இரண்டாம் நாள் இன்று - காதல் செவ்வாய்
பொதுவாக எனக்கு கவிதைகள் என்றால் கொஞ்சம் என்ன நிறையவே அலர்ஜி அதற்கு இரண்டு காரணங்கள்.
1.நான் கவிதை எழுதி கொடுத்தப் பிறகு தான் மூன்று பெண்கள் என்னோடு பேசுவதை நிறுத்தி விட்டார்கள் .
2.+1 படிக்கும் பொழுது (நான் தேறவே மாட்டேன் என்று ஊர் உலகமே சொன்ன காலம் அது) கவிதை எழுதினேன் என்று வீட்டில் திட்டினார்கள்.
அப்புறம் பதிவுலகத்திற்கு வந்தப்பிறகு வேண்டாவெறுப்பாக கவிதைகள் படிக்க ஆரம்பித்து பிடித்து போய் நானும் முயற்சி செய்யலாம் என்று கனவில் கூட நினைத்தது கிடையாது.
பெண்கள் எழுதி காதல் கவிதைகள் படித்தால் அது ரொம்பவே வசீகரிக்கும்.உதாரணம் ஊர் உலகமே முணுமுணுத்த பாடல் வசீகரா - எழுதியது தாமரை.
அது போல முதல் அறிமுகம் ஒரு பெண்
மதார் - சிவில் என்சீனியர்.அனுபவங்களுக்கும்,கும்மிகளுக்கும் நடுவில் கவிதைகளும் உண்டு.திருச்செந்தூர் பெண்.ஏன் உங்கள் சொந்த ஊரைக் குறிப்பிடவில்லை என்று தட்டாமல் கேட்ட பெண்.அப்படி அவர் எழுதிய ஒரு கவிதை.
கவிதை காதலன் - உதவி இயக்குனர்.கவிதைகளுக்கு நடுவில் அவர் போடும் புகைப்படங்கள் அவர் ரசனையை சொல்கிறது.ஒரு இயக்குமராக வர வாழ்த்துக்கள்.காதல் கவிதைகள் எழுதி அடிக்கடி பெருமூச்சை விட வைக்கிறார்.அறிவுமதி பற்றி நான் எழுத நினைத்தை விட சிறப்பாக எழுதி இன்னொரு பெருமூச்சு விட காரணமானவர்.
அறிவுஜீவி - பெயர்க்கு ஏற்றப்படி காதல் கவிதைகள் எழுதி காதில் புகை வர செய்கிறார்.கிறுக்கல்கள் என்று சொல்லி விட்டு அருமையாக கவிதை எழுதுகிறார்.
உனக்கும் எனக்குமான உறவை
நான் இன்னும்
தேடிக்கொண்டே இருக்கிறேன்
வார்த்தைகளில்..!
இப்படி எத்தனை காதல்களோ..
மாரிமுத்து - கவிதை எழுதி எண்டர் தட்டுகிறாரா இல்லை எண்டர் தட்டி கவிதை எழுதுகிறாரா.அருமையாக எழுதுகிறார்.சேறு என்று தலைப்பு வைத்து இருந்தால் அருமையாக இருந்திருக்கும்.குறுந்தகட்டுக் கிறுக்கல்கள் என்று பெயர் வைத்து கவிதையில் காதல் சொல்கிறார்.
நம் தேர்வு முடிவுகள்
அறிவிப்பு பலகையில்,
என் விரல் தேடியது
என் பெயரை,
என் விழி தேடியது,
உன் பெயரை...
பின் குறிப்பு 1: கவிதை இப்படியும் எழுதலாம் என்று களத்தில் குதித்து உரையாடல் போட்டியை நிறுத்தப் பார்த்த கவிதை இது.ஆரம்பத்தில் எழுதும் போது இப்படித்தான் ஆரம்பிக்க வேண்டும் என்று கொலை வெறியோடு சொன்ன கவிதை.இன்னும் தொடரும் என்று தெரிகிறது இந்த ஆரம்பம்.
பின் குறிப்பு 2: இப்படி எல்லாம் கவிதை எழுதி பெயரைக் கெடுத்துக் கொள்ளக் கூடாது
|
|
//அத்திரி said...
