07 - 09 - 2015 முதல் ஆசிரியர் பொறுப்பேற்பவர்

ரிஷபன்
இவரின் வலைப்பூ

ரிஷபன்

முந்தைய ஆசிரியர்கள்


சீனா ... (Cheena) - அசைபோடுவது

சிந்தாநதி

நன்றி!

திரட்டிகளின் தொகுப்பு

:: தமிழ் திரட்டுகளின் சங்கமம்<br/>:: Tamil blogs, news, ezines

வலைப்பதிவர் உதவிப்பக்கம்

தமிழில் எழுத மென்பொருள்

fb like

ஞானாலயா = புதுக்கோட்டை

www.gnanalaya-tamil.com
வலைச்சரத்தில் வெளியிடப்படும் இடுகைகள் வலைச்சரக் குழுவினரால் தணிக்கைக்கு உட்படாது. ஆனால், வலைச்சர விதிக்கு உட்படாத இடுகைகளை முன்னறிவிப்பின்றி நீக்க வலைச்சரக் குழுவினருக்கு உரிமை உள்ளது

Thursday, April 29, 2010

கவிதைகள் - வலைச்சரம் நான்காம் நாள்

கவிதைகள் - காலத்தின் உயிர்ப்பதிவு என்பார் கவியரசு வைரமுத்து. கவிதைக்கு இதைவிட அழகாக வரைவிலக்கணம் தர முடியுமா? தெரியவில்லை!

கவிதை காலத்தின் உயிர்ப்பதிவு மட்டுமல்ல. கவிஞனின் எண்ணங்களை, உணர்வுகளைப் பிரதிபலிக்கும் கண்ணாடி.அவனின் துயரங்களை, துக்கங்களை, வியப்பை, சந்தோசத்தை, இன்பத்தை வடிக்கும் வார்த்தை வடிகால்.

கவிதை எழுதுபவர்களாலும், கவிதை படிப்பவர்களாலும் வன்முறை செய்ய இயலாது. கவிதையால் ஈர்க்கப்பட்டவர்களின் மனதை மென்மையாக மாற்றிவிடும் ஆற்றல் கவிதைக்கு உண்டு. நல்ல கவிதை நம்பிக்கை ஊட்ட வேண்டும், படிப்பவர் மனதை பரவசப்ப்டுத்த வேண்டும், படைப்பவனின் முகவரியாக இருக்க வேண்டும், ஞாபக அடுக்கில் சதா சுழல வேண்டும். அப்படி நல்ல கவிதைகளைத்தரும் வலைஞர்கள் பலர்.

அவர்களில் சிலரின் படைப்புகளைக் காண்போமா!.அந்தக்கவிஞர்கள் ஏற்கனவே உங்களுக்கு அறிமுகமானவர்கள் தாம்.

1.நேசமித்ரன் - இவரின் கவிதைகளின் நவீன சொல்லாட்சி என்னைக் கிறங்கடிக்கும். ஆனால் புரியாது!!இவரின் கவிதைகளுக்கு பின்னூட்டம் பார்த்தே பிரமித்துப்போனவள் நான். ஐயா! தங்கள் கவிதைகளுக்கு கொஞ்சம் விளக்கம் எழுதினால் இன்னும் மகிழ்வேன். http://nesamithran.blogspot.com/

2. பா.ரா. - இவரின் கவிதைகள் எளிமை + சிலேடை + நகை + உருக்கம் இப்படி சொல்லிக்கொண்டே போகலாம். எழுத்தில் வடியும் அன்பு, பாசம் படிப்பவர்களை புரையேற வைக்கும். அது எப்படி அண்ணா, உங்களுக்கு மட்டும் வாய்த்தது இப்படி ஒரு எழுத்து நடை? http://karuvelanizhal.blogspot.com/

3கவிஞர் கவிமதி - கனல் பறக்கும் கவிதைகளுக்கு சொந்தக்காரர் http://kavimathy.blogspot.com/

