வெள்ளி: வலைச்சரத்தில் தில்லைஅகத்துக் க்ரோனிக்கிள்சின் 5 ஆம் நாள்: பட்டறிவுதான் சிறந்த ஆசிரியன்! தமிழ்ச் சோலையின் ஒரு பகுதி!
➦➠ by:
தில்லைஅகத்து க்ரோனிக்கள்ஸ்,
பட்டறிவு
The only source of knowledge is Experience – Albert Einstein
Experience is an Expensive lesson but only this way you can learn
something! – Benjamin Franklin
Experience: The most brutal of teachers. But you learn, My God do you learn. – C.S
Lewis
வலை அன்பர்கள் எல்லோருக்கும்
தில்லைஅகத்தின் இனிய காலை வணக்கம்!
இன்று வெள்ளி! எல்லா நாட்களும் புனித
நாட்கள்தான் என்றாலும்! எல்லா சமயத்தினருக்கும் இது ஒரு புனித நாள்!, வாரத்தின்
இறுதி நாள்! எனவே இந்தப் புனித நாளில், பட்டறிவினால் பெற்ற புனிதமான பாடங்களின்
சுவடுகள்! அனுபவம் என்பதில் “பவ” என்பது வடமொழிச் சொல்லானதால் “அனுபவம்” என்பது
வடமொழிச் சொல்லாம். பட்டறிவு என்பதுதான்
தமிழ் சொல் என்று இணையத் தகவல்!
பட்டறிவு என்பது மிக மிக உயர்ந்த ஓர்
அறிவு! அறிவுச் சுரங்கத்தின் மிக உயர்ந்த அறிவுச் சுரங்கம் இந்த பட்டறிவுச்
சுரங்கம்! பட்டறிவின் விலை பல சமயங்களில் மிகவும் அதிகமாக இருக்கும்! அதற்கு
ஏற்றார் போல் பாடங்களும்! இன்றைய கல்வித் துறையைப் போல!
பட்டாதான் புத்தி வரும், பட்டுத்தான்
திருந்தப்போறான் போன்ற வாசகங்களை நாம் நம் நடை முறை வாழ்க்கையில் சொல்லுவதுண்டு! படிப்பறிவை
விட பட்டறிவு என்பது மிகச் சிறந்த ஆசிரியன்! பல வலி மிக்க, வாழ்வியல்
தத்துவங்களையும், பாடங்களையும் கற்பிக்கும்! மகிழ்வான பாடங்களையும் கற்பிக்கும்! அது கற்பிக்கும் எல்லா பாடங்களும் மிகவும்
பலமானது, ஆழமானது, நம் இறுதி நாள் வரை நம் மனதில் பதிந்து, நம் வாழ்க்கையை வழி
நடத்திச் செல்வது! இந்தப் பட்டறிவையும்
நாம் கூர்ந்து நோக்கி உள்வாங்கினால் மட்டுமே!
நம் ஒவ்வொருவர் வாழ்விலும், ஒவ்வொரு
வகையில் நிகழலாம்! பயணங்கள், நமக்கும், நம்மைச் சுற்றியும் நடக்கும் நிகழ்வுகள்,
மனிதர்கள், கேளிக்கைகள், சமையல் கலையிலிருந்து ஆயக் கலைகள் அனைத்தும், உணவுகள்,
என்று இப்படிப் பல, நமது ஒவ்வொரு நொடியையும், பொன்னைப் புடம் போடுவது போல் நம்மை
புடம் போட்டு நம் வாழ்வில் நமக்கு வழி
காட்டியாய் அமைந்து நம்மை வழி நடத்துதுபவை. எல்லோரும் பிறக்கும் போதே மேதைகளாகப்
பிறப்பதில்லையே! பட்டறிவு நம் ஒவ்வொருவருக்கும் வித்தியாசமாக இருக்கும். அத்தகைய பட்டறிவு நமக்குத் தரும்
படிப்பினைகளும் வித்தியாசமே! அதை நம் பதிவுலக வித்தகர்கள் கையாளும் விதமோ அருமை!
இன்று நாம் அதையெல்லாம்தான் சுவைக்க இருக்கிறோம் இந்த வெள்ளி சுக்கிர வித்தக
வேந்தன் அள்ளித்தரும் அருள் பயக்கும் நன் நாளில்! இந்தப் பட்டறிவைக், கதைகளாகவும்,
கவிதைகளாகவும், கட்டுரைகளாகவும் வெளிக் கொணர்ந்து, அழகானத் தமிழில் வீறு நடை
போடும் நம் பதிவர்களைப் பாருங்கள்!
தில்லைஅகத்து க்ரோனிக்கள்ஸின் பட்டறிவு
இடுகைகளின் சுட்டிகள்
மாதவன் மாமா
வெங்கட்நாகராஜ்
சந்தித்ததும் சிந்தித்ததும்
வலைத்தளம். அதற்கு ஏற்றார் போல் இந்தப் பிரபலப்பதிவரான
தில்லி ராஜாவின் வலைத்தளம் முழுவதும் நல்ல விஷயங்களும், பட்டறிவும் நிரம்பிக் கிடக்கின்றன
அழகிய தமிழில்! நாங்கள் மிகவும் ரசிப்பது
போல் நீங்களும் ரசியுங்களேன்!
