வலைச்சர செவ்வாய் - சமையல்
➦➠ by:
கே.ஆர்.பி.செந்தில்
எல்லா நகரங்களிலும்
சிற்றூர்களிலும்
இருக்கும் ஒரு பிரபல
உணவு விடுதி
எத்தனை ருசி என்றாலும்
ஒரு போதும் கிடைத்ததில்லை
அம்மாவின் கைப்பக்குவம்
அறிவிப்பு: தற்சமயம் திருவண்ணாமலையில் இருப்பதால் இந்தப் பதிவை மட்டும் முன் கூட்டியே (இது நாளைக்கானது) பதிவிடுகிறேன்.. என் அறிமுகப் பதிவில் பின்னூட்டம் இட்ட அத்தனை அன்பு உள்ளங்களையும் நான் மீண்டும் ஒருமுறை சிரம் தாழ்த்தி வணங்குகிறேன்.. உங்களால்தான் நான்..
முதலில் சமையலில் இருந்து ஆரம்பிக்கலாம்...சொந்த வாழ்க்கையில் இன்றுவரை மனைவிக்கு ஒரு டீ கூட போட்டு தந்தது கிடையாது.. ஆனால் கிட்டத்தட்ட பதினெட்டு வருட வெளிநாட்டு வாழ்க்கையில் எட்டு வருடங்கள் சுத்த சைவம் அப்போது சாப்பாட்டுக்கு நான் படும் சிரமம் அநேகம்.. ஒரு கட்டத்தில் தாக்குபிடிக்க முடியாமல் மீண்டும் அசைவ உணவுக்கு மாறிவிட்டேன்.. அதனால் முதல்நாள் சமையல் பற்றிய பதிவுகள்...
திருமதி.மேனகா அவர்களின் வலைபக்கத்தை பாருங்கள் பெரும்பாலும் வித்தியாசமான சமையல் முறைகள்..இந்த மாம்பழ அவகோடா சாலட் பாருங்கள் ..
கீதா ஆச்சல் வழங்கும் என் சமையல் அறையில் ஒரு சிம்பிள் மீன் குழம்பு வைத்திருக்கிறார் நீங்களும் செய்து பாருங்கள்..
சகோதரி ஆசியா ஓமர் சமைத்து அசத்தலாம் என சொல்கிறார்... அவரின் பேக்ட் சிக்கென் வித் வெஜிடபிள் ரெசிப்பியின் படங்களே நம்மை செய்து பார்க்க தூண்டும் ..
சின்னு டேஸ்டி(அவர் ரேஸ்ரி என்று சொல்கிறார்) இவரின் வழிமுறைகள் மிகவும் வித்தியாசமானது.. நீங்களே பாருங்களேன்.
இன்னும் நிறைய பதிவர்களை அறிமுகம் செய்ய முடியவில்லை... அதனால் மற்ற சமையல் ராணிகள் என்னை மன்னிக்கவும்..
இதில் ஜெய்லானி சமையல் குறிப்புகளை சேர்க்க முடியவில்லை.. நிறைய பேர் வெந்நீர் வைக்க தெரியாமல் சுட்டுகொண்டதால் சாரி ஜெய்லானி..
|
|
அண்ணா நீங்க எனக்கு சிங்கைல வாங்கி கொடுத்த காந்தி கடை சாப்பாடு பத்தி சொல்லவே இல்லையே?
ReplyDeleteரைட்டு! :)
ReplyDeleteசமையல் குறித்து வலைசரத்தில் அறிமுகப்படுத்துவது இது முதல் முறை என்று நினைக்கின்றேன். சரிதானே செந்தில். இப்போது தான் நாக்கை ஒரு வழியா கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வந்து நிறுத்தியுள்ளேன். இவர்கள் வேறு கிளம்பி விட்டால் வம்பே வேண்டாம். பொறுமையாக வீட்டுக்காரம்மா பார்த்தாங்க. ஆனால் மீன் கொளம்பு மட்டும் பழசை நினைக்க வைத்தது.
ReplyDeleteசமையல் அறிமுகம் ருசியான அறிமுகம் அண்ணா
ReplyDeleteஎன் சான் உடம்புக்கு வயிறே ஆதாரம். சமையல் ஒன்னு இல்லேன்னா நம்மளாம் இல்லேவே இல்ல. நல்ல அறிமுகங்க்ள் செந்தில் அண்ணே. தொடர்ந்து கலக்குங்க.
ReplyDeleteஅடப்போங்க... இப்பவே நாக்க ஊறுதுங்க...
ReplyDeleteநல்ல அறிமுகம்...நன்றிகள்....
சாப்பாட்டுடன் முதல் இடுகை களைகட்டுது.... வாழ்த்துக்கள் செந்தில் அண்ணா...
ReplyDeleteநல்ல அறிமுகங்கள்
ReplyDeleteவலைச்சரத்தில் என்னையும் அறிமுகபடுத்தியதற்க்கு மிக்க நன்றி சகோ!!...
ReplyDeleteமனிதன் படும் அனைத்து கஷ்டங்களும் - வயிராற சாப்பிட வேண்டும் என்பதற்காக தான். அந்த உணவை மையபப் படுத்தி ஒரு பதிவு. அருமையான கவிதையுடன்.
