செவ்வாயில் மங்கள்யானை நிலை நிறுத்திய தமிழர்களுக்கு வாழ்த்துகளுடன், இன்றைய வலைச்சரத்தின் கவி மாலையை சமர்ப்பிக்கின்றேன்.
கவிப்பூக்களால் வலைச்சரம் தொடுக்க முடிவெடுத்து...இருந்த காலைப்பொழுது...
எந்த பூ சிறந்த பூ ...?எதை கோர்க்க, எதைவிட? என விழித்து குழம்பியக்கணத்தில்..
.என் நட்புகளின் பூக்களையே உங்களின் மனம் குளிர சமர்ப்பிக்கின்றேன்....
ஏற்கனவே தொடுத்த பூவாயிருப்பின் அதன் நறுமணமே மேலும் வீசக்காரணமாய்.....
கவிதை வானில் வண்ணக்கோலங்கள்
பல....கவிஞர்களின் பார்வையில் சின்ன துகள்கள் கூட பேரண்டங்களாக
விரிவடையும்...கவிதைகளில் கற்கண்டாய் இனிக்கும் சில ...சமூக அவலங்களைச்
சாடும் பல...அழகியல் கவிதைகளைவிட சமூக அக்கறை உள்ள கவிதைகளே வாசகர்களின்
மனதை ஊடுறுவிச் செல்கின்றன...
என்னுள் பதிந்த கவிதைகள் உங்களுக்குள்ளும் பதிய காத்திருக்கின்றன...பாரதியில் துவங்கி இக்கால புதுக்கவிதைகள் வரை எந்த வடிவில் இருந்தாலும் அதன் கருவிற்காய் போற்றப்படுகின்றன...
என்னைக்கவர்ந்த கவிப்பூக்கள் உங்களையும் கவரும் என்பதில் ஐயமில்லை...
கவிச்சரம் உங்களுக்காக
*இலக்கணத்தில்
ஆழ்ந்த விருப்பமுடையவர் ....நேர்மையாய் வாழ்ந்து காட்டும்
எளிமையானவர்...புதுக்கோட்டையில் வலைப்பூ பயிற்சி அளித்து தமிழ்
கணினியில் வளரக்காரணமாயிருக்கும் ,எங்களின் முதன்மைக்கல்வி அலுவலர்
முனைவர் அருள்முருகன் அய்யாவின் மனித நேயமிக்க வரிகளாய்
*வலைப்பதிவர்கள்
எல்லோரும் அறிந்த என் இனிய சகோதரி மைதிலி...நகைச்சுவையால் அனைவர் மனதையும்
கட்டிப்போடும் இவருக்குள் இருந்த சமூக அக்கறை ,எதையும்
நேர்மறைச்சிந்தனைகளால் எடுத்தாளலாம் என்பதற்கு உதாரணமாய்தேன்மதுரத்தமிழ்
*வலைப்பூ அளித்த நட்பில் இனியவளாய்.... பெயரை கேட்கும் போதே இனிமையை உணரச் செய்யும் பொறியிலாளர். கிரேஸ் ...தமிழ் மீது தீராக்காதலுடன் இலக்கியங்களை ஆய்பவர்...ஐங்குறு நூற்று பாடல்கள் இவரிடம் எளிமையாய்....தவழ்கிறது.வேம்பு எல்லோருக்கும் கசக்கும் ஆனால் சங்க இலக்கியத்தில் வேம்பின் பூவிற்கும்,தலைவியின் அழகிற்கும் என்ன தொடர்பாம்.....
தளிர்
*ஒரு பருக்கை சோற்றுக்கு என்ன மதிப்பிருக்கும்...ஆசிரியர் தளிர் தேன் சிந்தும் பூஞ்சோலையில் ஹைக்கூக்கள்....சொல்லும் மதிப்பு அளவிட முடியாதது...
ராசிபன்னீர்செல்வம்
*காட்சிகளை கண்முன் நிலைநிறுத்தும் கவிதை இது...சிறந்த விமர்சகர் ...குறைவாக பேசி நிறைவாக சிந்திப்பவர் ராசி.பன்னீர்செல்வம் அவர்களின் பார்வையில் ஒரு கூடு....
ஊமைக்கனவுகள்
*கணிதம் பற்றி படித்ததும் இவரின் நினைவில் காளமேகப்புலவர் வந்து கவிதை படிக்கின்றார்...ஒப்பீடாய் பட்டினத்தாரும்....இலக்கணத்தில் புலியாய்....
