நான்கு திசைகள் (வலைச்சரம் ஜோதிஜி 2 வது நாள்)
➦➠ by:
ஜோதிஜி
ஆயிரம் தலைப்புகளை கடந்து வந்து ஆறாவது ஆண்டில் அடியெடுத்து வைத்துள்ளார். இன்றும் எழுதும் ஒவ்வொரு பதிவும் இளமையாய் இருக்கிறது. கோவில்,குளம், கடைத்தெரு என்று தொடங்கி இவர் செல்லும் ஒவ்வொரு இடத்தையும் புகைப்படமாய் பார்க்கும் போது நாம் அந்த இடத்திற்கே சென்ற அனுபவம் கிடைக்கும். நண்பர்கள் என்ற இணைப்பு இல்லாத இவரின் இடுகை யில் தொடரும் உறவுக் கூட்டம் கணக்கில் அடங்காதது. பின்னூட்டம் என்பது கடித வழி தொடர்பு போலவே வருபவரை வரவேற்பது முதல் அவர்களிடம் உரையாடுவது வரைக்கும் ஒரு குடும்ப சந்தோஷத்தை உணர முடிகிறது. அக்கா, மேடம், டீச்சர் போன்ற பல ஆகுபெயர்கள் இவருக்கு உண்டு.
புதிதாக எழுத வருபவர்களையும் ஊக்குவித்தல் இவரின் முக்கிய சிறப்பு. வாசிப்பவர்களுக்கு தொல்லை தராத நடையில் எழுதுபவர். தொடர்ச்சியாக பல புத்தகங்களும் எழுதி வெளியிட்டு பல வெற்றிக் கோடுகளைத் தொட்டவர். இந்த நிமிடம் எந்த கோவில், எந்த ஊரில் இருந்து கொண்டு என்ன மாதிரியான படங்கள் எடுத்துக் கொண்டுருப்பார் என்பது அவருக்கே தெரியுமா? என்பது புரியாத மர்மம்.
கடவுள் என்பது இல்லவே இல்லை என்பவர்கள் கூட தைரியமாக இவரின் இடுகையில் உள்ளே நுழையலாம். பல ஊர்கள், கோவில்கள், மக்களின் கலாச் சாரம் தொடங்கி சாலையில் பார்த்த ரசித்த சின்ன சம்பவங்களைக் கூட படங் களாக மாறி இவரின் வலைதளத்தில் ரசிக்க முடியும். இவரின் இடுகையில் நாம் பார்க்கும் படங்கள் நமக்கு கவிதையாய் மாற வாய்ப்புண்டு. நீண்ட காலம் நியூசிலாந்து நாட்டில் வசித்தவர். தொடக்க கால இவரின் எழுத்தில் ஆங்கிலம் படுத்திய பாடும், எழுதும் தமிழில் அதை தவிர்க்க எடுத்த முயற்சிகளும், வாங்கிய குட்டுகளும் இருந்தாலும் அத்தனையும் மீறி இன்று வரைக்கும் கீரிடம் சூட்டாத மகாராணியாக வலம் வரும் துளசிதளம்.
ஜாதகமென்பது பொய். முட்டாள்களின் முயலாமைக்கு மிகப் பெரிய உதாரணம். வளர்ந்த விஞ்ஞானத்தை பார்த்து திருந்துங்கப்பா என்கிறீர்களா? வலைதளத்தில் அதிக நண்பர்கள் தொடர்வது இவரைத்தான். இதை நீ பின் பற்றித் தான் ஆக வேண்டும் என்று கட்டளையிடுவதும் இல்லை. இந்த கலையை வைத்துக்கொண்டு பணம் சம்பாரிக்க விரும்புவதும் இல்லை. நான் எழுதுவதைப் பார்த்து உன் ஜாதகத்தை கொண்டு வந்து என்னிடம் நிற்காதே. அது என் தொழில் அல்ல என்கிறார். நான் உணர்ந்தது இது. உன்னால் உணர முடிந்தால் சந்தோஷம். ஒரே வார்த்தை. எந்த வம்பு தும்புக்குள்ளும் சிக்காமல் பரபரப்பு படபடப்பு இல்லாமல் இன்றும் இளமையும் தீராத தாகமாய் எழுதுவது மிகுந்த ஆச்சரியம்.
