ஆதி மனிதனிலிருந்து அஞ்சாசிங்கம் வரை
ஆதி மனிதனிலிருந்து அஞ்சாசிங்கம் வரை
➦➠ by:
Philosophy Prabhakaran
(அறிமுகங்கள் 01)
நான் விரும்பிப்படிக்கும் சில பதிவர்களைப் பற்றியும் படித்த இடுகைகள் பற்றியும் பகிர்ந்துக்கொள்கிறேன். உங்களுக்கு இவர்கள் அறிமுகங்களாகவோ அறிந்த முகங்களாகவோ இருக்கக்கூடும்.
1. ஆதிமனிதன்: http://aathimanithan.blogspot.com/
அரசியல், சினிமா, நகைச்சுவை, சிறுகதை என்று பல்துறைகளிலும் தடம் பதித்த வித்தகர். இவர் ஆரம்பகாலத்தில் எழுதிய தாத்தா – பாட்டி என்ற சிறுகதை எனக்கு பிடித்திருந்தது. அப்படியே 70 vs 90 என்ற இடுகையில் ஆரம்பித்து பீனட்ஸும் பக்கத்து சீட் பெண்ணும் வரைக்கும் நகைச்சுவை இடுகைகள் அனைத்தும் கலக்கல். வாடகை சைக்கிள் எனும் கட்டுரையில் நமது பழைய நினைவுகளை அழகாக தூண்டி விடுகிறார்.
2. ஆஹா பக்கங்கள்: http://mabdulkhader.blogspot.com/
வலைப்பூவின் பெயருக்கு ஏற்ப ஆஹா என்று சொல்லவைக்கும் இடுகைகளுக்கு சொந்தக்காரர். மனைவிகளை கைக்குள் போட்டுக்கொள்வது எப்படி...? (ஹலோ, அவங்கங்க மனைவியை தாம்பா...) என்று ஆண்களுக்கு அறிவுரை வழங்கியிருக்கிறார். வித்தியாசமான நாட்டு நடப்புகளை சில சமயம் நம்மோடு பகிர்ந்துக்கொள்ளும் இவர் உலகின் நம்பர் 1 முன்மாதிரி கிராமம் என்று எந்த கிராமத்தை கூறுகிறார் பாருங்கள்.
3. எனது பயணங்கள்: http://enathupayanangal.blogspot.com/
எனது பயணங்கள் வலைப்பூவின் வழியாக பயணம் செய்தால் சிறுகதைகள், தொடர்கதைகள், கவிதைகள் என்று களை கட்டுகிறது. பச்சை நிற பக்கெட் என்ற பெயரில் தனது அனுபவமொன்றை பகிர்ந்திருக்கிறார் பாருங்கள். அதுமட்டுமில்லாமல், சென்னையில் ஒரு வெண்ணை, பரோடாவில் ஒரு பட்டிக்காட்டான் என்ற பெயரில் தனது பயண அனுபவங்களை தொடராக எழுதி வருகிறார்.
4. எனது பயணம்: http://entamilpayanam.blogspot.com/
இதுவும் ஒரு பயணம்தான், ஆனால் தமிழ் பயணம். இவர் சமீபத்தில் ராஜ ராஜ சோழனை பற்றி எழுதிய இடுகை என்னை பெருமளவில் கவர்ந்தது. திருமணத்திற்கு முன்னும், திருமணத்திற்கு பின்னும் நம் மனநிலை எப்படி மாறுகிறது என்று இந்த இடுகையில் தெளிவுப்படுத்தியிருக்கிறார் பாருங்கள். தனது கல்லூரி நினைவுகளை நம்மோடு பகிர்ந்திருக்கிறார். அதையும் படியுங்கள்.
