07 - 09 - 2015 முதல் ஆசிரியர் பொறுப்பேற்பவர்

ரிஷபன்
இவரின் வலைப்பூ

ரிஷபன்

முந்தைய ஆசிரியர்கள்


சீனா ... (Cheena) - அசைபோடுவது

சிந்தாநதி

நன்றி!

திரட்டிகளின் தொகுப்பு

:: தமிழ் திரட்டுகளின் சங்கமம்<br/>:: Tamil blogs, news, ezines

வலைப்பதிவர் உதவிப்பக்கம்

தமிழில் எழுத மென்பொருள்

fb like

ஞானாலயா = புதுக்கோட்டை

www.gnanalaya-tamil.com
வலைச்சரத்தில் வெளியிடப்படும் இடுகைகள் வலைச்சரக் குழுவினரால் தணிக்கைக்கு உட்படாது. ஆனால், வலைச்சர விதிக்கு உட்படாத இடுகைகளை முன்னறிவிப்பின்றி நீக்க வலைச்சரக் குழுவினருக்கு உரிமை உள்ளது

Saturday, February 26, 2011

உள்ளூர் சினிமாவிலிருந்து உலகசினிமா வரை


வணக்கம் மக்களே...

செய்தித்தாள்களும் தொலைக்காட்சிகளும் நடுநிலை விமர்சனங்களை மறந்துபோய் நாட்கள் நகர்ந்த நிலையில் இப்பொழுதெல்லாம் தரமான, நடுநிலையான விமர்சனங்கள் தருவது பதிவர்கள்தான் என்று சொன்னால் மிகையாகாது. ஒரு திரைப்படம் வெளிவந்தால் பிரபல பதிவர்கள் மட்டும்தான் என்றில்லாமல் பலதரப்பட்ட பதிவர்களிடமிருந்து பலதரப்பட்ட விமர்சனங்கள் வருகின்றன. சில படங்கள் வெளிவரும்போது சூடான விவாதங்கள், கருத்து மோதல்கள் கூட வருகின்றன. அவ்வாறாக அதிகம் பரிட்சயமில்லாத, ஆனால் நயமான விமர்சனங்கள் எழுதும் பதிவர்களைப் பற்றி இன்றைய பதிவில் பார்க்கலாம்.

மூன்றாண்டு காலமாக பதிவுலகில் இருப்பவர் என்றாலும் இன்னமும் வெளிச்சத்திற்கு வராமல் இருக்கும் ஒரு பதிவர். இவர் எழுதியுள்ள விமர்சனங்களில் ஆயிரத்தில் ஒருவன் படத்தின் விமர்சனத்தை சிறப்பானது என்று கூறுவேன். அச்சமுண்டு அச்சமுண்டு படத்தையும் தனது அழகான எழுத்துநடையில் விமர்சித்திருக்கிறார். சமீபத்தில் எழுதிய யுத்தம் செய் விமர்சனமும் உங்கள் பார்வைக்காக...

2. ஊர் காவலன் http://oorkavalan.blogspot.com/
எல்லோரும் புதுப்படங்களுக்கு விமர்சனம் எழுதிக்கொண்டிருக்கும் போது இவர் மட்டும் புது ஸ்டைலில் மனம் கவர்ந்த பழைய படங்களைப் பற்றி விமர்சனம் எழுதுகிறார். இவ்வாறாக தில்லுமுல்லு படத்திற்கும் ரஜினியின் பில்லா படத்திற்கும் விமர்சனம் எழுதியிருக்கிறார் பாருங்கள். கமல் படங்களில் மைக்கேல் மதன காம ராஜன் படத்திற்கும் நாயகன் படத்திற்கும் விமர்சனம் எழுதியிருக்கிறார்.

3. சிவ சம்போ... http://muthusiva.blogspot.com/
வியக்கவைக்கும் வித்தியாசமான பர்சப்ஷன் கொண்ட பதிவர். யுத்தம் செய் புதிய யுத்தமல்ல என்ற தலைப்பில் தொட்ட கதை சுட்ட கதையை விவரித்திருக்கிறார். மேலும், அயன் படம் பார்த்துவிட்டு அய்யோ அம்மா என்று புலம்பியதைக் கேளுங்கள். இத்தகைய விமர்சனங்கள் எழுதியிருப்பவர் சுந்தர்.சியின் நகரம் படத்தை அசத்தலான மறுபக்கம் என்று வியப்பது வியப்பாகவே இருக்கிறது.