வலைதளத்தில் எழுதுபவர்கள் எவ்வாறு எழுத வேண்டும்? வைக்கும் தலைப்பு க்கு என்ன முக்கியத்துவம்? போன்ற பல விஷயங்களை ஒவ்வொன்றாக சுட்டிக்காட்டிய விதம் பிரமிப்பாய் இருக்கிறது. விரும்புபவர்களும் தொடர்பவர் களும் தினந்தோறும் முண்டியடித்துக் கொண்டே இருக்கிறார்கள். ஜாதகம் மட்டுமல்ல மண் சார்ந்த பழக்கவழக்கங்கள் என்று தொடங்கி அத்தனை துறை களையும் அற்புதமாக கையாள்கிறார். இவர் வெளியிட்டுயுள்ள பல புத்தகங்கள் இவரின் ஆளுமைக்குச் சான்று. வகுப்பறை வாத்தியார் மட்டுமல்ல. வலை உலக வாத்தியாரும் கூட.
சாகும் வரையில் உங்களிடம் ஏதோ ஒரு பயம் இருந்து கொண்டே தான் இருக்கும். அந்த பயமே பலவற்றையும் நம்பித்தான் ஆக வேண்டும் என்ற இக் கட்டான சூழ்நிலைக்குச் கொண்டு செல்லும். நான் பெரியாரின் சீடன் என்று சொல்லிக்கொண்டு அரசியல் செய்யும் வியாதியஸ்தர்களையும், திரைப்பட நடிக குடும்பத்தையும் நன்றாக உற்றுக் கவனித்துப் பாருங்கள். அவர்களின் குடும்ப குத்துவிளக்குகள் மண்சோறு சாப்பிடாத குறையாக கோவில் கோவிலாக அலைந்து கொண்டு இருப்பார்கள். தங்கள் குடும்ப பெண்களையே திருத்த முடியாதவர்கள் தான் சமூக மூட நம்பிக்கைச் சீர்கேடுகளை திருத்த பாடுபட்டுக் கொண்டுருப்பவர்கள். ஆனால் இவர்?
ஆத்திகம், நாத்திகம் என்று தொடங்கி இவர் தொடாத துறைகளே இல்லை. ஆயிரம் தலைப்புகள் பார்த்தாலும் சிந்தாமல் சிதறாமல் இன்றும் எழுதிக் கொண்டேயிருக்கிறார். நானும் வலைதளத்தில் எழுதுகின்றேன் என்ற பேச்சே இல்லை. கருத்துக்களை சொல்லும் விதம் படிப்பவர்களுக்கு ஏராளமான சிந்தனைகளை உருவாக்கும். இவரும் நீ இதை நம்பித்தான் ஆக வேண்டும் என்று கட்டாயப்படுத்துவதும் இல்லை. கடவுள் மறுப்பாளர் என்பதால் காண்பவர்களை காய்ச்சி எடுப்பதும் இல்லை.
ஈழம் தொடர்பாக எழுதும் போது ரத்த அடி வாங்காமல் வந்தவர்கள் மிகக் குறைவு. இவரின் ஈழம் சார்ந்த தலைப்புகளில் உள்ளே நுழைந்தவர்கள் ரணகளப் படுத்தியிருந்தாலும் அத்தனை பந்துகளையும் அநாயசமாக அடித்து விளையாடி இன்றும் களைத்துப் போகாமல் களத்தில் வெற்றிக் கொடி நாட்டிக் கொண்டுருப்பவர். தொடர்ச்சியாக புத்தகங்கள் படிக்க வாய்ப்பில்லாதவர்கள், குறிப்பிட்ட தேதியில் இந்த விசயம் குறித்து என்ன சொல்லி இருக்கிறார்கள் என்று தேடி அலைபவர்களுக்கு இவர் ஒரு அமுத சுரபி. இவரின் தனிப்பட்ட கொள்கைகள் என்னவோ?
ஆனால் எடுத்த கொள்கையில் எழுதும் எழுத்துக் களில் சமரசம் செய்து கொள்ளாத சன்மார்க்க நெறியாளர். அளளிப் பருகினாலும் தீராத தாகத்தை தந்துகொண்டு காலம் தந்த மனிதம்.
