வலைச்சரத்தின் மூன்றாம் நாள் - கவிதைகள்.
➦➠ by:
பிரபாகர்...
நேற்று அசாத்தியமாய் இருந்தது, இன்று சாத்தியமாகும் அற்புதத்தை ஒவ்வொரு நாளும் நாம் கண்டு வருகிறோம்.
-மகாத்மா காந்தி
அனைவருக்கும் எனது வணக்கம். இரு நாட்களை கடந்து இன்று இந்த இனிமையான மூன்றாவது நாளிற்கு வந்திருக்கிறோம்.
எனக்கு தமிழின் மேல் தணியாத ஆர்வம், கவிதைகள் என்றால் ரொம்ப பிரியம் என சொன்னால் அது முழுதும் உண்மையல்ல. இலக்கணத்தில் அவ்வளவாய் புரிதல் இல்லை. நேர் நேர் தேமா, நிரை நேர் புளிமா என இதைத்தாண்டி தெரியாது. இருப்பினும் நல்ல விசயங்களை தாங்கி வரும் எந்த ஒரு கவிதையையும் ரசிக்கத் தவறுவதில்லை...
வானம்பாடிகள் அய்யாவின் கவிதைகளின் வர்ணனைகளும், கதிரின் கவிதைகளின் வார்த்தை ஜாலங்களும், கலகலப்ரியாவின் கவிதைகளின் பொருள் பொதிந்த தாக்கங்களும், பா.ரா. வின் எதார்த்தம் நிறைந்த அழகிய வார்த்தைகளிலான எளிய கவிதைகளும் எனக்கு மிகவும் பிடிக்கும். இவர்களெல்லாம் ஏற்கனவே அறிமுகமானவர்கள் என்பதால் புதிதாய் சிலரை இதோ வரிசையாய் பார்க்கலாம். இவர்களில் சிலர் கவிதைகள் மட்டுமே எழுதி வருபவர்கள், சிலர் கவிதையும் அவ்வப்போது எழுதுபவர்கள்.
பனித்துளியாய் எனும் ஒரு வலைப்பூவில் மோகன் ராஜேந்திரனின் ஒரு காலையில் நீ இல்லை எனும் இக்கவிதையைப் பாருங்கள். அழகாயும் யதார்த்தமாயும் நன்றாக இருக்கிறது.
நேசமித்திரன் கவிதைகள் எனும் வலைப்பூவை சமீப காலமாக தொடர்ந்து வருகிறேன். கவிதைப்பிரியர்களுக்கு இது ஒரு அருமையான இடம். எல்லாம் புரிவதற்கு திரும்ப திரும்ப படித்து தெளிகிறேன் (நம் தமிழறிவு அவ்வளவே). அற்புதமான எழுத்து, அழகான கவிதைகள். உதாரணத்திற்கு நேசமித்திரனின் யாருமற்ற கருவறை, இவரது கவிதையின் சிறப்பை சொல்லும்...
நள்ளெண் யாமம் என்னும் வலைப்பூவில் க.சீ. சிவக்குமார் எழுதி வருகிறார். இவரின் குளிர் எனும் கவிதையை படித்துப்பாருங்கள், குளிர்தலாய் உணர்வீர்கள். தொடர்ந்து படிக்கப்படவேண்டியவர்.
பயணங்கள் எனும் வலைப்பூவின் வாயிலாய் எழுதிவரும் மா.குருபரனின் புன்னகை எனும் இக்கவிதையை படித்துப் பார்த்தீர்களென்றால், உங்களின் புன்னகைக்கும் முகம் கூட வாடிப்போகும் படித்த பாதிப்பில்.
தமிழ்க்கவிதைகள் எனும் வலைப்பூவில் எழுதி வரும் உத்தமபுத்ராவின் கவிதைகளை சமீபத்தில் படிக்க நேர்ந்தது. இப்போதுதான் எழுத ஆரம்பித்திருக்கிறார். இவரின் ‘எச்சங்கள்’ எனும் இக் கவிதை ஒரு உதாரணத்திற்கு. படித்துத் தொடர ஒரு அருமையான வலைப்பூ... இன்னும் இவர் நிறைய எழுத மனப்பூர்வமான வாழ்த்துக்கள்.