4. சும்மா - அன்பின் தேனம்மை அக்கா, ஆச்சி! சும்மா எழுத வந்தே இப்படி ஒரு எழுத்தும் கவிதையும் உங்களுக்கு வாய்க்கிறது என்றால், இன்னும் வீர்யத்துடன் எழுதினால்? அன்பும், சமூகச்சாடலும் நிறைந்த இவரின் கவிதைகளின் மறைபொருள் புரியாது, நேரடி அர்த்தம் கொண்டு, பின்னூட்டமிட்டு அசடு வழிந்த நாட்கள் உண்டு. http://honeylaksh.blogspot.com/

5.அகநாழிகை வாசு அவர்களின் கவிதைகள் மிகவும் பிடித்தமானது. வாசிக்க சுகமான கவிதைகள் http://www.aganazhigai.com/

6.நாவிஷ் செந்தில் குமாரின் இந்த கவிதை வலை நல்ல, அழகான கவிதைகளுக்கான ஒரு தளம் http://navishsenthilkumar.blogspot.com/search/label/கவிதை

7.சகாராத்தென்றல் கவிதைகள் சின்னச்சின்ன சிலிர்ப்புகளை சிந்தவிடும். உயிரை வருடும் http://saharathendral.blogspot.com/

8. சுயம் தேடும் பறவைகள் வலைப்பக்கத்தில் இடம் பெற்றிருக்கும் கவிதைகள் தேர்ந்தெடுத்த வார்த்தைகளைக் கோர்த்தெடுத்த முத்தான கவிதைகள். http://kkamalesh.blogspot.com/

இன்னும் கவிதைகள் சொல்லும் தளங்கள் உண்டு. பதிவின் நீளம் கருதி சுருக்க முடிக்கிறேன். இன்னும் நான் அறியாத அருமையான கவிதை வலைகள் இருப்பின் நண்பர்கள் தெரிவியுங்கள் தயவுசெய்து!

என்றும் அன்புடன்
க.நா.சாந்தி லெட்சுமணன்


16 comments:

  1. கவிதை வானில் மின்னும் நட்சத்திரங்கள். :-)

    ReplyDelete
  2. அருமையான அறிமுகங்கள். பூவுக்கு விளம்பரம் தேவையில்லைதான், இருந்தாலும் சரம் மணக்கிறது.

    ReplyDelete
  3. நீங்கள் குறிப்பிட்டவர்களின், கவிதைகள்
    எனக்கும் பிடித்தமானது!!!

    ReplyDelete
  4. ஆஹா அனைவரும் தேர்ந்தெடுக்கப்பட்ட முத்துக்கள் .
    படித்து படித்து இன்பம் பெற வைக்கும் கவிக்குயில்கள்
    சுட்டிக்காட்டிய உங்களுக்கும் ,அனைவருக்கும் வாழ்த்துக்கள்

    ReplyDelete
  5. ஆஹா! அருமையான அறிமுகங்கள்.

    ReplyDelete
  6. மிக்க நன்றி ஆசிரியரே !

    கவிதை குறித்த விளக்கமும்
    கவிஞர்களின் அறிமுகமும்
    நன்று...!

    நண்பர்களுக்கு வாழ்த்துகள்
    உங்களுக்கு என் நன்றிகள்

    கால்குலேட்டர் ஒரு காலத்தில் புதிதுதானே .. பிறகு கணினி ...
    செல்போன்.. இன்று ப்ளாக் பெர்ரி
    3 ஜி 4 ஜி

    இன்னும் ஒரு 10 வருடத்திற்காவது புதிதாய் இருக்கும் கவிதைகள் செய்ய ஆசை சகோ

    கவிதைகளிலும்தான் எவ்வளவு மாற்றம் .. !

    நாள் மலர் காசு பிறப்பு
    சானெட்டு , லிமரிக்கு, ஹைக்கூ,
    சர்ரியலிஸம்,அக்மேயிஸம்,எதிர்கவிதை,புதுக்கவிதை ஆகி புனைவு ,போஸ்ட் மடர்னிஸம்
    ஜென் கவிதை ...