" ஒருவர் என்ன எழுதுகிறார், என்ன சொல்கிறார் என்றெல்லாம் பார்த்து அவரைப் பற்றி நாம் முடிவு செய்வதை விட அவர் எப்படி வாழ்கிறார் என்று கவனித்து முடிவு செய்வது தான் ஏமாறாமல் தடுக்க உதவும் "
கடவுள் என்பவர் உன் உள்ளே இருக்கிறார்? நீ ஏனப்பா வெளியே போய்த் தேடி கண்டவர்களிடம் சிக்கிக் கொள்கிறாய் என்பதை உள் மன ஆற்றல் மூலம் வெளிப்படுத்துகிறார் கணேசன். ஏறக்குறைய 300 தலைப்புகளுக்கு அருகே வந்து கொண்டு இருக்கிறார்.
" சாமி,,பூதம்,மாடசாமி,முனுசாமி,எல்லைச்சாமி எதுவும் வேண்டாம். நீ நம்பும் எந்த உணர்வும் உனக்குள்ளே தான் இருக்குது. அதப்பாருடா மொதல்ல " என்று இவரின் எழுத்துக்கள் நம் கழுத்தை பிடித்து மட்டும் தள்ளவில்லை. சமயத்தில் உந்து சக்தியாய் நம் முன் வாழ்ந்து கொண்டுருக்கும் கழுகு மூலம் உதாரணம் காட்டுகிறார். ஆற்றல் என்பது எங்கிருந்து தொடங்குகிறது, வாழ்வில் நல்ல பாதையை அடைய வேண்டும் என்று நினைப்பவர்கள் பெற வேண்டிய அனுபவம், சிரத்தைகள், எண்ணங்கள் இவரின் எழுத்தைப் படிக்கும் போது உருவாகக்கூடும். இவரின் எழுத்துக்கள் சிலருக்கு ஆச்சரியம் பலருக்கு அதிசயம். கொஞ்ச பேருக்கு ஆ..........வ். காரணம்
சக்தி என்பது உணர்ந்தால் மட்டுமே வரக்கூடியது. கணேசன் காட்டும் வழியை நம்பலாம்.
சிந்திக்க வைத்தவர்களைப் போல எப்போதும் என்னை சிரிக்க வைத்துக் கொண்டே இருப்பவர் இவர்.
உங்கள் வருகைக்கும் ஆதரவுக்கும் நன்றி.
சிந்திக்க வைத்தவர்களைப் போல எப்போதும் என்னை சிரிக்க வைத்துக் கொண்டே இருப்பவர் இவர்.
உங்கள் வருகைக்கும் ஆதரவுக்கும் நன்றி.
|
|
மிகவும் பயனுள்ள தகவல்… .... வாழ்த்துக்கள்....
ReplyDeleteஅருமையா வந்திருக்குங்க
ReplyDeleteauto striperலே எதுக்குங்க print.
வடிவேல் பிட்டுதான் சரியா ஒட்டல.
பரவாயில்லீங்க.,
அடுத்த லாட்லே சரி செஞ்சுக்கலாம்.
நல்ல பகிர்வுகள். தொடருங்கள்
ReplyDeleteவள்ளுவம்.காம் அற்புதமான செய்திப்பத்திரிக்கை. உங்கள் வருகைக்கு நன்றி.
ReplyDeleteபெருசு?
கொஞ்சம் பயமாவே இருக்கு.
யாசவிங்றவரு சொன்ன வார்த்தை இது.
சும்மா அடுச்சு ஆடுங்கன்னு. ஆனால் ஒவ்வொரு நாளும் ஒரு மாதிரியாத்தான் இருக்கு.
மாறுபட்ட கண்ணோட்டம் இருந்தால் அவர்களுக்கு வடிவேல். எத்தனை முறை பார்த்தாலும் வடிவேல் என்பவர் சிரிக்க வைத்துக் கொண்டே இருக்கிறார்.
சந்ரூ உங்கள் வருகைக்கு நன்றி.
நல்ல தொகுப்பு ஜோதிஜி. துளசி அம்மாவைப் பற்றிய உங்கள் குறிப்பு மிகச் சரி.
