தனித்தமிழ் ஆவர்த்தனம் - வலைச்சரம் இரண்டாம் நாள்
➦➠ by:
க.நா.சாந்தி லெட்சுமணன்
தமிழே! என் தாய் தந்த சீதனமே! சங்கரனார் இறங்கி வந்து சங்கம் அமைத்து, தரணியில் வளர்ந்த மொழியே! உன்னை வணங்குகிறேன்.நமது தமிழ் மொழி உயர்ந்த வளமான இலக்கியப்பின்னணியையும், தொன்மையும் கொண்டது. காலப்போக்கில் சங்க இலக்கியங்களும், காப்பியங்களும் தமிழ் இலக்கியம் படிக்கும் மாணாக்கர்களுக்கானது என்று ஒதுக்கப்பட, அந்த பொக்கிஷங்கள் கால ஓட்டத்தில் நம்மால் அறியப்படாமல் போனது. பத்திரிக்கைகளும், ஊடகங்களும் வியாபார நோக்கில், ஜனரஞ்சகமாக, வாசகர்களின் விருப்பத்திற்கு படைப்புகளை முறைப்படுத்த, இன்று யாப்பு,செய்யுள்,வெண்பா, மரபுக்கவிதை இவையெல்லாம் அர்த்தம் புரியாத அகராதி வார்த்தைகளாக.
அன்னைத்தமிழின் அத்தனை அழகியல் ஆபரணங்களையும் மீட்டெடுக்கும் தமிழ் இலக்கியம் குறித்த வலைப்பூக்களை இன்று பார்ப்போமா!
முத்தமிழுக்கு சேவை செய்யும் பெரியோர்கள் மற்றும் புலவர்களைப் பற்றிய அறிமுகம், அவர்களைக் குறித்த உரைகள், அவர்தம் சேவைகள், தமிழ் இணையப் பயிலரங்கம் குறித்த கட்டுரைகள், நாட்டுப்புறப்பாடல்கள், சங்க இலக்கியங்கள் என்று அத்தனை பதிவுகளும் பயனுள்ள பதிவுகள் தாம்.பலர் படித்துப் பயன் பெறும் ஒரு தளம் இது.முனைவர்.மு.இளங்கோவன் ஐயா அவர்களின் வலைhttp://muelangovan.blogspot.com/
ஆண்டாள், கண்ணகி, சங்க இலக்கியத்தில் காதல் இப்படி தமிழில் இலக்கியப்பாடம் சொல்லித்தரும் ஒரு ஓய்வு பெற்ற தமிழ்ப்பேராசிரியை எம்.ஏ.சுசீலா அம்மா அவர்களின் வலை இது.http://masusila.blogspot.com/
தமிழ்மொழி, தமிழர்கள் பண்பாடு,வாழ்வியல் குறித்த அனைத்து செய்திகளையும் தமிழ்ப்பற்றுடன் தொகுத்து வழங்கும் சுப.நற்குணன் ஐயா அவர்களின் வலை. http://thirutamil.blogspot.com/
நெடுநல் வாடை,குறுந்தொகை,அகநானுறு இன்னும் பல சங்க இலக்கியங்களின் பாடல்கள் விளக்கங்களுடன் தரப்பட்டுள்ள ஒரு பயனுள்ள தளம் முனைவர்.இரா.குணசீலன் ஐயா அவர்களின் வலை. http://gunathamizh.blogspot.com/
தமிழ் இலக்கியம் குறித்த சிந்தனைகளை வழங்கும் இன்னொரு வலைப்பூ முனைவர் மு.பழனியப்பன் ஐயா அவர்களின் வலை. http://thirutamil.blogspot.com/
இந்த வலைப்பூக்கள் அனைத்தும் நான் அறிந்த வரை எனக்குத் தெரிந்தவை. இன்னும் கூட நிறைய இருக்கலாம். பொழுது போக்கும் தளங்களை பல வேளைகளில் படித்தாலும் இப்படியான பொழுதை ஆக்கும் தளங்களை சில வேளைகளிலாவது படிப்பதால் தமிழின் இலக்கியப் பரிமாணங்களை உணர முடியுமென்பது எனது தாழ்மையான அபிப்பிராயம்.
நன்றி நண்பர்களே!
நன்றி நண்பர்களே!
|
|
நீங்கள் குறிப்பிட்டுள்ள அனைவருமே மிகச் சிறந்த தமிழறிஞர்கள். இந்த வரிசையில் முனைவர் கல்பனா சேக்கிழார் அவர்களையும் சேர்த்திருந்தால் இன்னும் சிறப்பாக இருந்திருக்கும்.
ReplyDeleteசெந்தமிழ் அறிமுகங்கள் நன்று.
ReplyDeleteகல்பனா சேக்கிழார் அம்மா அவர்களின் வலைப்பூவையும் முனைவர் மு.இளங்கோவன் ஐயா அவர்கள் தான் அறிமுகப்படுத்தினார்கள். வலைச்சரத்தில் எழுதும் படபடப்பில் கல்பனா அம்மா அவர்களின் வலைப்பூ விட்டுப்போய்விட்டது. சகோதரர் சரவணக்குமார் அவர்களுக்கு நன்றி!
ReplyDeleteசிறந்த அறிமுகம்.. நன்றி :)
ReplyDeleteமுத்தான அறிமுகங்கள்!
ReplyDeleteநன்றி!
பொழுது போக்கும் தளங்களை பல வேளைகளில் படித்தாலும் இப்படியான பொழுதை ஆக்கும் தளங்களை சில வேளைகளிலாவது படிப்பதால் தமிழின் இலக்கியப் பரிமாணங்களை உணர முடியுமென்பது எனது தாழ்மையான அபிப்பிராயம்.
ReplyDelete...... அருமையான வரிகளில், கருத்தும் அறிமுகங்களும்..... பாராட்டுக்கள்!
களை கட்டுதுங்க .நன்றி அறிமுகங்களுக்கு
ReplyDeleteஅன்பின் சாந்தி
ReplyDeleteதமிழறிஞர்களை அறிமுகப் படுத்திய விதம் நன்று
நல்வாழ்த்துகள் சாந்தி
நட்புடன் சீனா
யாரும் யோசிக்காத ஒன்று. தொடக்க வரிகளை படித்து வியந்து நிற்கின்றேன். என்னவொரு ஆளுமை. அறிமுகம் அணைவருமே அறிந்தவர்கள் தான். அதை விட மிகப் பெரிய ஆச்சரியம் அத்தனை பேர்களும் பிடிவாதமாக தங்கள் பாதையை மாற்றாமல் பயணித்துக்கொண்டுருப்பவது. அவர்களுக்கும் உங்களுக்கும் வாழ்த்துகள்.
ReplyDelete