வலைச்சர வெள்ளி - புதிய பதிவர்கள்
➦➠ by:
கே.ஆர்.பி.செந்தில்
இன்று புதிதாய் தோன்றுவது
நாளை பழசாகும்
நாளை மறுநாள்
இன்னொரு புதியவை தோன்றும்
ஒவ்வொரு நாளும்
ஒவ்வொரு கனவுகள்..
நேற்றைய பதிவில் பின்னூட்டம் இட்ட அனைத்து நண்பர்களுக்கும் என் நன்றி..
இன்று சில புதிய பதிவர்கள் பற்றி பேசலாம்.. ஒவ்வொரு நாளும் புதிய பதிவர்கள் வந்துகொண்டுதான் இருக்கிறார்கள், ஆர்வம் மிகுதியில் எழுத வந்தாலும் வெகு சிலரே தொடர்ந்து எழுதுகிறார்கள்.. ஒரு கட்டத்தில் அடுத்து என்ன எழுதுவது என்று தெரியாமல் தேங்கி விடுகிறார்கள்.. சிலரோ யாராலும் கவனிக்கப்படாமல் ஒதுங்கிக் கொள்கிறார்கள்..
புதிய பதிவர்கள் உங்கள் பதிவுகளை போட்டதுடன் வெறுமனே காத்திராமல் மற்ற பதிவுகளை படித்து பின்னூட்டம் இடுங்கள்.. பல பதிவர்கள் அனைத்து பதிவுகளையும் படிப்பவர்களாக இருப்பார்கள் அவருக்கு பாலோயராக மாறுங்கள்.. பிடித்த பதிவுகளுக்கு ஓட்டு போடுங்கள்.. விளம்பரம் இல்லாத எதுவும் பிரபலம் ஆகாது.. அது எவ்வளவு நல்ல சரக்காக இருந்தாலும்.. முதலில் உங்களை அனைவரிடமும் அறிமுகபடுத்திக் கொள்ளுங்கள்..
நிலவின் மடியில் வினோத் எழுதும் கவிதைகள் கவனிக்கப்பட வேண்டியவை.. மரித்துப் போகும் உயிரணுக்கள் பற்றிய இவரது கவிதை, மிக நேர்த்தியான ஒன்று..
மின்மினிதேசம் மீனாட்சி சுந்தரம் நீண்ட காலமாக எழுதினாலும் சமீப காலமாகத்தான் தமிளிஷில் மட்டும் இணைக்கிறார்.. இவர் சொல்லும் குட்டிகதைகள் அவசியம் படிக்க வேண்டிய ஒன்று.. வாய் விட்டு சிரிக்க வைப்பதுடன் நம்மை சிந்திக்கவும் வைக்கிறார். இந்த தில்லு துர என்ன பண்ணிருக்காரு பாருங்களேன்..
வேட்டைபெருமாள் ராமச்சந்திரன் நிச்சயம் பிரபல பதிவர் ஆகிவிடுவார் என்பதற்கு அவரின் இந்த பதிவே சாட்சி..
அம்பிகாவின் சொல்லத்தான் நினைக்கிறேனில் ஒரு தோழி இருந்தாள்..
ஒன்பதாம் வகுப்பு ஈ பிரிவு (எப்படியல்லாம் தலைப்பு வைக்கிறாங்க) கபிலன் 55 வார்த்தைகளில் சுஜாதவை போல் கதை சொல்லியிருக்கிறார்.. வாத்யார் பெயரை காப்பாற்றிவிட்டார்..
கம்ப்யூட்டர் கனவுகள் என்ற பெயரில் சாப்ட்வேர் எஞ்சினியர் எழுதும் வலைப்பக்கம் ஆனால் கம்ப்யூட்டர் பற்றி எழுதவில்லை.. பிரபல பதிவர் ஆக வேண்டுமா?
இதனை படியுங்கள்..
பாடினியார் ஜெயந்தி நிறைய தலைப்புகளில் நிறைய விசயங்களை எழுதுகிறார்.. சிந்தனைகளை தூண்டக் கூடிய பதிவுகள் அதிகம் எழுதுகிறார்.. இவர் அப்பாவுக்கு எழுதிய கடிதம் கண்ணீரை வரவழைக்கும்..
எனது இரண்டு சதங்கள் அனாமிகா துவாரகன் இட்லி மாமிக்கு பிறந்த நாள் வாழ்த்துக்கள் சொல்லியிருக்கிறார்.. எத்தனை வகை இட்லிகள்..
ராசாராச சோழனின் பழனி பாத யாத்திரை பயணம், ஒரு புதிய அனுபவம்..
மாற்றம் புறமுதுகு பேசுவோர் பற்றி ஒரு கவிதை எழுதியுள்ளார்..
ரிஷபன் எழுதும் கிங் க்வீன் ஜாக் ஒரு வித்தியாச தொடர்..