ReplyDeleteஇந்த வார அறிமுகங்கள் வித்யாசமா இருக்கு தொடருங்கள்
ReplyDelete//கடவுள் மறுப்பாளர் என்பதால் //
ReplyDeleteமறுக்கிறேன், அப்படி நான் எங்கும் குறிப்பிட்டது கிடையாது, ஆனால் மதமறுப்பாளன் என்பதை வெளிப்படையாக் கூறிக் கொள்கிறேன். நான் என்னை கடவுள் மறுப்பாளன் ஆதரவாளன் என்கிற கோட்டிற்குள் வைத்துக் கொள்வதில்லை. அதனால் தான் என் பக்கத்தில் பெரியாரும், வள்ளலாரும் இருக்கிறார்கள்
//என் பக்கத்தில் பெரியாரும், வள்ளலாரும் இருக்கிறார்கள்//
ReplyDeleteஎன் வலைப்பக்கத்தில் என்று படிக்கவும்
:)
அன்பின் ஜோதிஜி
ReplyDeleteஅருமை அருமை - அலசி ஆய்ந்து நல்ல முறையில் அறிமுகங்கள் ( திறனாய்வு - விமர்சனம் ) தந்தது நன்று. தேர்ந்தெடுக்கப்பட்ட பதிவர்களோ - பழம் தின்று கொட்டை போட்டவர்கள் - வலயுலைகின் மூத்த பதிவர்கள் - ஆயிரம் பிறை கண்டவர்கள் - அருமை அருமை
// நண்பர்கள் என்ற இணைப்பு இல்லாத இவரின் இடுகை யில் தொடரும் உறவுக் கூட்டம் கணக்கில் அடங்காதது. பின்னூட்டம் என்பது கடித வழி தொடர்பு போலவே வருபவரை வரவேற்பது முதல் அவர்களிடம் உரையாடுவது வரைக்கும் ஒரு குடும்ப சந்தோஷத்தை உணர முடிகிறது. //
//எந்த வம்பு தும்புக்குள்ளும் சிக்காமல் பரபரப்பு படபடப்பு இல்லாமல் இன்றும் இளமையும் தீராத தாகமாய் எழுதுவது மிகுந்த ஆச்சரியம். //
//எடுத்த கொள்கையில், எழுதும் எழுத்துகளில் சமரசம் செய்து கொள்ளாத சன்மார்க்க நெறியாளர். //
//இவரின் எழுத்துக்கள் சிலருக்கு ஆச்சரியம் பலருக்கு அதிசயம். கொஞ்ச பேருக்கு ஆ..........வ்.//
உண்மையான புகழுரைகள்.
இறுதியாக முத்தாய்ப்பாக வடிவேல் - வாழ்க
நல்வாழ்த்துகள் ஜோதிஜி
நட்புடன் சீனா
கண்ணன்,
ReplyDeleteசுருக்கமா எழுதுடான்னு இங்க ஒருத்தர் கம்பை வைத்துக் கொண்டு உண்மையான அக்கறையுடன் என்னை கவனித்துக் கொண்டு இருக்கிறார். துளிசி தளம் பற்றி அதிகமாகச் சொன்னால் அது கலைஞர் கூட்டும் கூட்டம் போல் ஆகிவிடும். உங்கள் கருத்துக்கு நன்றி.
நன்றி மோகன் குமார்.படிக்கத்தூண்டும் உங்கள் தளம். வாழ்த்துகள்.
அறிமுகங்களில் கணேசன் அண்ணனையும், துளசிதளத்தையும், கோவி கண்ணனையும், வடிவேலுவையும் மிகவும் ரசிப்பவன் நான்..
ReplyDeleteவாத்தியார் ஐயாவின் ஜோதிடம் தவிர்த்த மற்ற கருத்துகளை படிப்பவன் நான்..
கண்ணன்
ReplyDeleteகாயப்படுத்தியிருந்தால் மன்னிக்கவும். மதம் என்ற வார்த்தையை நான் பயன்படுத்தி இருக்க வேண்டும். உண்மை தான். அது வேறு விதமாக திருப்பிவிட்டு விடுமோ என்று யோசித்து எழுதிய வார்த்தைகள். நிறைய விசயங்கள் உங்கள் தளம் தான் என்னுடைய தேடலை அதிகப்படுத்தியது. நான் வலையுலகத்தில் பாலர் பள்ளி. காயப்படுத்தியிருந்தால்..... மன்னிக்க.
