07 - 09 - 2015 முதல் ஆசிரியர் பொறுப்பேற்பவர்

ரிஷபன்
இவரின் வலைப்பூ

ரிஷபன்

முந்தைய ஆசிரியர்கள்


சீனா ... (Cheena) - அசைபோடுவது

சிந்தாநதி

நன்றி!

திரட்டிகளின் தொகுப்பு

:: தமிழ் திரட்டுகளின் சங்கமம்<br/>:: Tamil blogs, news, ezines

வலைப்பதிவர் உதவிப்பக்கம்

தமிழில் எழுத மென்பொருள்

fb like

ஞானாலயா = புதுக்கோட்டை

www.gnanalaya-tamil.com
வலைச்சரத்தில் வெளியிடப்படும் இடுகைகள் வலைச்சரக் குழுவினரால் தணிக்கைக்கு உட்படாது. ஆனால், வலைச்சர விதிக்கு உட்படாத இடுகைகளை முன்னறிவிப்பின்றி நீக்க வலைச்சரக் குழுவினருக்கு உரிமை உள்ளது

Saturday, July 24, 2010

கரும்புலி (வலைச்சரம் ஜோதிஜி 6ம்நாள்)

எழுத்தாளர் சுஜாதா தேடலை அதிகப்படுத்தியதுடன் நிறைய ஆச்சரியங்களையும் அறிமுகப்படுத்தியவர். சரித்திரம், பூகோளம், வேதியியல்,தொழில்நுட்பம், போன்றவற்றை வெகுஜனமும் படிக்கும் அளவிற்கு எழுதுபவர்கள் மிகக்குறைவு. இவர் தொழில் நுட்பம் சார்ந்த வாழ்க்கை வாழ்ந்து கொண்டுருந்தாலும் இவரின் எழுத்தாற்றலும், நகைச்சுவையில் நகர்த்தும் மெல்லிய நீரோடை போல் உள்ள நடையும் நம்மை ஆச்சரியப்படுத்தும். வலைதளத்தில் தொழில் நுட்பம் குறித்து எழுதுபவர்கள் கூட பின்னோட்டத்தில் உங்களைப் போல எழுத முடியவில்லை என்று வருத்தப்பட்டுருக்கிறார்கள். வெகுஜன வாசிப்பு. மக்கள் தொலைக்காட்சி வரைக்கும் பாராட்டுரைகள் வந்தாலும் சுயம்பு போல குறுகிய காலத்தில் வளர்ந்தவர். இவரை ஜுனியர் சுஜாதா என்று அழைக்கலாம். தப்பில்லை. சொந்த பெயரைப் போலவே, பயன்படுத்தும் தமிழ் வார்த்தைகளும் மொத்தத்திலும் சிறப்பு.
சுடுதண்ணி
வலைதளத்தில் இந்த விசயம் கிடைக்குமா என்று தேடி அலைந்து கொண்டு இருப்போம். நான் வலை உலகத்தை பார்த்த வரைக்கும் நான் பல மாதங்களாகத் தேடிக் கொண்டுருந்த ஒருவரைப் பற்றி எங்கு தேடியும் காணவில்லை. இவர் பின்னூட்டத்தை ஒரு தளத்தில் கண்டபோது கிராமத்தில் இருந்து சென்றவர். எப்படி எழுதுகிறார் என்பதை பார்க்கலாம் என்று உள்ளே நுழைந்த போது நான் தேடிக் கொண்டுருந்த நபருக்கு உதவியாளராகவே இருந்துள்ளார். இன்று இந்தியாவில் ஏற்பட்ட தொலை தொடர்புக்கு முக்கிய காரணகர்த்தாவாக இருந்த (Dr.Sam Pitroda) முனைவ்ர். சாம் பிட்ரோடா பற்றி எழுதியுள்ளார்.

பன்னிக்குட்டி ராம்சாமி. இந்த பெயரை உச்சரிக்கும் போது உங்களுக்கு எப்படி இருக்கிறது. ஆனால் நீங்கள் ஒரு தடவை இவர் இடுகைக்குச் சென்றே ஆக வேண்டும். வயிறு புண்ணாகிவிடும். ஆனால் அத்தனை சிரிப்புக்குப் பின்னாலும் நீங்கள் சிந்தித்தே ஆக வேண்டும் என்கிற அளவிற்கு வாழைப்பழ ஊசி போல் ஒவ்வொன்றையும் நாசூக்காக சுட்டிக் காட்டுகிறார்.

