பெருமைமிகு பெண் பதிவர்கள்
பெண்களை கிண்டல் செய்து சிலர் எழுதினாலும் பெண்கள் இல்லாத சமுதாயத்தை நினைத்துகூட பார்க்கமுடியாது. தாயாய் , மனைவியாய் , சகோதரியாய் , தோழியாய் எப்படியாவது ஒருவகையில் யாராவது ஒரு பெண் நம் வாழ்க்கையில் இருப்பார்கள் . நம் முனேற்றதிர்க்கு காரணமாகவும் இருப்பார்கள் (வீழ்ச்சிக்கு கூட ..). எல்லா நிலையிலும் சரிசமமாக பெண்கள் இருக்கும் இந்த உலகில் வலைபதிவில் மட்டும் இல்லாமலா?. தங்களது அருமையான பதிவுகளால் இந்த சமுதாயத்தில் தனியிடம் பிடித்த சில பெண் பதிவர்கள் பற்றி பார்ப்போம் .
என்னில் உணர்ந்தவை :
காயத்ரி தேவி என்னும் பதிவர் "எதிர்கால தேவைகள் தவிர்த்து நான் எப்பொழுதும் நானாகவே இருக்க
விரும்புகிறேன்... எனது தேவைகள் என் உள்ளங்கையில் அடங்கி விடுகின்றன...
அன்பு, இது ஒன்றே பிறர் என்னிடமும் நான் பிறரிடமும் எதிர்பார்க்கும்
தேவைகள்" என தன்னை பற்றி அறிமுகம் செய்கிறார் .
இவரின் சில பதிவுகள் :
ஆடி அமாவாசை - அம்மாவும் பிரகதியும்
மின்னுவதெல்லாம் பொன்னல்ல...
எண்ண தூரிகை :
meera blossom என்ற சகோதரியின் வலைத்தளம்இது .இவர்தன்னைபற்றிசொல்லும்போது "ஒரு ஃபிசியோதெரப்பிஸ்ட்டாக கல்லூரியில் அடியெடுத்து வைத்த நான், இப்பொழுது ஒரு குடும்பத்தை கட்டிக்காக்கும் குடும்பத் தலைவியாக வலம் வந்து கொண்டிருக்கிறேன். இசையையும் புத்தகங்களையும் தோழிகளாக்கி வாழ்க்கையை கவிதையாய் வாழ வேண்டுமென்பது என் ஆசை. அப்படியே தொடரவும் செய்கிறேன். என் மன எண்ணங்களை தூரிகை கொண்டு தீட்டி எண்ணத் தூரிகையாக உங்கள் முன் படைக்குறேன். வந்து ரசித்து விட்டு செல்லுங்கள். "என்கிறார் .
இவரின் சில பதிவுகள் :
இயற்கை தந்த அற்புத பானம்... பதநீர்.
என் வீட்டு தேவதை
மகிழ்நிறை :
Mythily kasthuri rengan என்னும்சகோதரின்வலைத்தளம்இது . இங்குகவிதைகள் ,கட்டுரைகள்எனஅனைத்தும்உள்ளதுபடித்துபாருங்கள்.
இவரின் சில பதிவுகள் :
வீட்டுப்பாடம் எனும் சக்கர வியூகம்
வரலாறு முக்கியம் பாஸ்! II
கீத மஞ்சரி :
கீதா மஞ்சரி என்ற பெயரில் எழுதிவரும் தோழியின் வலைபூ இது . அருமையான எழுத்து நடையில் பல கட்டுரைகள் வாசிக்க கிடைகிறது . நீங்களும் போய் பாருங்கள் .
இவரின் சில பதிவுகள் :
மாலதி :
தனது பெயரையே தனது தளத்துக்கு சூட்டி பல அருமையான பதிவுகளை எழுதிவருகிறார் மாலதி அவர்கள் . அவர்களின் படைப்புகளில் சில உங்களுக்காக ...
இவரின் சில பதிவுகள் :
உயிரின் ”“ஓர்”“ எழுத்து
மலைகள் சமதளமானது
கனவும் கமலாவும் :
கமலா ஹரிஹரன் என்ற சகோதரியின் வலைத்தளம் இது . அருமையான , சமுக அக்கறையுள்ள பல கட்டுரைகள் , பதிவுகள் இங்கு காண கிடைகிறது .நீங்களும் படித்து ரசியுங்கள் .
இவரின் சில பதிவுகள் :
நானும், தமிழ் கடவுளும்
டைரிக் கிறுக்கல்கள்:
தேனம்மை லக்ஷ்மணன் அவர்களின் வலைபூ இது . இவர்களை பற்றி அறிமுகம் தேவையே இல்லை . பதிவுலகு மட்டும் இன்றி பத்திரிகை உலகிலும் கோடி கட்டி பறக்கும் மிக சிறந்த எழுத்தாளர் இவர் . கதை , கவிதை , பெண்கள் பற்றிய கட்டுரை , குழந்தைகள் கட்டுரை என அனைத்துவிதமான துறையினும் புகுந்து விளையாடுபவர் இவர் .
