07 - 09 - 2015 முதல் ஆசிரியர் பொறுப்பேற்பவர்

ரிஷபன்
இவரின் வலைப்பூ

ரிஷபன்

முந்தைய ஆசிரியர்கள்


சீனா ... (Cheena) - அசைபோடுவது

சிந்தாநதி

நன்றி!

திரட்டிகளின் தொகுப்பு

:: தமிழ் திரட்டுகளின் சங்கமம்<br/>:: Tamil blogs, news, ezines

வலைப்பதிவர் உதவிப்பக்கம்

தமிழில் எழுத மென்பொருள்

fb like

ஞானாலயா = புதுக்கோட்டை

www.gnanalaya-tamil.com
வலைச்சரத்தில் வெளியிடப்படும் இடுகைகள் வலைச்சரக் குழுவினரால் தணிக்கைக்கு உட்படாது. ஆனால், வலைச்சர விதிக்கு உட்படாத இடுகைகளை முன்னறிவிப்பின்றி நீக்க வலைச்சரக் குழுவினருக்கு உரிமை உள்ளது

Friday, July 30, 2010

உலகின் அழிவு - வலைச்சரம் ஐந்தாம் நாள்

உலகம் அழியும் என பலர் சொல்லிக் கொண்டிருக்கின்றனர். ஆனால் அது தாமாக அழியப் போவதில்லை. அதை அழிக்கும் சக்தி நமையன்றி வேறு யாருக்கு உண்டு. உலக அழிவில் முக்கிய பங்கு ஏன் பெரும் பங்கு வகிப்பது இத புவி வெப்பமாதல் (). "போன வருஷத்தை விட இந்த வருஷம் வெயில் அதிகமா இருக்குல?" இந்த வாக்கியத்தை பேசாதவர்களே இருக்க முடியாது.

இதற்கெல்லாம் மனிதர்களின் அறியாமை, லாபம் மட்டும் நோக்காக கொண்டு செயல்படும் தொழிற்சாலைகள் தான் காரணம். உலகின் அழிவு கண் முன் பல முறை வந்து சென்றிருக்கிறது. பலர் சொல்லக் கூடும் அது இயற்கை நிகழ்வு மனுஷன் என்ன செய்ய முடியும்? என்று. உண்மைதான் இயற்கைக்கு முன் மனிதர்கள் ஒன்றுமற்றவர்கள். ஆனால் அந்த இயற்கையை சீற்றமடைய செய்வது நிச்சயம் மனிதர்களாகிய நாம் தான்.

இன்று குளோபல் வார்மிங் குறித்து நம் பதிவர்கள் எழுதிய பதிவுகளை இங்கே சுட்டியிருக்கிறேன். என்னளவில் நான் படித்தவை இவை. இவையன்றி நீங்கள் எங்கேனும் படித்திருந்தால் அல்லது எழுதியிருந்தால் பின்னூட்டத்தில் சுட்டிக் காட்டவும்.

பனி உருக்கி உலகழிக்கும் நம் பணி (புரட்டும் அபாயம்)... - ரோஸ்விக்

பனி உருகுதல் என்பது எவ்வளவு அபாயகரமானது என்பதை நாம் நன்கறிவோம். அதன் விளைவுகளையும், இனி நாம் அதைத் தடுக்க என்னென்ன வழிமுறைகளை கையாள வேண்டும் என்பதை மூன்று பகுதிகளாக வழங்கியிருக்கிறார். நிச்சயம் நாம் பின்பற்ற வேண்டியவை.


பூமிக்கு அழிவு எப்படியெல்லாம் வரக்கூடும் என்பதை விளக்குகிறார். உலகம் ஒரேயடியாய் அழிந்து போகாது. அதன் அழிவு மெல்ல மெல்ல நடக்கும் என்பதை விளக்கியிருக்கிறார். படித்துப் பாருங்கள்.


'காட்டு கருவேல மரம்' எவ்வளவு நச்சுத்தன்மையுடையது என்பதி சில விளக்கங்களுடன் கூறியிருக்கிறார். குளோபல் வார்மிங்கை எதிர்க்க மரம் வளருங்கள் என நாம் சொல்லிக் கொண்டிருக்கும் நிலையில் நாம் வெட்டப் பட வேண்டிய மரமிது.



"குளோபல் வார்மிங் என்ற அறிவியல் கருதுகோள் இன்று அரசியல் லாபியாக மாற்றப்பட்டு விட்டது. "

குளோபல் வார்மிங் என்ற ஒன்று அரசியலாக்கப் படுவதை முற்றிலும் எதிர்க்கிறார். சிலத் தொடுப்புகளையும் கொடுத்திருக்கிறார். இவர் குளோபல் வார்மிங்கிற்கு ஆதரவு போல் எழுதி அரசியலுக்கு ஆதாயம் தேடும் அல்லது மக்களை மடைமை படுத்தும் பதிவுகளை எதிர்க்கிறார்.


