07 - 09 - 2015 முதல் ஆசிரியர் பொறுப்பேற்பவர்

ரிஷபன்
இவரின் வலைப்பூ

ரிஷபன்

முந்தைய ஆசிரியர்கள்


சீனா ... (Cheena) - அசைபோடுவது

சிந்தாநதி

நன்றி!

திரட்டிகளின் தொகுப்பு

:: தமிழ் திரட்டுகளின் சங்கமம்<br/>:: Tamil blogs, news, ezines

வலைப்பதிவர் உதவிப்பக்கம்

தமிழில் எழுத மென்பொருள்

fb like

ஞானாலயா = புதுக்கோட்டை

www.gnanalaya-tamil.com
வலைச்சரத்தில் வெளியிடப்படும் இடுகைகள் வலைச்சரக் குழுவினரால் தணிக்கைக்கு உட்படாது. ஆனால், வலைச்சர விதிக்கு உட்படாத இடுகைகளை முன்னறிவிப்பின்றி நீக்க வலைச்சரக் குழுவினருக்கு உரிமை உள்ளது

Sunday, September 28, 2014

ஞாயிறு: வலைச்சரத்தில் தில்லைஅகத்துக் க்ரோனிக்கள்ஸின் 7 ஆம் நாள்- பொழுது போக்கு-திரைப்படம், சித்திரக்கதைகள்


       அன்பர்கள் எல்லோருக்கும் தில்லைஅகத்து க்ரோனிக்கள்ஸின் அன்பான, இனிய காலை வணக்கம். 

       இன்று ஞாயிறு!  வாரத்தின் இறுதி நாள்.  பெரும்பான்மையோருக்கு இந்தநாள் விடுமுறை நாள். வார நாட்கள் முழுவதும் வேலையில் மூழ்கி அயராது உழைத்து விட்டு, ஞாயிறு எப்பொழுது வரும் என்று எதிர் நோக்கி இருக்கும் நாள்! இதோ வந்து விட்டது! பெண்களுக்கு, அதுவும் வேலைக்குச் செல்லும் பெண்களுக்கு ஞாயிறும் எல்லா நாட்களைப் போலத்தான். என்ன கொஞ்சம் தாமதமாக எழுதிருக்கலாம்! ஆனால் வேலை என்னவோ அதேதான்! அவற்றுடன், சிறு குழந்தைகள் என்றால் மேய்த்துக் கட்ட வேண்டும்! அவர்கள் கோரிக்கை வைக்கும் உணவுகளைச் சமைக்க வேண்டும்! அவர்களது வீட்டுப் பாடங்களை எழுத வைக்க வேண்டும்!  படிக்க வைக்க வேண்டும்.  இடையில் டி.வி.!.... ரிலாக்ஸ் ப்ளீஸ்!  ரிலாக்ஸ் ப்ளீஸ்!  ஆண்களுக்கும் இந்த ஒரு நாள்தானே விடுமுறை! 

ஸோ, இன்னிக்கு எல்லாரும் குடும்பத்தோட ஜாலியா நம்ம சினிமா பதிவர்கள் எழுதியிருக்கற விமர்சனங்களப் படிச்சுட்டு எந்தப் படம் நல்லாருக்குனு சொல்லிருக்காங்கனு பார்த்துட்டு, போய் எஞ்சாய் பண்ணுங்கப்பா.  அப்படியே, மதியம் கொஞ்ச நேரம் வாண்டுகளுக்கு, காமிக்ஸ் தளங்கள காமிச்சு வாசிக்கச் சொல்லலாம்.  அவங்களுக்கும் வாசிக்கற பழக்கம் வரும்!  நீங்களும் ரிலாக்ஸ் பண்ணலாமே! நல்ல நல்ல பாட்டெலாம் இருக்குதுங்க! கேளுங்க! எல்லாம் எங்க அனுபவங்கள் தான். இப்ப எங்க வாண்டுங்க எல்லாம் பெரிசாகிடுச்சு!  வாங்கப்பா தளங்களுக்கு!  அனைத்து தளங்களுமே அருமை!