இவரது அனுபவங்களை இங்கு வாசியுங்கள்! எத்தனை எத்தனை பாடங்களைச் சொல்கின்றது என்று பாருங்கள்!
ரயில் பயணங்களில்
பக்கிரிசாமி
என்
ஊக்கமது கைவிடேல் வலைத்தளம். பழக்கங்களின் ஆதிக்கம் என்ற மிக மிக
அருமையான அனுபவத் தொடர். ஒவ்வொன்றும்
ஒவ்வொரு வாழ்க்கைப் பாடம்! பயனுள்ள பாடம்! வாசிக்க வேண்டிய தொடர்! சுட்டி இதோ
வாத்தியார்
பாலகணேஷ்
மின்னல் வரிகள் வலைத்தளம். நம் எல்லோருக்கும் வாத்தியார், தனது
பட்டறிவு வாத்தியாரைப் பற்றிச் சொல்லும் சுட்டி இதோ. இவர் எது எழுதினாலும் ரசனையோடும்
நாம் ரசித்து ரசித்து வாசிக்கும் படியும் இருக்கும்! அப்படிக் கலக்குவதால் வாத்தியார்
மற்றொரு தலைப்பிலும் வருவார். எனவே இங்கு
ரத்தினச் சுருக்கமாக....நடைவண்டிகள் என்ற அவரது படைப்பு! ஆம் நமது அனுபவங்கள் தானே நம்மை நடத்திச் செல்லுகின்றன!
எங்கள்
blog
இதில் ஆ 'சிரி' யர்கள்: Kasu Sobhana, kg
gouthaman, kg, ஸ்ரீராம்., raman
எங்களுக்குப் பிரபலமானவர் ஸ்ரீராம் அவர்கள்! அலுவலக
அனுபவங்களுக்கு இதோ சுட்டி. நல்ல அருமையான
அனுபவங்கள்! அதை அவர் எழுதியிருக்கும் விதமோ அருமை!! நகைச்சுவையும் இழையோடும்!
மீனாக்ஷி அம்மன் கோவில், அழகர் கோவில், பழமுதிர் சோலை, திருப்பரங்குன்றம்
தின்ற அனுபவம். இது ஒரு பெரிய அனுபவம்! சும்மா இல்லை! இதில் நமக்கு பல பாடங்கள் கிடைக்கும்! இவர் எழுதிய தொடர் பதிவான தோசையாயணம் மிகவும் பிரபலம்!!!!! அதன் சுட்டி அல்ல இது! இது வேறு!
சென்றுதான் பாருங்களேன்!
வை.கோபாலகிருஷ்ணன்
வைகோ என்று பிரபலம். எல்லோரும் இவரை அறிவார்கள்
அருமையான கதைகள் எழுதுவது மட்டுமன்றி பல
விமர்சனப் போட்டிகளும் நடத்தி பரிசுகள் வழங்கி ஊக்கப்படுத்துபவர்! சிறந்த அனுபவம்!
மிகவும் பாராட்ட வேண்டிய ஒன்று!
மனதைத் தொட்ட அவரது சிறுகதை ஒன்றின் சுட்டி
இதோ-முதிர்ந்த பார்வை
சுட்டி ஒன்று!
உள்ளே செல்லுங்கள். வாசிக்க நிறைய
இருக்கின்றன! நூலகம் எனலாம்.
ஜீவி
பூ வனம் வலைத்தளம். மூத்த வலைப்பதிவர். பார்த்ததும், படித்ததும் என்று இவரது இந்தக்
கட்டுரையைப் படியுங்களேன். அறிய தகவல்கள்
அடங்கிய ஒரு பகுதி! ஓல்ட் இஸ் கோல்ட்
தி.தமிழ்
இளங்கோ
எனது எண்ணங்கள் ENATHU ENNANGKAL வலைத்தளம். சொல்ல நினைத்ததை எழுதுகின்றேன்! என்று சொல்லும்
இவரின் இந்த அனுபவச் சுட்டியைப் பாருங்களேன்.
பல விடயங்கள் சொல்கின்றது.
சாமானியன்
சாம்
சாமானியனின் கிறுக்கல்கள் வலைத்தளம். ஆனால், அவை கிறுக்கல்கள் இல்லை. அத்தனையும் அழகிய தமிழில், அருமையான நடையில்
எழுதப்படும் படைப்புகள்!
தாய் மண்ணே வணக்கம் என்ற அவரது அனுபவச் சுட்டி
காசு, பணம், துட்டு என்ற ஒரு சுட்டி
தமிழன் என்று சொல்லடா... தமிழில் பேசடா. மிக அருமையான அனுபவப் பதிவு! அதுவும் அவரது
தமிழில்! மிளிர்கின்றது! கிறுக்கல்கள் அல்ல! பதுக்கிப் பாதுகாக்க
வேண்டியப் பொக்கிஷங்கள்!!!