அரிதாக சில படங்களுக்கு மட்டும் விமர்சனம் எழுதுபவர் எனினும் தரமான வகையில். ஆடுகளம் படத்திற்கு விமர்சனம் எழுதியபோது தான் முதல்முறையாக இவரது விமர்சன நடையை படிக்கும் வாய்ப்பு கிட்டியது. அப்படியே கொஞ்சம் பழைய பக்கங்களை புரட்டிப் பார்த்ததில் வ குவாட்டர் கட்டிங் படத்திற்கும் எந்திரன் படத்திற்கும் தனது எளிமையான எழுத்துக்களில் விமர்சனம் எழுதியிருந்தார்.

5. ஐத்ரூஸ்'ன் பேரன்பும் பெருங்கோபமும் http://idroos.blogspot.com/
இவர் ஒரு ஆல்-ரவுண்டர் என்று சொல்லலாம். மிஷ்கினின் யுத்தம் செய் படத்திற்கு விமர்சனம் எழுதியிருக்கிறார். இன்னும் தேடிப் பார்த்ததில் பாலிவுட் படமான குஜாரிஷ் படத்திற்கும் விமர்சனம் எழுதியிருக்கிறார். அதிமுக்கியமாக பார்த்தே தீரவேண்டிய படவரிசையில் நாம் தவறவிட்ட The Shawshank Redemption படத்திற்கும் விமர்சனம் எழுதியிருக்கிறார்.

6. மெட்ராஸ் பவன் http://madrasbhavan.blogspot.com/
மீண்டுமொரு திறமையான ஆல்-ரவுண்டர். சமீபத்தில் எழுதியது பயணம் விமர்சனம். நிறைய பாலிவுட் படங்கள் பற்றி எழுதியிருக்கிறார் அவற்றுள் No One Killed Jessica விமர்சனத்தை முக்கியமானதாக குறிப்பிடலாம். ஹாலிவுட் படமான Tangled 3D விமர்சனத்தையும் கொஞ்சம் பாருங்கள். கூடிய விரைவில் உலகப்படங்களையும் ஒரு கை பார்ப்பார் என்று எதிர்ப்பார்க்கப்படுகிறது.

7. குழந்தை ஓவியம் http://aadav.blogspot.com/
கிட்டத்தட்ட ஐந்தாண்டு காலமாக பதிவுலகில் இருப்பவர், எனினும் சமீபத்தில் எந்திரனின் முன்னோடியான Bicentennial Man படத்திற்கு விமர்சனம் எழுதியபோது தான் இவரது தளத்தைப் பற்றி அறிந்துக்கொண்டேன். சமீபத்தில் வெளிவந்த நடுநிசி நாய்கள் படத்தைப் பற்றிய இவரது கருத்தைக் கேளுங்கள். இவரும் நாம் தேடிக்கொண்டிருந்த The Shawshank Redemption படம் பற்றி எழுதியிருக்கிறார்.

8. கருப்பு பெட்டி http://denimmohan.blogspot.com/
இவரும் ஒரு உலகசினிமா ஆர்வலர். உள்ளூர் சினிமா என்று பார்த்தால் எந்திரன் படத்தின் CGக்கு மட்டும் ஸ்பெஷலாக ஒரு விமர்சனம் எழுதியிருக்கிறார். பல உலக சினிமாக்களுக்கு விமர்சனம் எழுதியிருந்தாலும் வலைச்சரத்தில் அறிமுகப்படுத்தக்கூடிய இடுகை என்றால் After Shock என்ற சீனப்படத்தை குறிப்பிடலாம். சினிமா தவிர்த்து இவர் எழுதிய இடுகைகளில் விசித்திரங்கள் அதிகம் பாதித்தது.

