வலைச்சரத்தில் இரண்டாம் நாள் - செவ்வாய்
சில ஆண்டுகளாய் வலைப்பூவில் எழுதுவதால் மட்டுமே ஒருவர் சிறந்த பதிவர் ஆகிவிடமுடியாது. அதற்கு நல்ல உதாரணம் வேறுயாருமில்லை நான்தான். எத்தனை வருடங்களாக எழுதுகிறோம்ங்கறது முக்கியமில்லை என்ன எழுதுகிறோம்ங்கறதுதான் முக்கியம்.
பல வருடங்களாக பல நூற்றுக்கணக்கான பதிவுகளை எழுதியவர்களைவிட நேற்று ஆரம்பித்து எழுத ஆரம்பித்தவர்களின் எழுத்துக்கள் எந்தவிதத்திலும் குறைவானவை அல்ல என்பதை நிருபிக்கும் வகையில் தினமும் சில புதிய பதிவர்கள் வந்துஎழுதிக்கொண்டிருக்கிறார்கள். அவர்களை அடையாளம் காணப்படவேண்டும் என்றநோக்கத்தில் செயல்படும் வலைச்சரத்தின் பணி சிறப்பானது.
இன்றைய அறிமுகங்கள்
மனம் பிளஸ்
எஸ்.கே என்பவர் எழுதும் இந்த வலைப்பதிவில் உளவியல் சம்பந்தமான பல விசயங்கள் இருக்கிறது. மனமும் முக்கியத்தும் என்ற பதிவில் அவர் சில கேள்விகளை உளவியல் ரீதியாக கேட்டு அதற்கான பதிலும் நம்மிடம் பெற்று நம்மைநாமே உளவியல் ரீதியாக பரிசோதிக்கும் வகையில் எழுதியிருப்பது பாராட்டுகுறியது. பலருக்கும் பயன்படும் ஒரு வலைப்பதிவு.
JUST FOR LAUGH
ஆங்கிலத்தில் பெயர் வைத்திருக்கிறார். ஆனாலும் பதிவுகள் தமிழிலேயே இருக்கிறது. தமிழை தவறில்லாமல் எழுதுவது பற்றி கவலைப்படுகிறார். ஆச்சர்யமாக இருக்கிறது. தனது துர்தர்ஷன் பதிவில் பழைய நிகழ்ச்சிகளை பற்றிய குறிப்பிட்டு படிப்பவர்களையும் கொசுவத்தி சுத்த வைக்கிறார். பதிவு முழுவதும் நகைச்சுவை நிரம்பி வழிகிறது. ஒரு சுவாரஸ்யமான வலைப்பதிவு.
சுரேந்திரன் பிளாக்
மீண்டும் ஒரு உலகசினிமா, இலக்கியம் நிறைந்த ஒரு சுவாரஸ்யமான வலைப்பதிவு. தான் படித்த புத்தகங்கள், உலகப்படங்களை பற்றி எழுதுகிறார் சுரேந்திரன். சுஜாதாவின் விஞ்ஞானகதைகள் அதிகம் படிக்கிறார். அதைப்பற்றிய பதிவுகள் எதிர்பார்க்கப்படுகிறது. பாப்பிலோன் படம் பற்றிய பதிவு சுவராஸ்யம். தமிழில் பட்டாம்பூச்சி என்ற பெயரில் மொழிபெயர்க்கப்பட்ட அந்த கனமான புத்தகத்தை படித்து எனக்கு ஏற்பட்ட மயிர்கூச்செரியும் அனுபவம் தன்க்கும் ஏற்பட்டதை பகிர்கிறார்.
காதல் கவிதை சோலை
காதல் கவிதைகளுக்கு எதிர்கவிதையாக நான் எழுதும் காதல் கவுஜைகளை விட அழகாகவே எழுதுகிறார். முழுவதும் காதல் காதல் காதல். ரொம்ப அனுபவித்து எழுதுகிறார். இவரின் எல்லா கவிதைகளுக்கு எதிர்கவுஜை எழுதவேண்டும் என நினைத்திருக்கிறேன். எல்லாமே சுவாரஸ்யமாக இருக்கிறது. காதலிப்பவர்கள் தவறாமல் படிக்கவேண்டிய கவிதைகள்.