குடந்தையூர்
ஆர் சரவணன்
குடந்தையூர் வலைத்தளம். இவரது அனுபவம் பல வாழ்வியல் பாடங்கள்
நிறைந்தவை. பாருங்களேன்! சுட்டி இதோ!
தற்போது குறும்படமும் இயக்கியுள்ளார்!
சீனு
திடங்கொண்டு போராடு வலைத்தளம். அருமையான எழுத்தாளர் இவருள்! இலக்கிய வாசிப்பு இவரது எழுத்துக்களில்
மிளிரும்! இதோ பாருங்களேன்!
இவரது நாடோடி எக்ஸ்பிரஸ் பிரபலமான பதிவுகள்
சென்னை பட்டறிவு
இதோ ஒரு உண்மைச் சம்பவத்தை மையமாகக் கொண்ட ஒரு
சிறுகதை http://www.seenuguru.com/2014/09/ragavan-short-story.html
ஸ்கூப்பையன்-சரவணன்-ஸ்பை
என்று செல்லமாக...
ஏனிந்த சோதனை, வியாபாரம் நட்பை முறிக்கும் போன்ற
நல்ல அனுபவப் பாடங்கள் இந்தச் சுட்டியில்..
நாமும் கற்போமே!
ரூபக்ராம்
சேம்புலியான் வலைத்தளம் பெயர். சினங்கொண்ட
ஊழியனின் குமுறல் : CAB சிஸ்டம் நடப்பது என்ன? மிகவும் மனதைத் தொட்ட ஒன்று!
ஆனந்த ராஜா விஜயராகவன் ஆவி என்று வலையுலகிலும்,
முக நூலிலும் பிரபலம்
பயணம் கோவை ஆவி
வலைத்தளம். மிகவும் அழகான, நம் வாழ்க்கைப் பாடங்கல் எப்படி எல்லாம் வருகின்றன எனச் சொல்லும் அவரது பட்டறிவுச் சுட்டி. இவர் வேறு ஒரு தலைப்பிலும் வருவதால் இங்கு ரத்தினச்
சுருக்கமாக.
ராஜி
காணாமல் போன கனவுகள் வலைத்தளம். இப்போது அவரைக் காணவில்லை வலைத்தளத்தில்! மிகவும்
அழகாக வட்டார வழக்கில் எழுதுபவர்!
மீண்டும் வருவார் என்று நினைக்கின்றோம்!
அவரது அனுபவப் பகிர்வுகளின் சுட்டி இதோ
தருமி
கேள்விகள் கேட்பதன்றி வேறொன்றும் அறியேன், வலைஞர்களே! இது அவரது வாசகம்! வலைத்தளத்தில் அறிந்து கொள்ளவும், சிந்திக்க
வைக்கும் அளவு பல நல்ல கருத்துக்களும்
நிரம்பிக் கிடக்கின்றன. லேட்டரல் திங்கிங்க்!
பட்டறிவுப் பகிர்வு
இவரது மின் நூல் காண இந்தச் சுட்டி
இவரது, வெளியிடப்பட்டப் புத்தகங்களின் சுட்டி
தேனம்மைலெக்ஷ்மணன்
பிரபல பத்திரிகையாளர். பலரும் அறிந்திருப்பீர்கள்!
சும்மா - இவரது வலைத்தளம் பல நல்ல கட்டுரைகளை தன்னகத்தே கொண்டுள்ளது!
பக்தர்களா.. பதர்களா. நல்ல அருமையான அனுபவகட்டுரை
டாக்டர்
ஜம்புலிங்கம்
கோயில் உலா எனும் பயணக் கட்டுரைக்குச் சுட்டி
சோழ நாட்டில் பௌத்தம் இதுவும்
அகச்சிவப்புத் தமிழ் வலைத்தளம். வார்த்தை என்னும் வல்லாயுதம் மிக அழகான
இடுகை. வாசிக்க வேண்டிய இடுகை
அ.
முஹம்மது நிஜாமுத்தீன்
நிஜாம் பக்கம் வலைத்தளம் அழகான ஒரு பதிவு. அம்மா சொன்ன கதை என்று வாழ்வின் மிகவும் அடிப்படை
வாழ்வியல் தத்துவத்தைச் சொல்லும் ஒன்று அதன் சுட்டி
முட்டா
நைனா
சென்னை வட்டார மொழியில் மிக அழகாக பல நல்ல
வாழ்வியல் தத்துவங்கள் இழையோடச் சொல்லி வந்தவர்.
தற்போது இவரைக் காண வில்லை. ஏனோ?!
செல்விஷங்கர்
பட்டறிவும் பாடமும் வலைத்தளம். பாடம் படிக்குமா உலகம் என்று கேட்கின்றார் கவிதை
மூலம். சுட்டி இதோ!
ஸ்ரீவிஜி
விஜயலக்ஷ்மி
அங்கோர் வாட் (சியாம் ரீப்) – பயணக்கட்டுரை...