கோமாளி (பெயர் நல்லா இருக்குங்க) மொக்கையின் வரலாற்றை ஆய்வு செய்திருக்கிறார்..
வானதி சுஜாதா பற்றி ஒரு கதை எழுதி இருக்கிறார் படியுங்கள்..
உன்னைத் தேடி நான் ஆர்.கே குரு தள்ளாடும் முதுமை பற்றி ஒரு கட்டுரை எழுதி இருக்கிறார்..
ரோமியோவின் ஏழாம் உலகம் மிக சிறப்பான விமர்சனம்...
செங்கோல் பெட்ரோல் விலையைப் பற்றிய கட்டுரை.. நமக்கு வயிறு பற்றி எரிகிறது..
ரசிகனின் ஏவாள் காதலி ஒரு வித்தியாசமான கவிதை..
அடிச்சுவடு முனியாண்டியின் ஆதலால் காதல் செய்தல்..
விட்டாலனின் பயணத்தில் மக்கள் கலாசார இலக்கிய மாத இதழ்..
சே.குமாரின் பந்தய மனசு, ஒரு வித்தியாச கிராம அனுபவம்..
வெட்டிக்காடு ரவிச்சந்திரன் இவர் பழைய பதிவர் ஆனால் நீண்ட விடுமுறைக்குப் பின் இப்போதுதான் எழுத வந்திருக்கிறார்.
அஞ்சா நெஞ்சன் ஜோதி பதிவுலகில் ஒரு வித்தியாச புதிய அறிமுகம்..
ரசிகன் சௌந்தரின் சமுதாய சிந்தனைகள் மிக குறுகிய காலத்திலேயே நிறைய நபர்களை வாசிக்க வைத்த வலைப்பக்கம்..
மாப்பிள்ளை ராஜா பேசுகிறார் ..
வந்தே மாதரம் சசிகுமார் புதிய ABCD விளக்கம் தருகிறார் பாருங்கள்..
நவயுக தமிழச்சி கவிதையின் நாயகி நாம் ஏமாளிகளா? என்று கேட்டிருக்கிறார். பதில் சொல்லுங்கள்..
தமிழ் தலைமகனின் இயந்திரப் பறவை ஒரு புத்தம் புதிய பதிவர் ..
விஷ்ணு பிரசாத்தின் தேவதைகளின் பிரசங்கம் நேர்த்தியாக பின்னப்பட்ட கவிதை ..
வெறும்பய ( ரசனையான பேரு) பெட்ரோல் பிரச்சினைகளை தீர்க்க சில யோசனைகளை
சொல்லிருக்காரு..
இன்னும் நிறைய புதிய பதிவர்களைப் பற்றி சொல்ல முடியவில்லை..
நாளை சினிமா மற்றும் இசை பற்றிய பதிவர்களை பார்க்கலாம்..
|
|
என்னை வலைச்சரத்தில் அறிமுகப் படுத்தியதற்கு மிக்க நன்றி நண்பரே!!
ReplyDeleteஅன்புடன்
தமிழ் தலைமகன்
வில்சன்
http://tamilthalaimagan.blogspot.com
மிக நல்ல பகிர்வுகள் செந்தில்!
ReplyDeleteஅருமையான பகிர்வுகள் செந்தில் சார்
ReplyDeleteகவிஞர்களின் அறிமுகத்திற்கு ஸ்பெசல் நன்றி
:)
நிறையப் பார்க்காத புதுமுகங்கள்.நல்லது செந்தில் அறிமுகங்களுக்கு.
ReplyDeleteஅத்தனையும் புதுமுகங்கள் - அறிமுகம் நன்று செந்தில்
ReplyDeleteநல்வாழ்த்துகள்
நட்புடன் சீனா
ஒரே நாளில் இத்தனை பேரை அறிமுகப்படுத்தினால் எல்லோரையும் வாசித்து பின்னூட்டம் இட்டு உங்களை மறந்து விடுவேன் என நினைக்கிறேன் எனவே பாதியிலே வந்து தேங்க்ஸ் சொல்ல வந்தேன் . வாழ்த்துக்கள்' முக்கியமாக படங்கள் மிக அருமை
ReplyDeleteநிறையப் பார்க்காத புதுமுகங்கள். நன்றிங்ணா...
ReplyDeleteநல்ல அறிமுகங்கள். நன்றி செந்தில்.
ReplyDeleteஅறிமுகத்திற்கு நன்றி செந்தில்.
ReplyDeleteமற்றவர்களையும் படிக்கிறேன்.
புதியவர்கள் அறிமுகத்துக்கு நன்றி மற்றும் வாழ்த்துக்கள் அண்ணா
ReplyDeleteகோடி நன்றிகள் செந்தில்.....