9. தூரத்தே பெய்யும் மழை http://sumohan.blogspot.com/
வித்தியாசமான சில உலகப்படங்களுக்கு விமர்சனம் எழுதி நம் கவனத்தை ஈர்க்கிறார். சமீபத்தில் எழுதிய Kundun என்னும் ஆங்கிலப்பட விமர்சனத்தின் வாயிலாக தள அறிமுகம் கிடைத்தது. மேலும் Samsara, Himalaya என்று திபெத்திய படங்கள் இரண்டிற்கு விமர்சனம் எழுதியிருக்கிறார். இங்கே இணைப்பு கொடுத்துள்ள மூன்று படங்களுக்குமே ஒரு ஒற்றுமை இருக்கிறது தெரியுமோ...?

10. உளவாளி http://ulavali.blogspot.com/
பதிவுலகிற்கு புதியவர். இதுவரை எழுதியுள்ள ஆறு இடுகைகளில் ஐந்து உலக சினிமா பற்றியவை. டெத் நோட் என்ற ஜப்பானிய பட விமர்சனத்தையும், ரெக் என்ற ஸ்பானிஷ் பட விமர்சனத்தையும் தவறவிடாதீர்கள். சினிமா தவிர்த்து நிலவில் கால்வைத்தது உண்மையா..? என்னும் இடுகை பிரமாதப்படுத்துகிறது. எழுத்துப்பிழைகளை மட்டும் தவிர்த்தால் நலம்.

போனஸ்:
ஆறாவது எண்ணில் அறிமுகப்படுத்திய அதே மெட்ராஸ் பவன் சிவக்குமார் தான். அவரது மற்றொரு தளமான நண்பேன்டா வலைப்பூவில் தமிழ் சினிமாவின் தலைசிறந்த பத்து படங்கள் குறித்து எழுதியிருக்கிறார். மேலும், 2010ம் ஆண்டின் திரை விருந்து என்று ஏழு பாகங்கள் கொண்ட தொகுப்பை எழுதியிருக்கிறார். இவை இரண்டுமே தவறவிடக்கூடாத அதிமுக்கியமான சினிமா இடுகைகள்.

டிஸ்கி: இன்றைய இரண்டாவது இடுகையாக வலைச்சரத்திற்காக நான் மிகவும் ரசித்து எழுதி ஒரு இடுகையை தயார் செய்து வைத்திருக்கிறேன்... மற்றபடி கன்டென்ட் சர்ப்ரைஸ்.
என்றும் அன்புடன்,
N.R.PRABHAKARAN

41 comments:

  1. எனக்குத் தான் சுடு சோறு சாப்பிட்டுட்டு வரட்டுமா...

    அன்புச் சகோதரன்...
    ம.தி.சுதா
    பாத்திரமின்றி, விறகின்றி சுடச்சுட தேநீர் தயாரிக்கலாம் (கண்டுபிடிப்பு)

    ReplyDelete
  2. நல்ல அறிமுகமுங்க அனைவருக்கும் வாழ்த்துக்கள்...

    ReplyDelete
  3. ஃஃஃஃஃஇன்றைய இரண்டாவது இடுகையாக வலைச்சரத்திற்காக நான் மிகவும் ரசித்து எழுதி ஒரு இடுகையை தயார் செய்து வைத்திருக்கிறேன்... மற்றபடி கன்டென்ட் சர்ப்ரைஸ்ஃஃஃஃ

    என்ன பீபீ அது உங்களுக்க நம்மட B.P ஐ உயர்த்துவதே புழப்பா போச்சு...

    ReplyDelete
  4. @ ♔ம.தி.சுதா♔
    // என்ன பீபீ அது உங்களுக்க நம்மட B.P ஐ உயர்த்துவதே புழப்பா போச்சு... //

    கொஞ்சம் பொறுத்துக்கோங்க... சாயுங்காலம் ரிலீஸ் பண்ணிடுறேன்...

    ReplyDelete
  5. அட அனைவரும் எனக்குப் புதிய அறிமுகங்கள்.

    ReplyDelete
  6. அனைவருக்கும் வாழ்த்துக்கள்...