எண்ணத்தூரிகை
*சாரல் இவரின் உயிர் தழுவ எண்ணங்களால் வண்ணமாகின்றது
இளையநிலா
*கவிஞர் இளமதியின் படைப்புகள் அனைத்தும் வெண்பாக்களால் பூத்திருக்கும்....கலைகள் மிளிரும் இவரின் படைப்புகள் கைவினை சித்திரங்களால் கண்களையும்,மனதையும் நிறைக்கும்...சுமைகளையே சுகமாக எண்ணுபவரின் கவிதையாய் சந்தேகம் வேண்டாம் தோழி...கவிஞரே நீரும்.
நோக்கும் இடமெல்லாம் நாமன்றி
*எழுத்துகள் மட்டுமல்ல இவரின் பேச்சும் நம்மை கவர்ந்திழுக்கும் தன்மையாய்....கவிதைகளை காட்சியாய் கண்முன்னே நிறுத்தும் வல்லமை உடையவராய்..குழந்தைகள் நேசிக்கும் ஆசிரியராய் விளங்கும் சமூகப்போராளி...
சுவாதியும் கவிதையும்
*நகைசுவையும்,மரபுக்கவிதைகளும் இவரிடம் சரளமாக..ஓடிவரும்....என் தோழியின் மழைப்பார்வை இது
வேர்களைத் தேடி
*இவரின் மாணவர்களை இதை விட வேறு எப்படி ஊக்கப்படுத்த முடியும்.....
பெண் என்னும் புதுமை
*இவரின் வார்த்தைகளைக் களவாடியவன் யாரோ..
காவியாகவி
*காட்சிகள் பிழையானால் கண்கள்.....குளமாகும் எனக்கூறும் பதிவாய்
கவிமாலை தொடுத்துள்ளேன்....மனம் தொட்டதாவென அறியவே நாடுகின்றேன்.
மீண்டும் நாளை.....
|
|
கவிஞர்களின் அணிவகுப்பு அருமை! அனைவருக்கும் வாழ்த்துக்கள்! அணிவகுப்பில் எனக்கும் ஓர் இடம் அளித்தமைக்கு மிக்க நன்றி! வாழ்த்துக்கள்!
ReplyDeleteவணக்கம்...சார்...உங்கள் கவிதைகள்....மிகவும் அருமை....கவிச்சரத்தில்..அவை இல்லையெனில் செழுமை பெறாது....இன்றைய கவிச்சரம்..நன்றி....
Deleteதமிழ் மணத்திலும் இணைத்தாயிற்று சகோ! நன்றி!
ReplyDeleteமிக்க நன்றி சகோ..
Deleteஆஹா! செவ்வாய்க்குப் பொருத்தமான செவ்வாய் கோளையும் சொல்லி நம் நட்புகளின் கவித்திறமையை அணிவகுக்க வைத்திட்டீர்களே சகோதரி! அருமை! அருமை! அனைவருக்கும் வாழ்த்துக்கள்! தங்களுக்கும் எங்கள் இனிய வாழ்த்துக்கள்!
ReplyDeleteதங்களின் வாழ்த்துகளுக்கு மனம் நிறைந்த நன்றி சகோ..
Deleteகவிக் குயில்களின் அறிமுகம் அருமை..
ReplyDeleteஅனைவருக்கும் நல்வாழ்த்துக்கள்!..
மனம் நிறைந்த நன்றி சார்..
Deleteஅனைத்தும் அருமையான சிறந்த தளங்கள்... அனைவருக்கும் வாழ்த்துக்கள்...
ReplyDeleteவணக்கம் சார்...உங்கள் பயிற்சியால் தான் இந்த வளர்ச்சி மிக்க நன்றி...
Deleteஅன்புள்ள ஆசிரியர் திருமிகு.கீதா அவர்களுக்கு.
ReplyDeleteவணக்கம். வலைச்சரம் ஆசிரியர் பொறுப்பேற்று பெருமைப்படும் அளவிற்கு வெகு அருமையாக தங்கள் பணியைச் சிறப்புடன் செய்யும் தங்களுக்கு எனது மனமார்ந்த வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொள்கிறேன்.
‘செவ்வாயில் மங்கள் யான்...தொடங்கி
காவியக்கவி’...வரை
அருமையா தொகுத்துத் தந்திருக்கிறீர்கள். படித்துப் பயன் அடைந்தோம்.
நன்றி.
-மாறாத அன்புடன்,
மணவை ஜேம்ஸ்.
manavaijamestamilpandit.blogspot.in
மிக்க நன்றி சார்...தொடர்ந்து உங்களின் ஒத்துழைப்பு ...வேண்டுகிறேன்..சார்.