இன்றைய வலைப்பதிவர்
இன்றைய வலைப்பதிவர் என்னும் தலைப்பில், நமக்கு ஏற்கனவே வேறு முகத்தில் பரிச்சயமான ஒரு பிரபலத்தை வலைப்பதிவர் என்னும் முகத்தில் அறிமுகப்படுத்துகிறேன்.
நிஜந்தன்
முன்பு துர்தர்ஷன் சென்னைத்தொலைக்காட்சியில் செய்திகளை பார்த்தவர்கள் செய்திவாசிப்பாளர் நிஜந்தனை மறக்க முடியாது. கணீர் குரல் மற்றும் தெளிவான உச்சரிப்புக்கு சொந்தக்காரர். இவரும் இணையத்தில் எழுதி வருகிறார். டிவில் வரும் ஒரு விளம்பரத்தில் சரியான தமிழ்உச்சரிப்பு இல்லையென்று அவர் விமர்சனம் செய்யும் ஒரு பதிவு குறிப்பிடத்தக்கது. சில தொடர்கதைகளையும் எழுதிவருகிறார். கண்டிப்பாக அறியப்பபடவேண்டிய ஒருவலைப்பதிவு.
மீண்டும் சில புதிய பதிவர்களுடன் நாளை சந்திக்கிறேன்.
|
|
அட்டகாசமான அறிமுகங்கள் மாப்ஸ்...! மாப்ஸ் நீ ரஜினி மாதிரி...எஸ்.பி. முத்துராமன் படத்துல ரஜினிய கமர்சியல் ஹீரோ ஆக்கி அவர் நடிப்பே தெரியாது...ஆனா மணிரத்னம் படம்....மற்றும் பாலச்சந்தர் படத்தில் எல்லாம் நடிப்பு மிளிரும்...
ReplyDeleteஉன் திறமையும்....எழுத்து வன்மையும் வலைச்சரத்தில் மிளிர்கிறது மாப்ஸ்...! ஒவ்வொரு அறிமுகமா படிக்கிறேன் மாப்ஸ்
அட்டகாசம் மாப்ஸ் வாழ்த்துக்கள்!
மாம்சு இப்படி ஓட்டுறதுதான் மாதிரி ஒட்டி...வண்டிய பார்க் பண்றதுக்கு உங்களை விட்டா ஆளுகிடையாது.... நடத்துங்க நடத்துங்க... ஏதோ உங்கபுண்ணியத்துல ஏதோ எழுதுறோம் மாம்சு....:))
ReplyDeleteநாஞ்சிலு உன்னைய இப்புடி பாத்ததுல மனசெல்லாம் நெறஞ்சுபோச்சு. அனைத்தும் அறிமுகத்தையும் பாக்குறேன்யா.
ReplyDeleteஎல்லாம் புதிய அறிமுங்கள் தம்பி. படிக்கிறேன்... இன்னும் வித்தியாமாய் உங்களின் வழக்கமான பாணியில் கலக்குங்கள்...
ReplyDeleteபிரபாகர்...
புதியவர்கள் அறிமுகத்துக்கு நன்றி தம்பி
ReplyDeleteபுதியவர்கள் அறிமுகத்துக்கு நன்றி தம்பி
ReplyDeleteஅன்பின் பிரதாப்
ReplyDeleteஅருமையான, புதியவர்களைப் பற்றிய அறிமுகம். ஜஸ்ட் பாஃர் லாஃப் / துர்தர்ஷன் - சுட்டி வேலை செய்ய வில்லை. சரி செய்க
நிஜந்தனின் உச்சரிப்பு எனக்கு மிகவும் பிடிக்கும். பகிர்ந்தமைக்கு நன்றி.
நல்வாழ்த்துகள் பிரதாப்
நட்புடன் சீனா
புதியவர்கள் அறிமுகத்துக்கு நன்றி
ReplyDeleteசுரேந்திரன் நிஜந்தன் பக்கங்கள் சென்று வந்தேன். நல்ல அறிமுகங்கள்.
ReplyDelete@cheena
ReplyDeleteanbin cheena
atharkkana chutti http://funaroundus.blogspot.com/2010/07/blog-post_10.html
@najil macchi
kalakaareenga ponga
வாழ்த்துக்கள் பிரதாப்.
ReplyDeleteஇதோ நீங்கள் அறிமுகப்படுத்தியவர்கள் வீட்டுக்குப் போய் விட்டு வருகிறேன்.
