சீனா வான்னா வ(ர்)ரம்...
➦➠ by:
வானம்பாடிகள்
வணக்கங்க.
என்ன பாக்கறீங்க? நாந்தேன். போன மச்சான் திரும்பி வந்தான் பூ மணத்தோடன்னு நக்கலா ஒரு சொலவட சொல்லுவாய்ங்க. இது அப்படி இல்ல.
ஆண்டாள் கோர்த்த அழகு மாலையை அணிந்து கொடுத்ததால் புறந்தள்ளி வேற மாலை போடப் போனாலும் மறுத்து அதே மாலை வேண்டுமென்ற பரந்தாமன் வரம் மாதிரி மீண்டும் சரம் கோர்க்க, வலைச்சரம் கோர்க்கப் பணித்தார் அய்யா சீனா.

போன வாரம் ஆரம்பத்துல சொன்னேன்ல. தட்றதோட கொட்றதும் தாயுமானவள்னு. கொட்டீட்டா ப்ரியா. அழகா ஒரு நந்தவனம் கட்டி, அதில வகை வகையா பூவெடுத்து சரம் கோக்க வழி செஞ்ச சீனா அய்யாவை சொல்லத் தெரியாதான்னு கொட்டினப்ப உறைச்சது எந்தப்பு.
அதுக்குன்னே வரம் கிடைச்சா மாதிரி இந்த வாரமும் தொடர வாய்ப்பு கிடைச்சது. அதுவும் வலைப்பூவின் வளர்ச்சியும் அதில் பங்காற்றும் பதிவர்களையும் பாராட்டி தினமணியில் வந்த செய்தியை உடனே பகிர்ந்த சீனாவுக்கு நன்றி. அத்தனை பேரும் வலைச்சரத்தால் அறிமுகமானவர்கள். அவர் அழைக்கும்போது....
வரப் போறது பொங்கல். கரும்பு தின்னக் கூலியா? மௌனம் சம்மதம். ஆமாங்க. மிகப் புகழ் பெற்ற வயலின் இசைக் கலைஞர் யெஹுதி மெனுஹின். அவரை ஒரு பேட்டில கேட்டாங்களாம். உலகத்தில மிக உயர்ந்த இசை எதுன்னு. அவரு சொன்னாராம், ஒரு ஸ்வரம்(நோட்ஸ்) முடிஞ்சி மறு ஸ்வரம் ஆரம்பிக்கறதுக்கு முன்ன ரெண்டுக்கும் நடுவில இருக்குமே ஒரு அமைதி. அது யாராலையும் கொண்டு வர முடியாது. அதனால அதான் உயர்ந்த இசைன்னு.
மௌனம் இசை. மௌனம் வலி. மௌனம் சந்தோஷம். மௌனம் துக்கம். மௌனம் சக்தி. மௌனம் இயலாமை. மௌனம் காதல். மௌனம் ஊடல். மௌனம் கண்ணீர். மௌனம் களிப்பு. மௌனம் சூன்யம். மௌனம் நிறைவு. எல்லாமுமான அந்த மௌனம் மெல்லக் கசிகையில் இத்தனையும் உணராமல் போக நாம் மரத்துப் போனவர்களா? கசியும் இம் மௌனமுணர்ந்து கசிவோம் கதிருக்கு நன்றி சொல்லி.
ஆ’சிரி’யர்கள் என்ற அறிமுகத்தோடு கேஜி, காசு சோபனா, ராமன், ஸ்ரீராம்,கேஜி.கௌதமன் ஆகியோரின் குழு எங்கள் Blog. நம்ம வூடுதான்! உள்ள வாங்க! படியுங்க! படியுங்க!!ன்னு இவங்க வலைப்பூ கூப்பிடும் போது போகாம முடியுமாங்க. சினிமாக் கொட்டகைகள் பற்றிய இவர்களின் கலக்கல் இதோ.
சிங்கக்குட்டி. மாற்ற முடியாது என்ற வார்த்தையைத் தவிர மற்ற அனைத்தையும் மாற்ற முடியும் என்ற நம்பிக்கையூட்டும் எண்ணத்துக்கு சொந்தக்காரர். திருநங்கைகள் குறித்து சார்பற்ற விமரிசனங்கள் வெகு குறைவே. இவரின் இந்த இடுகை இவரின் புரிதலுக்கு சான்றென்பதை விட நமக்கும் உதவும் என்பதில் ஐயமில்லை.
மாங்காய் திருடுவது பெரிய கலை. திருடும் வயதில் திருடினால்தான் அழகு. நினைவைக் கிளரும் இந்த இடுகைக்கு சொந்தக்காரன் பவன். ஈழத் தமிழில் மாங்காய் திருடும் கலை நன்றாகவே இருக்கிறது. வலைப்பூக்கு எரியாத சுவடிகள் என்ற பொருத்தமான பெயருக்கே இவனைப் பாராட்டலாம்.
சத்ரியன் குணம் போரிடுதல் மட்டுமல்லவே. காதலும் கூட. இரண்டிலும் மன்னனாக இவரின் படைப்புகள் அட ரகம். ஒன்று இங்கே.
சோலை அழகுபுரம். இதைவிட அழகுப் பெயர் தேடினாலும் கிடைக்காது. வி.பாலகுமாரின் இடுகைகளைத் தேடினால் கிடைக்குது அழகு. அப்படித் தேடியதில் கிடைத்தது இது.

