செண்பகமே செண்பகமே .. 3
கதை புரியாதவங்க முதல்லருந்து வாங்க..
செண்பகமே செண்பகமே..
செண்பகமே செண்பகமே.. 2
மாலதி : என்ன செண்பகம்.. இவ்வளோ நேரமாச்சி..
செண்பகம் : ஆமாக்கா எங்கூட்டுக்காரர்ட்ட பேசிக்கிட்டிருந்தேனா.. அதனால செத்த நாழியாயிருச்சி..
அப்படி என்னப்புள்ள பேசுவீக.. அதான் நாள்பூரா பேசுறீங்களே..
எக்காவ் இந்த எகத்தாளம் வேண்டாங்க்கா..
சரி சரி கோவிச்சிக்காதபுள்ள.. சும்மா கேட்டேன்..
சரிக்கா.. எங்கூட்டுக்காரர் பக்கத்தூர்ல வலையுலகம்ன்னு ஒரு உலகம் இருக்காம். அங்க நிறையபேர் இருக்காவளாம். அவுக பலவிஷய்ங்களைபத்தி எழுதுறாவலாம். நாங்க இரண்டுபேரும் படிச்சிப்பாத்தோமே..
அப்டியாபுள்ள.. கடத்தெருவுக்கு போயிட்டுவரும்போது வாரேன். உங்கூட்டுக்காரவுக இருக்கமாட்டாகல்ல..
சரிக்கா வா வா.
எப்பா என்ன வெயிலு வெயிலு.. மச்சான் மச்சான்.. ஓ ஓ.. வெளியபோயிட்டீகளா..
அப்போது கதைத்தட்டும் சத்தம் கேட்குது.. டொக் டொக் டொக்..
யாரு யாரு..
நாந்தான் மாலதி..
வா வாக்கா..
என்னபுள்ள செய்யிற..
சமையல் செஞ்சிக்கிட்டிருந்தேங்க்கா..
என்னாக்குழம்பு.. வீடெல்லாம் ஒரே மணமணக்குது..
ஆமாக்கா.. இன்னிக்கி இறால் பிரியாணி செஞ்சிக்கிட்டிருந்தேன்.
ஏப்புள்ள உனக்கு இதெல்லாம் தெரியாத எப்படி தெரிஞ்சிக்கிட்டே..
நாந்தான் சொன்னேனக்கா.. வலைப்பதிவர்கள் செய்யிறபார்த்து நானும் கத்துக்கிட்டனே..
அப்படியா எப்ப்டின்னு எனக்கும் சொல்லுபுள்ள..
இந்தா பாருக.. இவுகபேரு மேனகா.. இவுக செஞ்ச இறால்பிரியாணி தான் இப்போ செஞ்சிக்கிட்டிருந்தேன். இவுக எக்கசக்கம் சமையல்லாம் செஞ்சிருக்காவ.. எல்லாமே பாக்கிறதுக்கு நல்லாருக்கு.. செஞ்சும் பாத்துப்புடனும்...
ஆமா புள்ள.. ரொம்ப நல்லாருக்கு.. வேறயாரு புள்ள..
இங்கபாருங்க இறால் சாப்ஸ்.. ரொம்ப வித்யாசமாருக்கே..
இத செஞ்சது பேரு.. பேரு.. ஆங். ஸ்டார்ஜன்னாம்..
அடுத்து யாரு புள்ள..
இங்கபாருங்கக்கா.. இவுக பேரு செந்தமிழ் செல்வி.. என்னருமையான பேரு.. இவுக வீட்டுல உள்ள மசாலா சாமானெல்லாம் எப்படி பந்துசா வச்சிருக்கனுன்னு சொல்லிருக்காக பாருங்கக்கா..
அட ஆமாபுள்ள.. சே நம்ம வீட்டுலெல்லாம் அங்க ஒன்னு இங்க ஒன்னுமா சிதறி கிடக்குது.. இவுக சொல்லிருக்கிறமாதிரி பந்துசா வச்சிருக்கனும்புள்ள.. அடுத்தவுக யாரு..
அட இங்க பாருங்கக்கா.. கேப்ப..
அட நான் கேக்கமாட்டேன்.. நீயே வச்சிக்கோ..
அட என்னக்கா.. துயதமிழ்ல கேழ்வரகு.. அதத்தான் நான் சொன்னது கேப்ப..
இங்கபாருங்கக்கா.. இவுகபேரு ஆசியாஉமர்... கேப்பையிலே கூழு.. கேப்பையிலே உருண்டை.. இந்த உருண்டைக்கு பேரு மொஃதா வாம். ரொம்ப நல்லாருக்கும்போல.. இப்படி நிறய சமையல்ல் அசத்திருக்காக..
ஆட ஆமா செண்பகம்.. செஞ்சா நல்லா சாப்பிடல்லாம்.. நல்ல ருசியா இருக்கும்.
