07 - 09 - 2015 முதல் ஆசிரியர் பொறுப்பேற்பவர்

ரிஷபன்
இவரின் வலைப்பூ

ரிஷபன்

முந்தைய ஆசிரியர்கள்


சீனா ... (Cheena) - அசைபோடுவது

சிந்தாநதி

நன்றி!

திரட்டிகளின் தொகுப்பு

:: தமிழ் திரட்டுகளின் சங்கமம்<br/>:: Tamil blogs, news, ezines

வலைப்பதிவர் உதவிப்பக்கம்

தமிழில் எழுத மென்பொருள்

fb like

ஞானாலயா = புதுக்கோட்டை

www.gnanalaya-tamil.com
வலைச்சரத்தில் வெளியிடப்படும் இடுகைகள் வலைச்சரக் குழுவினரால் தணிக்கைக்கு உட்படாது. ஆனால், வலைச்சர விதிக்கு உட்படாத இடுகைகளை முன்னறிவிப்பின்றி நீக்க வலைச்சரக் குழுவினருக்கு உரிமை உள்ளது

Wednesday, January 13, 2010

மூன்றாவது நாள் - காவிய புதன்

காவிய புதன் என்ற பெயர் காரணத்திற்காகவே கொஞ்சம் பின் செல்வோம்.

ஜெகநாதன் - பின்னூட்டப் புயல்,சுனாமி,சூறாவளி என்று தான் சொல்ல வேண்டும்.என்னுடைய ரசனை அதிகமாக இவருடன் தான் ஒத்துப் போகிறது.நூற்றாண்டுகள் தாண்டி வரும் கதையில் வாசிக்கும் நாமும் சேர்ந்து பயணிக்கிறோம்.ஒவியம்,புனைவு என்று பல்வேறு தளங்களில் இயங்கும் திறன் படைத்தவர்.இலக்கியவாதியாக மாற வேண்டியவரின் இலக்கு மாறி சில சமயம் மொக்கையும் போடுவார்.அதுவும் சுவாரஸ்யம் குறையாமல் எழுதுவார்.சாரு,ஜெயமோகன் என்று பெரும் தலைகளுக்கே கடிதம் எழுதுவார்.

அவருடைய சில கதைகள்

தலைமுறையாய் தொடரும் கனவு

காமத்தின் முற்றுப்புள்ளியை சொன்ன கதை

அவர் வலைச்சரம் ஆசிரியராக மாறினால் நிச்சயம் சில இரசனையானப் புதிய பதிவர்கள் நமக்கு கிடைப்பார்கள்.

அகல்விளக்கு - இவரை அறிமுகம் செய்ய எனக்கு கொஞ்சம் கூச்சமாக தான் இருக்கிறது.தினமணியே அறிமுகம் செய்த "பிரபல" பதிவர்.அவர் வலைச்சரம் ஆசிரியர் ஆகும் போது என்னை போல சின்னப் பதிவர்களை அறிமுகம் செய்ய வேண்டும் என்று கேட்டு கொள்கிறேன்.

வயதை விட எழுத்தில் முதிர்வு தெரிகிறது.(ஆம் அவர் யூத்தாக மாற இன்னும் வருடங்கள் இருக்கிறது).நட்பு தேடி அலைவது தான் தொழில்

அதற்கு சாட்சி சொல்ல இந்த பதிவு - ஒரு 80 வயதின் நினைவு.

சுப தமிழினியன் - ஆனந்தவிகடனில் மாணவப் பத்திரிக்கையாளன்.ஆக நினைப்பது மாவட்ட ஆட்சியாளராக.புத்தக விமர்சனங்கள் அருமையாக எழுதுகிறார்.பெரியார் மீது பெரும் பற்று இருக்கிறது. காதல் செரிமானத்திற்கு ஜெலுசில் குடிக்கும் குழந்தை.

புத்தக விமர்சனம்

காதல் செரிமானம்

பெயர் சொல்ல விரும்பவில்லை - இப்படி ஒரு வித்தியாசமான பெயர்.நான் என்ன டாட்டாவா இல்லை பிர்லாவா என்று கேட்கிறார்.அப்படி கேட்டாலும் வரலாற்றில் நடந்த சம்பவங்கள் மூலம் நீதி சொல்கிறார்.தெரிந்த கதைகள் தான் என்று விட்டு விடாமல் அவர் பாணியில் சொல்கிறார்.

கையில் என்ன...........கொண்டு வந்தோம், கொண்டு செல்ல!


வாழ்க்கை - தற்பெருமை

7 comments:

  1. அன்பின் அரவிந்த்

    காவிய புதன் - அறிமுகங்கள் சிறப்பு

    நல்வாழ்த்துகள்

    ReplyDelete
  2. வயதை விட எழுத்தில் முதிர்வு தெரிகிறது ------ காவிய புதன், அருமை.

    ReplyDelete
  3. என்னையும் அறிமுகப் படுத்தியதற்கு நன்றி தோழா

    ReplyDelete
  4. ஆஹா நானுமா .... !!

    நன்றி தல..

    //"பிரபல" பதிவர்//

    இது கொஞ்சம் ஓவரா தெரியல...?

    ReplyDelete
  5. ஒழுங்கா வேலை செய்ற போல

    ReplyDelete
  6. அருமையான அறிமுகம் ; நல்லாருக்கு ...

    ReplyDelete
  7. அன்பு அரவிந்த்,
    வலைச்சரம் எனக்கு இப்போதுதான் அறிமுகம். வித்யாசமான முயற்சி. ஆசிரியராக தேர்வு பெற்றதற்கு வாழ்த்துக்கள்! நிச்சயம்​தொடருவோம்!
    என்னைப் பற்றி எழுதியது மிக்க மகிழ்ச்சி!!!

    ReplyDelete

தமிழ் மணத்தில் - தற்பொழுது