ஆனந்த ராஜா விஜயராகவன் எனும் கோவை ஆவி

பயணம் வலைத்தளம். ஆவியை அறியாதவர் யாரும் இந்த வலை உலகில் இருக்க முடியாது! சினிமாவை நேசிப்பவர்!  அருமையாக திரைவிமர்சனம் எழுதுபவர் ஆவி டாக்கீஸ் என்ற தலைப்பில்! பிற ஏரியாக்களிலும் + தனது சாப்பாடு அனுபவங்களையும் எழுதுபவர்! தற்போது எடுத்திருக்கும் அவதாரம் ஹீரோ அவதாரம்!  நண்பர் அரசனும் ஹீரோ ஆகின்றார்!!!.இதைப் பற்றி பலரும் முகநூல் வழி அறிந்திருப்பீர்கள்!  விரிவாக இன்னும் சில நாட்களில் முழுவதும் அறிய வருவீர்கள்!!


! சிவகுமார் !

மெட்ராஸ்பவன் வலைத்தளம்.  சினிமாக்களை அருமையாக விமர்சிப்பவர்.  இதோ சிகரம் தொடு படத்தின் விமர்சனச் சுட்டி

கருந்தேள்

திரைக்கதை எழுதுவது எப்படி என்று இந்தச் சுட்டியில் காணலாம்.  இது தவிர விமர்சனங்களும் உண்டு  அருமையான வலைத்தளம்.

ஜி சுரேந்திரபாபு

sharing ideas of short films என்பது வலைத்தளம். மிக அருமையான வலைத்தளம்.  குறும்படம் எடுக்க ஆர்வமுள்ளோர் இதை வாசிக்கலாம்.  நிறைய விஷயங்கள் நிரம்பி உள்ளன.   கதைகளும், கவிதைகளும்
திரைக்கதை எழுதத் தொடங்கும் முன்னர்

செங்கோவி

இந்தத் தளத்திலும் திரைப்படங்கள் பற்றியும், அதைப் பற்றிய மிகவும் பயனுள்ள தகவல்கள் உள்ளன.

திரைக்கதை சூத்திரங்கள் -புதிய தொடர் (முன்னுரை)

குறும்படம் பற்றிய சுட்டி

சிவகுமார் T

கனவுப் பட்டறை என்னைத்தேடி அலைகிறேன்.  அருமையான தளம்

முத்து சிவா

அதிரடிப்பக்கம் வலைத்தளம்.

லிங்கு போயி வெங்கி வந்துச்சி டும் டும் டும்!!! இந்தச் சுட்டிய பாருங்க.  ரொம்பவே ரசிப்பீங்க நாங்க ரசிச்சா மாதிரி!

உலகசினிமாரசிகன்

அருமையான வலைத்தளம்

‘பொற்காலம்’ என்றழைக்கப்பட்ட ‘கற்காலம்’ ! சுட்டி

Ideas of ஹாரி வலைத்தளத்தில் நிறைய சினிமா பேசப்படுகின்றது

த சினிமா சினிமா

சினிமா - கனவுகளின் நீட்சி - கனவில் உறையும் உலகம்.  அருமையான வலைத்தளம்!

கோச்சடையான் - காந்தக்குரலோனின் கம்பீர கர்ஜனை

கனவுகளின் காதலன்

ஆஹா என்று சொல்ல வைக்கும் தளம்.  சினிமா சுட்டி

ஜெய்

பிற மொழிப்படங்கள்... தமிழில்...

சிறந்த கதைகள், கருத்துக்கள் உள்ள படங்கள், வித்தியாசமான திரைக்கதை/கரு/தொழில்நுட்பம் உள்ள படங்களைப் பற்றி விவாதிப்பதே இந்த வலைப்பதிவின் நோக்கம்.

JZ

நான் பார்த்த சினிமாப் படங்கள்...எனது பார்வையில்


ILLUMINATI

கடல்புறா பற்றிய பதிவு சுட்டி

Baby ஆனந்தன்

கிறுக்கிக் கொண்டிருப்பவன் Babyஆனந்தன் முழுக்க முழுக்க சினிமா... எப்பொழுதாவது கொஞ்சம் சுயபுராணம். அவ்வளவுதான் என்று சொல்பவர்..

