செண்பகமே செண்பகமே .. ( வலைச்சரத்தில் )
அன்புமிக்க நண்பர்களே!!
வலைச்சரத்தில் மீண்டும் உங்களை சந்திக்க வந்துள்ளேன். இது எனக்கு ரொம்ப மகிழ்ச்சியாக உள்ளது. வலைச்சரத்தில் இன்று முதல்நாள். வழக்கமாக இன்றைய தினம் முதல்நாள் அன்று அறிமுகப்பதிவு தான் வெளியிடுவாங்க. நான் ஏற்கனவே கடந்தமுறை என்னைப்பற்றி குறிப்பிட்டுள்ளதால் அறிமுகப்பதிவு தேவையில்லை என நினைக்கிறேன்.
அதனால் நேரடியாகவே கதைக்குள்ள போவோமா. அட ஆமா கதைன்னு சொன்னதுதான் ஞாபகம் வந்தது. இப்போ கதை சொல்ற சீசன் நடந்துக்கிட்டிருக்குன்னு நினைக்கிறேன். அதனால் நான் இந்தவாரத்தில் கொஞ்சம் வித்தியாசமாக பதிவர்களின் அறிமுகத்தை தொடர்கதையாக எழுதப்போகிறேன். அதற்கு உங்கள் மேலான ஆதரவுகளை நல்குவீர்கள் என்று நினைக்கிறேன்.
இப்போது கதைக்குள் செல்வோமா நண்பர்களே!!..
ஒரு ஊரில் ஒரு செல்வந்தன் இருந்தான். அவன் பெயர் மணி. அவன் மனைவி பெயர் செண்பகம். அவனுக்கு ஏராளமா சொத்துநிலபுலன்கள், இருந்தன. அதனால் அவன் வேலைக்கு செல்லாமல் உக்கார்ந்தே சாப்பிட்டு சொத்துக்களை கரைத்தான். இது அவன் மனைவிக்கு பிடிக்கவில்லை. அதனால் அவனை வேலைக்கு செல்லுமாறு வற்புறுத்தினாள்.
மணி தன் மனைவியிடம் ஏப்புள்ள!!.. 4 தலைமுறைக்கும் சேர்த்து இவ்வளோ சொத்துஇருக்கு. இதை அனுபவிக்காம நாம் வேற வேலைசெய்யவா. அதனால நான் ஒரு திட்டம் வைத்திருக்கிறேன். நான் இந்த உலகை சுற்றிவர ஆசைப்படுகிறேன். அதுக்கு முன்னாடி பக்கத்து ஊர்ல வலையுலகில் நிறைய பதிவர்கள் இருக்காங்க அவங்களிடம் போய் ஐடியா கேப்போம் என்ன சரியா..
அதென்ன மச்சான்! வலையுலகம்.. அப்படின்னு ஒரு உலகம் இருக்கவா செய்யுது.. கலிகாலம்டா சாமி...
ஆமாப்புள்ள அவுகதான் இப்போ கொடிகட்டி பறக்குவுதாக.. சரிப்புள்ள நான் போய்வருகிறேன். இங்க இருந்தா நீ தொணதொணன்னு பேசிக்கிடே இருப்பே..
ஏமச்சான்! பாத்தீகளா என்னைய வுட்டுட்டு போறேன்னு சொல்றீகளே. இதென்ன நியாயம். நானும் வருவேன் ஆமா சொல்லிபுட்டேன்.
சரிசரி வா வா நாம ரெண்டுபேருமே போவோம்.
மச்சான் மச்சான் நீங்க ஊர்வழிக்கு போறேன்ன்னு சொன்னீங்களே.. அதைபற்றி யாராவது எழுதிருக்காங்களான்னு பாருங்களேன்..
இரு புள்ள பாக்குறேன்.. ஆங்.. ஆங்... அட இங்கபாரு ஒருத்தர் சிங்கப்பூர்ல இருக்காராம் அவருபேரு.. ஆங்.. கோவி.கண்ணன். இவரு சிங்கப்பூர்ல இருந்து தன் குடும்பத்தோடு ஐரோப்பாவுக்கு டூர் போயிட்டு வந்திருக்காராம்..
அப்படியா மச்சான்!! அதென்ன மச்சான் டூர்?.