5. என் ஒட்டைப்பையிலிருந்து சில சில்லறைகள்: http://nithyakumaaran.blogspot.com/
இவர் கிட்டத்தட்ட மூன்று வருடங்களாகவே பதிவெழுதி வருகிறார். ஆனாலும் அதிகம் அறியப்படாதவர். தன் மனைவியைப் பிரிந்த ஒரு வாரத்தை “அந்த ஏழு நாட்கள்” என்ற பெயரில் கவிதையாய் வடித்திருக்கிறார் பாருங்களேன். பின்னாளில் முன்னாள் காதலிக்கு ஒரு கடிதமும் எழுதியிருக்கிறார். கவிதை, கடிதம் மட்டும்தான் என்றில்லாமல் அவ்வப்போது கோல், உலோகம் என்று நூல் விமர்சனங்களும் எழுதியிருக்கிறார்.
6. எழுதிப்பார்க்கிறேன்: http://yuva-theprince.blogspot.com/
சும்மா எழுதிப்பார்க்கிறேன் என்று சொன்னாலும் இவரது எழுத்துநடை வியக்க வைக்கிறது. அவரது கனவுக்கடவுளான James cameroonஐ சந்தித்த அனுபவத்தை நம்முடன் அழகாக பகிர்கிறார். கோபத்தைப் பற்றி தனது எண்ணத்தை கவிதையாகவும், பயத்தைப் பற்றிய தனது எண்ணத்தை கட்டுரையாகவும் நம்முடன் பகிர்ந்திருக்கிறார் பாருங்கள்.
7. எழுத்துக்கடை: http://vasanthanatesan.blogspot.com/
எழுத்துக்கடை பற்றிய அறிமுகத்தை நம்ம கடையிலேயே ஒருமுறை பார்த்திருப்பீர்கள் இருந்தாலும் மீண்டுமொரு முறை. கன்னியாகுமரியிலிருந்து கடல்தாண்டி துபாய் சென்றிருக்கும் இவர் துபாய் வாழ்க்கை பற்றி ஒரு கட்டுரையை சுவையாக எழுதியிருக்கிறார். அப்புறம் முன்னாடியே சொன்னமாதிரி “பயபுள்ளைங்க” என்ற வார்த்தைக்கு காப்பிரைட்டே வாங்கி வைத்திருக்கிறார்.
8. தம்பி கூர்மதியான்
நான்கு வலைப்பூக்களுக்கு சொந்தக்காரர் அதிலொன்று ஆங்கிலம். ஒரு வலைப்பூவில் கவிதைகள்: கருவறையும் கல்லறையும், நான் கண்ட மீசை போன்ற கவிதைகள் என்னுடைய பேவரிட். அனுபவங்களைப் பகிர்ந்துக்கொள்ளும் வலைப்பூவில் நந்தலாலா, மந்திரப்புன்னகை என்று திரை விமர்சனங்கள் உட்பட நிறைய பயனுள்ள இடுகைகள் கிடைக்கின்றன. பொதுவா யூத்துன்னா பொண்ணுங்களை சைட் அடிப்பாங்க இவர் ஒரு ஆயாவை சைட் அடித்த கதையை விவரித்திருக்கிறார் பாருங்கள்.
9. கொக்கரக்கோ: http://kokkarakko2011.blogspot.com/
இவரைப் பற்றிய அறிமுகத்தையும் ஏற்கனவே நம்ம கடையில் ஒருமுறை பார்த்திருப்பீர்கள். இங்கே மீண்டும் ஒருமுறை. அரசியல் குறித்த இடுகைகளை சுவைப்பட எழுதுவது இவருடைய ஸ்பெஷாலிட்டி. ஜெ ஜெயிக்க என்ன செய்ய வேண்டும்...? என்று இங்கே அலசியிருக்கிறார் பாருங்கள். அப்படியே கலைஞர், ராமதாஸ், மு.க.அழகிரி, ராகுல் காந்தி என்று பலரைப் பற்றியும் இவரது பார்வையை படித்துப் பாருங்களேன்.
