்னதானம் செய்த மஹிமையும், புண்ணியமும்’ ஒட்டுமொத்தமாகக் கிடைக்க உள்ளதில் எனக்கும் மிக்க மகிழ்ச்சியே.
>>>>>
உங்கள் ஆசிக்கு மிக்க நன்றி கோபு சார்.
Delete//இவருடைய தேடி வந்த தேவதை கதையைப் படித்துப் பாருங்கள். அவருடைய சமூக அக்கறை வெளிப்படும்.//
ReplyDeleteசமூக அக்கறையுடன் சொல்லியுள்ளீர்கள். சபாஷ் !
என் பதிவுகளையெல்லாம் ஆழ்ந்து படித்துள்ளீர்கள்.
ஒரு பானை சோற்றுக்கு ஒரு சோறு பதமாக சிலவற்றை இங்கு குறிப்பிட்டுள்ளீர்கள். மிக்க மகிழ்ச்சி.
கொடுப்பினை உள்ளவர்களுக்கு மட்டுமே என் பதிவுகளைப் படிக்கும் வாய்ப்புக் கிடைக்கும் என்பதில் எனக்கோர் தனி கர்வம் உண்டு.
அதற்கு இந்த தாங்கள் சொல்லியுள்ள கதையும் ஓர் உதாரணம் என்பதில் எள்ளளவும் சந்தேகமே இல்லை.
இந்த இன்றைய என் வலைச்சர அறிமுகத்தை ’தேடி வந்த தேவதை’ யாக ஓடி வந்து எனக்குத் தெரிவித்த என் அன்புக்கும் மரியாதைக்கும் உரிய திருமதி. இராஜராஜேஸ்வரி அவர்களுக்கும் என் மனமார்ந்த இனிய அன்பு நன்றிகள்.
>>>>>
மன்னிக்கவும்.
Deleteதாங்களும் இந்த என் இன்றைய வலைச்சர அறிமுகத்தைப் பற்றி எனக்குத்தகவல் கொடுத்துள்ளீர்கள்.
அதை ‘தேடி வந்த தேவதை’ என்ற பதிவின் பின்னூட்டப்பெட்டியில் இப்போது தான் நான் தாமதமாகப் பார்க்க நேர்ந்தது.
தங்களுக்கு என் மனம் நிறைந்த இனிய அன்பு நன்றிகள்.
அன்புடன் கோபு
இந்த என் சிறுகதை விமர்சனப்போட்டிகளில், இன்றைய வலைச்சர ஆசிரியரான தாங்களே, அவ்வப்போது மட்டும் கலந்துகொண்டு, இதுவரை 8 போட்டிகளில் வெற்றி பெற்று பரிசுகள் பெற்றுள்ளீர்கள் என்பதே எனக்கு மிகவும் மகிழ்ச்சியாக உள்ளது.
Deleteஅதுவும் அந்த எட்டினில் நான்கு முறை தாங்கள் முதல் பரிசினைத் தட்டியுள்ளீர்கள் என்பதும் எனக்கு மேலும் மகிழ்ச்சியளிக்கும் விஷயமாகும்.
அதிலும் இந்த ‘என் தேடி வந்த தேவதை’ கதைக்கான தங்களின் விமர்சனம் முதல் பரிசினை வென்றதுடன், உயர்திரு நடுவர் அவர்களின் ஸ்பெஷல் பாராட்டுக்களைத் தங்களுக்குத் தேடித்தந்ததும், அதையே தாங்கள் தங்களின் வெற்றிகரமான 100வது பதிவாக வெளியிட்டுக்கொண்டதும் எனக்கு மேலும் மேலும் மகிழ்ச்சி அளித்தன.
இதோ அதற்கான இணைப்புகள் ..... மற்ற அனைவரின் தகவலுக்காக மட்டுமே:
http://gopu1949.blogspot.in/2014/07/vgk-25-01-03-first-prize-winners.html
[விமர்சனத்திற்கான முதல் பரிசு + உயர்திரு நடுவர் அவர்களின் ஸ்பெஷல் பாராட்டு]
http://rajalakshmiparamasivam.blogspot.com/2014/07/blog-post_20.html
[தங்களின் வெற்றிகரமான 100வது பதிவு - பாராட்டு 100 - வெளியீடு]
அன்புடன் கோபு
//போட்டி வைத்து சன்மானம் வழங்குவதே பெரிது. அதிலும் வித்தியாசமான போட்டிக்குள் போட்டி ஒன்றை வைத்திருக்கிறார். அதற்கும் பரிசு தந்து விட்டார்.//
ReplyDeleteவைரமாக மின்னிடும் பல பிரபல எழுத்தாளர்கள் மட்டுமே இந்த என் போட்டிகளில் பங்குபெற்று தங்களின் எழுத்துலகத் தனித்திறமைகளைக் காட்டிட ஓர் வாய்ப்பாக இந்த என் போட்டிகளைப் பயன் படுத்தி வருகின்றனர்.