இவரைப்பற்றிய அறிமுகம், வலைதள பெயர் என்று ஒவ்வொன்றுமே அற்புதம் பன்னிக்குட்டி மன்னிக்க சில்பா குமார். வலையில் எவருக்கு ஆப்பு அடிக்க லாம் என்று அடிக்க காத்துக் கொண்டுருக்கும் பலருக்கு மத்தியில் மாப்பூ நீங்கள் சூப்பரரு.

இவர் தன்னைப்பற்றி பேரன்பும் பெரும் கோபமும் கொண்டவன் என்று சொல் கிறார். அதைப் போலவே இடுகையின் தலைப்பும் வெண்ணிற இரவுகள். நடுத்தர வர்க்கம் அல்லது பலவற்றையும் பார்த்து நம்மை காத்துக் கொள்ள வேண்டிய நடுங்கும் வர்க்க மாகத்தான் வாழ்ந்து கொண்டுருக்கிறோம். ஆனால் எழுதக் கிடைத்த வலைதள வாய்ப்பைக் கூட சுகமாய் சொறிய பயன்படுத்தாமல் ஒவ்வொரு இவருடைய ஒவ்வொரு சிந்தனைகளும், நோக்கங்களும் படிப்பவரை பிடித்து உலுக்கும் அல்லது நாம் வாழ்வது வாழ்க்கையா என்று யோசிக்க வைக்கும்.

நம்முடைய அரசியல் வியாதிகள் தமிழ் வளர்க்கும் லட்சணத்தையும் கொஞ்சம் பார்த்து விடுங்களேன். எடுக்கும் எந்த துறையையும் பற்றி நோண்டி நொங்கெடுப்பது இவரின் கை வந்த கலை. கீதையைப் போலவே இவரின் ஒவ்வொரு தலைப்புகளும். வாழ்த்துகள் கார்த்திகேயன்.

நான் ஈழம் தொடர்பாக எழுதிக் கொண்டுருந்த போது பல விஷயங்களைத் தேடி அலைந்த போது இராஜராஜன் அறிமுகப்படுத்திய தளம் இது. பிரபாகரன் குறித்து நிறை குறையாக எத்தனையோ விஷய்ங்கள் பலருக்கும் தெரியும். ஆனால் அவர் பின்னால் உறுதியுடன் அணிவகுத்து நின்ற கரும்புலிகள் குறித்து எத்தனை பேர்களுக்குத் தெரியும். அவர்கள் யார்? அவர்களின் பின்புலம் என்ன? அவர்களின் குடும்ப வாழ்க்கை, தனிப்பட்ட எண்ணங்கள் வரைக்கும் இந்த தளத்தில் நீங்கள் உணரலாம். ஈழம் தொடர்பாக தேடல் உள்ளவர்களுக்கு இது பொக்கிஷ ஆவணம். சந்திரவதனாவுக்கு வாழ்த்துகள்.

உலகத்தில் உள்ள தமிழர்களில் ஈழ மக்களின் தமிழ் உச்சரிப்பு மிக சிறப்பானது. அதைப் போலவே தீவுக்குள் நான்கு திசைகளாக இன்று வரையிலும் ஒற்றுமையில்லாமல் வாழும் மக்களும் தமிழ்நாட்டு தமிழ்ர்களைப் போலத்தான் வாழ்ந்து கொண்டுருக்கிறார்கள். நல்ல தமிழ் பெயர்களை கொண்ட ஈழ வலைதளங்களில் பற்பொடி பெயர்களும் இருப்பதும் ஆச்சரியமே. பெரும்பான்மையான எதிர்ப்புகளை கடந்தும் இவர்கள் இருவருமே இன்னமும் செயல்பட்டுக் கொண்டுருப்பது மொத்தத்தில் அதிசயமே. எவரும் விமர்சனத்திற்கு அப்பாற்பட்டவர்கள் அல்ல என்று வரலாற்று நிகழ்வுகளை படைத்துக் கொண்டுருப்பவர்கள்.

சந்துருவின் பக்கங்கள். கிருத்தியம்.