10. அஞ்சாசிங்கம்: http://anjaasingam.blogspot.com/
இவர் நிறைய சீரியஸான சிந்தனைகளுக்கு சொந்தக்காரர் ஆனால் இதுவரை நகைச்சுவையான இடுகைகளையே அதிகம் எழுதிவருகிறார். எல்லோருமே திரைப்படத்துக்கு விமர்சனம் எழுதினால் இவர் திரைக்கே விமர்சனம் எழுதியிருக்கிறார் பாருங்கள். வித்தியாசமா ஒரு காதல் கடிதத்தையும் எழுதியிருக்கிறார் அதையும் பாருங்கள். தீவிர கவுண்டமணி ரசிகரான இவர் ரசிகர் மன்ற தளத்தில் எழுதியிருக்கும் காட்டு தர்பார் செம காமெடி ரகம்.
மீண்டும் நாளை மாலை பத்து முத்துக்களுடன் சந்திக்கிறேன்.
என்றும் அன்புடன்,
N.R.PRABHAKARAN
|
|
எனக்கும் பிடித்த சில வலைப்பூக்கள், உங்கள் அறிமுகத்தில் உள்ளன.
ReplyDeleteஇன்னும் எனக்கு தெரியாம எக்கசக்க பேர் இருக்காங்களோ.!! பாத்துடுறன்.. என்னை அறிமுகபடுத்தியதுக்கு நன்றி சொல்லணும்னு நினச்சப்போ
ReplyDelete//இவர் ஒரு ஆயாவை சைட் அடித்த கதையை விவரித்திருக்கிறார் பாருங்கள்.//
என்ன கொடுமை சார் இது..??
பொதுமக்களே இதுக்கும் எனக்கும் எந்த சம்பந்தமும் இல்ல..
இன்று வலைச்சரத்தில் அறிமுகமான அனைவருக்கும் வாழ்த்துக்கள்...
ReplyDeleteஅறிமுகம் செய்யப்பட்ட அனைத்து பதிவர்களுக்கும் வாழ்த்துக்கள்.
ReplyDeleteபுதிய ஆசிரியருக்கு வரவேற்பும், வாழ்த்தும்..
வாழ்த்துக்கள் பிரபா...
ReplyDeleteதொடர்ந்து கலக்குங்க... :))
இன்று வலைச்சரத்தில் அறிமுகமான அனைவருக்கும் வாழ்த்துக்கள்...
ReplyDeleteஅறிமுகங்கள் அனைத்தும் அருமை ..வாழ்த்துக்கள் நண்பரே
ReplyDeleteசிலர் எனக்குத் தெரியாவர்கள், அனைவருக்கும் வாழ்த்துக்கள்!
ReplyDeleteநல்ல அறிமுகம்...
ReplyDelete//சிலர் எனக்குத் தெரியாவர்கள், அனைவருக்கும் வாழ்த்துக்கள்!//
ReplyDeleteபன்னிக்குட்டியாருக்கு என்ன தெரியுமா.??
2008 ம் ஆண்டில் இருந்து பதிவுலகில் ,பதிவுகளை படித்து வருகிறேன். ஏன் நானும் எழுத கூடாது என்ற எண்ணத்தில் உருவானது தான் "எனது பயணங்கள்".
ReplyDeleteஎனது அண்ணன்,குட்டி ஒரு 10 பதிவுகளை எழுதி இருப்பார்.இது வரை மொத்தம் ஒரு 10 - 20 பதிவுகளை எழுதி இருப்பேன். என்னை அறிமுகப்படுத்திய திரு.பிரபாகரன் அவர்களுக்கு நன்றி.
மேலும் சில பதிவுகளை தொடர்ந்து எழுத முயற்சி செய்வேன்.
முதலில் நன்றி .......
ReplyDeleteஅனைவருக்கும் வாழ்த்துக்கள் ...................
அடிச்சி ஆடு மாம்சு !!!
ReplyDeleteஅனைத்து அறிமுகங்களுக்கும் என் மனம் நிறைந்த வாழ்த்துக்கள்...
ReplyDeleteநல்ல அறிமுகங்கள். கடந்த வாரம் நான் அறிமுகம் செய்த பதிவர்களும், எனக்கு பிடித்த பதிவுகளுமே உங்களுக்கும் பிடித்திருக்கிறதே....நம் ரசனை ஒத்துப்போகிறது பிரபா....
