வலைச்சரம் நான்காம் நாள்..மேலும் சில பதிவர்கள்
தமிழ்மணத்தில் ஒரு நாளைக்கு முன்பெல்லாம் 260-270 இடுகைகளே பதிவர்களால் இடப் பட்டு வந்தன.இப்போழுதெல்லாம் 350 இடுகைகள் சராசரியாக வருகின்றன.பதிவர்கள் அதிகம் ஆகிவிட்டனர்.இன்று நான் சொல்லப் போகும் பதிவர்களில் சில பதிவர்கள் பெரும்பான்மையினர் அறிந்திருக்கக் கூடும்.சிலர் புது பதிவர்களாக உள்ளனர்.ஆகவே இந்த இடுகை..புதிய பதிவரா..பழைய பதிவரா என்றெல்லாம் பாராது திறமையுள்ள பதிவர்கள் என்று கொள்ளவும்.
நான் சொல்லப் போகும் முதல் பதிவர் வெ.இராதாகிருஷ்ணன்..இவர் இடுகைகளை பலர் படித்துவரக் கூடும்.அருமையான பதிவர்.ஆழமான எழுத்து.அப்படி இதுவரை இவரது பக்கம் செல்லாதவர்கள் தவறாது இவரது எல்லாம் இருக்கும் வரை வலைப்பூவிற்குச் சென்று அறிவுரையை படியுங்கள்
நலங்கிள்ளி ..என்னும் பதிவர்..பதிவுலகம் வந்து நான்கு மாதங்களே ஆகின்றன.மூங்கில் இவர் வலைப்பூவின் பெயர்.இவரது பொங்கல் வாழ்த்து அட்டைகள் நான் படித்த இடுகை.ஊக்கப்படுத்த வேண்டிய பதிவர்.நலங்கிள்ளி நிறைய எழுதுங்கள்.
சரண்..இளையபாரதம் 2010..திருவாரூர் காட்சிகள்..கண்முன் நிறுத்தப் படுகிறது...ஒரு ரேஸ் பாதை சுரங்கப் பாதை ஆனதே..என்ற இடுகையில்மந்திரன்..இவர் இதுவரை 60 இடுகைகளை தன் வலைப்பூவான மந்திர ஆசைகளில் எழுதியுள்ளார்.தேசத்துரோகிகள் ..ஒரு பானை சோற்றுக்கு ஒரு சோறு பதம்
நான் ஆதவனின் குப்பைத்தொட்டியில் மாணிக்கங்கள் காணப்படுகின்றன.கலக்கல் பதிவான கை எட்டும் தூரத்தில் ஆஸ்கார்..இவர் திறமைக்குச் சான்று .
அவனி அரவிந்தன்..உரையாடல் சிறுகதைப் போட்டிக்காக எழுதிய கதை வரிப்புலித் தைலம்..படிப்பப்பட வேண்டிய ஒன்று.
coolzkarthi வலைப்பூவின் பெயரும் இதுவே..தொடர்ந்து எழுதி வந்தவர் சில மாதங்களாக எழுதுவதில்லை.காரணம் தெரியவில்லை.அப்படி என்னதான் வேலைப் பார்ப்பீங்க..ஒரு சாம்பிள் இவர் திறமைக்கு
பாக்த்தாத்திலிருந்து பூங்குன்றன்..கவனிக்கப் பட வேண்டிய பதிவர்
மேலும் ஜெரி ஈசானந்தா, S.A.நவாஸுதீன்,கார்த்திகா வாசுதேவன்,சங்கவி,கபிலன் இவர்களையும் படியுங்கள்
|
|
சிறப்பான தொகுப்பு !
ReplyDelete@டி.வி.ஆர். .
ReplyDeleteஇரண்டு மாதங்களாக எழுதி வரும் என்னை மிகவும் ஊக்கப்படுத்தும் வகையில் இளையபாரதத்தை வலைச்சரத்தில் அறிமுகம் செய்தததற்கு நன்றி.இனிமேலும் சிறப்பான பதிவுகளை எழுதுவேன் என்ற நம்பிக்கையுடன்...
அன்பின் டிவிஆர்
ReplyDeleteஅருமையான அறிமுகங்கள்
சென்று பார்க்கிறேன்
நன்று நன்று நல்வாழ்த்துகள்
கூல்கார்த்தி ரொம்ப நாளாச்சி போய்
ReplyDeleteஇதோ அவர் சுட்டியை க்ளிக்கிவிட்டேன்
மற்றவைகளையும் பார்க்கிறேன்.
நற் தொகுப்பு நன்றி.
முதலும் கடைசியிலும் இருப்பவர்கள், தெரியும். மற்ற வைரங்களுக்கு நன்றி..:))
ReplyDeleteவலைச்சர வாரத்துக்கு என் வாழ்த்துக்கள் சார்! சிற்ப்பான அறிமுகங்கள்!
ReplyDelete:)
ReplyDeleteஅனைவரையும் ஊக்குவிக்கும் உங்கள் பணி தொடரட்டும் சீனா சார்
ReplyDeleteநல்ல அறிமுகம். உங்கள் சேவை பாராட்டுக்கு உரியது.
ReplyDeleteஆதவன் எனக்கு பரிச்சயமானவர். மற்றவர்களையும், என்னையும் அறிமுகப்படுத்தியமைக்கு எனது வணக்கங்கள் ஐயா.
ReplyDeleteமீண்டும் நல்ல அறிமுகங்கள். வாழ்த்துகள் டி.வி.ஆர்.
ReplyDeleteசிறப்பாக அறிமுகத்துக்கு வாழ்த்துகள். புதியவர்களைப் படிக்கிறேன்.
ReplyDeleteஅருமையான பதிவர்கள்
ReplyDeleteநல்ல அறிமுகம் டிவிஆர் சார்
நல்லா ரசிச்சு தெரிந்து எடுத்து தந்தமைக்கு நன்றி.
ReplyDeleteபல புதிய அறிமுகங்கள்....
ReplyDeleteஅருமையான அறிமுகங்கள்...
ReplyDeleteவலைச்சரம் நான்காம் நாள்..பதிவிற்கு வந்து பின்னூட்டம் இட்டவர்களுக்கு நன்றி
ReplyDeleteஇப்பொழுது தான் இப்பதிவை கண்டேன். அறிமுகப்படுத்தியதற்கு நன்றி ஐயா.
ReplyDelete