மண்டு மண்டு!! டூர்ன்னா தமிழ்ல் சுற்றுலா. உன் பாஷையில சொல்லனுன்னா ஊர்வழி.
அட ஆமால்ல.. நான் ஒரு படிக்காதவ. என் ராசா எம்ப்பூட்டு விவரமா இருக்கீக. இந்தாங்க இதை வாங்கிக்குங்க. இச் இச் இச் இச்...
போதும் போதும்.. நம்ம விவகாரம் அப்புறம் பாக்கலாம். இங்க பாரு.
ஆங்! கோவி.கண்ணன் என்ன சொல்றாரு..
அவரு ஐரோப்பாவுக்கு டூர் போயிட்டுவந்ததை 9 பாகமா எழுதியிருக்காருன்னா பாத்துக்கோயேன்.
ஐரோப்பா எங்க இருக்கு மச்சான்?..
அடபோப்புள்ள! உனக்கு விளக்கம் சொல்றதுக்குள்ளே எனக்கு தாவு தீர்ந்திரும்போல சே! ஐரோப்பா, நாம இருக்கிற ஆசியா கண்டம் மாதிரி அதுவும் ஒரு சின்ன கண்டம்.
மன்னிச்சிகோ மச்சான்! இனிமே இப்படில்லாம் கேக்கமாட்டேன். மச்சான் என்னையும் கூட்டிட்டுபோ.. நானும் வருவேன் ஐரோப்பாவுக்கு.
சரி சரி.. அடுத்தவுகள பாப்போமா..
அட இங்கபாரு செண்பகம். இவங்க பேரு துளசி கோபால். இவரை துளசி டீச்சர்ன்னு எல்லோரும் அன்போடு அழைப்பாங்களாம்.
அப்போ வாத்தியாரம்மான்னு சொல்லுங்க..
இவங்க குஜராத் போன அனுபவத்தை 30க்கும் மேலான பாகங்கள் எழுதியிருக்காங்க. இவரோட வலைப்பூவில் நிறைய அனுபவ கட்டுரைகள் புதைந்து கிடக்குது.. தோண்ட தோண்ட ( படிக்க படிக்க ) ரொம்ப விறுவிறுப்பா இருக்குது. நாம் ஒரு தடவை போயிட்டுவருவோமா புள்ள.
சரிமச்சான்.. அடுத்து யாரு இருக்காகன்னு பாருங்க.
அடுத்து துபாய் ராஜான்னு ஒருத்தர் இருக்காரு..
அப்படியா இவரு துபாய்க்கே ராஜாவா?..
அட சே! என்னபுள்ள.. இவரு முன்னாடி துபாய்ல இருந்திருப்பாருன்னு நினைக்கிறேன். அதனால துபாய்ன்னு பேர்ல அடைமொழி போல. இப்போ இருக்கிறது எகிப்துல.
இவரு விமானத்துல செல்லும்போது ஏற்பட்ட அனுபவத்தை பற்றி எழுதிருக்காரு..
இது மட்டும்தானா மச்சான்!
இதுமட்டுமல்லபுள்ள.. இன்னும் நிறைய இருக்கு. குட்டிச்சாத்தானுக்கும் இவருக்கும் இடையே பெரிய சண்டையே நடந்திருக்கு..
என்ன மச்சான் குட்டிச்சாத்தானுக்கும் இவருக்கும் சண்ட நடந்திருக்கா நம்பவே முடியல..
என்னாலையும்தான் நம்பமுடியல... 6 பாகமா எழுதிருக்கான்னா பாத்துக்கோயேன். படிச்சி பார்ப்போமா..
அடுத்து இவரு எகிப்துல சுற்றுலா போனது பற்றி 8 பாகமா எழுதியிருக்காரு.
அப்ப ரொம்ப விறுவிறுப்பா இருக்குன்னு சொல்லுங்க. வேற யாரு..?.
இங்க பாரு ஒருத்தர் நம்நாட்டுல இருந்து வெளிநாட்டுக்கு போகும்போது உண்டான் அனுபவத்தை பற்றி எழுதிருக்காரு..
இது எல்லோருக்கும் ஏற்படக்கூடியதுதானே.. இதுல என்ன புதுசா இருக்கு..
அட நீவேற புள்ள.. அவரு புதுசா கல்யாணம் ஆகி 3 மாதத்துல வெளிநாட்டுக்கு போறதுன்னா எவ்வளவு கஷ்டம். இது காணாதுன்னு இயற்கையும் சதி செஞ்சிருக்கு..