ReplyDeleteஇங்கேயாவது யார்கிட்டயும் வாங்கி கட்டிக்காம ஒழுங்கா வேலையப்பாரு//
முதல் போணியே நீங்க தான் தல
பின் குறிப்பு 1 பார்க்கவும்
கவிதைகளை இப்படியும் ரசிச்சு சொல்லலாமோ? அருமை, சார்.
ReplyDeleteஇரண்டாம் நாள் வாழ்த்துகள்.
ReplyDelete[[உனக்கும் எனக்குமான உறவை
நான் இன்னும்
தேடிக்கொண்டே இருக்கிறேன்
வார்த்தைகளில்..!]]
அருமை ...
இரண்டாம் நாள் கவிதை வாழ்த்துக்கள்
ReplyDeleteஅன்பின் அரவிந்த்
ReplyDeleteநல்ல அறிமுகங்கள் - காதல் செவ்வாய் - கவிதைகள்
நல்வாழ்த்துகள் அரவிந்த்
//அது போல முதல் அறிமுகம் ஒரு பெண்
ReplyDeleteமதார் - சிவில் என்சீனியர்.அனுபவங்களுக்கும்,கும்மிகளுக்கும் நடுவில் கவிதைகளும் உண்டு.திருச்செந்தூர் பெண்.ஏன் உங்கள் சொந்த ஊரைக் குறிப்பிடவில்லை என்று தட்டாமல் கேட்ட பெண்.அப்படி அவர் எழுதிய ஒரு கவிதை.//
மிக்க நன்றி என்னையும் ஒரு பதிவராய் ஏற்று கொண்டமைக்கு . இது நாள் வரையில் நான் இவ்வளவு சந்தோஷ பட்டது இல்ல . எழுத்தின் மீது எனக்கு இருக்கும் தாகம் பல வருஷ தாகம் .உங்கள் பின்னூட்டங்களுக்கும் உங்களுக்கும் நன்றி நன்றி நன்றி ....................
இரண்டாம் நாள் வாழ்த்துக்கள்!!!
ReplyDeleteஇன்றுதான் வலைச்சரம் எனக்கு அறிமுகம் ஆனது.....
ReplyDeleteவலைச்சரத்தில் என்னுடைய நினைவகத்தின் அறிமுகத்தோடு.....
அறிமுகம் தந்த இரும்புத்திரைக்கு நன்றிகள்
//மாரிமுத்து - கவிதை எழுதி எண்டர் தட்டுகிறாரா இல்லை எண்டர் தட்டி கவிதை எழுதுகிறாரா.அருமையாக எழுதுகிறார்//
படித்தவுடன் என் மகிழ்ச்சிக்கு அளவே இல்லை...
மற்ற கவிதைகளும் அருமை......
அறிமுகப்படுத்தியதற்கு மிக்க நன்றி நண்பா..தொடரட்டும் உங்கள் சேவை.
ReplyDeleteதம்பி நல்லாத்தான் போய்க்கிட்டு இருக்குலே
ReplyDeleteஇப்படியெல்லாம் சொன்னா நான் விட்டுடுவேன்னு பாத்தியா??
ReplyDeleteஉன் பேர்ல நீதான் எழுதினன்னு சொல்லிட்டு போயிடுவேன்
வாழ்த்துகள் அரவிந்த்
ReplyDeleteஅறிமுகப்படுத்தியதற்கு நன்றி அரவிந்த்.
ReplyDeleteநன்றி ஜமால், எனது கவிதைகளை வாசித்தவர்களுக்கும் நன்றிகள்...!
///இப்படி எத்தனை காதல்களோ..///
கொஞ்சம் காதல்கள் + கொஞ்சம் காயங்கள் = நிறைய கவிதைகள்.
///நம் தேர்வு முடிவுகள்
அறிவிப்பு பலகையில்,
என் விரல் தேடியது
என் பெயரை,
என் விழி தேடியது,
உன் பெயரை...///
நான் இன்னும் நிறைய காதலிக்கணும் மாரிமுத்து, இப்படி எழுத...! மிக அருமை..!
அனைத்து அறிமுகங்களும் அருமை..தொடர்ந்து படித்திட..
ReplyDeleteநல்ல அறிமுகம்.
ReplyDelete