    உங்களுக்கு நன்றிகள் பல.. :))

    ReplyDelete
  7. This comment has been removed by the author.

    ReplyDelete
  8. நம்மளையும் ஒரு ஆளா மதிக்கராங்கோ..... ஏதோ விளையாட்டா எழுத ஆரம்பித்தது,ஹாரர் மட்டும் எழுதி வந்த எனக்கு....உங்கள் அறிமுகம் கொஞ்சம் யோசிக்க வைத்துள்ளது நண்பரே........இனி கொஞ்சம் களத்தில இறங்கி பட்டய கிளப்பலாம்னு இருக்கேன்...... BTW மிக்க நன்றி நண்பரே..........

    ReplyDelete
  9. @ டெனிம்
    // நம்மளையும் ஒரு ஆளா மதிக்கராங்கோ..... ஏதோ விளையாட்டா எழுத ஆரம்பித்தது,ஹாரர் மட்டும் எழுதி வந்த எனக்கு....உங்கள் அறிமுகம் கொஞ்சம் யோசிக்க வைத்துள்ளது நண்பரே........இனி கொஞ்சம் களத்தில இறங்கி பட்டய கிளப்பலாம்னு இருக்கேன்...... BTW மிக்க நன்றி நண்பரே.......... //

    இந்த இடுகையின் காரணமாகத்தான் பார்த்தே தீரவேண்டிய படங்கள் இடுகையில் உங்கள் இணைப்புகளை சேர்க்கவில்லை... நல்லா பட்டைய கெளப்புங்க... உங்ககிட்ட இருந்து நிறைய எதிர்பார்க்கிறோம்...

    ReplyDelete
  10. மற்றும் ஒரு முக்கியமான தகவலை இங்கு சொன்னால் நன்றாக இருக்கும் என நினைக்கின்றேன்.....சக பதிவரான நம்ம கொளந்தை யை அனைவருக்கும் தெரியும் என நினைக்கிறேன்.... அவரது தந்தை கடந்த வாரம் மரணமடைந்து விட்டார்... அவரது ஆத்மா சாந்தி அடைய மனமார கடவுளை வேண்டிக்கொள்வோம்..... பல நாட்களாக அவர் உடல் நிலை சரி இல்லாமல் இருந்தார்,இந்த நேரத்தில் அவருக்கு நமது ஆறுதலைத் தவிர வேறேதும் தேவைஇல்லை.......விரைவில் அவர் பழைய நிலைமைக்கு வந்துவிடுவார் என நம்புவோம்.

    ReplyDelete
  11. @ டெனிம்
    // சக பதிவரான நம்ம கொளந்தை யை அனைவருக்கும் தெரியும் என நினைக்கிறேன்.... அவரது தந்தை கடந்த வாரம் மரணமடைந்து விட்டார்... //

    அவருக்கு எனது ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துக் கொள்கிறேன்...

    ReplyDelete
  12. அறிமுகத்திற்கு நன்றி நண்பரே... பிழை இல்லாம எழுதலாம்னு தான் நெனைக்கிறேன்... என் வாத்தி அப்பொவே சொன்னாரு தமிழ் ஒழுங்கா படிடா இல்லன உருப்படமாட்டனு.. கேக்கலையே.....

    ReplyDelete
  13. அனைவருக்கும் வாழ்த்துக்கள்...

    பகிர்வுக்கு நன்றி

    உங்களுக்கும் எனது வாழ்த்துக்கள் நண்பரே

    ReplyDelete
  14. தவிர்க்க முடியாத விஷயம் சினிமா... அனைவருக்கும் வாழ்த்துகள்.

    ReplyDelete
  15. ஒரு சில ..சாரி...பல அருமையான பதிவர்கள் வெளிச்சத்துக்கு வராமல் இருக்காங்கங்கறது உண்மை...இந்த பதிவுலையே ஒரு சிலரை தவிர மற்ற நல்ல பதிவர்களை அறிமுகம் செய்ததற்கு நன்றி...வலைச்சரத்துகும் நன்றி...பிரபா...வித்யாசமா ஒவ்வொரு நாளிலும் கொஞ்சம் unique ஆ மெனக்கெட்டு செஞ்சிங்க...செய்றிங்க...வாழ்த்துக்கள்...