நான் அவர்களுக்கு தற்சமயம் கொடுத்துவருவது ‘சுண்டைக்காய்’ அளவு பரிசுகள் மட்டுமே. இன்னும் எவ்வளவோ அள்ளி அள்ளித் தரவேண்டும் என்பதே என் விருப்பமாகும்.
What I offer now to them is a Token of Appreciation only for their Very Very Valuable Articles. More over it is only a Trial Measure.
>>>>>
//முடிந்தால் இவருடைய விமரிசனப் போட்டியில் கலந்து கொண்டு பரிசு பெறுங்கள்.//
ReplyDeleteஆஹா, இந்தத்தங்களின் அன்பான வேண்டுகோள் மூலம் என் போட்டிக்கு நிறைய பேர்கள் போட்டி போட்டுக்கொண்டு வந்து குவியக்கூடும் என நம்புகிறேன்.
ஆனால் இன்னும் அவர்களுக்கு இந்தப் போட்டியில் கலந்துகொள்ள [12 வாரம்] 12 வாய்ப்புகள் மட்டுமே உள்ளன.
நாளை இந்திய நேரம் இரவு 8 மணிக்குள் மேலும் ஓர் வாய்ப்பு நழுவி விடக்கூடும். அதனால் இன்றே இப்போதே அவர்கள் அவசரமாகச் சென்று பார்க்க வேண்டிய பதிவின் இணைப்பு:
http://gopu1949.blogspot.in/2014/08/vgk-29.html
>>>>>
அனைத்துக்கும் என் அன்பான நன்றிகள்.
ReplyDeleteஇன்றைய வலைச்சரத்தினை வெகு அழகாக தொடுத்துள்ளீர்கள்.
மனம் நிறைந்த பாராட்டுக்கள். அன்பான இனிய நல்வாழ்த்துகள்.
அன்புடன் கோபு
ooooooo
பல் முறை வருகைப் புரிந்து கருத்திட்டு என்னைக் கௌரவப் படுத்தி விட்டீர்கள் கோபு சார்.
Deleteவலையுலகில் தனி பாணியில் கலக்கிடும் பல்சுவை பதிவர்களின் அறிமுகம் சிறப்பு! சில எண்ணங்கள் தளம் மட்டும் இதுவரை சென்றதில்லை! வை.கோ சாரின் காஞ்சி முனிவர் பற்றிய தொடரின் ரசிகன் நான். எங்கள் ப்ளாக் நான் தொடர்ந்து வாசிக்கும் வலைப்பூக்களில் ஒன்று. இவர்களின் அறிமுகத்திற்கு நன்றி! வாழ்த்துக்கள்!
ReplyDelete//அன்புள்ள இந்தியர்களே// நான் ஏற்கனவே படித்திருந்தேன் இந்தியர்கள் அனைவரும் கண்டிப்பாக படிக்கவேண்டிய விசயம்தான் அம்மா... மற்றவைகளையும் தொடர்கிறேன்.
ReplyDeleteநன்றி Killergee
Deleteமுறபகல் தஞ்சை சென்று விட்டு இப்போதுதான் திரும்பினேன். வலைச்சரத்தில் எனது வலைத்தளத்தினை அறிமுகம் செய்ததற்கும், அந்த தகவலை எனது பதிவு ஒன்றின் மூலம் தெரிவித்ததற்கும் நன்றி! திரு V.G.K அவர்கள் நிறைய கருத்துரைகள் தந்து இருக்கிறார். படித்து விட்டுத்தான் நான் எழுத வேண்டும். மீண்டும் வருவேன்!
ReplyDeleteத.ம.2
உங்கள் கருத்துக்கு நன்றி தமிழ் சார். மீண்டும் அவசியம் வருகைத் தாருங்கள்.
Deleteதி.தமிழ் இளங்கோ Wed Aug 06, 06:24:00 PM
Delete//முற்பகல் தஞ்சை சென்று விட்டு இப்போதுதான் திரும்பினேன். வலைச்சரத்தில் எனது வலைத்தளத்தினை அறிமுகம் செய்ததற்கும், அந்த தகவலை எனது பதிவு ஒன்றின் மூலம் தெரிவித்ததற்கும் நன்றி! //
வணக்கம் ஐயா. வலைச்சர அறிமுகத்திற்கு என் மனம் நிறைந்த வாழ்த்துகள், ஐயா.
