அறிமுகம்
➦➠ by:
எஸ்.கே
அனைவருக்கும் வணக்கம்!
என்னை வலைச்சரத்தில் எழுத அழைத்த சீனா அய்யா அவர்களுக்கும் வலைச்சர நிர்வாகத்தினருக்கும் மிக்க நன்றி கூறிக் கொள்கிறேன்.
வேலைகளுக்கு நடுவே பொழுது போக்குக்காக வலைப்பூக்களை படிக்க ஆரம்பித்த எனக்கு ஆர்வம் ஏற்பட்டு, சென்ற வருடம் ஜூலை மாதம் மனம்+ வலைப்பூவை தொடங்கினேன். உளவியல் பற்றின விசயங்களை எழுதுபவதற்காகவே மனம்+ என்ற பெயரையே வைத்தேன். கூடவே வேறு ஏதாவது எழுதலாம் என தொழிற்நுட்ப விசயங்களை எழுத ஆரம்பித்து ஒரு முழுமையான தொழிற்நுட்ப பதிவராகி விட்டேன்:-)
தனித்துவமாக எதைப்பற்றியாவது எழுதவேண்டுமென்றுதான் அடோஃப் பிளாஷ் பற்றி எழுத ஆரம்பித்தேன். நிறைய நுட்பங்கள். எல்லாம் இணையம் வழியே பல இடங்களில் கற்ற விசயங்கள் எளிமையாக புரியும்படி தமிழில் சொன்னவை மட்டுமே.
பின்னர் ஃபோட்டோஷாப் பற்றியும் எழுத ஆரம்பித்தேன். சமீபத்தில் ஃபயர்வொர்க்ஸ் பற்றி எழுத ஆரம்பித்துள்ளேன். இன்னும் பல மென்பொருள்களின் நுட்பங்களைப் பற்றியும் வழிமுறைகளைப் பற்றியும் சொல்ல யோசனையுண்டு. சில மாதங்களாக சரியாக பதிவிட முடியவில்லை. அடுத்த மாதத்திலிலிருந்து பழையபடி பதிவிடுவேன்.
மற்ற விசயங்களை எழுதலாம் என நினைத்தபோது அதற்கு தனி வலைப்பூ தொடங்கலாம் என ஆரம்பித்ததுதான் எதுவும் நடக்கலாம் வலைப்பூ. கதைகள், மற்ற பதிவுகள், கட்டுரைகள் எழுதுகிறேன்.
உலக அழிவை பற்றி பலவித செய்திகள் தகவல்கள் ஆங்காங்கே வந்தவாறு உள்ளன. அவற்றில் அறிவியல் ரீதியாக சொல்லப்படும் காரணங்களை விரிவாக ஆராய்ந்து தகவல்களை சேர்த்து உலகத்தின் கடைசி நாள் என்ற பெயரில் ஒரு பிரசண்டேசனாக எழுதினேன்.
பீட்டரும் ரோஸியும் - நான் முதன் முதலில் எழுதிய சிறுகதை. கதைகளில் வித்தியாசம எழுதலாம் என முயற்சித்து எழுதிய கதைதான் கருணை. கதை முழுவதும் ரிவர்ஸிலேயே போகும்படியான ஒரு சிறுகதை இது.
நாவல் எழுதலாம் என மூன்று பாகங்கள் பதிவுலக நண்பர்களின் பெயர்களை வைத்து காலப்புதிர்களை எழுதினேன். பின்னர் இதேபோல் கொஞ்சம் பெரியதாக சினிமா போல ஒரு திரில்லர் கதை சமீபத்தில் எழுதினேன். BLACK RIVER.
மற்றபடி இங்கே இன்னும் பெரிதாக எதுவும் எழுதவில்லை. எழுதுவதற்கு பல யோசனைகள் உள்ளன. வேலைப்பளு உடல்நிலை அதற்கேற்ப ஒத்துழைக்க மறுக்கின்றன. இருப்பினும் இன்னும் நல்ல பதிவுகளை படைப்பேன் என்ற நம்பிக்கை உள்ளது.
இந்த வலைச்சர வாரத்தில் இத்துடன் சேர்த்து 14 பதிவுகள் எழுத எண்ணியுள்ளேன். ஒரு நாளைக்கு 2 வீதம் 7 நாட்களுக்கு போடலாம் என்றிருக்கிறேன். வெவ்வேறு வகைகளில் வலைப்பூக்களையும் அதிலிருந்து ஓரிரு பதிவுகள் பற்றியும் சொல்லப் போகிறேன். தங்கள் ஆதரவு கிடைக்குமென நம்புகிறேன்.
|
|
வாழ்த்துக்களுடன் காலை வணக்கம் எஸ்.கே...
ReplyDeleteசிறந்த அறிமுகங்களை எதிர்பார்க்கிறோம்..
ReplyDeleteவலைச்சர ஆசிரியர் திரு எஸ்.கே அவர்களுக்கு வாழ்த்துகள்.
ReplyDeleteவாழ்த்துக்கள் சார்
ReplyDeleteநல்வாழ்த்துகள் எஸ்.கே - தொடர்க
ReplyDeleteநட்புடன் சீனா
எனது நண்பர் எஸ்.கே எழுதும் வாரமா..?
ReplyDeleteஎஸ்.கே நீங்க ஏன் எனக்கு நினைவு படுத்தவில்லை..?
இருந்தாலும் பரவாயில்லை.. வந்து விட்டேன்.. என்னிடமிருந்து நீங்கள் தப்பா முடியாது..
ஒரு வார காலத்தில் நாளொன்றிற்கு ஒரு பதிவு எழுவதற்கே.. எனக்கு மண்டை காய்ந்துவிட்டது.. தொண்டை வறண்டு விட்டது..
நீங்க தினம் இரண்டு பதிவு எழுத முனைந்திருப்பது பாராட்டப்பட வேண்டிய ஒன்று.
வாழ்த்துக்கள்..
எஸ் கே - வாழ்த்துக்கள்
ReplyDeleteநீங்க எழுதுங்க அண்ணா. கண்டிப்பா எங்கள் ஆதரவு உங்களுக்கு உண்டு!
ReplyDeleteவாழ்த்துக்கள் எஸ் கே
ReplyDeleteநல்வாழ்த்துகள் எஸ்.கே.
ReplyDeleteவாழ்த்துக்கள் எஸ் கே....
ReplyDeleteகலக்குங்க
வாழ்த்துக்கள்
ReplyDeleteவருக...வருக... எஸ்.கே... நல் அறிமுகங்கள் தருக...
ReplyDeleteஎனது வலைபூவில் இன்று: தனபாலு...கோபாலு.... அரட்டை ரெண்டு!
வாங்க...
ReplyDeleteவாழ்த்துக்கள்!!!
வாழ்த்துக்கள்.எஸ்.கே.
ReplyDeleteதலைசிறந்த நண்பர், பதிவர் எஸ்கேவை வாழ்த்துவதில் பெருமகிழ்ச்சியும் பெருமையும் அடைகிறேன்!
ReplyDelete