    ReplyDelete
  16. எனக்கு பழைய சோறும் கடிச்சுக்க வெங்காயமும் இருந்தாலே போதும்.. ! ம.தி.சுதா.. ! மற்றபடி பதிவு எழுதிய விதம் மிக்க அருமை..!

    ReplyDelete
  17. அறிமுகப்படுத்தியதற்கு நன்றி நண்பரே.. நான் அனைத்து படங்களையும் ஒரே
    கண்ணோட்டத்தில் பார்ப்பத்தில்லை. எனக்கு Level of expectation ஒவ்வொரு ஹீரோவுக்கும், ஒவ்வொரு டைரக்டருக்கும் மாறுபடும். நகரம் படத்தில் சுந்தர்.Cயிடம் எதிர்பார்த்தது இருந்தது. அயன் படத்தில் சூர்யாவிடமும், யுத்தம் செய் படத்தில் மிஷ்கினிடமும் எதிர்பார்த்தது இல்லை. அவ்வளவுதான். பொதுவான கண்ணோட்டத்தில் அனைத்து படங்களையும் ஒரே தராசில் எடை போடுவதில் எனக்கு உடன்பாடு இல்லை.

    ReplyDelete
  18. இந்தவாரம் முழுவதும் பயனுள்ள வாரமாகவே இருக்கிறது.வாழ்த்துக்கள் பிரபா...
    நம்ம கடையில் இன்று
    என்னவா பீட்டர் விடுறாங்க இந்த பசங்க....

    ReplyDelete
  19. அனைவருக்கும் என் வாழ்த்துக்கள் ..........

    ReplyDelete
  20. அனைவருக்கும் வாழ்த்துக்கள்...

    ReplyDelete
  21. அனைவருக்கும் வாழ்த்துகள்!
    உங்களுக்கு நன்றி!!

    ReplyDelete
  22. முன்னாடி போட்டு இருந்த கம்மென்ட் டில் சின்ன typo error...
    இப்ப ஓகே...
    ஒரு சில ..சாரி...பல அருமையான பதிவர்கள் வெளிச்சத்துக்கு வராமல் இருக்காங்கங்கறது உண்மை...இந்த பதிவில் மற்ற நல்ல பதிவர்களயும் அறிமுகம் செய்ததற்கு நன்றி...வலைச்சரத்துகும் நன்றி...பிரபா...வித்யாசமா ஒவ்வொரு நாளிலும் கொஞ்சம் unique ஆ மெனக்கெட்டு செஞ்சிங்க...செய்றிங்க...வாழ்த்துக்கள்...

    ReplyDelete
  23. செய்வதை திருந்த செய்கிறீர்கள் . வாழ்த்துக்கள்

    ReplyDelete
  24. பல புதிய நண்பர்களை காணமுடிகிறது... என்னை அறிமுகப்படுத்தியமைக்கு நன்றி பிரபா..

    ReplyDelete
  25. இன்று ஒவ்வொரு பதிவுக்கும் போய் பார்க்கிறேன்.

    ReplyDelete
  26. எங்கள் அனைவைரையும் அறிமுகம் செய்ததற்கு மிக்க நன்றி பிரபா. பிற நண்பர்களின் திரை விமர்சனங்களையும் படிக்க நல்ல வாய்ப்பை ஏற்படுத்தி தந்துள்ளீர்கள்.

    ReplyDelete
  27. நன்றி திரு.பிரபாகரன் அவர்களே. என்னையும் ஒரு பதிவராக மதித்து, என் எழுத்துக்களை கௌரவபடுத்தியிருக்கிறீர்கள்.

    ReplyDelete
  28. அருமை பிரபாகர், உங்கள் சந்தேகமும், அதற்கு முத்துசிவாவின் பதிலும் ரசிக்க வைத்தன.

    ReplyDelete
  29. அனைவருக்கும் வாழ்த்துக்கள்!

    ReplyDelete
  30. உங்க பதிவுகள் அனைத்தையும் புக் மார்க் பண்ணி படிக்கனும். ( 10 நாள் ஆகும்)

    ReplyDelete
  31. வாழ்த்துக்கள்!!