நாம் ஏன் பயணம் செய்கின்றோம்..சுட்டி
விறால் மீன் பற்றிய தகவல்கள் சுட்டி
காயத்ரி
தேவி
என்னில் உணர்ந்தவை வலைத்தளம் அதற்கு ஏற்றார் போல்
பல பட்டறிவுகள் கட்டுரைகளாக உள்ளன. ஒரு சுட்டி இதோ.
bandhu
எளியவை வலைத்தளத்தின் பெயர். நல்ல பதிவுகள் வலைத்தளத்தில்.
காசிருந்தால் இங்கிருக்கவும்
காரிகன்
வார்த்தைகளின் விருப்பம் வலைத்தளம். இசையைப் பற்றி பல தகவல்கள் இது ஒரு உதாரணச்
சுட்டியே!
சே.குமார்
மனசு வலைத்தளம். உண்மையாகவே அவர் மனசு பேசுகின்றது! இதோ சுட்டிகள்
பட்டறிவுச்சுட்டி
வாழ்க்கைச் சுட்டி
கோவைக்கவி
வேதா இளங்கதிலகம்
வேதாவின் வலை. வலைத்தளம். இவரது வலை முழுவதும் பல அனுபவங்களும்,
கவிதைகளும், நிரம்பிக் கிடக்கின்றன.
இங்குள்ளச் சுட்டி அவரது பயண, பட்டறிவுக் கட்டுரைகள். இந்தச் சுட்டியில் அவர் விவரித்திருக்கும் கொழும்பில் இருக்கும் முனீஸ்வரம் சிவன் கோயில் கீதாவின் கொழும்பு நினைவுகளை மனதின் ஆழத்திலிருந்து மேற்பரப்பிற்குக் கொண்டுவந்தது! நன்றி சகோதரி!
பூச்சோங்
எம்.சேகர்
நாட்டுப்புறவியலில் பழமொழிகள் அழகான இடுகை! இன்னும் பல உள்ளன வாசிப்பதற்கு! கவிதகளும், கதைகளும்! நாங்களும் செல்ல வேண்டும்!
சிங்கமணி
இவரது தொகுப்புகள் தளம் ஆனந்த விகடனால்
விகடன் வரவேற்பறையில் பாராட்டப்பட்டுள்ளது.
தமிழ் இலக்கியத்தின் செழுமையான படைப்புகளை
ஒருங்கிணைத்து உருவாக்கபட்டுள்ள இந்த வலைப்பக்கம் மிகச்சிறப்பாக உள்ளது, கட்டுரைகள், சிறுகதைகள். ஆய்வுரைகள் என்று விரிவான பகுப்புமுறை இதன் தனிச்சிறப்பு,
இம்முயற்சிக்கு காரணமாக இருந்த சிங்கமணிக்கு மனம் நிறைந்த
பாராட்டுகள்.
எஸ்.ராமகிருஷ்ணன்
ஆர்வம் உள்ளோர் இந்த வலைத்தளத்தைத்
தொடரலாம். நிரம்பி வழிகின்றது!
சுபா
ஆனந்தி
இவரது தளம் பல தகவல்களைக் கொண்டுள்ளது
இந்தக் கேள்விக்கு பதில் என்ன -- ஒரு சுட்டி
பழமொழிகள்
விமலன்
சிட்டுக் குருவி வலைத்தளம். கைத்துட்டு எனும் ஒரு அனுபவப் பகிர்வின் சுட்டி
இதோ
மனோசுவாமிநாதன்
முத்துச் சிதறல் வலைத்தளம். நல்ல முத்துச் சிதறல்கள். உதாரணத்திற்கு இதோ
மருத்துவ முத்துச் சிதறல் என்ற அனுபவம் ஒன்று
சாதம் எப்படிச் சாப்பிட வேண்டும் என்ற ஒரு பாடம்
ஸ்ரீகந்தலக்ஷ்மி
நல்ல கட்டுரைகள் உள்ளன. ஒரு சுட்டி இதோ, கல்வி Vs அறிவு: சில சிந்தனைகள்
பிழை இருப்பின் பொறுத்துச் சுட்டிக்காட்டவும்!
இன்னும் நிறைய உள்ளன. பிறிதொரு சமயத்தில்! ஹப்பா, வார இறுதி வந்து
விட்டது! சனியும், ஞாயிறும் கொண்டாட்டம்தான்! வாருங்கள்!
இந்த நாள் இனிய நாளாக அமைந்திட தில்லைஅகத்து
க்ரோனிக்கள்ஸின் இனிய நல்வாழ்த்துக்கள்!
|
|
வணக்கம் நண்பர்களே! (இப்படி அழைத்தால் தான் இருவருக்கும் பொருந்தும் சரி தானே!) வலைச்சரத்தில் நீங்கள் தான் ஆசிரியர் என்பது இன்று தான் எனக்கு தெரியும். ரொம்ப மகிழ்ச்சி ஐந்து நாட்க்ளாக கலக்கிட்டு இருக்கீங்க வாழ்த்துகள். சரியான தலைப்பின் கீழ் சரியான அறிமுகங்கள். அறிமுகங்கள் அனைவருக்கும் வாழ்த்துகள். தொடர்ந்து கலக்குங்க. நன்றி...