    நீங்கள் சொல்லியிருக்கும் வைரமுத்து கூட வெள்ளிப்பனிமலையில் இருந்து டோரா டோரா மலை வரை துரத்தி சென்று விட்டார்தானே

    அதே காதல் அதே பிரிவு அதே காத்திருப்பு பிறந்தது முதல் மனித குலம் கொண்டிருக்கும் அதே உணர்வுகள்தான் முன்பு குகை சுவரில் விகாரங்களின் கூரைகளில் சுவடிகளில் கல்லில் மரத்தில் காகிதத்தில் கழிவறை சுவர்களில் பேருந்து சீட்டின் பின்புறம் உயரப் பாறைகளில் ரயில்களில் இப்போது கணினியில் உடல்களில் மச்சமாக மருதாணியாக பிறகு டாட்டுவாக எழுதிக் கொண்டே இருக்கிறோம் காதலை வலியை பிரிவை பெயர்களாக கவிதையாக

    மாற்றம் ....!

    மீண்டும் நன்றிகளும் சினேகமும்
    சகோ !

    (பின்னூட்டம் நீண்டதற்கு மன்னிக்கவேண்டும்)

    ReplyDelete
  7. அன்பின் சாந்தி

    அருமையான கவிதை அறிமுகங்கள்

    எல்லாவற்றையும் படித்திருக்கிறேன் - படிக்கிறேன்

    நல்வாழ்த்துகள் சாந்தி
    நட்புடன் சீனா

    ReplyDelete
  8. சரியான பகிர்வு :)

    ReplyDelete
  9. கவி (முத்)தை எடுத்துக் காட்டிய'மை'க்கு
    மிக்க நன்றி!

    ReplyDelete
  10. சுயம் உண்மையிலேயே சுயம்பு தான்.

    ReplyDelete
  11. வலைச்சரத்தில் உங்கள் பதிவுகள் அனைத்தும் அருமை.

    ஜிமெயில் பிரச்சினையால் பதிவு எழுதவோ, பின்னூட்டமிடவோ இயலவில்லை..

    எல்லா பதிவுகளும் மிகவும் அருமை.

    தொடரட்டும் உங்கள் பணி.

    ReplyDelete
  12. நன்றி சகோதரி! :-)

    நேசமித்திரன் ஒரு அடையாளம்,ஆளுமை.

    முயற்சி செய்து நுழையணும்.

    நுழைந்த பிறகு வெளிவரும் கதவை மூடிவிடுகிறார்.

    விசேசம் என்னவெனில்.

    நேசன் மூடுவதில்லை. :-)

    மற்ற அறிமுகங்களுக்கும் நன்றி.

    ReplyDelete
  13. மிக்க நன்றி அக்கா... தங்களுடைய அறிமுகப் பட்டியலில் எனது வலைப்பூவும் இடம்பெற்றிருப்பது பெரு மகிழ்வைத் தருகிறது.
    தொடர்ந்து இயங்க முடியாத சூழலில் தங்களைப் போன்றவர்களின் ஊக்கம் கவிதையாகிக் கசந்துருகத் தோன்றுகிறது.
    நன்றிகள் பல...

    ReplyDelete
  14. நல்ல அருமையான கவிதை அறிமுகங்கள்!!

    ReplyDelete
  15. நல்ல அறிமுகங்கள்!!

    ஒருவனை மட்டும் உலகம் அறியும் முன் நான் அறிவேன்..நாவிஷ்..என் கல்லூரி நண்பன்..

    ReplyDelete
  16. நன்றி சாந்தி ...விடுமுறை தினங்களாதலால் நான் இப்பொதுதான் பார்க்கிறேன் ...அன்பும் வாழ்த்துக்களும்..

    ReplyDelete

தமிழ் மணத்தில் - தற்பொழுது