//திரு V.G.K அவர்கள் நிறைய கருத்துரைகள் தந்து இருக்கிறார். படித்து விட்டுத்தான் நான் எழுத வேண்டும். மீண்டும் வருவேன்!//
அடடா, தங்களின் ஆர்வம் என்னை மெய்சிலிரிக்க வைக்கிறது ஐயா. மிக்க மகிழ்ச்சி ஐயா. மீண்டும் பொறுமையாக வாருங்கள் ஐயா.
அன்புடன் VGK
அனைத்துமே பயனுள்ள பதிவுகள்!
ReplyDeleteஅறிமுகங்களுக்கு நன்றி!
நன்றி சார்.
Deleteவணக்கம்
ReplyDeleteநல்ல அறிமுகங்கள்
வாழ்த்துக்கள்
முகநூலில் பகிர்ந்திருக்கிறேன் https://www.facebook.com/malartharu
நன்றி உங்கள் கருத்துக்கும், முக நூலில் பகிர்ந்து கொண்டதற்கும்.
Deleteரஞ்சனி நாராயணன் என்றாலே எனக்கு திருக்கண்ணபுரம் தான் நினைவுக்கு வரும். அவர் ஒரு ஆசிரியை. நிறைய விஷயம் தெரிந்தவர். அவருடைய வலைப் பதிவில் அவை எதிரொலிக்கும். அவருடைய மூன்று தளங்களையுமே ஒரே சமயத்தில் அறிமுகப்படுத்திய விதம் பாராட்டுக்குரியது.
ReplyDeleteவலையுலகப் பிதாமகர் என்றால் அது திரு V.G.K (வை.கோபால கிருஷ்ணன் அய்யா)அவர்களையே குறிக்கும். சலிக்காது பின்னூட்டங்கள் எழுதி வலைப் பதிவர்களை ஊக்கப்படுத்துபவர். இந்த பதிவிற்கும் நிறைய பின்னூட்டங்கள். எழுதியுள்ளார்.
கோமதி அரசு அவர்கள் பயணக் கட்டுரைகள் எழுதுவதிலும் தான் கேமராவில் பதிந்த போட்டோக்களை பதிவுகளில் பதிவதிலும் மிகுந்த ஆர்வம் கொண்டவர்.
எங்கள் ப்ளாக் – வலைத்த் தளத்தில் அவ்வப்போது படித்ததுண்டு.
எனது வலைத் தளத்தினை பல்சுவையென பாராட்டியதற்கு நன்றி! ஆரம்பத்தில் தமிழ் இலக்கியத்தை மட்டும் மையப்படுத்தி எழுத வேண்டும் என்றுதான் வலைப்பதிவில் நுழைந்தேன். அப்புறம் இலக்கியத்தை மட்டும் வைத்துக் கொண்டு வலையுலகில் குப்பை கொட்ட முடியாது என்பதால் பல்சுவையாக எழுத ஆரம்பித்தேன்.
சில எண்ணங்கள் திரு ராஜ லோகநாத் எனக்கு புதுமுகம். நீங்கள் அறிமுகம் செய்த அவருடைய இராவணன் பற்றிய மாற்று சிந்தனை கட்டுரை வித்தியாசமானது. அன்றைய பட்டிமன்றங்களில் பேசப்பட்டதுதான். இனிமேல்தான் அவரது பதிவின் பக்கம் போக வேண்டும் அறிமுகம் செய்து வைத்தமைக்கு நன்றி!
தி.தமிழ் இளங்கோ
Deleteவணக்கம் ஐயா, சொன்னதுபோலவே மீண்டும் தாங்கள் வருகை தந்துள்ளது மகிழ்விக்கிறது ஐயா.
//வலையுலகப் பிதாமகர் என்றால் அது திரு V.G.K (வை.கோபால கிருஷ்ணன் ஐயா) அவர்களையே குறிக்கும். சலிக்காது பின்னூட்டங்கள் எழுதி வலைப் பதிவர்களை ஊக்கப்படுத்துபவர். இந்த பதிவிற்கும் நிறைய பின்னூட்டங்கள். எழுதியுள்ளார்.//
ஏதோ என்னால் முடியும்போது, இதுபோலச்செய்வதில் எனக்கும் ஓர் மகிழ்ச்சியே ஐயா. ஆனால் முன்புபோல இப்போதெல்லாம் நேரம் கிடைப்பதே இல்லை ஐயா. அதனால் தற்காலிகமாக பிறரின் பதிவுகள் பக்கம் செல்வதையே நான் வெகுவாகக் குறைத்துக்கொண்டு வருகிறேன், ஐயா.