அடுத்து இங்கப்பாருங்க..இவுக பேரு விஜி.. எக்காவ் இவுகளும் நிறய சமையல்ல்ல சும்மா அசத்திப்புட்டாக.. விதவிதமா சமையல்குறிப்புகள், போளி, பிஸிபேளாபாத், கமன் டோக்ளா, க்ரிஸ்ப்பி பாகற்காய், வாழப்பூ பருப்பு உசிலி, பைனாப்பிள் ரசம் இப்படின்னு விதவிதமா இருக்குக்கா..
அடுத்து யாரு செண்பகம்.. அட மினுங்குதே..
அட ஆமாக்கா.. மினுங்குது.. பேரு மின்மினியாம்.
அதனால மினுங்குதா.. பேரு புதுசா இருக்கே..
ஆமாக்கா இவுக புதுசுதான்.. ஆனா புதுசா வந்தன்னிக்கி அசத்திபுட்டாக... உடனடி வெள்ளானம், கோதுமை பணியாரம், அழகு குறிப்புன்னு அசத்திருக்காக..
ஆமாபுள்ள.. நிறையவே மினுங்கட்டும்... அடுத்தவுக யாரு..
இவுக பேரு காஞ்சனா ராதாக்கிருஷ்ணன். இந்தம்மாவும் சமையல்ல ரொம்ப நல்லா செய்வாங்க போல..
வாபுள்ள போய்ப்பாப்போம்..
இவுகளும் சமையல்ல கலக்கிருக்காக.. விதவிதமான சமையல்.. மாங்காய்-வேப்பம் பூ பச்சடி, பாதாம் அல்வா, பேபிகார்ன் மசாலா, நீரிழிவிற்கு நாவல்பழம், மரவள்ளிக்கிழங்கு சிப்ஸ், வல்லாரை மசியல் இன்னும் நிறைய நாம தெரிஞ்சிக்கவேண்டியதிருக்கு.. ஒரு எட்டு பாத்துட்டு வருவோமாக்கா..
ஆமா உண்மையிலே அசத்திருக்காங்க அந்தம்மா.. நாம ஒரு நாளைக்கு அவங்க வீட்டுக்கு போயிட்டு வரணும்..
சரிமாலதிக்கா.. அடுத்தவுகள பாப்போமா..
ஆங்.. சரி செண்பகம்..
இவுகபேரு சுஸ்ரீ.. பேரு நல்லாருக்குல்ல..
ஆமாப்புள்ள.. இவுக என்னன்னாலாம் செஞ்சிருக்காக விலாவரியா சொல்லுப்புள்ள..
ஆங்.. இவுக.. நிறய விதவிதமா செஞ்சிருக்காவ.. பேர பூரா சொல்லுறேன் கேட்டுக்கக்கா.. Maida Halwa / மைதா ஹல்வா, குழி பணியாரம், அவகாடோ சல்சா/டிப், புடலங்காய் மிளகு கூட்டு, மின்ட் ரைஸ், உருண்டை குழம்பு, தக்காளி குழம்பு, எள்ளு உருண்டை, சாக்லேட் கேக், கத்தரிக்காய் சாதம்.. விதவிதமா இருக்குக்கா.. நாம ஒரு நாளக்கி செஞ்சிபாப்போமா அக்கா..
ஆமா செண்பகம்.. ரொம்ப வித்யாசமா இருக்கு.. செஞ்சிருவோம்..
அப்போது கதவு தட்டப்பட்டது.. டொக் டொக் டொக்..
அய்யயோ உங்கூட்டுகாரவுக வந்திட்டாகபோல செண்பகம்.. ரொம்ப நன்றி செண்பகம்.. இம்பூட்டு நேரமா எனக்கு சொல்லிதந்ததுக்கு நன்றி. நான் போயிட்டு வாரேன்..
நன்றில்லாம் எதுக்குக்கா.. போயிட்டு வா..
தொடரும்..
உங்கள் மேலான கருத்துக்களை எதிர்பார்த்தவனாக உங்கள் ஸ்டார்ஜன்.
|
|
"மாலதி யக்கா இவ்வளவு நேரம் சமையல் கதை கேட்டீங்க இல்ல... நாளைக்கு வரும் போது அவ்வளவும் செய்துட்டு வரணும்......ஆமா சொல்லிபுட்டேன்.." ஸ்டார்ஜன் இதை சொல்ல மறந்திட்டீங்க...
ReplyDeleteகரக்டா லிங்க் குடுக்குரிங்க தல
ReplyDeleteஇடுகை மணமாவும் ருசியாவும்... இருக்குங்க...