நன்றி செந்தில்.
ReplyDeleteசீனா அவர்களே இப்போது தான் சற்று பயம் தெளிந்து மூச்சு வாங்க முடிந்துள்ளது. நன்றி.
//காயப்படுத்தியிருந்தால் மன்னிக்கவும். //
ReplyDeleteஜோதிஜி,
அம்புட்டு சீரியசெல்லாம் ஒண்ணும் இல்லை, நான் தகவலுக்காகச் சொன்னேன்.
:)
வகுப்றை,காலம்,துளசிதளம் ஆகிய அறிய பதிவுகளை எனக்கு அறிமுகப்படுத்தியமைக்கு நன்றி :)
ReplyDeleteதொடருங்கள் :)
நல்ல அறிமுகங்கள். ஏற்கனவே எனக்கு தெரிந்த தளங்கள்தான்.
ReplyDeleteஆனால் அருமையான அறிமுகம் - திறனாய்வு. கலக்குங்கள்.
என்னங்க ஜோதிஜி......
ReplyDeleteஒரு பிரியத்தால் தேவைக்கும் அதிகமான புகழோன்னு ஒரு கூச்சம் வருது.
கற்றது கை மண் அளவுதான் எனக்கு(ம்)
கோவியாரைப்பற்றிச் சொன்னது அத்தனையும் சரி. ( இது மு.சொ. இல்லை)
வாத்தியார் ஐயாவின் வகுப்பில் நானும் ஒரு மாணவின்ற பெருமை எனக்கு இருக்கு.
கணேசன் நான் விரும்பி வாசிக்கும் பதிவர்களில் ஒருவர்.
அ(ரி)றிமுகங்கள் எல்லாம் சூப்பர்.
க்ரீடம் வச்சால் தலைக்கனம் கூடுமே என்ற பயத்தால் மகுடம் சூட்டிக்க விரும்பலைன்னாலும் உங்க மனசு வருத்தப்படக்கூடாதேன்னு இன்னிக்குச் சூட்டிக்கறேன். ஆனால் மலர்க்ரீடம் வேணாம்.(நானென்ன அரசியல் வியாதியா?) வைரமாக இருக்கட்டும்:-)))))
அற்புத அறிமுகங்கள். அறிமுகப்படுத்தலுக்கு காரணம் சொன்னீர்களே. அற்புதம்.
ReplyDeleteவலையில் உலாவும் போது தடுக்கி விழுந்தால், கோவியார் பதிவிலோ, டீச்சர் பதிவிலோ, வாத்தியார் பதிவிலோ தான் விழவேண்டியிருக்கும்.
ReplyDeleteஅந்தளவுக்கு பிரபலமானவர்கள் அவர்கள்.
இன்னும் நிறைய எதிர்பார்க்கிறோம்.
வெயிலோன்,
ReplyDeleteஅதுக்குத்தான் கவனமா நடக்கணும் என்பது:-))))
oops...... & மாப்(பு)ஸ்
ReplyDeleteவெயிலோன் = வெயிலான்.
//வெயிலோன்,
ReplyDeleteஅதுக்குத்தான் கவனமா நடக்கணும் என்பது:-))))//
அவங்க வலைப்பதிவெல்லாம் படுகுழின்னு சொல்றார் போல :)
நல்ல தொகுப்பு ஜோதிஜி.
ReplyDelete// துளசி கோபால் said...
ReplyDeleteoops...... //
கோவியாரே! நம்ம பேரைச் சொன்னாலே சுட்டுரும். சூதானமா இருந்துக்கோங்க. :)
இங்க ஒரே சாமியார், சாமி, ஜாதக மேட்டரா இருக்கு.
ReplyDeleteநான் வாயை திறந்தா ஏரியா பேஜாராகிடும்.
மூன்றாவது நாளில் சந்திப்போம்.
நன்றி ஜோதிஜி அவர்களே.
ReplyDeleteபாலா மாற்றுக் கருத்துக்கள் வரவேற்க்கப்படுகின்றது. பயப்படாதீங்க.....
ReplyDeleteநீங்களும் என்னதான் சொல்றீங்கன்னு நானும் தெரிஞ்சுக்க விரும்புறேன்.
பட்ட அனுபவம் எனக்கு கொஞ்சம் தெரியுமாக்கும்.