அதென்ன மச்சான்!
ஆமா புள்ள.. அவருபோன விமானத்துல ஏதோ கோளாறாம். 2 நாள் அவதிபட்டிருக்காரு.. நீயே படிச்சிப்பாரு.
அட ஆமா.. இவரு நம்ம ஸ்டார்ஜன்னுல்ல.. வேற யாருன்னு பாரு மச்சான்.
வெளிநாட்டுல இருந்து ஊருக்குத் திரும்பும்போது உள்ள சந்தோசம் இருக்கே.. அதை விவரிக்க வார்த்தையே இல்லன்னு சொல்லலாம் புள்ள..
என்ன மச்சான் சொல்றீக..
ஆமா புள்ள இவரு பேரு சரவணக்குமார்.. இவர் ஊருக்கு போகும்போது உண்டான சந்தோசத்தை பற்றி சொல்லிருக்காரு..
ஆமா மச்சான்! உண்மையிலே ரொம்ப சந்தோசமா இருக்கும்.. ஊர்ல மணைவி, பிள்ளைகளை 2 வருஷம் கழித்து பார்க்கும்போது எப்படி இருக்கும்?. வெளிநாட்டுல போய் கஷ்டப்பட்டு சம்பாதித்து ஊருக்கு போகும்போது ரொம்ப சந்தோசமாவே இருக்கும் மச்சான். இவரோட பக்கத்தை படிச்சி காட்டுங்க மச்சான்.
அட என் பொண்டாட்டி என்னமா பேசுற.. புல்லரிக்குது.. இந்தா வாங்கிக்கோ இச் இச் இச் இச்...
போதும் மச்சான் போதும்.. அட அடடா.. சமையற்கட்டுல ஏதோ சத்தம் கேக்குது. மத்ததை நாளைக்கு பாப்போம் மச்சான். எனக்கு கொஞ்சம் சமையற்கட்டுல வேலை இருக்கு.. வாரேன்.
தொடரும்...
உங்கள் மேலான கருத்துக்களை எதிர்பார்த்தவனாக உங்கள் ஸ்டார்ஜன்.
|
|
வாழ்த்துக்கள்
ReplyDeleteஅசத்துங்க தல...
ReplyDeleteஸ்டார்ட் மியூசிக்....
//ன் ராசா எம்ப்பூட்டு விவரமா இருக்கீக. இந்தாங்க இதை வாங்கிக்குங்க. இச் இச் இச் இச்...//
ReplyDeleteம்ம்ம்ம்ம்.... குடுத்து வெச்ச ஆளு நீங்க.
கலக்குங்க ஸ்டார்!
வாங்க ஸ்டார்ஜன்... அறிமுக விதம் நல்லாருக்குங்க... தொடருங்கள்...
ReplyDeletePresent Starjan
ReplyDeleteநிறைய "இச்...இச்..." கிடைக்க
ReplyDeleteவாழ்த்துக்கள்.
கதையுடன் ஆரம்பித்து இருப்பது நல்லா இருக்கு ஸ்டார்ஜன்
ReplyDeleteஅன்பிற்கும், அறிமுகத்திற்கும் நன்றி ஸ்டார்ஜன்.செண்பகம்-மணி ஜோடி உரையாடல் அருமை.வித்தியாசமாக சரம் தொடுப்பது அழகு.வாழ்த்துக்கள்.
ReplyDeleteஸ்டார்(ஜன்)ட் மீஜிக்.........
ReplyDelete:-)
செண்பகம்,மணி ஜோடி உரையாடல் மூலமாக செலவில்லாமல் பல நாடுகளைப் பார்த்துவிட்டேன்.புதிய உத்தி.அருமையோ அருமை.வாழ்த்துக்கள் ஸ்டார்ஜன்.
ReplyDeleteவாழ்த்துக்கள் ஸ்டார்ஜன்.
ReplyDeleteநண்பருக்கு வணக்கம் . உங்களை மீண்டும் வலைச்சரத்தில் சந்திப்பதில் பெரும் மகிழ்ச்சி . இந்த வாரமும் உங்களுக்கு சிறப்பாக அமைவதற்கு வாழ்த்துக்கள் .
ReplyDeleteபகிர்வுக்கு நன்றி !