புத்தகத்தைப் பார்த்து நான் எழுதிய பல விசயங்களை ஹேமா எழுதிய இந்த தலைப்பு அவரின் திறமைக்கு மற்றொரு உதாரணம். பெயர் சொன்னால் போதும். தரம் எளிதில் விளங்கும்.

உலக வானொலி முதல் உள்ளுர் செய்திகள் அறியும் ஆவல் உள்ளவர்களுக்கும் இந்த இரண்டு இணைப்புகளும் உதவும்.

ஒன்று. இரண்டு.



கலைஞர் அடுத்து கை வைக்கப் போவது இவரைத்தான். காரணம் நீங்களே இதைப் பார்த்து விடுங்கள்.


ஒரே ஒரு முறை இவர் மேல் குத்து விட்டு நகர்ந்து விடுங்கள். காரணம் உங்கள் மனதிற்குள் இருக்கும் விசயம் தான்.

29 comments:

  1. அன்பின் ஜோதிஜி

    நன்று நன்று அறிமுகங்கள் நன்று

    நல்வாழ்த்துகள்
    நட்புடன் சீனா

    ReplyDelete
  2. பல புதிய அறிமுகங்கள். நன்றி ஜோதிஜி.

    ReplyDelete
  3. புதிய பதிவுகளை தெரிந்து எடுத்து பகிர்ந்தமைக்கு, நன்றி.

    ReplyDelete
  4. என்ன ஒரு ரசனை... வியந்தேன்,,

    ReplyDelete
  5. அன்பின் ஜோதிஜி,

    நான் எழுதிய எனது குரு Dr.Sam Pitroda அவர்களைப்பற்றிய கட்டுரையை வலைச்சரத்தில் அறிமுகப் படுத்தியதற்கு மிக்க நன்றி.

    //எப்படி எழுதுகிறார் என்பதை பார்க்கலாம் என்று உள்ளே நுழைந்த போது நான் தேடிக் கொண்டுருந்த நபருக்கு உதவியாளராகவே இருந்துள்ளார். இன்று இந்தியாவில் ஏற்பட்ட தொலை தொடர்புக்கு முக்கிய காரணகர்த்தாவாக இருந்த (Dr.Sam Pitroda) முனைவ்ர். சாம் பிட்ரோடா பற்றி எழுதியுள்ளா//

    ஒரு சிறிய திருத்தம்... நான் சாம் அவர்களின் உதவியாளராக பணியாற்றவில்லை. நான் சாம் அவர்களுடன் 1991 ஆம் ஆண்டு அவர் Telecom Comission-னின் தலைவராக இருந்தபோது ஒரு சில நாட்கள் பணியாற்றியிருக்கிறேன். அவர் உருவாக்கிய C-DOT-ல் இரண்டு ஆண்டுகள் (1992-1994) பணியாற்றியிருக்கிறேன். வலைப்பதிவுலகில் Dr.Sam அவர்களைப்பற்றிய இந்த கட்டுரைக்கு கிடைத்திருக்கும் வரவேற்பிற்கு மிக்க மகிழ்ச்சி.

    அன்புடன்,
    -ரவிச்சந்திரன்

    ReplyDelete
  6. ஈழம் தொடர்பாக தேடல் உள்ளவர்களுக்கு இது பொக்கிஷ ஆவணம். சந்திரவதனாவுக்கு வாழ்த்துகள்.///


    இம்மாதிரியான ஆவணங்கள், அதீதமாக எடுக்கப்பட்ட போராளிகளின் படங்களே - போராளிகள் பெருமளவு வீழ காரணமானது. இயக்கம் ஆரம்பித்த பல வருஷங்களாகியும் பிரபாகரன் புகைப்படமே எடுத்து கொள்ளவில்லை. புகைப்படம் யாரிடமும் சிக்க கொள்ளக்கூடாது என்பதற்காக. அந்த ஜாக்கிரதை உணர்வு தான் மிக பெரிய வெற்றிக்கு காரணமாக இருந்தது.

    ReplyDelete
  7. புதிய அறிமுகங்கள். நன்றி ஜோதிஜி

    ReplyDelete
  8. செமக் குத்து போங்க...
    நன்றி..

    ReplyDelete
  9. கரும்புலிகளுக்கு வணக்கத்தோடு...

    ஜோதிஜிக்கும் வணக்கமும் நன்றியும்.இத்தனை பெரியவர்களை அறிமுகப்படுத்திய நீங்கள் என்னையும்...!நன்றி.