தொடரட்டும் உங்கள் பணி
எக்ஸ்பிரஸ் வேகத்தில் ஓடி கொண்டு இருக்கும் நாஞ்சில் அவர்களே.... இப்படி அருமையா எழுத தெரிந்தும் ஏன் அந்த எழுத்தை இத்தனை நாள் மறைத்து வைத்து இருந்தீர்கள் வாழ்த்துக்கள்.....
ReplyDeleteவாழ்த்துக்கள் பிரதாப்.
ReplyDeleteதொடரட்டும் உங்கள் பணி.
புதியவர்கள் அறிமுகத்துக்கு நன்றி
ReplyDeleteபுதிய பதிவர்களுக்கு வாழ்த்தும், நாஞ்சிலுக்கு பாராட்டும்.
ReplyDeleteநிஜந்தன் சாரின் பதிவுக்கு நான் ரசிகன்..
புதிய அறிமுகங்கள் நல்லா இருக்கு பிரதாப்... தொடருங்கள்.
ReplyDeleteஎல்லாமே நான் அறியாத புதுசு. அத்தனையும் சிறப்பு.
ReplyDeleteநிஜந்தன் பதிவுகளை நான் சில தருணங்களில் படித்து உள்ளேன்.
ReplyDeleteஅழகான அறிமுகங்கள். கலக்குறீங்க நண்பரே !
//சுவாமி...இந்த பூமி ஏன் சுற்றுகிறது
ReplyDeleteமகனே கேள்..ஓரு குவார்ட்டர் தண்ணி அடிச்ச நீயே
தலைகிழா நடக்கும் போது...3 குவார்ட்டர் தண்ணியை தன்னகத்தே
கொண்டுள்ள இந்த பூமி தினமும் சுற்றுவதில் என்ன அதிசயம் மகனே?//
தல எப்படி இது எல்லாம் ? suuuuuper :-)
இது வரை படிக்காத தளங்கள். அதையும் படிச்சிடுவோம்....
ReplyDeleteவலைச்சரத்திலும் உங்க எக்ஸ்பிரஸ் வேகம் பிடிக்குது பிரதாப். அறிமுகங்கள் நன்று தொடருங்கள்.
ReplyDeleteஎன் வலைய்பதிவைப் பற்றி அறிமுகம் செய்தமைக்கு மிக்க நன்றி..பதிவுலகத்தில் இத்தனை நண்பர்கள் கிடைப்பார்கள் என்று நினைத்து கூட பார்கவில்லை..ஆனந்தத்தில் திளைதுள்ளேன்..நன்றி..
ReplyDelete*/காதல் கவிதை சோலை
ReplyDeleteகாதல் கவிதைகளுக்கு எதிர்கவிதையாக நான் எழுதும் காதல் கவுஜைகளை விட அழகாகவே எழுதுகிறார். முழுவதும் காதல் காதல் காதல். ரொம்ப அனுபவித்து எழுதுகிறார். இவரின் எல்லா கவிதைகளுக்கு எதிர்கவுஜை எழுதவேண்டும் என நினைத்திருக்கிறேன். எல்லாமே சுவாரஸ்யமாக இருக்கிறது. காதலிப்பவர்கள் தவறாமல் படிக்கவேண்டிய கவிதைகள்./*
என்னையும் அறிமுகம் செய்ததுக்கு நன்றி
Nijanthan padiththean , nalla valaipoo. arimugaththirku nanri.
ReplyDeleteவாழ்த்துக்கள் நாஞ்சில் அறிமுகத்துக்கு நன்றி.. உங்கள் மலையாளபடவிமர்சனங்களுக்கு நான் ரசிகன்...
ReplyDeleteவாழ்த்துக்கூறிய அனைவருக்கும் நன்றிகள். தவிர்க்க முடியாத காரணத்தால் இன்றைய அறிமுகம்ங்களை வெளியிட முடியவில்லை...
ReplyDeleteநிஜந்தனின் இந்துத்துவா கருத்துக்கள் அருமையாக இருக்கும் . பகிர்வுக்கு நன்றீ. வாழ்த்துக்கள்
ReplyDeleteஅருமையான அறிமுகங்கள்
ReplyDeleteமன்னிக்கவும் இத்தனை நாளாய் இந்த பதிவை நான் பர்க்கவே இல்லை.
ReplyDeleteஎன்னை அறிமுகம் செய்ததற்கு மிக்க நன்றி சார்!