ReplyDeleteநண்பரே! தாங்கள் செவ்வாயன்று வலைச்சரத்தில் விழுப்புணர்வுப் பகுதியில் இருக்கின்றீர்கள்! என்பதைத் தாழ்மையுடன் தெரிவித்துக் கொள்கின்றோம்!
Deleteநண்பரே! ஆஹா! நண்பர்க்ளே! அப்படியே சொல்லுங்கள்! பொருத்தம் தான்! ஆசிரியருக்கு சரியாகத்தானே வார்த்தைகள் வரும்!!! பரவாயில்லை நண்பரே! தாமதமாக வந்ததற்கு! வந்துவிட்டீர்களே!!
ReplyDeleteமிக்க நன்றி நண்பரே தங்கள் வாழ்த்திற்கும், பாராட்டிற்கும்!
எல்லா நாளும் கருத்துரை தர முடியாவிட்டாலும் வலைச்சரம் பதிவுகளை தினமும் படித்து விடுவது வழக்கம். என்னையும் அறிமுகம் செய்து இருப்பதை இப்பொழுதான் பார்த்தேன். மிக்க நன்றி! தஙகளது அறிமுகம் என்மீது தங்களுக்கு இருக்கும் அன்பினை வெளிப்படுத்தியது. அன்பிற்கும் உண்டோ அடைக்கும் தாழ்?
ReplyDeleteத.ம.2
ஐயா! தாங்கள் எவ்வளவு நல்ல பதிவர்! அன்பு ஒன்றுதானே ஐயா எல்லோரையும் பிணைப்பது! என்றுமே!
Deleteமிக்க நன்றி ஐயா! தாங்கள் வருகை தந்ததற்கும், கருத்திற்கும்!
நண்பரே எவ்வளவு தூ................ரம் தங்களின் கடின உழைப்பு இருந்திருக்கும் என்பதை உணரமுடிகிறது நிச்சயமாக ஞானி ஸ்ரீபூவு அவர்களின் ஆசியுடன் 7 ஆம்நாள் அதிகமான பதிவர்களை வெளியிட்டதற்காக இது சாதனையாக அறிவிக்கப்படும் 80 உறுதி இல்லை இல்லை என்பது உறுதி தங்களின் வேலைப்பழு தெரியாமல் நானும் கூட நேற்றைய பதிவில் கமெண்ட் கொடுத்து விட்டேன் வாழ்த்துக்கள் & வாழ்த்துக்கள்.
ReplyDeleteயாரங்கே! காவலா! இந்தக் கில்லர் ஜி யை நமது "கில்லர்" அறைக்குள் அடையுங்கள்! தில்லைஅகத்தில் இருக்கும் சகோதரியை/தோழியை மறந்ததற்குத்தான்! இது ஞானி ஸ்ரீபூவு அவர்களின் ஆணை!
Deleteநண்பரே ! உங்கள் கமென்ட் இன்னும் எங்கள் ரெக்கார்டரில் இருக்கின்றது. மறக்க மாட்டோம். உங்க கமென்ட யாருங்க சீரியஸா எடுத்த்க்கிட்டது!!!! நண்பா...சாதனை எல்லாம் வேண்டாம்பா....இந்த வலைச்சரப் பணியின் தேடலில் எத்தனை எத்தனை நல்ல தளங்களும்,அன்பர்களும் கிடைத்துள்ளார்கள்!! அது போதும்....வருகிறோம் உங்கள் தளத்திற்கு....ஆரத்தியோட ரெடியா இருங்கப்பா....
நண்பரே வாழ்த்துக்கள் & வாழ்த்துக்கள். என்றால் ? என்ன அர்த்தம் ? ஒன்று நண்பருக்கு, மற்றொன்று நண்பிக்கு இது தெரியாமல் அப்பாவியை பிடிச்சு கில்லர் அறைக்குள் போடச்சொன்னால் ? நானே பயந்த சுபாவம், போதக்குறைக்கு அப்பாவி வேற...
Deleteஓ! சரி! சரி! (ரெண்டு சரி!) புரிஞ்சுருச்சுப்பா.....யாரங்கே கில்லர்ஜி ய விடுவிக்கவும்!
Deleteஎன்னது விடுவிக்கவா...அவரு எப்பவோ தப்பிச்சு பறந்துட்டாரே!
ஹாஹ்ஹாஹா!
Deleteஅறிமுகங்கள் சிறப்பாகவும் சுவையாகவும் நகர்த்துகிறீர்கள்.
ReplyDeleteபாராட்டுகள்.
எழுதுகோல் ஏந்திய யாழ்பாவாணன் பதிவுகள் (மின்நூல்)
http://yppubs.blogspot.com/2014/09/blog-post_26.html
படித்துப் பாருங்கள். நண்பர்களிடம் தெரிவியுங்கள்.
மிக்க நன்றி நண்பரே! பாராட்டுகளுக்கு! படிக்கின்றோம்...நண்பர்களிடமும் தெரிவிக்கின்றோம்! மிக்க நன்றி!