    சந்ரு,சந்திரவதனா நிறையவே ஈழம் பற்றித் தெரிந்துகொண்டு எழுதுகிறார்கள்.நிறைவான பதிவுகள் அவர்களுடையது.

    வெண்ணிற இரவுகள் தவிர மற்ற எல்லோருமே எனக்குப் புதிய அறிமுகங்கள்.இப்போதான் பார்த்தேன்.

    ஊடகங்கள் தொகுப்பாய் இருக்கும் இடத்தை அறியத் தந்தமைக்கும் சந்தோஷம்.

    ReplyDelete
  10. புதிய பதிவுகளை தெரிந்து எடுத்து பகிர்ந்தமைக்கு, நன்றி.

    ReplyDelete
  11. நேற்று தொழிற்சங்க பணியாக சென்னை பயணம், இன்று காலை 9 மணி துவங்கி மாலை 4.30 வரை "முழுநாள் பராமரிப்பு மின்தடை" . மின்சாரம் திரும்பியதும் கணணி முன் உட்கார்ந்து 2 நாள் பதிவுகளை பார்த்தால் - இரண்டுநாள் விடுப்பில் தொலைக்காட்சிப்பெட்டி முன் பல நிகழ்ச்சிகள், வீட்டுக்கு வந்த நண்பர்கள், தெருவில் விளையாடும் அண்டை வீட்டு குழந்தைகளுடன் விளையாடிவிட்டு, ஞாயிறு மாலை 7 மணிக்கு 'அய்யய்யோ இவ்வளவு வீட்டுப்பாடம் இருக்கிறதே எப்படி முடிப்பது' என எண்ணும் எனது இரண்டாவது பெண் போல் மலைப்பாக இருக்கிறது போங்கள். அதற்குள் சம்சாரம் வருவதற்குள் மின் அரைப்பானை பழுது நீக்கி வந்தால் நீ தப்பித்தாய் - அல்லது இன்று லீவு போட்டு பகல் முழுதும் தூக்கம்தானா ஒரு பயனும் இல்லையா என அவ வந்து வையப்போறா என என் அம்மா எச்சரிப்பதால் வெளியில் சென்று வந்துவிட்டு அனைத்து அறிமுக தளங்களிலும் உலாவந்துவிட்டு வைத்துக் கொள்கிறேன் கும்மியை - சித்திரகுப்தன் (பரவாயில்லையே பலரின் தளங்களை பார்வையிட்டதில் பெரியவர் சாமியின் நகைச்சுவை என் எழுத்திலும் வருகிறதே)

    ReplyDelete
  12. நன்றி சீனா. சிரமத்தில் இருந்து மீட்டு எடுத்தமைக்கு என் வணக்கம்.

    நன்றி குருஜீ

    சித்ரா உங்கள் ஒத்துழைப்பு மற்கக முடியாதது. தொடர் வாசிப்புக்கு நன்றி.

    நன்றி செந்தில். சேம் சேம்......

    ரவி சில நாட்கள் என்ன? ஒரு மணி நேரம் அவருடன் இருந்தாலே போதும்.
    நீங்கள் எழுத வேண்டிய களம் கவிதை அல்ல. மன்னார்குடி மதியழகு தளத்தை பாருங்கள்?

    ரமேஷ் எத்தனை நாளைக்கு உங்கள் மறைபொருள்?

    எல்கே, கார்த்திக் இருவருக்கும் என் அன்பு.

    சாமி ஆசாமிகளை காட்டிய விதம் என்றுமே மறுக்க மறக்கமுடியாது.

    உங்கள் தனிப்பட்ட அக்கறைக்கு நன்றி.

    ReplyDelete
  13. //கலைஞர் அடுத்து கை வைக்கப் போவது இவரைத்தான். காரணம் நீங்களே இதைப் பார்த்து விடுங்கள்...//

    ஹா.. ஹா.. ஹா.. கரும்புலிகள் பத்தியெல்லாம் சீரியஸா எழுதிட்டு.. இந்த காமெடி வேறயா!! :)

    சரி.. போனா போகுது. என் புண்ணியத்தில்.. யாராவது.. அமெரிக்கா வந்து சுத்திப் பார்க்கட்டுமே.

    எப்பத்தான்.. நானும் சவுக்கு மாதிரி ஃபேமஸ் ஆகறது சொல்லுங்க. மனுசனா கூட மதிக்க மாட்டேங்கறாங்க.