இவரின் சில பதிவுகள் :
மஞ்சள் வெளி.
எதிர்பார்ப்பு
/*/*/*/*/*/*/*/*/*/*/*/*/
கமலகானம் :
இந்த வலைபூவினை எழுதிவருபவர் சிங்கபூரை சேர்ந்த சகோதரி கமலாதேவி அரவிந்தன் அவர்கள் . இவர் பல சிறுகதைகள் எழுதியுள்ளார் . அவை அங்குள்ள பல்கலை கழகங்களில் பாடநூல சேர்க்கபட்டுள்ளது என்பது பதிவர்களுக்கு பெருமை சேர்க்கும் நிகழ்வாகும் .
இவரின் சில பதிவுகள் :
கமலாதேவி அரவிந்தனின் ‘நுவல்’
நுகத்தடி
டிஸ்கி : நிறைய பெண் பதிவர்கள் இருக்கிறார்கள் . அவர்களில் சிலரை மட்டுமே சொல்லியுள்ளேன் . மற்றவர்கள் கொவித்துகொள்ளவேண்டாம் . நண்பர்கள் உங்களுக்கு தெரிந்த பெண் பதிவர்களின் பெயர் மற்றும் தள முகவரியை கமெண்ட்இல் தெரிவிக்கலாம் .
|
|
அருமையான அறிமுகம். பெண்களை உயர்வாய்சொல்லி! எல்லோரையும் அறிந்திருந்தாலும் வலைத்தளம் சென்றதில்லை...ஒரு சில பெண் பதிவர்கள் தவிர.....வலைத்தளம் செல்ல வேண்டும்......
ReplyDeleteமிக்க நன்றி அறிமுகத்திற்கு......வாழ்த்துக்கள் அறிமுகங்கள் அனைவருக்கும்!
வருகைக்கும் கருத்துக்கும் நன்றி
Deleteவணக்கம்
ReplyDeleteஐயா.
இன்றைய வலைச்சர அறிமுகங்கள்அனைவருக்கு வாழ்த்துக்கள் தொடருகிறேன் பதிவுகளை
-நன்றி-
-அன்புடன்-
-ரூபன்-
வருகைக்கு நன்றி ரூபன்
Deleteவணக்கம்
ReplyDeleteஎல்லாம் தொடரும் தங்கள்தான் சிறப்பாக பகிர்தமைக்கு பாராட்டுகள் த.ம 2வது வாக்கு
-நன்றி-
-அன்புடன்-
-ரூபன்-
இனிய அறிமுகங்கள்.. அனைவருக்கும் நல்வாழ்த்துக்கள்!..
ReplyDeleteஅறிமுகத்திற்கு நன்றி... தொடர்ந்து வாசித்து கருத்திடவும்.... குறைகளை நிறைகளாய் மாற்றிட அவை உதவும்....
ReplyDeleteவணக்கம்.!
ReplyDeleteதரம் மிகுந்த அனைத்துப் பெண் பதிவர்களுடன் என்னையும் சிலாகித்து, இன்றைய வலைச்சரத்தில் அறிமுகபடுத்திய சகோதரர் திரு. ராஜபாட்டை ராஜா அவர்களுக்கு என் மனப்பூர்வமான நன்றிகள்.!
என் வலைச்சர அறிமுகத்தை என் வலைத்தளம் வந்து சொல்லி என்னை வாழ்த்திய சகோதரர், திரு. ரூபன் அவர்களுக்கும் என் மனமார்ந்த நன்றிகள்.!
இன்றைய வலைச்சர அறிமுகங்கள் அனனவருக்கும் என் இதயம் நிறைந்த நல்வாழ்த்துக்கள்.!
நன்றியுடன்,
கமலா ஹரிஹரன்.
இன்றைய அறிமுகப்பதிவர்களுக்கு வாழ்த்துக்கள்.
ReplyDeleteசகோதரிகள் கீதமஞ்சரி அக்கா மற்றும் மாலதி அக்காவோடு என்னை அறிமுகம் செய்தமைக்கு நன்றி சகோ!
ReplyDeleteசிறந்த அறிமுகங்கள்
ReplyDeleteதொடருங்கள்
சிறப்பான அறிமுகம்ணா !! இவற்றில் பலரின் தளங்கள் எனக்குப்புதிது என்றாலும் , படித்து மகிழ சிறப்பான பகிர்வு !!!
ReplyDeleteஅருமையான பதிவர்கள்! கமலா ஹரிஹரன், கமலாதேவி அரவிந்தன் வலைப்பூக்கள் எனக்கு புதிது! சென்று பார்க்கிறேன்! நன்றி!
ReplyDeleteஅருமையாக எழுதும் அனைத்து பதிவர்களுக்கும் வாழ்த்துக்கள்!!!
ReplyDeleteஇன்றைய அறிமுகங்கள் அனைவருக்கும் மனமார்ந்த வாழ்த்துகள்.
ReplyDelete