செல்விருந்தோம்பி வரு விருந்து காத்திருத்தல்
அன்பின் சக பதிவர்களே !
சென்ற இரு வார காலமாக வலைச்சரத்தின் இரு கரங்களாகச் செயல் பட்ட ராஜ்பாட்டை ராஜா தன் எழுத்துகளால் ஒரு ராஜ பாட்டையே படைத்து விட்டார். புதுமையான கருத்துகளால் புத்துணர்வு ஊட்டும் பதிவுகளை எடுத்துச் சுட்டி ஆர்வமுடன் பதிவுகளை பதிப்பித்துள்ளார். பயனுள்ள கருத்துகளையும் பலபதிவர்களீன் படைப்புகளில் இருந்து படிப்பவர்களுக்கு புதுமை விருந்து படைத்துள்ளார்.
கலை, மென் பொருள், கவிதை, பயனுள்ள செய்தி என்று படைப்புகளுக்கு விளக்கப் படங்கள் இட்டு பதிந்துள்ள கருத்துகள் வழக்கத்தை விடப் புதுமையாய் இருந்தது. தானறிந்ததைப் பிறரும் அறியுமாறு எடுத்துச் சொல்லுதல் என்ற இலக்கணத்தை இலக்கியமாக வடித்துக் காட்டியவர் இந்த ஆசிரியர். ஆம் ! அவரது ஆசிரியப் பணியின் சிறப்பும் இவர் சொல்லாமலே தெரிகிறது !
அறிமுகப் படுத்திய பதிவுகள் : 201
பெற்ற மறுமொழிகள் : 333
வருகை தந்தவர்கள் : 4238
நண்பர் ராஜபாட்டை ராஜா வலைச்சரத்தின் நடசத்திரப் பதிவர் என்ற பாராட்டைப் பெறுகிறார்.
பாராட்டுகளுடனும் வாழ்த்துகளுடனும் நண்பரை நன்றியுடன் வழி அனுப்புகிறோம்.
நாளை துவங்கும் வாரத்திற்கு ஆசிரியப் பொறுப்பு ஏற்க அன்புடன் இசைந்துள்ள முனைவர் இரா.குணசீலனை வருக வருக என்று ஆர்வமுடன் வரவேற்கிறோம்.
|
|
இரண்டு வாரம் தொடர்ந்து வலைச்சரம் ஆசிரியர் பொறுப்பேற்று சிறப்பாக செய்திட்ட ராஜபாட்டை ராஜா அவர்களுக்கு நன்றியும், வாழ்த்துக்களும்.!
ReplyDeleteஇந்த வாரம் முதல் வலைச்சரம் தொடுக்க வந்த பேராசிரியர் முனைவர் இரா குணசீலன் அவர்களுக்கு வாழ்த்துக்கள்!
த.ம.1
சோதனை மறுமொழி
ReplyDeleteசிறப்பாக பணி நிறைவு செய்த - ராஜா அவர்களுக்கு நல்வாழ்த்துகள்..
ReplyDeleteபணியேற்கும் - இரா குணசீலன் அவர்களுக்கு நல்வரவு!
இரு நண்பர்களுக்கும் நல்வாழ்த்துக்கள்!
ReplyDeleteஇரண்டு வாரங்கள் செம்மையாகப் பணியாற்றிய ராஜா அவர்களுக்குப் பாராட்டுகள்.
ReplyDeleteவரும் வார ஆசிரியர் முனைவர் குணசீலன் அவர்களுக்கு வாழ்த்துகள்.
This comment has been removed by the author.
ReplyDeleteவணக்கம்
ReplyDeleteசிறப்பாக பணியை செய்து முடித்த ராஜா ஐயா அவர்களுக்கு பாராட்டுகள்
புதிதாக வருகிற ஆசிரியர் குணசீலன் ஐயா அவர்களை அன்புlன் அழைக்கிறோம்
-நன்றி-
-அன்புடன்-
-ரூபன்-
ராஜபாட்டை - ராஜா அவர்களுக்கு வாழ்த்துக்களும்,
ReplyDeleteமுனைவர் இரா.குணசீலன் வர்களுக்கு நல்வரவும்.
அன்புடன்
தேவகோட்டை- கில்லர்ஜி.
அபுதாபி.