Deleteவணக்கம்
ReplyDeleteஇன்றைய அறிமுகங்கள் அனைவருக்கும் வாழ்த்துக்கள் சிறப்பாக தொகுத்து வழங்கிய தங்களுக்கு எனது பாராட்டுக்கள்
-நன்றி-
-அன்புடன்-
-ரூபன்-
வணக்கம் சார்...மனம் நிறைந்த நன்றி...
Deleteவணக்கம் !
ReplyDeleteமுதற்கண் தங்களிற்கு என் மனமார்ந்த வாழ்த்துக்கள் தோழி !
இன்றைய அறிமுகங்கள் யாவும் மிகச் சிறந்த அறிமுகங்களே !அனைவருக்கும்
என் இனிய வாழ்த்துக்கள் உரித்தாகட்டும் .
வணக்கம்
Deleteஉண்மைதான்...இவர்களைக்கூறாமல் நான் வலைச்சரம் தொடுக்க இயலாது...தங்களின் அன்பிற்கு நன்றி....
வணக்கம் தோழி!
ReplyDeleteசூட்டிய பாமாலை சொக்கவைக்க! என்னையும்
காட்டிய உன்றன் கருணையென்னே! - பாட்டிசைக்கும்
பாவையுன் அன்பில் பறக்கின்றேன்! தோழியுன்
சேவையினை வாழ்த்தினேன் சேர்ந்து!
அற்புத வலைச்சரம் இன்று! அழகான கவிப்பூக்கள் அனைத்துமே!
அதனுடன் மொட்டவிழா அரும்பு நானும்!…
உங்கள் அன்பில் உறைந்தேன் தோழி!
உளமார்ந்த நன்றியுடன் இனிய வாழ்த்துக்களும் உங்களுக்கு!
என்னுடன் இன்று இங்கு அறிமுகமான அனைத்துப் பதிவர்களுக்கும்
இனிய நல் வாழ்த்துக்கள்!
This comment has been removed by the author.
Deleteவணக்கம் சகோதரி
Deleteஎல்லையில்லா உங்களின் அன்பும் வாழ்த்துகளும் உங்களின் அண்மையை என்னிடம் சேர்க்கின்றன...
கவி மாலையை அணிவகுத்த உங்களுக்கும், அறிமுகமானவர்களுக்கும் வாழ்த்துக்கள்.
ReplyDeleteவணக்கம் சகோ
Deleteமனம் நிறைந்த நன்றி...
கவிஞர்க்கு வணக்கம்.
ReplyDeleteஎன்னை இணையத்திற்கு அறிமுகப் படுத்தியதோடல்லாமல் இங்கும் அறிமுகப் படுத்தியமைக்கு மிக்க நன்றி!
தங்களைப் போன்றோரின் அன்பிற்கும் ஆதரவிற்கும் நான் செய்யத் தக்க கைமாறுதான் என்ன?
மீண்டும் நன்றி!
வணக்கம்
Deleteதங்களின் அன்பு ஒன்றே போதும் சார்....நன்றி
இன்றைய பதிவர்கள் அனைவருக்கும் எமது வாழ்த்துக்கள் அறிமுகப்படுத்திய சகோதரி கீதா அவர்களுக்கு நன்றி.
ReplyDeleteகில்லர்ஜி.
மனம் நிறைந்த நன்றி சகோ...
Deleteவலைச்சரப் பகிர்விற்கும் உங்கள் அன்பிற்கும் மனங்கனிந்த நன்றி கீதா..
ReplyDeleteநீங்கள் இல்லாமல் வலைச்சரம் சிறக்குமா சகோதரி...
Deleteஉங்கள் வருகையால் வலைச்சரம் சிறக்கின்றது..நன்றி சார்..
ReplyDeleteவணக்கம் தோழி!என்னை அறிமுகப் படுதியமையிட்டு மிக்க மகிழ்ச்சிம்மா. தங்கள் அன்பின்ற்கு தலை வணங்குகிறேன். தங்கள் பணி சிறக்க வாழ்த்துக்கள் தோழி....! தொடர்கிறேன்
ReplyDeleteவணக்கம் ,,,உங்கள் அன்பால் சிறக்கின்றது வலைச்சரம்..தோழி.
Deleteஅனைவரும் சிறந்த பதிவார்களே இன்று அறிமுகம் செய்த அனைவருக்கும் என் வாழ்த்துக்கள்....!
ReplyDeleteநன்றிமா
Deleteஆஹா! இந்த பெரும்புலவர் பட்டியலில் என் பெயருமா!!! மிக்க நன்றி அக்கா!
ReplyDelete.உன் பெயர் இல்லாமாலா சகோ ..நன்றி
Delete