ReplyDeleteநம்மையும் தேறும் என்று குறிப்பிட்டு இருப்பது
நிச்சயமாகவே என்....என்ன சொல்ல போங்க...
ரொம்ப சந்தோஷமா இருக்கு....
ஆகவே மக்களே, நீங்களும் நம்ம ஒன்பதாம் வகுப்புல
வந்து ஒழுங்கா படிக்கோணும்...
ஆமா சொல்லிப்புட்டேன்...
எவ்ளோ நாள் தான் தனியா புலம்புறது...
அன்புடன் கபிலன்.
நல்ல பகிர்வுகள்
ReplyDeleteஎன்னை வலைச்சரத்தில் அறிமுகப் படுத்தியதற்கு மிக்க நன்றி நண்பரே!!
ReplyDeleteநல்ல தொகுப்பு புதியவர்களை அறிமுகபடுத்தியமைக்கு... அவர்களை இனம்கண்டு தொகுத்தமைக்கும் என் வாழ்த்துக்கள்..
ReplyDeleteவெறும்பய ( ரசனையான பேரு) பெட்ரோல் பிரச்சினைகளை தீர்க்க சில யோசனைகளை
ReplyDeleteசொல்லிருக்காரு..
///
என்னை வலைச்சரத்தில் அறிமுகப் படுத்தியதற்கு மிக்க நன்றி...
என்னை வலைச்சரத்தில் அறிமுகப் படுத்தியதற்கு மிக்க நன்றி நண்பரே!
ReplyDeleteமற்றவர்களையும் படிக்கிறேன்.
boss arumai
ReplyDeleteஎன்னை அறிமுகப் படுத்தியதற்கு மிக்க நன்றி செந்தில்!
ReplyDeleteபா.ராஜாராம் அண்ணனும் என்னுடைய டாக்டர். சாம் பிட்ரோடா பற்றிய கட்டுரைக்கு கருவேல நிழலில் இளைப்பாற இடம் கொடுத்திருக்கிறார்.
மிகவும் மகிழ்ச்சியான வாரம் எனக்கு!
அன்புடன்,
-ரவிச்சந்திரன்
தெரியாத பதிவர்கள் ! தெரிந்து கொண்டேன்
ReplyDeleteநீங்க கலக்குங்க தல:)
நிறைய அறிமுகங்கள்.... பகிர்விற்கு நன்றி செந்தில் அண்ணே..
ReplyDeleteபுதிய பதிவர்களையும், பழைய பதிவர்களையும் இதில் நீங்கள் நடுநிலையான பதிவராய் இருந்து எல்லோரையும் எங்களுக்கு தெரியபடுத்தியதற்க்கு...மிக்க நன்றி.... வாழ்த்துகள்...!
ReplyDeleteThis comment has been removed by the author.
ReplyDeleteநல்ல அறிமுகங்கள், பகிர்வுக்கு நன்றிங்க செந்தில்...
ReplyDeleteஎன்னையும் அறிமுகப் படுத்தியதற்கு நன்றி அண்ணா
ReplyDeleteஇந்த வாரம் நிறைய புதியவர்கள் பற்றி தெரிந்துக்கொண்டேன் நன்றி
ReplyDeleteநன்றி செந்தில் அண்ணா., கோமாளிய அறிமுகம் செய்ததுக்கு ..!!
ReplyDeleteதெரியாத பலரை தெரிந்து கொள்ள வழி செய்தமைக்கு நன்றி.
ReplyDeleteஎன்னையும் அறிமுகப் படுத்தியதற்கு நன்றி சகோதரா. மற்றவர்கள் அறிமுகமும் நன்று.
ReplyDeleteமிக்க நன்றி செந்தில் அண்ணா.... மற்றவர்களையும் தொடர்ந்து படிக்கிறேன்.
ReplyDeleteமிகைப்பட்ட பதிவர்கள் எல்லாம் புதியவர்கள்.....அறிமுகத்துக்கு நன்றி செந்தில் ...ஒவ்வொன்றாய்....பார்க்கிறேன்....!
ReplyDeleteஅஹா எத்தனை அறிமுகங்கள் அனைத்தும் புதுமையான முறையில் அறிமுகம் செய்த உங்களுக்கு வாழ்த்துக்கள் . நண்பரே . பகிர்வுக்கு நன்றி
ReplyDeleteதிரு. கே ஆர் பி செந்தில் அவர்களுக்கு , வலைசரத்தில் புது பதிவரான என்னையும் அறிமுகம் செய்ததுக்கு வணக்கத்துடன் கூடிய நன்றி.
ReplyDeleteஇன்றுதான் கவனித்தேன். மிக்க நன்றி. என்றும் அன்புகள்....!
ReplyDeleteஇன்றுதான் கவனித்தேன். மிக்க நன்றி. என்றும் அன்புகள்....!
ReplyDelete-மின்மினி தேசம்