கதம்பம் - வலைச்சரம் ஆறாம் நாள்
➦➠ by:
புலவன் புலிகேசி
இன்று என்னைக் கவர்ந்த சில பதிவுகளை கதம்பமாக வழங்கலாம் என ஒரு முயற்சி. கதம்பம் என்பது இன்ன வகை என்றில்லாமல் எல்லாம் கலந்த கலவை என்பது நாம் அறிந்ததே. அந்த வகையில் இன்று சமூக நிகழ்வுகளில் பதிவுகளின் கதம்ப தொகுப்பாக இந்த ஆறாம் நாளை அமைக்கும் முயற்சி இது.
"கடந்த 40 ஆண்டுகளாக இந்த பள்ளி நடப்பதாகவும், இதுவரை ஆயிரக்கணக்கானோர் பயன் பெற்றிருப்பதாகவும் அறிந்து கொண்டேன். முன்கூட்டியே பதிவு செய்து கொண்டு செல்வது நல்லது."
கண் குறைபாடுகளை சில பயிற்சிகளின் முலம் சரி செய்து வரும் ஒரு இடத்திற்கு குழந்தையை அழைத்து சென்று பயனடைந்தை இவர் அதை மற்றவரும் பயனடைய செய்யும் வகையில் எழுதியிருப்பதுதான் இந்த இடுகை.
"தேடாமலேதான்
கிடைத்து விடுகிறதோ
நம்மில் பலருக்கும்
தீராத் தேவையாகவே
இருந்துவரும் அந்தப்
பரிபூரண மனநிறைவு?"
"யாரையாவது அழைத்து உதவி செய்யுங்கள், வண்டி கொண்டு வர ஏற்பாடு செய்யுங்கள் என்று சொல்லாமல் தூக்கிக் கொண்டு ஓட வைத்த அறிவு...மனிதம்."
"காதலர்களுக்கான போரில் - வாழ்ந்துகொண்டே சாகவும், செத்துக்கொண்டெ வாழவும், தினம் தினம் சாகவும் முடியும்.
இந்தக் கொடுமையை (சுகமான வலியை) அனுபவிக்க முடியாதவர்கள் தாங்களே தற்கொலை செய்துகொள்வர்"
தமிழ் வளர்ப்பில் மாநாட்டு நடத்துபவர்களை விட இவர் உயர்ந்தவர். அவரால் நடத்துவது போலி மாநாடு. ஆனால் இவர் வால்வியலூடு தமிழ் இலக்கியங்களை ஒப்பிட்டு அனைவருக்கும் தமிழ் பயிற்றுவிக்கிறார். அப்படி ஒரு பதிவுதான் இது.
இவர் பெரும்பாலும் வலைப்பதிவர்களுக்கு உதவியான இடுகைகளையே எழுதுறார். இவரின் இடுகைகள் மூலம் என் வலைப்பூவில் பல மாற்றங்கள் செய்திருக்கிறேன்.
"வீட்டின் எங்கோ ஒரு மூலையில் இருந்து
காற்றில் கலந்து வரும் இளையராஜாவின் இசை
இவற்றை எல்லாம் ஒரு நொடியில் மறக்க செய்து
பசி தூண்டும் இட்லி கொப்பரை விசில்
கண்ணாடி சன்னலில் தன்னைத் தான் கொத்துகிறோம்
என்று தெரியாமலே கொத்தும் மைனா "
கவிதைகள் புனைவதில் வல்லவர். படித்துப் பாருங்கள்
"மக்கிபோகா பிளாஸ்டிக்கயும்
மக்களெல்லாரும் உபயோப்பதால
விக்கிபோறா பூமித்தாயி
வீணாப்போகும் தண்ணியால..."
என் அண்ணன் என்று சொல்வேன். அப்படித்தான் அவரை அழைப்பேன். பல விடயங்களில் தெளிவாக இருக்கும் இவர் தண்ணீர் பிரச்சினையை ஒரு நாட்டுப்புற பாடல் போல் அமைத்து எழுதியிருப்பது தான் இந்த பதிவு.
|
|
பயனுள்ள இடுகைகளை தந்த அனைவருக்கும் நன்றிகள். உங்களுக்கு, பாராட்டுக்கள்!
ReplyDeleteஅருமையான கதம்பம்!
ReplyDeleteஅறிமுகங்கள் அருமை.:)
ReplyDeleteகதம்பம் நல்லா இருக்குங்க, அப்புறம் வலைச்சர ஆசிரியருக்கு வாழ்த்துக்கள்!!
ReplyDeleteமணக்கும் கதம்பம் ..
ReplyDeleteபடிக்க வேண்டிய பதிவுகள்
ReplyDeleteநன்றி அண்ணா :)
கதம்பம் வாசனை.
ReplyDeleteவாழ்த்துகள் புலவரே.
நல்ல அறிமுகம்...வாழ்த்துக்கள்
ReplyDeleteநல்ல அறிமுகம்...வாழ்த்துக்கள்
ReplyDeleteஅன்பின் புலிகேசி
ReplyDeleteகதம்பம் பல்வேறு மலர்களால் மணக்கிறது - அத்த்னையும் அருமை
நல்வாழ்த்துகள் புலிகேசி
நட்புடன் சீனா
படிக்க வேண்டிய பதிவுகள்...
ReplyDeleteபயனுள்ள இடுகைகளை தந்த அனைவருக்கும் நன்றி. உங்களுக்கு பாராட்டுக்கள்!
ஒவ்வொரு அறிமுகமும் அருமை.
ReplyDeleteவாழ்த்துக்கள்.
நண்பரே இன்றைய கதம்பத்தில் சேர்த்திருக்கும் பூக்கள் ஒவ்வொன்றும் அருமை . எஞ்சிய நாட்களிலும் உங்களின் பணி சிறப்பாக அமைவதற்கு என் வாத்துக்கள் . இங்கு நீங்கள் அறிமுகம் செய்திருக்கும் பதிவுகளை படித்து முடிக்கவே இன்றைய இரவு தீர்ந்து போகிவிடும் என்று நினைக்கிறேன் . இப்பொழுதே வாசிக்கத் தொடங்கிவிடுகிறேன் . பகிர்வுக்கு நன்றி
ReplyDelete