"தயங்கும் அமெரிக்கா: சுற்றுச்சூழலை பாதுகாக்க கியாட்டோ உடன்படிக்கை 1997ம் ஆண்டு பிரேசிலின் ரியோடிஜெனிரோவில் நடைபெற்ற புவி உச்சிமாநாட்டில் உருவாக்கப்பட்டது. இதன்படி சுற்றுச்சூழலை மாசுபடுத்தும் வாயுக்கள் வெளியேறுவதை கட்டுப்படுத்த உலக நாடுகள் ஒப்புக்கொண்டன. இந்த ஒப்பந்தம் 2005ம் ஆண்டிலிருந்து செயலாக்கம் பெற்றது. இதில் இந்தியா, பிரிட்டன், சீனா உள்ளிட்ட நாடுகள் 185 நாடுகள் கையெழுத்திட்டன. எனினும் அமெரிக்கா இதை ஏற்க மறுத்துவருகிறது"

அமெரிக்காவின் முதலாளித்துவ குட்டு இங்கும் வெளிப்படுகிறது. உலகமே அழியும் நிலை வந்தாலும் எங்களுக்கு எங்கள் முதலாளிகள் தான் முக்கியம் அவர்களுக்குத்தான் கொடி பிடிப்போம் என்கிறது அமெரிக்கா. மிகச்சிறந்த பதிவு. படித்துப் பாருங்கள்.


"இந்த stratosphere வளி மண்டல அடுக்கில் 90 சதவீதம் ஓசோன் படலத்தால் ஆனது. ஓசோனின் வேதிப்பெயர் O3. ஒவ்வொரு தனிமத்திற்கும் ஒரு பெயர் உள்ளது. (எ.கா) O - ஆக்ஸிஜன், N - நைட்ரஜன், C - கார்பன், Cl - குளோரின், H - ஹைட்ரஜன். இவற்றின் அளவுகள் கூடும் போதும், குறையும் போதும் அதன் பண்புகள் மாறும். "

அறிவியல் ரீதியாக அருமையாக விளக்கங்கள் கொடுத்திருக்கிறார்.

இவை அனைத்தும் நாம் அனைவரும் படித்து புரிந்து கொள்ள வேண்டிய விடயங்கள். தவற விடாமல் படித்து விடுங்கள் நண்பர்களே.

10 comments:

  1. உணரப்படவேண்டிய அறிமுகங்கள்!! தொடருங்கள் புலவரே.

    ReplyDelete
  2. ஆசிரியர் பணியும் சமூக அக்கறையும் இரு கண்கள். சமூக அக்கறையுடன் கூடிய அறிமுகங்கள்.

    ReplyDelete
  3. கண்டிப்பாக தவறவிடாமல் படிக்கவேண்டிய பதிவுகள் இவை... நல்லதுங்க நண்பா.. நல்ல கருத்துள்ள இடுகைகளை அறிமுகப்படுத்தியிருக்கீங்க...

    ReplyDelete
  4. அனைவரும் தவறாமல் படிக்க வேண்டிய பதிவுகள் இவை

    வித்யாசமான பயனுள்ள அறிமுகங்கள்

    என் பதிவையும் இதில் அறிமுகப்படுத்தியமைக்கு ரொம்ப நன்றிங்க அண்ணே :)

    ReplyDelete
  5. அனைவரும் kandippaga unga padhiva padikkanum...ulagathai maasu paduththa manithan kaattum aarvam athai sari seyvathil illa

    ReplyDelete
  6. பல தகவல்களையும் விழிப்புணர்வையும் கொண்ட இடுகைகள்.... நல்ல அறிமுகங்கள்..... பாராட்டுக்கள்!

    ReplyDelete
  7. நல்ல தேர்வுகள் நண்பா

    ReplyDelete
  8. அனைத்தும் நல்ல பதிவுகள்.

    உங்கள் அறிமுகங்கள் அனைத்தும் அருமை நண்பரே.

    ReplyDelete
  9. புலவரே அருமையான அறிமுகங்களோடு பணியைச் சீராகச் செய்கிறீர்கள்.வாழ்த்துகள்.

    ReplyDelete
  10. அன்பின் புலிகேசி

    அருமை அருமை - சிந்தனை செல்லும் திசை அருமை - சுட்டிகள் அருமை

    நல்வாழ்த்துகள் புலிகேசி
    நட்புடன் சீனா

    ReplyDelete

தமிழ் மணத்தில் - தற்பொழுது