Deleteமறுபடியும் எத்தனை எத்தனை தளங்கள் சுட்டி இருக்கிறீர்கள் என்று ஆச்சர்யம்தான் ஏற்படுகிறது. இன்றைய பதிவர்களில் எனக்குத் தெரிந்தவர்கள் நிறைய, நிறைய.... தெரியாதவர்கள் குறைவு! அதில் ஒரு தளத்தில்தான் 99 சதவிகிதம் குடியிருக்கிறேன்.. அங்கு நீங்கள் சொல்லியிருக்கும் பையன் ரொம்ப நல்ல பையன். ஹிஹிஹி... எங்கள் ப்ளாக்கைத்தான் சொல்கிறேன்! நன்றி ஸார்!
ReplyDeleteஅந்த ரொம்ப நல்ல பையனைத்தான் எங்களுக்கு நன்றாகத் தெரியுமே! நாங்களும் மிகவும் ரசிக்கும் நல்ல பையனாச்சே!!!! (நாங்களும் அரைக் கிழம் என்று சொன்னாலும் ஸ்வீட் டீன்ஸ் தான் இது எப்புடீ)
Deleteரொம்ப நன்றி சார்!
பட்டு விரித்தாற்போல பட்டறிவுப் பதிவுகளின் தொகுப்பு!..
ReplyDeleteஅருமை.. அனைவருக்கும் நல்வாழ்த்துக்கள்..
மிக்க நன்றி ஐயா ! தங்கள் வருகைக்கும், கருத்திற்கும்!
Deleteமீண்டும் மீண்டும் வியக்க செய்கிறீர்கள்!!! அடேயப்பா எத்தனை அறிமுகம்!!! நிறைய பேர் நம்ம மக்கள் தான் . நான் போய் புது ஆளுங்களை பார்கிறேன்:) வாழ்த்துகள் சகாஸ்:) அப்புறம் ஒரு டௌட் இவ்ளோ பிஸியா இருக்கும் போது எப்படி நண்பர்கள் தளங்களையும் படிச்சு கமெண்ட் போடுறீங்க!!!
ReplyDeleteநாங்க ரெண்டு பேருப்பா......அதான்........கருத்துப் பரிமாற்றம் நடக்கும் ஃபோன்ல.....பல சமயம் தாமதமாகிவிடும்......பதிவுகள் மெயில்ல ...அனுப்பப்படும்.....பின்னூட்டம் என்னன்னு அதுல.....சென்னைல பதிவேற்றம் எல்லாம்....இப்படி ஓடுதுபா.....புதன் பதிவ பாத்தீங்கனா அதுல முதல் பின்னூட்டத்துல நான் அன்று எப்படி இடுகை பதிவேற்றம் செய்ய முடிஞ்சுதுனு இருக்கும் பாருங்க அதுதான்....
Deleteமிக்க நன்றிப்பா....
ஹலோ மைதிலி...நான் வெட்டியா வீட்டுலதானே இருக்கேன்...துளசி தான் டீச்சர்....அதான் ஏதோ கொஞ்சம் முடியுது எங்கலால......வேற ஒண்ணும் இல்ல..இதுதான்...இங்க நடக்குது......
Deleteமிக்க நன்றி தோழி
கீதா
தெரிவு செய்யப்பட்ட வலைதள அன்பர்கள் அனைவருக்கும் குழலின்னிசையின் குதுகூல வாழ்த்துக்கள். குறிப்பாக எனது ஊன்றுகோள் நண்பர் சாமானியனுக்கு (தாய் மண்ணே) வணக்கம். வாழ்த்துக்கள்.
ReplyDeleteபுதுவை வேலு(KUZHALINNISAI.BLOGSPOT.COM)
மிக்க நன்றி ஐயா! வாழ்த்துக்களுக்கு!
Delete"Pattarivu Suttigal" varisaiyil en thalamum..! Nandri saar!
ReplyDeleteமிக்க நன்றி ஆவி!
ReplyDeleteஅருமையான பதிவர்களின் அறிமுகம்! எப்படி இப்படிப் புயலென
ReplyDeleteவேகமாய் இத்தனை பதிவர்களை அறிமுகம் செய்ய முடிகிறதென
வியக்கின்றேன்! மிக அருமை உங்கள் பணி சகோதரரே!
அனைவருக்கும் உளமார்ந்த நல் வாழ்த்துக்கள்!
பலரை வாசிப்பதால்தான் சகோதரி! ஆனால் ஒரு சிலருக்கு மட்டும் பதில்...மற்றவர்களை வாசித்து விட்டு வந்துவிடுகின்றோன்...கால அவகாசம் இல்லாததால்.....நாங்கள் இருவர் சேர்ந்து எங்கள் வலைத் தளத்தை கையாள்வதால் ஒரு வேளை நீங்கள் சொல்லும் புயல்??!!
Deleteஎனது கிறுக்கல்களையும் சிறப்பித்ததற்கு நன்றி ! அனைவருக்கும் வாழ்த்துகள்.
ReplyDeleteநன்றி
சாமானியன்
நன்றி நாங்கள் தான் சொல்ல வேண்டும் நண்பரே! அருமையான படைப்பாளிகள் உங்களைப் போன்றோரின் அறிமுகம் எங்களுக்குக் கிடைத்து வாசித்தும் அறிமுகமும் படுத்த முடிகின்றதே என்பதால்....