    ReplyDelete
  14. பாலா

    உங்கள் விஜய் அய்யோயாயா தேடிப்பார்த்தேன்.

    அவசரத்தில் கிடைக்கல.

    அது இன்னமும் கலக்கல்.

    ReplyDelete
  15. The Shark -ஐ மறந்துட்டீங்களா..??! You are in big trouble!! :)

    http://www.hollywoodbala.com/2010/05/shark-2010.html

    ReplyDelete
  16. தலைப்பை தமிழில் போட்டால் என்ன?

    எது இங்கீலிசு எது தமிழுன்னு புரிஞ்சுக்கவே முடியல.

    இதுல லொல்ளு வேற.

    உங்கள் இடுகை தொழில் நுட்பம் என்னை போன்ற ஆட்களுக்கு சுத்தம்.

    நம்ம இல்லத்துக்கு வந்து பாருங்க.

    சும்மா சைடுல தட்டுனாபோதும்.

    பொலபொன்னு கொட்டும்(?)

    ReplyDelete
  17. //தலைப்பை தமிழில் போட்டால் என்ன?//

    ஆஹா.. நீங்களுமா?? இப்படித்தான் தமிழ்மணத்தில் இருந்து கேட்டப்ப ஒரு ரணகளம் நடந்துச்சி.

    அந்தத் தலைப்பு தமிழ்லதான் இருக்கு. :) :) :)

    தலைப்பை தமிழ்ல கொடுக்கறது மேட்டரில்லைங்க தல.

    ஆனா ஒரு வருசம் முன்னாடி.. ‘The Bow'-ன்னு எழுத ஆரம்பிச்ச ட்ரெண்ட்.

    அதான்.. இப்படியே கண்டினியு பண்ணுறேன். டைம் கிடைக்கும் போது இதை படிச்சிப் பாருங்க.

    http://www.hollywoodbala.com/2009/02/chronicles-of-bow-2009.html

    ReplyDelete
  18. This comment has been removed by the author.

    ReplyDelete
  19. படிச்சேன்.

    உங்ககிட்ட இருக்ற பிரச்சனையே இதுதான்.

    நல்ல திறமையிருந்தும் அத்தனையும் நக்கலும் நையாண்டியுமாகவே ஆக்கிட்டீங்க. அங்கங்கே போய் கூட்டத்துக்குள்ளேயும் போயு அவங்க சொல்ல வந்ததையும் மறக்க வச்சுருறீங்க.

    குழந்தைக்கும் இந்த குறும்புதனத்தை சொல்லிக் கொடுத்துறாதீங்க.

    அவங்களாவது பொழச்சு போயிடட்டும்...........

    ஆமா அந்த ஜாதிச் சான்றிதழ் யாராவது கேட்டாங்களா?

    ReplyDelete
  20. வலைச்சர இடுகைகள் அனைத்தும் ஆவணங்கள் தான் ஜோதிஜி

    ReplyDelete
  21. ஆசிரியரே நாளைக்கு எழுதிக்கிட்டு இருக்றத இன்னைக்கே சொல்லிட்டீங்க.

    தோழர் சித்ரகுப்தன்

    நீங்கள் தினமணியில் தொடர் கட்டுரை எழுதிக்கொண்டுருப்பதை எத்தனை பேர்கள் அறிவார்கள்?

    உங்கள் திறமையை.........

    ReplyDelete
  22. // அங்கங்கே போய் கூட்டத்துக்குள்ளேயும் போயு அவங்க சொல்ல வந்ததையும் மறக்க வச்சுருறீங்க.//

    தப்புதாங்க தல!! ஆனா.. இதை போன மே மாசம் வரைக்கும் நான் பண்ணினதில்லைன்னு நினைக்கிறேன். ஆனா..

    அந்த மாசம்.. இந்த ஜாதி மேட்டர் ஆரம்பிச்ச அப்புற்ம் இந்த வலை ‘உலகத்தை’ பத்தின பார்வை சுத்தமா மாறிடுச்சி.

    இங்க முடிஞ்ச வரைக்கும் காமெடியனா இருக்கறது பெட்டர். மண்டை வெடிக்காமலாவது இருக்கும்.

    ReplyDelete
  23. இங்க முடிஞ்ச வரைக்கும் காமெடியனா இருக்கறது பெட்டர். மண்டை வெடிக்காமலாவது இருக்கும்.


