முதல் நாள் ஆசிரியப் பணி
சில நேரங்களில்..நாம் வேலை செய்யும் அலுவலகத்தில்..நமக்குப் பின் வந்தவர்கள் பதவி உயர்வு பெறுகையில்..நம்மை நிர்வாகம் கன்ஸிடர் பண்ணவில்லையே என்ற மெலிய வருத்தம் ஏற்படுவதுண்டு.ஆனால் அதற்காக சில நாட்கள்?மாதங்கள் கழித்து நமக்கும் அப்பதவி கிடைக்கையில்..Better late than never என மனதுக்கு ஆறுதல் சொல்லிக் கொண்டு..அப்பதவியை ஏற்றதும் உண்டு.
கிட்டத்தட்ட அதே நிலை எனக்கு..ஆனால் சீனா சார் சொன்னதும்..உடனே சரி என்றும் சொல்லிவிட்டேன்..
சீச்சீ இந்தப் பழம் புளிக்கும் என பொய் சொல்வானேன்.
நான் பதிவுலகம் வந்து கிட்டத்தட்ட 18 மாதங்கள் ஒடிவிட்டன. தமிழா..தமிழா..என்பது என் வலைப்பூ பெயர்.நான் எழுதிய பதிவுகளில் எது எனக்குப் பிடித்த பதிவு?
நம் குழந்தைகளில் ஏதேனும் ஒன்று சோனியாய் இருந்தாலும்..(சோனியா தானே இன்று பாரதத்தை ஆட்டிப்படைக்கிறார்)அது நம் மனதிற்குத் தெரிந்தாலும்..அதை விட்டுக் கொடுக்க முடியுமா வெளியில்..அதுபோல நான் எழுதிய பதிவுகள் எல்லாம் எனக்குப் பிடிக்கும்.
தவிர மகாபாரதத்தை மிகவும் எளிய நடையில் மகாபாரதம் என்றே ஒரு வலைப்பக்கத்தில் எழுதுகிறேன். வள்ளுவனையும் விட்டு வைக்கவில்லை
சில முக்கியச் செய்திகளை தொகுத்து அவ்வப்போது கறக கசடற வில் அளித்து வருகிறேன்.
என்னை ஊக்குவிக்கும் அனைத்து பதிவர்களுக்கும்...பின்னூட்டம் இடுபவர்களுக்கும் என் நன்றி.
சரி..சரி..போதும் சுயதம்பட்டம் என நீங்கள் சொவது காதில் விழுகிறது..
ஆனால்..எந்த திறமைசாலியும்..தம்பட்டம் அடிக்காவிட்டால் சங்கமத்தில் காணாமல் போக வாய்ப்புண்டு.அதுதான்,,,ஹி..ஹி..
நாளை சந்திப்போம்
|
|
முதல் நாள் வாழ்த்துகள்.
ReplyDeleteவாங்க சார்..வந்து கலக்குங்க..:)
ReplyDeleteஅய்யா,
ReplyDeleteஉங்களின் அறிமுகத்தோடு அசத்தலாய் ஆரம்பித்திருக்கிறீர்கள்...
இன்னும் நிறைய வரும் நாட்களில்...
பிரபாகர்.
அன்பின் டிவிஆர்
ReplyDeleteபதவி உயர்வுகள் வங்கியில் பல காரணங்களினால் தள்ளிப் போகிறது - இருப்பினும் தாமதமாகவாவது கிடைத்து விடுகிறது - ம்ம்ம்
கேட்ட உடன் சரி எனச் சொன்னதற்கு நன்றி - இத்தனை பதிவுகளா - இத்தனை இடுகைகளா - பிரமிப்பாய் இருக்கிறது.
ம்காபாரதம் - வள்ளுவம் - கற்ககசடற - தமிழா தமிழா - ம்ம்ம் இதில் கதை நாடகம் என பல்வேறு முகங்கள் - நேரம் எங்கிருந்து கிடைக்கிறது நண்பரே
நல்வாழ்த்துகள் டிவிஆர்
லேபிள் டிவிஆர் என இட்டீர்களானால் தேடும் போது இடுகைகள் எளிதாகக் கிடைக்கும். இதற்கும் இனிமேலும் டிவிஆர் என லேபிள் இடுமாறு கேடுக்கொள்கிறேன்.
நல்வரவு.
ReplyDeleteமிக்க வாழ்த்துக்கள். உண்மையில் நீங்கள் எழுதிய மகாபாரதம் மிக அருமை. நன்றி.
ReplyDeleteவாழ்த்துக்கள் ராதாகிருஷ்ணன்..இதுவரை உங்கள் வலை படித்ததில்லை என எண்ணுகிறேன்..இனி தொடர்வேன்..ஆசிரியர் பணியை சிறப்பாக செய்யுங்கள்..
ReplyDeleteவாழ்த்துகள்.
ReplyDeleteசில இடுகைகளை படித்திருக்கிறேன்.
நிறைய படிக்க வேண்டும்.
முதல் நாள் வாழ்த்துக்கள்
ReplyDeleteவாழ்த்துக்கள் நண்பரே..
ReplyDeleteநல்வாழ்த்துகள்.
ReplyDeleteமுதல் நாள் வாழ்த்துகள்.
ReplyDeleteதமிழா தமிழா வலைப்பூவை தவிர உங்களின் மற்ற வலைப்பூக்களைப் பார்த்தது இல்லை. இன்று பார்க்கின்றேன்.
முதல் நாள் வாழ்த்துகள் டி.வி.ஆர் சார். மற்ற வலைப்பூக்கள் சர்ப்ரைஸ்
ReplyDeleteமுதல் நாள் வாழ்த்துக்கள்
ReplyDeleteவாழ்த்துக்கள் ஐயா
ReplyDeleteஆசிரியருக்கு வாழ்த்துக்கள்.
ReplyDeleteசந்தோஷமாகத் தொடங்குங்க.
congrats T.V.R. Sir
ReplyDeleteபணி சிற(கடி)க்க வாழ்த்துகள் !
ReplyDeleteவாழ்த்துக்கள்
ReplyDeleteபின்னூட்டம் இட்டு ஊக்கப்படுத்திய அனைவருக்கும் நன்றி
ReplyDelete