ReplyDeleteஎனது வலைப்பதிவை (http://entamilpayanam.blogspot.com) அறிமுகப்படுத்திய திரு.பிரபாகரன் அவர்களுக்கு நன்றி..
ReplyDeleteதங்களது இத்தகைய சிறப்பான பணி தொடர எனது வாழ்த்துக்கள்.
///// தம்பி கூர்மதியன் said...
ReplyDelete//சிலர் எனக்குத் தெரியாவர்கள், அனைவருக்கும் வாழ்த்துக்கள்!//
பன்னிக்குட்டியாருக்கு என்ன தெரியுமா.??/////
என்ன இப்பிடி கேட்டுட்டீங்க? அன்னிக்கு நம்ம அடிச்ச கும்மிய மறக்க முடியுமா?
என்னையும் அறிமுகப்படுத்தியதற்கு நன்றி பிரபா!! இன்று அறிமுகமான வர்களில் சிலர் நான் அறியாத புதிய நண்பர்கள். அவசியம் நேரம் கிடைக்கும் போது சென்று படிக்கணும். ஆசிரியர் பணி சிறக்க வாழ்த்துகள்!!
ReplyDeleteநம்ம ப்ளாக்-தானா?............................................
ReplyDeleteநன்றி Philosophy Prabhakaran !
அறிமுகப்படுத்தப்பட்ட அனைத்து சக-பதிவர்களுக்கம் என் வாழ்த்துக்களும், மேலும் தொடருங்கள் என்ற வேண்டுதல்களும்.
எல்லாம் நல்ல அறிமுகங்கள்.
ReplyDeleteடெம்ப்ளேட் கமெண்ட்தான் போட முடியும். தப்பா எடுத்துக்காதீங்க. விமர்சிக்க எதுவும் இல்லாத போது என்ன சொல்வது?
ஆமா நீங்க சாத்தூரா? சொல்லவே இல்லை..?
முதல் நாளே இரண்டு பதிவுகளா ? அசத்தல் அறிமுகங்கள்
ReplyDeleteதொடர்ந்து கலக்குங்க
ReplyDeleteபொறுப்பை உணர்ந்து சிறப்பாக எழுதுகிறீர்கள் .வாழ்த்துக்கள்
ReplyDeleteவலைச்சர வாழ்த்துகள்.
ReplyDeleteநல்ல அறிமுகங்கள்.அனைவருக்கும் வாழ்த்துக்கள்.
///// தம்பி கூர்மதியன் said...
ReplyDelete//சிலர் எனக்குத் தெரியாவர்கள், அனைவருக்கும் வாழ்த்துக்கள்!//
பன்னிக்குட்டியாருக்கு என்ன தெரியுமா.??/////
என்ன இப்பிடி கேட்டுட்டீங்க? அன்னிக்கு நம்ம அடிச்ச கும்மிய மறக்க முடியுமா?//
இல்ல அதுக்கப்பறம் ஒரு கும்மியிலயும் நான் கலந்துகலயே.!! அதான் கேட்டன்..
அறிமுகங்கள் சிறப்பு.
ReplyDelete...26...
நன்றி சகோதரரே. சற்றுமுன் தான் பார்த்தேன். என்னுடைய வலைப்பூவையும், பதிவுகளையும் வலைச்சரத்தில் அறிமுகப்படுத்தியதற்கு. இன்று முதல் நாள். 6 வது நாளில் வலைச்சரத்தின் சிறந்த ஆசிரியர் என்ற பெயரெடுக்க எனது வாழ்த்துக்கள். பெரிய பொருப்பு. கவனமாக, நிதானமாக செயல்பட்டு வெற்றியடையுங்கள்.
ReplyDeleteஎன்னால் என் கண்களையே நம்ப முடியவில்லை. முதல் நாள் முதல் பதிவராக என்னை அறிமுக படுத்தியதற்கு நன்றிகள் பல.
ReplyDelete//அரசியல், சினிமா, நகைச்சுவை, சிறுகதை என்று பல்துறைகளிலும் தடம் பதித்த வித்தகர்//
இப்படி புகழ்வதால் பெருமை படுவதை விட அதிக பொறுப்பு வந்து சேர்ந்துள்ளதாகவே உணர்கிறேன். தங்கள் ஆசிரியர் பணி சிறப்புடன் தொடர வாழ்த்துக்கள்.