பார்க்க வேண்டிய கொரிய திரைப்படங்கள் சுட்டி

Kumaran's கனவுகள் ஆயிரம்

"நான் யார்" எனத்தேடும் பயணத்தின் பதிவுகளோடு, நான் பார்த்து ரசித்த திரைப்படங்கள் என் பார்வையில் ஓர் அறிமுகம்

உதாரணச் சுட்டி

சி.பி.செந்தில்குமார்

அட்ரா சக்க வலைத்தளம் பல சினிமா செய்திகள் அடங்கிய வலைத்தளம் 

என்.ஹெச்.பிரசாத்

பழைய படங்களைப் பற்றிய விமர்சனங்கள் பெரும்பாலும். சமீபத்தில் ஜிகர்தண்டா விமர்சனம்.  எம்.ஆர் ராதாவைப் பற்றிய அருமையான பதிவு இது பாருங்களேன். 
http://oorkavalan.blogspot.in/2014/08/25.html


உண்மைத் தமிழன்
சினிமா பற்றி சுட்டி

கிருஷ்ணமாச்சாரி ரங்கசுவாமி

தமிழ்தேனீ என்று அறியப்படுபவர்.  தமிழ் தொலைக்காட்சித் தொடர்களிலும், சினிமாக்களிலும் நடிப்பவர்.  சிறு கதைகல் எழுதியுள்ளார்.  தளத்தில் அவர் நடித்த குறும்படங்களின் காணொளிகள் இருக்கின்றன.

தேன்கிண்ணம்
http://thenkinnam.blogspot.in   மிக்க மிக்க நன்றி தொகுப்பிற்கு!!

தேன்கிண்ணம் வலைத்தளம் தேன்கிண்ணமேதான்.  

அருமையான பாடல்கள் தொகுப்பு வருடங்கள் வாரியாகவும், பாடகர்கள் வாரியாகவும், காணொளியுடனும், பாட்டின் வரிகளுடனும்…..அருமை அருமை!  பழையா பாடல்கள் 1950 லிருந்து இருக்கின்றன!!!  சில காணொளிகள் வேலை செய்ய வில்லை ஏன் என்று தெரியவில்லை.

இது அமுதே தமிழே அழகிய மொழியே என்ற பாடலுக்கான காணொளியும், பாடல் வரிகளும் சுட்டி.  எத்தனி முறை கேட்டாலும் அலுக்காத பாடல்.
http://thenkinnam.blogspot.in/2010/12/blog-post_3791.html


தென்றல் இணைய வானொலி

மெரினா அமெரிக்கத் தமிழ்ழோசை மிக நன்றாக இருக்கின்றது. கேட்டுக் கொண்டே நாம் கணினியில் வேலை செய்யலாம். அதன் சுட்டி இதோ

http://www.shyamradio.com/aindex.aspx

காமிக்ஸ் வலைத்தளங்கள்

Lucky Limat - லக்கி லிமட்

சினிமா, காமிக்ஸ் என்று களை கட்டுகிறது இந்த வலைத்தளம்

காமிக்ஸ் சுட்டி  குழந்தைகளுக்கு நல்ல தளம்

சினிமா சுட்டி

PHANTOM THE LEGEND - SoundarSS

அருமையான வலைத்தளம்.  ஒரு சுட்டி இதோ

புலா சுலாகி

ஆர்ச்சி காமிக்ஸ் - தமிழில் முதன்முறையாக - முழு வண்ணத்தில் உதாரணச் சுட்டி

வாண்டுமாமா அவர்களின் பின் நவீனத்துவ சிறுகதை - நூறு கண் ராட்சதன்

அய்யம்பாளையம் வெங்கடேஸ்வரன்

வாண்டு மாமாவின் மரகதச் சிலை வாசிக்க சுட்டி. 