|
|
அறிமுகங்களுக்கு நன்றி..
ReplyDeleteவாழ்த்துகள்.
வலைச்சர சாதனை...!
ReplyDeleteமீண்டும் வாழ்த்துக்கள் கை வலிக்குதுப்பா வாழ்த்துக்கள் டைப் பண்ணி பண்ணி...!
வலைச்சரத்தில் மீண்டும் வந்தமைக்கு வாழ்த்துக்கள்..
ReplyDeleteஇன்ப அதிர்ச்சி! வாழ்த்துக்கள் அய்யா, மீண்டும் தொடர்வதற்கு...
ReplyDeleteபிரபாகர்.
வலைச்சர சாதனை
ReplyDeleteஇத தான் "back to back century"-nu சொல்லுவாங்களோ?
ReplyDeleteஅறிமுகங்களுக்கு நன்றி ஐயா!!
அய்யோ இன்னொரு வாரமும் உங்க தொல்லையா?? =))))
ReplyDeleteஇன்னொரு வாரத்துக்கு வாழ்த்துக்கள். இங்கயே செட்டில் ஆகிடாம நம்ம கடைப் பக்கமும் கொஞ்சம் வாங்க.
அறிமுகங்களுக்கு நன்றி.....
ReplyDeleteமறுபடியும் நீங்கதானா... வாங்க ஐயா வாங்க.........
ஏண்ணே....
ReplyDeleteநம்மள விளம்பரப்படுதுறக்கு முன்னாலே ஒரு வார்த்த சொல்ல மாட்டீங்களா?
இன்னும் கொஞ்சம் மேக்கப்போட வந்துருப்போம்ல
சென்னை புத்தகக்கண்காட்சி EXCLUSIVE புகைப்படங்கள்
ReplyDeletehttp://kaveriganesh.blogspot.com
அறிமுகங்களுக்கு நன்றி. மீண்டும் வருகை புரிந்ததுக்கு நன்றி. என்னையும் அறிமுகப் படித்தியதுக்கு நன்றி.
ReplyDeleteவாழ்த்துக்கள்.
வாராய்....நீ வாராய்.....போகுமிடம் வெகு தூரமில்லை....நீ வாராய்.....
ReplyDeleteஹி.....ஹி......
வாழ்த்துக்கள்
வரவேண்டும் பதிவிடவேண்டும்
ReplyDeleteஅறிமுகங்களுக்கு வாழ்த்துக்கள்
இந்த வாரமும் பாலா சார் தொடர்வதற்கு அன்புக்கட்டளையிட்ட சீனா ஐயாவுக்கும் நன்றி.
ReplyDeleteநல்ல அறிமுகங்கள் பாலா சார்.
வலைச்சரத்தில் இனி வித்யாசத்தை காணலாம் ,
ReplyDeleteபாலா சார்_ன்னா சும்மாவா..
:)))
வலைச்சரத்தில் மீண்டும் வந்தமைக்கு வாழ்த்துக்கள்..
மறுபடியும் போட்டுத்தாக்குங்கண்ணே!
ReplyDeleteஅறிமுகத்திற்கு நன்றி வானம்பாடிகள்.
ReplyDeleteபோன் வாரமே சின்ன குறுகுறுப்பு, தேடும் போது என் பக்கமும் கண்ணுல படுமான்னு.... இந்த வாரம் பட்டிருச்சு :)
அப்புறம் சோலைஅழகுபுரம், எங்க தெரு பெயர்.
நன்றி 'எங்கள் ப்ளாக்' அறிமுகத்துக்கு...மிக்க நன்றி
ReplyDeleteவாழ்த்துக்கள்
ReplyDeleteவிஜய்
இங்கயும் குத்துறாங்களா மைனசு...! அடங்...! பாராட்டுக்கள் சார்...!
ReplyDeleteவலைச்சரம் எழுதி வாங்கிடலாம்ன்னு ப்ளானா..? எப்டியோ தூங்காம விழிச்சிருந்து கடமையா செய்யறதுக்கு பலன் கிடைச்சுடுத்து... =))
ReplyDeleteஅன்பின் பாலா
ReplyDeleteஅழகான முறையில் சரம் தொடுக்கத் துவங்கி விட்டீர்கள். அறிமுகங்கள் அருமை. அத்தனை சுட்டிகளுமே நல்ல இடுகைகளுக்கு அழைத்துச் செல்கின்றன.
வாழ்க பணி
நல்வாழ்த்துகள் பாலா
வாழ்த்துக்கள் நண்பரே...
ReplyDeleteவாழ்க வளமுடன்.
வேலன்.
@@நன்றி சூர்யா
ReplyDelete@@நன்றி வசந்த்
@@நன்றி புலிகேசி
@@நன்றி பிரபாகர்
@@நன்றி இராதாகிருஷ்ணன் சார்
@@நன்றி செந்தில் நாதன்
@@நன்றி முகிலன்
@@நன்றி சங்கவி
@@நன்றி கதிர்
@@நன்றி காவேரி கணேஷ்
@@நன்றி சித்ரா
@@நன்றி ஆரூரன்
@@நன்றி றமேஸ்
@@நன்றி நவாஸூதீன்
@@நன்றி ஸ்டார்ஜன்
@@நன்றி நிஜாம்.
@@நன்றி பாலகுமார்
@@நன்றி விஜய்
@@நன்றி சீனா அய்யா
@@நன்றியம்மா
@@நன்றி வேலன்.