நல்ல அறிமுகங்கள் நண்பரே
ReplyDelete@ தமிழ் உதயம், தம்பி கூர்மதியன், # கவிதை வீதி # சௌந்தர், பாரத்... பாரதி..., மாணவன், வேடந்தாங்கல் - கருன், அரசன், பன்னிக்குட்டி ராம்சாமி, சங்கவி, Thirumalai Kandasami, அஞ்சா சிங்கம், +யோகி+, கவிதை காதலன், ரஹீம் கஸாலி, அருள்மொழிவர்மன், எம் அப்துல் காதர், Yuva, பாலா, எல் கே, T.V.ராதாகிருஷ்ணன், பார்வையாளன், மாதேவி, NIZAMUDEEN, கொக்கரகோ..., ஆதி மனிதன், தமிழ்வாசி - Prakash
ReplyDeleteவருகைக்கும் கருத்துகளுக்கும் மிக்க நன்றி நண்பர்களே... தொடர்ந்து உங்கள் ஆதரவை எதிர்நோக்குகிறேன்...
@ தம்பி கூர்மதியன்
ReplyDelete// என்ன கொடுமை சார் இது..??
பொதுமக்களே இதுக்கும் எனக்கும் எந்த சம்பந்தமும் இல்ல.. //
இதுக்கே இப்படியா... ரொம்ப பர்சனலா எதுவும் எழுத வேணாம்ன்னு சீனா அய்யா கேட்டுக்கொண்டார் இல்லைன்னா இன்னும் ஆழமா போயிருப்பேன்... இருக்கட்டும் பெண் பதிவர்களின் அறிமுகப்படலத்தில் வச்சிக்குறேன்...
@ Thirumalai Kandasami
ReplyDelete// 2008 ம் ஆண்டில் இருந்து பதிவுலகில் ,பதிவுகளை படித்து வருகிறேன். ஏன் நானும் எழுத கூடாது என்ற எண்ணத்தில் உருவானது தான் "எனது பயணங்கள்". //
நீங்கள் என்னைவிட சீனியர் நண்பா :)
@ +யோகி+
ReplyDeleteஎன்னய்யா புதுசு புதுசா பேரை மாத்துறீங்க... நான் பயந்தே போயிட்டேன்...
@ ரஹீம் கஸாலி
ReplyDelete// நல்ல அறிமுகங்கள். கடந்த வாரம் நான் அறிமுகம் செய்த பதிவர்களும், எனக்கு பிடித்த பதிவுகளுமே உங்களுக்கும் பிடித்திருக்கிறதே....நம் ரசனை ஒத்துப்போகிறது பிரபா.... //
எல்லாம் ஒரு coincidence தான்... மற்றபடி இது முழுக்க முழுக்க சொந்த உழைப்பே...
@ அருள்மொழிவர்மன்
ReplyDelete// எனது வலைப்பதிவை (http://entamilpayanam.blogspot.com) அறிமுகப்படுத்திய திரு.பிரபாகரன் அவர்களுக்கு நன்றி.. //
என்னங்க இது...? என் பேருக்கு முன்னாடி திரு எல்லாம் போட்டு அசிங்கப்படுத்துறீங்க...
@ பாலா
ReplyDelete// டெம்ப்ளேட் கமெண்ட்தான் போட முடியும். தப்பா எடுத்துக்காதீங்க. விமர்சிக்க எதுவும் இல்லாத போது என்ன சொல்வது? //
உங்க நிலைமை புரியுது நண்பா... இருக்கட்டும்...
// ஆமா நீங்க சாத்தூரா? சொல்லவே இல்லை..? //
ஆமாம் எனது ப்ரோபைலிலேயே போட்டிருக்கிறேனே... பிறந்தது மட்டும்தான் சாத்தூர் மற்றபடி வளர்ந்தது முழுக்க முழுக்க சிங்காரச்சென்னை தான்...