Deleteமிக்க நன்றி நண்பரே!
நண்பர் சாம் (சாமானியன்) மூலம் தகவல் அறிந்து இங்கு வந்தேன். என் வலைப்பூவையும் அறிமுகம் செய்ததற்கு நன்றி. எப்படி இத்தனை அறிமுகங்கள் செய்ய முடிகிறது என்று வியப்பாக இருக்கிறது.
ReplyDeleteமிக்க நன்றி நண்பரே! வியப்பு?? !! ஒருவேளை நாங்கள் இருவர் நணபர்கள் சேர்ந்து எழுதுவதால் இருக்கலாம்! எல்லோரும் தனியாளாகச் செய்வதை விடவா? நண்பரே! எவ்வளவு நன்றாகச் செய்திருக்கின்றார்கள்!!!
Deleteமிக்க நன்றி நண்பரே! தங்கள் பாராட்டுகளுக்கு!
ஐயா, வணக்கம்.
ReplyDeleteஇப்போது எனக்குள்ள பல்வேறு வேலை நெருக்கடிகளில் பிறர் பதிவுகள் பக்கம் செல்ல நேரம் கிடைக்காமல் இருந்து வருகிறது. அதனால் இந்த என் வலைச்சர அறிமுகத்தினை காணமுடியாமல் போய் விட்டது. தாமதமான வருகைக்கு முதலில் என்னை மன்னிக்கவும்.
இதுபோன்ற இனிய செய்திகளை ஓடோடி வந்து என் கவனத்திற்குக்கொண்டு வருவார்கள் ஒருவர். அந்த என் நலம் விரும்பியும் 2-3 நாட்களாக ஏதோ வெளியூர்ப் பயணத்தில் உள்ளார்கள். அதனால் அவர் மூலமும் இது என் கவனத்திற்குக் கொண்டுவரப்படவில்லை.
அகஸ்மாத்தாக இன்று என்னால் இதனைக்காண முடிந்தது.
>>>>>
பரவாயில்லை சார்! நீங்கள் எத்தனை அழகாகக் கதைகள் படைத்து, விமர்சனப் பொட்டி வைத்து பரிசுகளும் வழங்குகின்றீர்கள்! அதை விடவா? நாங்களே உங்களுக்குச் சொல்லலாமா என்று நினைத்தோம். ஆனால் அது ஒரு சுய விளம்பரம் போலாகிவிடுமோ, தற்பெருமை போலாகி விடுமோ என்பதால் தான் சொல்ல வில்லை சார்!
Deleteமிக்க நன்றி சார்! தங்களைப் போன்றவர்களின் அறிமுகமும் நட்பும் கிடைத்ததற்கு!
Thulasidharan V Thillaiakathu
Delete//நாங்களே உங்களுக்குச் சொல்லலாமா என்று நினைத்தோம். ஆனால் அது ஒரு சுய விளம்பரம் போலாகிவிடுமோ, தற்பெருமை போலாகி விடுமோ என்பதால் தான் சொல்ல வில்லை சார்! //
இதில் சுய விளம்பரமோ, தற்பெருமையோ எதுவுமே கிடையாது, நண்பரே. இதை சம்பந்தப்பட்டவர்களுக்கு தெரிவிப்பதே மிகவும் நல்லது. இதுபோலத் தகவல் அளிக்க வேண்டியது வலைச்சர ஆசிரியர்களின் பொறுப்பும் கடமையும் என நான் கருதுகிறேன். அவ்வாறு ஒருவேளை வலைச்சர ஆசிரியர் சிலரால் இயலாமல் [நேர நெருக்கடி போன்றவைகளால்] போனால், அந்த வலைச்சர ஆசிரியர் தன்னுடைய நெருங்கி நண்பர் ஒருவர் மூலம் இதை சம்பந்தப்பட்டவர்களுக்குத் தெரிவிக்கச் சொல்லி கேட்டுக்கொள்ளலாம். அவ்வாறு தெரிவிப்பவர் பதிவின் இணைப்புடன் தெரிவிக்கலாம்.
இதை ஒரு விதிமுறையாகவே கூட வலைச்சர தலைமை ஆசிரியர் திரு. சீனா ஐயா அவர்கள் கொண்டுவரலாம் என எனக்குத் தோன்றுகிறது. நான் அவரிடமும் இதுபற்றி பேச உள்ளேன்.
இல்லாதுபோனால் வலைச்சரத்தில் பாராட்டிப் பேசப்பட்டுள்ள வலைத்தள வலைப்பதிவர்களுக்கு எப்படி இந்த விஷயம் தெரியக்கூடும்? ... சற்றே நினைத்துப் பாருங்கள், ஐயா.
அன்புடன் VGK
ஆம்! வை.கோ ஐயாவின் இந்தக் கருத்துரையை நான் அப்படியே முழுக்கவும் வழிமொழிகிறேன்.