    நாளைக்கு எழுதி வைத்ததை இன்றைக்கே வெளியிடப் போறேன்.

    மண்டைக்குள்ள நொய்ய்ய்ய்ய்ன்னு...

    அதப்படிச்சா என்னை அடிக்க வந்துடுவீங்க.......

    ReplyDelete
  24. ஜோதிஜி

    பேக்கிங் அண்டு பிரசண்டேஷன் சூப்பரு.

    ஒரு பிசுரு,ஆயில் கறை இல்ல.

    பாக்கலாம்., நாளைக்கு ஃபைனல்.

    ஏதாவது மாட்டுச்சு, ரீ-செக்கிங்தான்.

    ReplyDelete
  25. பெரியவரே

    ஒரு பக்கம் பாலா ஒரு பக்கம் நீங்க.

    ரொம்பவே மகிழ்ச்சி.

    ஆமா AQL 4.5 தானே?

    தேர்ச்சியா தோல்வியாங்றத நீங்க சொன்ன பிறகு தான் இடுகையில் கொஞ்சம் நாள் கழித்து எழுதப் போறேன்.

    ReplyDelete
  26. மலையோடு ஒப்பிட்டுக் கூச்சப்படவைத்திருக்கிறீர்கள். சுடுதண்ணி குறித்து அறிமுகப்படுத்துவீர்கள் என்றும் சற்றும் எதிர்பார்க்கவில்லை.

    அறிமுகத்திற்கும், ஊக்கத்திற்கும் மிக்க நன்றி ஜோதிஜி. உங்கள் வலைச்சரப் பணி மிக அருமை. வாழ்த்துக்கள்.

    ReplyDelete
  27. என்னையும் அறிமுகம் செய்தமைக்கு நன்றிகள்.

    மேலும் எமது மக்களின் பிரச்சினைகளையும் உண்மைகளையும் வெளிக்கொண்டுவரவேண்டும் என்று நினைப்பவன் நான். பக்கச்சார்பின்றி யார் தவறு செய்தாலும் அதனை துணிச்சலோடு சுட்டிக்காட்டவேண்டும் என்றும் நினைப்பவன்.

    நீங்கள் அறிமுகப்படுத்திய அத்தனை பதிவர்களும் சிறந்த பதிவுகளை தந்துகொண்டிருப்பவர்கள்.

    பகிர்வுக்கு நன்றிகள்.

    ReplyDelete
  28. வலைச்சரத்தில் நீங்கள் அறிமுகப்படுத்திய அத்தனை பதிவர்களும் அவர்களுடைய பதிவுகளும் நன்கு தேர்ந்தெடுக்கப்பட்டு அறிமுகம் செய்திருக்கின்றீர்கள். அவர்களில் பலரை இப்பொழுதான் நான் அறியக்கிடைத்தது. அவர்களுடைய அத்தனை பதிவுகளையும் பார்த்தேன். நல்ல பதிவுகள்.

    உங்களுடைய வலைப்பதிவிலே சொல்லப்படுகின்ற விடயங்கள் பலர் அறியாத விடயங்களாகவும் உண்மைத்தன்மை வாய்ந்ததாகவும் குறிப்பாக இலங்கை பற்றிய கட்டுரைகள் நல்ல தேடலுடன் தருவது சிறபம்சமாகும் தொடர்ந்தும் இதுபோன்ற நல்ல கட்டுரைகளை தரவேண்டும்.

    இலங்கை தொடர்பான உங்களது கட்டுரைகளை புத்தகங்களாக வெளியிடும்படி முன்னரும் உங்களிடம் கூறியிருக்கின்றேன். அவற்றை புத்தகங்களாக வெளியிடுவதற்கு ஏற்பாடுகளை செய்யுமாறு கேட்டுக்கொள்வதோடு இவற்றை புத்தகங்களாக வெளியிடுகின்றபொழுது இணையவசதியற்ற பலருக்கு இலங்கை பொடர்பான பல உண்மையான விடயங்களையும் அறிந்துகொள்ள வசதியாக இருப்பதோடு இலங்கை பற்றிய ஒரு தெளிவும் உண்டாகும் என்பது எனது எண்ணம்.

    ReplyDelete

தமிழ் மணத்தில் - தற்பொழுது