ராகவனின் வலைப்பூவில் கவிதைகளை தொடர்ந்து வாசித்து வருகிறேன். இதோ அவரின் நம்பிக்கை... எனும் இக் கவிதையை படித்துப் பாருங்கள். எவ்வளவு எளிமையாய் அழகாய் இருக்கிறது!
தொடர்பவன் எனும் வலைப்பூவை எதேச்சையாய் பார்த்து நானும் ஆனேன் தொடர்பவனாய். நண்பர் கவிதைகள் நிறைய எழுதிக்கொண்டிருக்கிறார். இதோ அவரது தொடர்பவனாய் எனும் இக்கவிதையினை பாருங்களேன்.
வானம் வெளித்தபின்னும் எனும் வலைப்பூவில் எழுதிவரும் சகோதரி ஹேமா என்னமாய் கவிதை எழுதுகிறார் தெரியுமா? உதாரணத்திற்கு அவரின் சமீபத்திய இருகையான பெண்ணை படித்துப்பாருங்கள்...
முனியப்பன் பக்கங்களின் வாயிலாக டாக்டர் மிகவும் அருமையாய் தனது அனுபவங்களை பகிர்ந்து கொள்கிறார். இதோ அவரின் என்னை ஏன் மீண்டும் சந்தித்தாய் ? எனும் இந்த இடுகையை படியுங்கள், கவிதையின் வாயிலாய் நம்ம கலங்க வைத்திருப்பார்.
இவ்வளவு போதும் என நினைக்கிறேன். நாளை சந்திப்போமா?
|
|
மிக்க நன்றி பிரபாகர் என் கவிதைகள் உங்களை கவர்ந்திருப்பது மகிழ்வு. நான் ரசிக்கும் கவிஞர் பெருமக்கள் உங்கள்
ReplyDeleteவாசிப்பிலும் நேசிப்பிலும் இருப்பது நெகிழ்வு
அருமையான தேர்வுகள்.
ReplyDeleteபகிர்வுக்கு நன்றிங்க!
ReplyDeleteபகிர்வுக்கு நன்றி
ReplyDeleteபகிர்வுக்கு நன்றி பிரபாகர்...
ReplyDeleteநண்பர்களுக்கு வாழ்த்துக்கள் :)
ReplyDeleteநல்ல பகிர்வு.அவர்களுக்கு வாழ்த்துக்கள்.
ReplyDeleteநன்றியும் வாழ்த்துகளும் பிரபா
ReplyDeleteநல்ல அறிமுகங்கள். தொடருங்கள் நண்பர்களே.
ReplyDeleteவாழ்த்துகள் அண்ணே! :-)
ஹேமா, நேசமித்ரன் அவர்களை தெரியும் மற்றவர்கள் அறிமுகம் அசத்தல்..
ReplyDeleteநன்றி பிரபாகர்.::))
கேபிளை, கவிஞர் பட்டியலில் சேர்க்காத, அண்ணன் பிரபாவை வன்மையாகக் கண்டிக்கிறோம்
ReplyDeleteஎன்டர்
கவிஞர்
கேபிள்
தொண்டர்
படை
வாழ்த்துக்கள் பிரபா
ReplyDeleteநன்றி பிரபாகர்
ReplyDeleteநல்ல அறிமுகம் நண்பரே..
ReplyDeleteகவிஞர்கள் அறிமுகம்
ReplyDeleteநன்று! வலையுலகின் சிறந்த கவிஞர்கள்.
அருமையான தேர்வுகள்.
ReplyDeleteநீங்கள் குறிப்பிட்ட அனைவரின் கவிதையும் ரொம்ப நல்லாருக்கும் .
ReplyDeleteரொம்ப அருமையான அறிமுகம் பிரபாகர்.
ReplyDeleteதலைவர்களின் பொன்மொழிகள் மிக அருமை.
நன்றி.
ReplyDeleteபின்னூட்டமளித்து வாழ்த்திய அனைவருக்கும் எனது மனமார்ந்த நன்றி...
ReplyDeleteபிரபாகர்.
பகிர்வுக்கு நன்றி!!
ReplyDeleteகவிஞர்கள் அறிமுகமும் கவிதைகளும் அருமை. ஆமாம் உன்க கவிதைகளை அறிமுகம் செய்ய கூடாதா????
ReplyDeleteநண்பர்களுக்கு வாழ்த்துக்கள் :)
ReplyDeleteபகிர்வுக்கு நன்றிங்க!
அருமையான தொகுப்பு.
ReplyDelete