தன்னிகரில்லாத குற்ற சக்கரவர்த்தி

மீண்டும் ஸ்பைடர் வலைத்தளத்தின் பெயர்.  பேட்மேன் தோன்றும் மர்மக்கொள்ளையன் சுட்டி இதோ

ப்ரூனோ ப்ரேசில்

முதலைப் பட்டாளம் வலைத்தளம்

வேதாள மாயாத்மா  சுட்டி
http://mudhalaipattalam.blogspot.in/2014/09/blog-post.html

குழந்தைகளுக்கான புதிர்/விடுகதைகள் – குழந்தைகளின் சிந்திக்கும் திறமையையும், அறிவையும் தூண்டும் ஒரு விளையாட்டு

கண்மணி

அரும்புகள்2 வலைத்தளம். சுட்டி இதோ. தளத்தில் நிறைய உள்ளன

Rammalar’s Weblog

விடுகதைக்கானச் சுட்டி இதோ
https://rammalar.wordpress.com/category/%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%9F%E0%AF%81%E0%AE%95%E0%AE%A4%E0%AF%88/

                இன்றோடு, வலைச்சரத்தில் தில்லைஅகத்துக் க்ரோனிக்கள்ஸின் இறுதி நாள்! மீண்டும் நாம் நம் வலைப் பகுதியில் சந்திக்கத்தான் போகின்றோம்! என்றாலும், வலைச்சரத்தில் அன்பர்கள் எல்லோருக்கும் விடை பகறும் நாள்! எப்படியோ, நண்பர் தமிழ்வாசி பிரகாஷ் அவர்களும், அன்பின் சீனா ஐயா அவர்களும் அழைப்பு விடுத்த போது, எங்களுக்குச் சிறிது தயக்கம் இருந்தாலும், இந்த ஒரு வார வலைச்சரப் பணி எங்களுக்கு நிறைய பாடங்களைக் கற்றுக் கொடுத்தது மட்டுமல்லாமல் நிறைய அன்பர்களையும் பெற்றுத் தந்திருக்கின்றது என்றால் மிகையாகாது! எங்களைப் பட்டை தீட்டிய பட்டறிவு எனலாம்! ஐயாவின் ஆசியுடனும், உங்கள் எல்லோரது ஆதரவுடனும் எங்கள் பணியை முடித்துள்ளோம்!  ஐயா அவர்கள் கொடுத்த பொறுப்பை நாங்கள் அவருக்கும், அவரது கொற்றமாகிய வலைச்சரத்திற்கும் எந்தக் களங்கமும் வராமல் சரியாகச் செய்திருக்கின்றோமா என்பதை ஐயா அவர்கள்தான் சொல்ல வேண்டும்!
     அன்பின் சீனா ஐயா அவர்களுக்கு மிக்க நன்றி!  தாங்கள் எங்களுக்குக் கொடுத்த இந்த வாய்ப்பு எங்களுக்கு ஒரு சிறந்த பட்டறிவுப் பாடம்! ஒரு இக்கட்டானச் சூழ் நிலையிலும், சமாளித்து, பொறுப்பை நிறைவேற்றுவது எப்படி என்ற நல்ல பாடம் கற்றோம்! தங்களுக்கு நாங்கள் மீண்டும் மீண்டும் நன்றி நவின்றாலும் தீராது ஐயா! மிக்க மிக்க நன்றி!  முதலில் அழைப்பு விடுத்த நண்பர் தமிழ்வாசி பிரகாஷ் அவர்களுக்கும் எங்கள் நன்றி!

   இத்தனை நாள் எங்களுக்கு பின்னூட்டம் அளித்து எங்களை ஆதரித்து வாழ்த்துக்களும், பாராட்டுக்களும் தெரிவித்து எங்களை ஊக்கப்படுத்திய அன்பர்கள் அனைவருக்கும் எங்கள் இதயம் கனிந்த நன்றிகள்!

      இந்த நாள் மட்டுமல்லாது இனி வரும் நாள் எல்லாமே தங்கள் எல்லோருக்கும் இனிய நாளாக அமைந்திட எங்கள் வாழ்த்துக்கள்! எல்லோருக்கும் எங்கள் சிரம் தாழ்ந்த நன்றி!  வணக்கம்!

விடை நல்கும் தில்லைஅகத்து க்ரோனிக்கள்ஸ் - துளசிதரன் தில்லைஅகத்து, கீதா


29 comments:

  1. அருமையான தொகுப்புகள் வாழ்த்துகள்..