தங்களின் ஸ்பெஷல் பாராட்டுக்களுக்கு என் மனமார்ந்த இனிய அன்பு நன்றிகள், ஐயா.
அன்புடன் VGK
ராஜன் லோகானந்த் தளம் அரட்டை-3 மூலமாகத்தான் எனக்கு அறிமுகம். நல்லாவே யோசிக்கிறார். விமர்சிக்கிறார். அவர் சிந்தனைகள் நல்லா இருக்கு. அவரை அறிமுகப்படுத்தியதற்கு "அரட்டை கச்சேரி-3"க்கு நன்றி. :-)
ReplyDeleteவணக்கம் திரு வருண் அவர்களே. தங்கள் பாராட்டுக்கு மிக்க நன்றி. மிகுந்த நாட்களுக்கு பின் நான் என் site க்கு போனதால் தான் தங்களின் பாராட்டுக்களை பார்க்க நேர்ந்தது. தங்கள் comments என்னை இன்னமும் எழுத தூண்டும். மீண்டும் நன்றிகள். திருமதி. ரஜலக்ஷ்மி அவர்களுக்கும் என் நன்றிகள்.
Deleteஅவர் பெயர் ராஜன் லோக்நாத்னு வரணும்? நான் வழக்கம்போல எழுத்துப்பிழை விட்டுவிட்டேன். :)
ReplyDeleteஎனது எல்லாத் தளங்களையும் அறிமுகப்படுத்தி பாராட்டியிருக்கிறீர்கள், ராஜி. நீங்கள் என்னை உங்களது இனிய தோழி என்று அழைத்தது பெருமையாகவும், மகிழ்வாகவும் இருக்கிறது. பார்க்காமலேயே தோழமை என்பது பதிவுலகில் மட்டுமே சாத்தியம். இரண்டு நாட்கள் நான் இணையத்திற்கு வரவில்லை என்றாலும் கூட நீங்கள் 'என்ன ஆயிற்று?' என்று விசாரிப்பீர்கள். அந்த அன்பிற்கு என்ன கைம்மாறு செய்யமுடியும்?
ReplyDeleteதிரு கோபு ஸார் பற்றி எத்தனை சொன்னாலும் தகும்.
திரு தமிழ் இளங்கோ அவர்களுக்கும் என்னைப் பற்றிய தனது எண்ணங்களைப் பகிர்ந்து கொண்டதற்கு - குறிப்பாக திருக்கண்ணபுரம் நினைவிற்கு வரும் என்று சொன்னதற்கு - எனது நன்றி. திரு killergee அவர்களுக்கும் நன்றி.
திருமதி கோமதி, திரு இளங்கோ, எங்கள் ப்ளாக் எல்லாமே நான் வழக்கமாகப் படிக்கும் தளங்கள். சில மாதங்களாக தொடர்ந்து இணையம் வர இயலவில்லை. மறுபடி எல்லோருடைய பதிவுகளையும் படிக்க ஆரம்பிக்க வேண்டும்.
எல்லோருக்கும் எனது பாராட்டுக்கள். அடுத்த பதிவை படிக்கச் செல்லுகிறேன். நன்றி ராஜி.
உங்களை நேற்றுக் காணோமே என்று நினைத்துக் கொண்டிருந்தேன். . மெயில் அனுப்பலாமா என்று கூட நினைத்தேன். . தொந்திரவு செய்ய வேண்டாம் என்று விட்டு விட்டேன்.
Deleteஉங்களது மிக விரிவான கருத்துரைக்கு மிக்க நன்றி ரஞ்சனி.
வனக்கம் திருமதி ராஜலக்ஷ்மி பரமசிவம் அவர்களே. எனக்கு இப்படிப்பட்ட வரவேற்பு இருக்கும் என்று நிச்சயமாக தெரியாது. ரொம்ப நாட்களுக்கு பின் என் site க்கு போனபோது தங்கள் செய்தியையும் பாராட்டுக்களையும் பார்க்க நேர்ந்தது. மீண்டும் மீண்டும் என் நன்றியை தெரிவித்துக்கொள்கிறேன். தங்கள் பாரட்டுக்கள் மிகுந்த உற்சாகத்தையும் கொடுக்கிறது. திரு வருண் அவர்களுக்கும் என் நன்றிகள், தங்கள் மூலம்.
ReplyDeleteதிருமதி. ராஜலக்ஷ்மி அவர்களுக்கு. சொல்ல மறந்து விட்டேன். என்னை அறிமுகப்படுத்தியதற்கும் மிக்க நன்றி. வாழ்க உங்கள் தமிழ் தொண்டு.
ReplyDelete