@ எல் கே
ReplyDelete// முதல் நாளே இரண்டு பதிவுகளா ? //
தினமும் இரண்டிரண்டு இடுகைகள் போட முயல்கிறேன்...
@ கொக்கரகோ...
ReplyDelete// 6 வது நாளில் வலைச்சரத்தின் சிறந்த ஆசிரியர் என்ற பெயரெடுக்க எனது வாழ்த்துக்கள். பெரிய பொருப்பு. கவனமாக, நிதானமாக செயல்பட்டு வெற்றியடையுங்கள். //
ஆஹா இப்படி உற்சாகப்படுத்துறீங்களே... பொறுப்புணர்ச்சி கூடியதாக உணர்கிறேன்...
@ ஆதி மனிதன்
ReplyDelete// என்னால் என் கண்களையே நம்ப முடியவில்லை. முதல் நாள் முதல் பதிவராக என்னை அறிமுக படுத்தியதற்கு நன்றிகள் பல. //
ஆயிரம்தான் இருந்தாலும் ஆதிமனிதன் தானே பர்ஸ்ட்... அப்புறம்தானே மற்றவர்கள் :)))
// இப்படி புகழ்வதால் பெருமை படுவதை விட அதிக பொறுப்பு வந்து சேர்ந்துள்ளதாகவே உணர்கிறேன். தங்கள் ஆசிரியர் பணி சிறப்புடன் தொடர வாழ்த்துக்கள் //
ம்ம்ம்... தொடர்ந்து கலக்குங்கள்...
நல்ல அறிமகங்கள் பீபீ காத்திருக்கிறேன்..
ReplyDeleteஅன்புச் சகோதரன்...
ம.தி.சுதா
தமிழுக்காக ஒரு தழிழனால் முடிந்தது (இலகு தட்டச்சு உதவி)
இன்று வலைச்சரத்தில் அறிமுகமான அனைவருக்கும் வாழ்த்துக்கள்.
ReplyDeleteசிறப்புடன் தொடர வாழ்த்துக்கள்.
அனேக அறிமுகங்கள் புதிது ..நன்றி
ReplyDeleteஅனைவருக்கும் வாழ்த்துக்கள்!
ReplyDeleteஅனைத்து அறிமுகங்களுக்கும் வாழ்த்துக்கள்
ReplyDeleteஎன்னது ?2 பதிவா? ம் ம்
ReplyDeleteஅனைத்தும் அருமை!
ReplyDeleteநல்ல அறிமுகங்கள்.அனைவருக்கும் வாழ்த்துக்கள்.
ReplyDeleteஅறிமுகத்திற்க்கு நன்றி பிரபா.. இன்ப அதிர்ச்சியாக இருந்தது.. (ஆமா, ஒரு ஆளு எத்தனை ப்ளாக் சார் எழுதலாம் அல்லது எழுதமுடியும்??) நாமளும் வகைக்கொன்னா ஆரம்பிச்சிரலாமா? இளைஞர்களுக்கு ஒண்ணு, இளைஞிகளுக்கு ஒண்ணு, கிழவர்களுக்கு ஒண்ணேய், கிழவிகளுக்கு ஒண்ணு??ம்ம்ம், பாப்போம். எது வரை போகுமோ, அதுவரை போகலாம்..
ReplyDelete//ஆயிரம்தான் இருந்தாலும் ஆதிமனிதன் தானே பர்ஸ்ட்... அப்புறம்தானே மற்றவர்கள் :)))
ReplyDelete//
இதுதான் வஞ்ச புகழ்ச்சி என்பதோ?
அறிமுகம் செய்யப்பட்ட அனைத்து பதிவர்களுக்கும் வாழ்த்துக்கள்.
ReplyDeleteகடந்த ஒருவார காலமாக எனக்கு வலைச்சரத்தில் ஆதரவளித்த நண்பர்கள் அனைவருக்கும் எனது நன்றிகள்... எனக்கு இந்த வாய்ப்பை வழங்கிய சீனா அய்யா அவர்களுக்கும் நன்றிகள்...
ReplyDelete