    ReplyDelete
    Replies
    1. மிக்க நன்றி சகோதரி! முதலில் வந்து கருத்திட்டமைக்கும், வாழ்த்திற்கும்!

      Delete
  2. சினிமா மற்றும் காமிக்ஸ் தளங்கள் அமர்க்களம். வாரம் முழுதும் கொடுக்கப்பட்ட பணியினை மிகச் சிறப்பாகச் செய்து நிறைவாக முடித்துள்ளீர்கள். மேலும் மேலும் பல சிகரங்கள் தொட தில்லை அகத்துக்கு என் இதயம் நிறைந்த நல்வாழ்த்துகள்.

    ReplyDelete
    Replies
    1. வாத்தியார் சார்! மிக்க மிக்க நன்றி சார்! தங்களைப் போன்ற ஜாம்பவான்களின் வாழ்த்துக்களும், ஊக்கமும் தான் எங்களுக்கு உயிரோட்டம் எழுதுவதற்கு! .நீங்க நிஜமாகவே ஜாம்பவான் தான்! அது சரி பொதுவா நாம் சொல்லும் ஜாம்பவான் என்பதன் பெயர் காரணம்? (கடோத்கஜன், சாப்பாட்டு ராமன் பெயர்க்காரணம் தெரியும்...)

      Delete
  3. கடந்த ஒருவாரமும் வலைச்சர வாசகர்களுக்கு பல்சுவை விருந்து படைத்து கலக்கிய நண்பர், அவர்களுக்கும் நண்பி அவர்களுக்கும் வாழ்த்துக்கள் வழங்கினாலும் மனதில் ஓரத்தில் மீண்டும் இவர்கள் வலைச்சத்துக்கு எப்பொழுது வருவார்கள் ? என்ற ஏக்கம் இருக்கத்தான் செய்கிறது வருவீர்கள் என நம்பிக்கையுடன் நன்றி & நன்றி.

    ReplyDelete
    Replies
    1. கண்டிப்பாக! நண்பரே! நம்ம வலைப்பக்கம் நீங்களும், உங்க வலைப்பக்கம் நாங்களும் சந்திக்கத்தான் போகின்றோம்.....எதுவுமே இவ்வுலகில் நிரந்தரமற்றது அப்படின்னு ஞானி ஸ்ரீ பூவு உங்களுக்குச் சொல்லியிருப்பாரே!

      மிக்க நன்றி நண்பரே!

      Delete
  4. கலகலப்பாக தளங்களைத் தொகுத்து வழங்கியது - கருத்தில் நிறைந்தது.
    எண்ணற்ற தளங்களை பகிர்ந்து கொண்டீர்கள்..
    மனமார்ந்த பாராட்டுகள்.. நல்வாழ்த்துக்கள்!..

    ReplyDelete
    Replies
    1. மிக்க நன்றி ஐயா! தங்களது பாராட்டிற்கும், நல்வாழ்த்துகளுக்கும்! உங்கள் எல்லோரது ஆசியினாலும், ஆதரவினாலும் தான் இது நடந்தது!

      Delete
  5. வணக்கம்
    ஒவ்வொரு நாளும் வித்தியாசமான தலைப்புக்களின் அட்டகாசமான தளங்கள் அறிமுகங்கள் அனைவருக்கும் வாழ்த்துக்கள். சிறப்பாக தொகுத்து வழங்கிய தங்களுக்கு எனது பாராட்டுக்கள்

    -நன்றி-
    -அன்புடன்-
    -ரூபன்-

    ReplyDelete
    Replies
    1. மிக்க நன்றி ரூபன் தம்பி! தங்கள் பாராட்டுக்களுக்கு!

      Delete
    2. இனிக்கு ஆவி சகோவை தவிர எல்லோருமே எனக்கு புதுசு!! ஏன்னா நான் சினிமா ந்யூஸ் படிகிறதே இல்லை:) சரி இப்போ படிச்சு பார்க்கிறேன்:) ஒரு வாரமும் கடினமான உழைப்பு !! சாதனையே படச்சுடீங்க!! நல்ல ரெஸ்ட் எடுங்க சகாஸ்!