தொடருங்கள் மீண்டும் வருவேன் .
அறிமுக விதம் கலக்கலாயிருக்கு...தொடருங்கள்..வாழ்த்துக்கள்!!
ReplyDeleteநண்பருக்கு வணக்கம் . உங்களை மீண்டும் வலைச்சரத்தில் சந்திப்பதில் பெரும் மகிழ்ச்சி . இந்த வாரமும் உங்களுக்கு சிறப்பாக அமைவதற்கு வாழ்த்துக்கள் .
ReplyDeleteபகிர்வுக்கு நன்றி !
இந்த வாரமும் சிறப்பாக கலக்க வாழ்த்துகள்.
ReplyDeleteசெண்பகம் மணி இன்னும் நிறைய சுற்றிக்காட்டட்டும்.
Very nice presentation! :-)
ReplyDeleteஆரம்பமே அசத்தல். தொடர்ந்து தூள் கிளப்புங்கள். :-)))
ReplyDeleteஅட நம்ம ஐரோப்பிய சுற்றுலா கூட இங்கே இடம் பிடிச்சுருக்கு. நன்றிங்க தம்பி.
ReplyDeleteபதிவுகளை அறிமுகப்படுத்தும் உத்தியும் அட்டகாசம்
சூப்பர் ஸ்டார்ஜன். மணி செண்பகம் ஜோடி அட்டகாசம். என்னமா கலக்குறாங்க..
ReplyDeleteகலக்கல் ஆரம்பம் ஓகே!!ஸ்டாட்........
ReplyDeleteவாங்க விஜய் @ வருகைக்கும் வாழ்த்துக்கும் நன்றி
ReplyDeleteவாங்க இர்ஷாத் @ நன்றி வாழ்த்துகளுக்கு..
வாங்க சத்ரியன் @ பாராட்டுக்கு நன்றி
வாங்க பாலாசி
ReplyDeleteவருகைக்கும் கருத்துக்கும் நன்றி
வாங்க டிவிஆர் சார்
ReplyDeleteநன்றி சார்.
வாங்க சைவகொத்துப்பரோட்டா
ReplyDeleteவருகைக்கும் கருத்துக்கும் நன்றி
வாங்க ஸ்டீபன்
ReplyDeleteவருகைக்கும் கருத்துக்கும் நன்றி
வாங்க ராஜா
ReplyDeleteவருகைக்கும் கருத்துக்கும் வாழ்த்துக்கும் நன்றி
வாங்க அகல்விளக்கு
ReplyDeleteவருகைக்கும் கருத்துக்கும் வாழ்த்துக்கும் நன்றி
வாங்க ஸாதிகா
ReplyDeleteநன்றி நன்றி...
வருகைக்கும் கருத்துக்கும் வாழ்த்துக்கும் நன்றி
வாங்க ஹேமா
ReplyDeleteஹைய்யா ஹேமா ஊருக்கு போயிட்டு வந்தாச்சா.. மிக்க மகிழ்ச்சி
வருகைக்கும் வாழ்த்துக்கும் நன்றி
வாங்க பனித்துளி சங்கர்
ReplyDeleteதொடர்வருகைக்கும் ஆதரவுக்கும் வாழ்த்துக்கும் மிக்க நன்றி
வாங்க மேனகாசத்யா
ReplyDeleteதொடர்வருகைக்கும் வாழ்த்துக்கும் மிக்க நன்றி
வாங்க குமார்
ReplyDeleteதொடர்வருகைக்கும் வாழ்த்துக்கும் மிக்க நன்றி
வாங்க அக்பர்
ReplyDeleteவருகைக்கும் வாழ்த்துக்கும் நன்றி
வாங்க சித்ரா
ReplyDeleteவருகைக்கும் கருத்துக்கும் நன்றி
வாங்க சேட்டைக்காரன்
ReplyDeleteவருகைக்கும் கருத்துக்கும் நன்றி
வாங்க கோவி.கண்ணன் அண்ணே
ReplyDeleteநன்றி அண்ணே பாராட்டுக்கு
வருகைக்கும் கருத்துக்கும் நன்றி
வாங்க மின்மினி
ReplyDeleteவருகைக்கும் கருத்துக்கும் நன்றிகள்
வாங்க ஜெய்லானி
ReplyDeleteவருகைக்கும் கருத்துக்கும் நன்றிகள்