Delete//வை.கோபாலகிருஷ்ணன்
ReplyDeletehttp://gopu1949.blogspot.in
வைகோ என்று பிரபலம். எல்லோரும் இவரை அறிவார்கள்
அருமையான கதைகள் எழுதுவது மட்டுமன்றி பல விமர்சனப் போட்டிகளும் நடத்தி பரிசுகள் வழங்கி ஊக்கப்படுத்துபவர்! சிறந்த அனுபவம்! மிகவும் பாராட்ட வேண்டிய ஒன்று!
மனதைத் தொட்ட அவரது சிறுகதை ஒன்றின் சுட்டி இதோ-முதிர்ந்த பார்வை
http://gopu1949.blogspot.in/2014/08/vgk-31.html
சுட்டி ஒன்று! உள்ளே செல்லுங்கள். வாசிக்க நிறைய இருக்கின்றன! நூலகம் எனலாம்.
http://gopu1949.blogspot.in/2014/09/vgk-34_23.html//
என்னை மட்டுமல்லாது, இந்த என் சிறுகதை விமர்சனப் போட்டியின் நடுவரான திரு. ஜீவி ஐயா அவர்களையும் சேர்த்து பாராட்டியுள்ளது எனக்கு இரட்டிப்பு மகிழ்ச்சியளிக்கிறது.
மேலும் அவரின் வலைத்தளமான ’பூ வனம்’ சேர்ந்து அறிமுகப்படுத்தப்பட்டுள்ளதில் எனக்கு இரட்டிப்பு மகிழ்ச்சியாக உள்ளது.
தங்களின் இன்றைய வலைச்சரத்தொகுப்புக்கு மனம் நிறைந்த பாராட்டுகள், அன்பான இனிய நல்வாழ்த்துகள், நன்றியோ நன்றிகள்.
அன்புடன் VGK
சார் என்ன சார்! தாங்கள் எங்களை விட எவ்வளவு அனுபவசாலி! தங்கள் வலைத்தளம் வாசிப்பதால் திரு. ஜீவி அவர்களைப் பற்றியும் அறிய முடிந்ததே! அதற்கு நாங்கள் தான் நன்றி சொல்ல வேண்டும் சார்!
Deleteமிக்க நன்றி தங்கள் பாராட்டுகளுக்கும், அன்பான இனிய வாழ்த்துகளுக்கும்! தொடர்கின்றோம் சார் தங்களை!
This comment has been removed by the author.
ReplyDeleteஇன்றைய தங்களின் அறிமுகங்களில் எனக்கு மிகவும் பரிச்சயம் ஆன திருவாளர்கள்: ஜீவி ஐயா, தமிழ் இளங்கோ ஐயா, அ.முஹம்மது நிஜாமுத்தீன், வெங்கட்ஜி, ஸ்ரீராம் ஜயராம் ஜய ஜய ராம்; திருமதிகள்: மனோ சுவாமிநாதன், செல்வி ஷங்கர் மற்றும் தேனம்மை லக்ஷ்மணன் ஆகியோருக்கும் என் அன்பான இனிய நல்வாழ்த்துகள்.
ReplyDeleteஇந்த என் நட்புக்களுடன் என்னையும் இன்று வலைச்சரத்தில் இணைத்துள்ளதற்கு, தங்களுக்கு என் ஸ்பெஷல் நன்றிகள், ஐயா.
அன்புடன் VGK
மிக்க நன்றி ஐயா! தங்கள் வாழ்த்துகளுக்கு!
Deleteநான் முதல் பதிவு கொடுத்த 02.01.2011 முதல் கடந்த 45 மாதங்களில், என்னையும் என் வலைத்தளத்தினையும் பல வார வலைச்சர ஆசிரியர்கள் வலைச்சரத்தில் புகழ்ந்து பாராட்டி அடையாளம் காட்டி சிறப்பித்துள்ளார்கள்.
ReplyDeleteஎனக்குத்தெரிந்தவரை அவைகளை நான் தனியாக கணக்கிட்டு சேமித்து வைத்துள்ளேன். அந்த என்னிடம் உள்ள புள்ளிவிபரங்களின்படி, எனக்குத்தெரிந்து இந்தத்தங்களின் இன்றைய அறிமுகம் 104 வது என்பதையும் மகிழ்ச்சியுடன் தெரிவித்துக்கொள்கிறேன்.
100வது அறிமுகம் பற்றி ஓர் சிறப்புப்பதிவே சமீபத்தில் கொடுத்துள்ளேன். இதோ அதன் இணைப்பு:
http://gopu1949.blogspot.in/2014/08/100.html
இது தங்களின் தகவலுக்காக மட்டுமே.
அன்புடன் VGK
எனது வலைப்பூவையும் அறிமுகப்படுத்தியதற்கு மிக்க நன்றி தங்கள் இருவருக்கும்....
ReplyDeleteநன்றி ஸ்பை!
Deleteஎன் வலைப்பூவை அறிமுகப்படுத்தியதற்காக ஐயா, அம்மணி இருவருக்கும் என் நன்றிகள்! தாமதமாக வந்ததற்காக வருந்துகிறேன்!
ReplyDelete