      Delete
    3. சகோதரி இதுல சினிமா நியூஸ் அப்படின்றத விட, நம்ம மது நண்பர் -அதான் உங்க வீட்டு இனியவர்- அவரு அலசற மாதிரி இந்தத் தளங்க்ல்ல அலசுவாங்க.....சிலது ரொம்ப சிரிக்கலாம்...செம லொள்ளா இருக்கும் ......சொல்லப் போனா மதுவ நாங்க முதல்ல இந்த இடுகைல போடலாமானு யோசிச்சோம்....அனுபவத்துல போடலாமான்னும் குழம்பினோம்.....அவர் நிறைய நல்ல பள்ளி அனுபவங்கள சொல்லியிருந்ததுனால......அப்புறம் எல்லமே கலந்து கட்டி பல மாடி கட்டறதுனால அறிவுல போட்டுட்டோம்...அதற்கு பொருத்தமானவரே! ஸோ இங்க சினிமா மட்டும் இல்லைங்க....மகி நிறை போன்ற குழந்தைகளுக்கு நல்ல காமிக்ஸ் தமிழ்ல யும் இருக்கற தளங்கள் கொடுத்துருக்கோம்.....விடுகதைகள்...இப்படி....நிறைய இருக்குங்க...குழந்தைகளுக்கு.....எங்களுக்குத் தெரிந்து, நண்பர் சொக்கன், ஸ்பை, சுரேஷ், நீங்க, க்ரேஸ், உமையாள் இப்படி நிறைய பேர் எல்லாம் வாண்டுகளோட இருக்கறதுனால் பயன்படுமே அப்படின்னுதான்....அதையும் போய் பாருங்க.....

      மிக்க நன்றி! சகோதரி! நீங்கல்லாம் இப்படி அன்பா, ஆதரவா இருக்கும் போது...எங்களுக்கு என்ன கவலை!? ரெஸ்ட்? புத்துணர்ச்சிதான் போங்க!!!

      Delete
  6. அய்யா என்று அழைத்த நாவால் இனி உங்களை ஆசிரியர் அய்யா என்று அழைக்கப் போகிறோம்.. இந்த ஏழு நாட்கள் (22/09/2014 - 28/09/2014)இதயத்திற்கு இதமான நாட்கள்.
    தேர்தல் முடிவைக் காட்டிலும் வலைதள முகவர்களின் தெரிவு தேவ சுகம் ஆசிரியர் அய்யா அவர்களே. நன்றி!
    புதுவை வேலு(KUZHALINNISAI.BLOGSPOT.COM)

    ReplyDelete
    Replies
    1. ஐயா! தாங்கள் பெரிய பெரிய வார்த்தைகள் எல்லாம் வேண்டாமே! இது தங்களின் அன்பைக் காட்டினாலும்! துளசிதரன் தில்லைஅகத்து ஏற்கனவே ஆங்கில ஆசிரியராகத்தான் பணி புரிகின்றார்!

      மிக்க நன்றி ஐயா தங்களது அன்பிற்கும், பாராட்டிற்கும், வாழ்த்துகளுக்க்கும்! நாங்கள் தொடர்வோ ஐயா தங்கள் வலைத்தளத்தை!

      மிக்க நன்றி!

      Delete
  7. ஏழு நாட்கள் கடந்து விட்டனவா..!!!?

    மிகவும் சுவையாக இருந்தன தங்களின் இந்தப் பணி. தோழர்களின் கூட்டுக்கு பலம் அதிகம் என்பதை நிருபித்து விட்டீர்கள். வாழ்க.

    அறிமுகங்களின் தொகுப்பு ஒவ்வொரு நாளும் அருமை அருமை.தங்களின் எழுத்துக்கள் சந்தோஷத்தை தருகிறது. விசிறியாகிவிட்டேன் என்றே சொல்லலாம்.

    இன்றைய அறிமுகங்கள் அனைவருக்கும் வாழ்த்துக்கள்.

    சகோதரர் கோவை ஆவி அவர்களின் வளைத்தள விமர்சனம் சினிமா எதை பார்க்கலாம் என நமக்கு ஐடியா தரும் அருமையான தளம்.