ReplyDeleteசமையல் அறிமுகம் ருசியான அறிமுகம்
ReplyDeleteஎங்களை விருந்தோட கவனிக்கிறீங்களா? நல்ல அறிமுகங்கள்.
ReplyDelete////எல்லா நகரங்களிலும்
ReplyDeleteசிற்றூர்களிலும்
இருக்கும் ஒரு பிரபல
உணவு விடுதி
எத்தனை ருசி என்றாலும்
ஒரு போதும் கிடைத்ததில்லை
அம்மாவின் கைப்பக்குவம் ////
உண்மைதான் நண்பரே . மிகவும் சிறப்பாக சொல்லி இருகிறிர்கள் . புகைப்படம் கலக்கல் . தொடரட்டும் உங்களின் ஆசிரியர் பணி மிகவும் சிறப்பாக . பகிர்வுக்கு நன்றி
சமையல் ருசியாகத்தான் இருக்கு
ReplyDeleteநடத்துங்க நடத்துங்க :)
அண்ணே பசியை உண்டாக்கிடீங்க..என் அம்மாவை இப்போவே அழைக்கிறேன்... :)
ReplyDeleteஎல்லோருமே அருமையானவர்கள். நல்ல அறிமுகங்கள் செந்தில். தொடருங்கள்.
ReplyDeleteபடமே கலக்கல்! அறிமுகமும் அசத்தல்! பாராட்டுக்கள்!
ReplyDeleteநீங்க ஓட்டுப் போட்டு ஆதரிக்கும் இந்த [விட்டகுசு, மயிராண்டி, குஜிளிம்பா]மாதிரி வால்பையன்&கோவின் பதிவுகளையும் நாளைக்கு அறிமுகப் படுத்துங்க தல. எல்லாருக்கும் உங்களோட திருப்பணி தெரியும்
ReplyDeleteபதிவுக்குச் சம்மந்தமில்லாமல் கருத்திட்டதால் மற்றவர்கள் மன்னிக்கவும்.
ReplyDeleteஇப்படிப் பட்டவர்களை ஆசிரியராகப் போடும் தள உரிமையாளர்கள் சிந்திக்கட்டும்.
ReplyDeleteசெந்தில்...நல்ல சமையல் அறிமுகங்கள்.இதில ஜெய்லானியின் சுடுதண்ணியும் தெரிவு.இனி எல்லாரும் சுடுதண்ணி வைக்கப் பழகிடலாம் !
ReplyDelete//முதலில் சமையலில் இருந்து ஆரம்பிக்கலாம்..//
ReplyDeleteதமிழன்.
ருசியான பதிவு. நான் ஆரம்பத்தில் இணையத்தை படித்துதான் சமைக்க ஆரம்பித்தேன்.
ReplyDeleteநல்ல அறிமுகம். சமையல் தானே என்றில்லாமல் அருமையாக பாராட்டியுள்ளிர்கள். வாழ்த்துக்கள்.
ReplyDeleteபாஸ்ட்டு பால் பால் ஃபோர் அடிசிட்டிங்க , அசத்துங்க சார்
ReplyDeleteவிருந்தோம்பல் தமிழரின் பண்பாடு..
ReplyDeleteநல்ல ஆரம்பம்
முதல்ல பாலை கறந்து,
ReplyDeleteஇரண்டாவதா டீயும், ஓகே,
அப்புறமென்ன?
விருந்து தெடங்கிருச்சி,
ருசியா, வலைச்சரத்திலே!
முக்கியமான பதிவுகளை அறிமுகப்படுத்தியிருக்கீங்க நன்றி
ReplyDeleteபடிச்சிட்டு ஒரு கை பார்த்திட வேண்டியதுதான். (என்ற ஊட்டுகாரி சண்டைக்க வந்தா செந்தில்தான் காரணம்)
செந்தில்.....முதல் நாளே....விருந்து உபசரிப்போடு....ஆரம்பித்தது ரொம்ப டச்சிங்...பங்காளி...!
ReplyDeleteதொடர்ந்து கலக்குங்கள்!
பரவால்லையே - செந்திலுக்கு சமைக்கவும் தெரியுமா - அது சரி - அறிமுகங்கள் ஒவ்வொன்றாகச் செல்கிறேன் - சரியா
ReplyDeleteநல்வாழ்த்துகள் செந்தில்
நட்புடன் சீனா
அட , சமையல் ராணிகளுக்கு நடுவில சேஃப்டிகாக சுடுதண்ணி பதிவா..?. அசத்திட்டீங்க செந்தில்..
ReplyDeleteஎன்னையும் இவர்களுடன் சேர்த்ததுக்கு ரொம்பவும் நன்றி.
neththu naan potta commenta kaanom
ReplyDeleteenakku Singai Gandhi hotella vaankikoduththa meals paththi sollave illai....
ReplyDeleteசெந்தில் வாழ்த்துக்கள் & பாராட்டுக்கள்,அறிமுகம் அசத்தலாக இருக்கு.என்னையும் அறிமுகப்படுத்தியமைக்கு மிக்க மகிழ்ச்சி.
ReplyDelete