    ReplyDelete
  32. @ ♔ம.தி.சுதா♔, கலாநேசன், மாணவன், டெனிம், உளவாளி, விக்கி உலகம், தமிழ் உதயம், ஆனந்தி.., தங்கம்பழனி, முத்துசிவா, ரஹீம் கஸாலி, அஞ்சா சிங்கம், வேடந்தாங்கல் - கருன், ஜீ..., பார்வையாளன், ! சிவகுமார் !, N.H.பிரசாத், பன்னிக்குட்டி ராம்சாமி, சி.பி.செந்தில்குமார், கார்த்தி

    வருகைக்கும் கருத்துகளுக்கும் மிக்க நன்றி நண்பர்களே...

    ReplyDelete
  33. @ உளவாளி
    // பிழை இல்லாம எழுதலாம்னு தான் நெனைக்கிறேன்... என் வாத்தி அப்பொவே சொன்னாரு தமிழ் ஒழுங்கா படிடா இல்லன உருப்படமாட்டனு.. கேக்கலையே..... //

    இது வேற ஒரு களம்... இங்கே மிகப்பெரிய தமிழறிஞன் கூட தடுமாறுவான்... Phonetics சம்பந்தப்பட்ட விஷயம்... உதாரணத்திற்கு நாம் Cleopatra என்று ஆங்கிலத்தில் டைப் செய்தால் அது ச்லேஒப்பற்ற என்று வரும்... எனவே Kiliyopaatraa என்று டைப் செய்து கிளியோபாட்ரா என்று வரவைக்க வேண்டும்... எல்லாம் அனுபவம் மட்டுமே...

    ReplyDelete
  34. @ ஆனந்தி..
    // unique ஆ //

    இந்த ஒரு சொல்லுக்காகவே இன்னும் நிறைய செய்யலாம் மேடம்...

    // முன்னாடி போட்டு இருந்த கம்மென்ட் டில் சின்ன typo error... //

    இதெல்லாம் ஒரு பிரச்சனையா மேடம்...

    ReplyDelete
  35. @ தங்கம்பழனி
    // எனக்கு பழைய சோறும் கடிச்சுக்க வெங்காயமும் இருந்தாலே போதும்.. ! ம.தி.சுதா.. ! மற்றபடி பதிவு எழுதிய விதம் மிக்க அருமை..! //

    என்னங்க நடக்குது இங்க... இதென்ன ரோட்டோர சாப்பாட்டுக்கடையா...

    ReplyDelete
  36. @ முத்துசிவா
    // பொதுவான கண்ணோட்டத்தில் அனைத்து படங்களையும் ஒரே தராசில் எடை போடுவதில் எனக்கு உடன்பாடு இல்லை. //

    ம்ம்ம் இருக்கட்டும்... திரை விமர்சனங்களை பொருத்தமட்டில் இதுமட்டும் தான் சரி என்று எதுவுமே இல்லை... அனைவர் கருத்துக்களையும் மதிக்கிறேன்...

    ReplyDelete
  37. @ N.H.பிரசாத்
    // நன்றி திரு.பிரபாகரன் அவர்களே //

    திட்டாதீங்க ப்ளீஸ்...

    ReplyDelete
  38. கடந்த ஒருவார காலமாக எனக்கு வலைச்சரத்தில் ஆதரவளித்த நண்பர்கள் அனைவருக்கும் எனது நன்றிகள்... எனக்கு இந்த வாய்ப்பை வழங்கிய சீனா அய்யா அவர்களுக்கும் நன்றிகள்...

    ReplyDelete
  39. என்னை வலைப்பூவை வலைச்சரத்தில் அறிமுகப் படுதியதற்கு நன்றி நண்பரே!

    ReplyDelete
  40. ப‌யணம் - பொதுபுத்தியிலுள்ள முசுலீம் மீதான வன்மம்

    http://powrnamy.blogspot.com/2011/02/blog-post_27.html

    ReplyDelete

தமிழ் மணத்தில் - தற்பொழுது