    மற்றவர்களின் தளம் புதிது. செல்கிறேன். நன்றி. வாழ்த்துக்கள்.



    ReplyDelete
    Replies
    1. மிக்க நன்றி சகோதரி! 7 நாட்கள் ஓடியதே தெரியவில்லை! நாங்களும் இதில் அப்படியே மூழ்கி விட்டோம். இன்னும் நிறைய நல்ல தளங்கள் இருக்கின்றன! ஆனால் இங்கு தற்போது சொல்ல அவகாசம் இல்லை, இடுகையும் பெரிதாகி விடும் என்பதால் குறித்துக் கொண்டுள்ளோம். பிரமிக்கின்றோம். தமிழில் எழுத இத்தனை வல்லுனர்கள் இருக்கின்றார்களா என்று!

      ஆம்! நாங்களும் ஆவியின் தளம் தாங்கள் சொல்லியது போலவே! எங்கள் எழுத்துக்கள் சந்தோஷத்தைத் தருகின்றது என்று நீங்கள் சொல்லியிருப்பது எங்களுக்கு மிகுந்த மகிழ்ச்சியைத் தருகின்றது! சகோதரி! அதான் ரொம்ம்ம்ம்ம்ப காத்து வருகின்றது போலும்!!! ஹாஅஹ்ஹ இதமான காற்றுதான்!!!

      மிக்க நன்றி தங்களுக்கு! தொடர்வோம் சகோதரி!

      Delete
  8. Replies
    1. கடந்த ஒருவார காலம் நீங்களும் சகோதரி அவர்களும் பல நல்ல தளங்களை வலைச்சரத்தில் அறிமுகப்படுத்தியதற்கு நன்றி!
      த.ம.2

      (எழுத்துப் பிழை ஆகிவிட்டபடியினால் பழைய கருத்துரை நீக்கம்)

      Delete
    2. மிக்க நன்றி ஐயா! தங்களுடைய பாராட்டுகளுக்கு!

      Delete
  9. எத்தனை எத்தனை தளங்கள்! அத்தனையிலும் உங்களின் தேடலும் உழைப்பும் புரிகிறது! பகிர்ந்து கொடுத்தமைக்கு நன்றி சார்! வாழ்த்துக்கள்!

    ReplyDelete
    Replies
    1. மிக்க நன்றி சுரேஷ்! பாராட்டிற்கு நன்றி தங்கள் எல்லோரது ஆதரவும்தான் எங்களுக்கு சக்தி கொடுத்தது! மிக்க நன்றி! தொடர்வோம்!

      Delete
  10. இடைவிடாத மழையாக ஒருவாரமும் இனிய பல பதிவுகளும்
    அருமையான பதிவர்களுமாகச் சிறப்பாக உங்கள் பணியைச் செய்தீர்கள்!

    நல்ல பகிர்வுகள்! அனைத்தும் மிகச் சிறப்பு சகோதரரே!
    இனிய நன்றியுடன் உளமார்ந்த நல் வாழ்த்துக்கள்!

    ReplyDelete
    Replies
    1. மிக்க நன்றி சகோதரி! தங்களது பாராட்டிற்கும், வாழ்த்துகளுக்கும்! தொடர்வோம்!

      Delete
  11. சிறந்த அறிமுகங்கள்
    தொடருங்கள்

    ReplyDelete
    Replies
    1. மிக்க நன்றி நண்பரே! தொடர்வோம்!

      Delete
  12. மிரட்டிவிடீர்கள் ...
    வாழ்த்துக்கள்

    ReplyDelete
    Replies
    1. மிக்க நன்றி மது! (இப்படி சொல்லலாம்ல)

      Delete
    2. எப்படியும் சொல்லலாம்...
      அனுமதி எதற்கு ? :-)

      Delete
  13. சினிமாவிற்கென்று இத்தனை பக்கங்கள்....

    வலைச்சரப் பணியை மிகச் சிறப்பாக முடித்த உங்களுக்கு எனது பாராட்டுகள்.....

    ReplyDelete

தமிழ் மணத்தில் - தற்பொழுது