நீங்க தெரியாதுன்னு நினைச்சா நான் விட மாட்டேனாக்கும்.
ஸ்டார்ட் ம்யூசிக்.......
யோகேஷ், கார்த்திக் தமிழ் உதயம் உங்கள் தொடர் வருகைக்கு நன்றி.
ReplyDeleteகோவியாரைப்பற்றிச் சொன்னது அத்தனையும் சரி. ( இது மு.சொ. இல்லை)
ஆமென்......
கணேசன் உங்கள் பாதை கடைசி வரைக்கும் மாறாமல் போக வேண்டும் (?)
நல்ல பல தகவல்களுடனும், அறிமுகங்களுடனும் அருமை நண்பா...
ReplyDeleteபயனுள்ள தகவல்களுடன் ...விமர்சனம். அருமை வாழ்த்துக்கள்
ReplyDeleteஇரவின் வந்தனம்.
ReplyDeleteநான் விரும்ப்பிப் படிக்கும் தளம்தான் துளசி தளம்.உங்க பக்கமும்தான்.
அதோட வடிவேலு அண்ணாச்சியின் பகிடியும் நல்லாருக்கு ஜோதிஜி.
வலைச்சரம் ......
ReplyDeleteசாமி, ஜோதிடம் என்று பார்த்தால்
பிடிக்காத விடயம் இல்லை, நான் சேற விரும்பாத விடயம். --
ஒரு விடயத்தில் நான் திடமாக இருக்கின்றேன் தன் மீது நம்பிக்கை இல்லாதவர்கள், தன் மனதிற்கு தெரிந்தே சரியான வழியில் செல்லாதவர்களுக்கு இந்த சாமி, ஜோதிடம் தேவையாக இருக்கின்றது.
எந்த சாமியானாலும், மதமானாலும் தவறுக்கு தண்டனை இருக்கு என்று சொல்வது இல்லை அப்படி இருக்கும் எதையும் யாரும் தொடருவதற்கு தயாராய் இல்லை. தன் தவறுகளுக்கு தகுந்த பரிகாரங்களுக்காகவும், தன் அதிகப்படியான எதிர்பார்புகளுக்கு ஏற்ற முறையீடுகளுக்கும் தான் சாமியும், மதமும் இருக்கின்றன.
ஜோதிடம்.....
எல்லோருக்கும் இருக்கும் தன் வருங்காலத்தை தெறிந்துகொள்ளும் ஆவலும் (மனிதன்தான் இறந்தபிறகும் வாழ்வை விரும்புகின்றானே-- மறுஜென்மம் என்று) தன் தவறுகளை பிறிதொன்றின் மீது திணிக்க காரணங்களையும் தேடுபவர்களுக்கு தருவது.
நான் விஜயகாந்த் வழிதான்
மன்னிப்பு என்பது என்னால் ஏற்றுக்கொள்ள இயலாத ஒன்று -- என்னளவிலும்
எனவே எனக்கு இவை இரண்டும் தேவை இல்லை.
ஹேமா,சரவணன, புலவரே வணக்கம்.
ReplyDelete//ஆயிரம் தலைப்புகளை கடந்து வந்து ஆறாவது ஆண்டில் அடியெடுத்து வைத்துள்ளார்.//
ReplyDelete2004ல் முதல் இடுகையை இட்டார். அதனால் 7வது ஆண்டில் (2010ல் இதுவரை 112 இடுகைகள்) எழுதிக்கொண்டுள்ளார் என்பதே சரி.
குறும்பன்...
ReplyDeleteஎன்னுடைய இடுகையில் ஒவ்வொன்றையும் நீட்டி முழக்கி எழுதியிருப்பதை மறந்து இந்த தளத்தில் முடிந்தவரைக்கும் சுருக்கி அதேசமயத்தில் புரிதலில் சிரமம் இல்லாத அளவிற்கு எழுதுவதே என்னுடைய நோக்கம்.
நீங்கள் சொல்வதும் சரிதான். நன்றி.
சூரியனுக்கே டார்ச்சா.. அக்காவுக்கே அறிமுகமா!!.. இருந்தாலும் நீங்க சொன்னது அத்தனையும் அக்மார்க் உண்மை :-)
ReplyDelete