ReplyDeleteஇன்னைக்கி இவ்ளோ அழகா சமையல் குறிப்பு
ReplyDeleteகொடுத்தும் இச்....இச்....கிடக்கல போல :))
இன்னிக்கு சமையல் அறிமுகமா?நடத்துங்க.வலைசரத்தில் பின்னும் அழகே அலாதி ஸ்டார்ஜன் சார்.வாழ்த்துக்கள்
ReplyDeleteசமையல் குறிப்பு அறிமுகங்கள் அருமை.மாலதி அக்காவோடு நாங்களும் நிறைய விஷயம் தெரிஞ்சிகிட்டோம்.
ReplyDeleteதங்களுக்கும்,குடும்பத்தாருக்கும் நண்பர்கள் அனைவருக்கும் இனிய தமிழ்புத்தாண்டு மற்றும் சித்திரை விசு திருநாள் நல்வாழ்த்துக்கள்.
This comment has been removed by the author.
ReplyDeleteThis comment has been removed by the author.
ReplyDeleteமணக்குது
ReplyDeleteநாளைக்கு மணி அண்ணனை பிடிச்சி கொண்டு வாங்க.
ReplyDeleteஅனைத்து அறிமுகங்களும் அருமை.
அனைவரும் நல்ல அறிமுகங்கள்!!.என்னையும் அறிமுகப்படுத்தியதற்க்கு மிக்க நன்றி சகோ!!
ReplyDeleteநீங்கள் கதை சொல்லும் பாங்கு நல்லாயிருக்கு,தொடருங்கள்!!
ஒரு நல்ல தொடர் கதை மூலம், தொடரும் அறிமுகங்கள் எல்லாம் அருமையாக இருக்குதுங்க. பாராட்டுக்கள்!
ReplyDeleteநன்றி ஸ்டார்ஜன் அறிமுகத்துக்கு..
ReplyDeleteசமையல்ல வெளுத்து வாங்குறீங்கபோல.. நல்ல அறிமுகங்கள்.
//ஆமா உண்மையிலே அசத்திருக்காங்க அந்தம்மா.. நாம ஒரு நாளைக்கு அவங்க வீட்டுக்கு போயிட்டு வரணும்..//
ReplyDeleteநன்றி ஸ்டார்ஜன்
வந்தாரை வரவேற்கக் காத்திருக்கிறேன்
வாங்க ஸ்டீபன்
ReplyDeleteஅடடா இது மறந்துபோச்சே.. சே.. ஞாபகப்படுத்தினதுக்கு மிக்க நன்றி.
வாங்க மங்குனி
ReplyDeleteபாராட்டுக்கு நன்றிதல..
வருகைக்கும் கருத்துக்கும் நன்றி
வாங்க பாலாசி
ReplyDeleteநன்றி பாராட்டுகளுக்கு..
வாங்க சைவகொத்துப்பரோட்டா
ReplyDeleteசே சே இன்னிக்கி இச் இச் கிடைக்கலியே.. நாளைக்கு கிடைத்தாலும் கிடைக்கும்.
வாங்க ஸாதிகா அக்கா
ReplyDeleteநன்றி பாராட்டுகளுக்கும் வாழ்த்துகளுக்கும் நன்றி நன்றி...
வாங்க ராஜா
ReplyDeleteநன்றி பாராட்டுகளுக்கு....
உங்களுக்கும் என் இனிய புத்தாண்டு& சித்திரை திருநாள் வாழ்த்துக்கள்.
வாங்க பத்மா @ நன்றி பத்மா பாராட்டுக்கு..
ReplyDeleteவாங்க அக்பர்
ReplyDeleteநாளைக்கு வருவாரு மணி அண்ணன்.
வருகைக்கும் கருத்துக்கும் மிக்க நன்றி
வாங்க மேனகா
ReplyDeleteரொம்ப நன்றி பாராட்டுகளுக்கு..
வாங்க சித்ரா
ReplyDeleteரொம்ப நன்றி பாராட்டுகளுக்கு..
வாங்க மின்மினி
ReplyDeleteரொம்ப நன்றி பாராட்டுகளுக்கு..
வாங்க காஞ்சனா மேடம்
ReplyDeleteநன்றி அழைப்புக்கும் அன்புக்கும்..
ஸ்டார்ஜன் அருமையாக அறிமுகப்படுத்தி சொல்லீருக்கீங்க,பாராட்டுக்கள்.எனக்கே இவ்வளவு இருப்பது தெரியாதே,நன்றி.
ReplyDeleteவாங்க ஆசியாஉமர்
ReplyDeleteவருகைக்கும் கருத்துக்கும் மிக்க நன்றி
அன்பு சகோதரர் ஸ்டார்ஜன்,
ReplyDeleteநான் 5 நாட்களாக ஊரில் இல்லை. அதனால், பதிவுகள் பார்க்க இயலவில்லை. தாமதத்திற்கு மன்னிக்கவும்.
50 பதிவுகள் இல்லாத என்னுடைய வலைச்சரத்தையும் அறிமுகப் படுத்தியமைக்கு நெஞ்சார்ந்த நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன்.
நன்றி! நன்றி!! நன்றி!!!