மிக்க நன்றி ராமலக்ஷ்மீ - வருக எஸ்.கே
➦➠ by:
* அறிமுகம்
அன்பின் பதிவர்களே !
இன்றுடன் முடியும் வாரத்திற்கு ஆசிரியப் பொறுப்பேற்ற சகோதரி ராமலக்ஷ்மி, ஏற்ற பொறுப்பினை மன நிறைவுஇடன் நிறைவேற்றி, நம்மிடமிருந்து விடை பெறுகிறார். இவர் 37 பதிவர்களை அறிமுகம் செய்து, அவர்களீன் நூறுக்கும் மேற்பட்ட இடுகைகளை அறிமுகம் செய்திருக்கிறார். முன்னூறுக்கும் மேலான மறுமொழிகள் பெற்றிருக்கிறார். இவரை வாழ்த்தி வழி அனுப்புவதில் வலைச்சரம் குழுவினர் சார்பில் பெருமை அடைகிறேன்.
நாளை 14ம்நாள் துவங்கும் வாரத்திற்கு ஆசிரியப் பொறுப்பேற்க வருகிறார் நண்பர் எஸ்.கே. இவரது முழுப் பெயர் சுரேஷ் குமார். இவர் மொழி பெயர்ப்பு வேலைகள் செய்து வருகிறார்.
மனம்+ இதுதான் இவர் முதலில் ஆரம்பித்த வலைப்பூ. உளவியல் படித்திருப்பதால் அதைப் பற்றி எழுதலாம் என்றே இப்பெயருடன் ஆரம்பித்திருக்கிறார். கூட இவர் கற்ற சில கணிணி தொடர்பான தகவல்களை எழுதலாம் என ஃபிளாஷ் பற்றி எழுத ஆரம்பித்து நாளடைவில் ஒரு தொழிற்நுட்ப பதிவராகி விட்டார்.
கதைகள் எழுதும் ஆர்வம் இருந்ததால் அதை எழுதுவதற்காகவும் மற்ற பதிவுகளுக்காகவும் எதுவும் நடக்கலாம் என்ற பெயரில் மற்றொரு வலைப்பூவையும் சில மாதங்களுக்கு பிறகு ஆரம்பித்திருக்கிறார்.
கதைகள் எழுதும் ஆர்வம் இருந்ததால் அதை எழுதுவதற்காகவும் மற்ற பதிவுகளுக்காகவும் எதுவும் நடக்கலாம் என்ற பெயரில் மற்றொரு வலைப்பூவையும் சில மாதங்களுக்கு பிறகு ஆரம்பித்திருக்கிறார்.
நண்பர் எஸ்.கேயினை வருக வருக - அறிமுகங்களை அள்ளித் தருக என வாழ்த்தி வரவேற்பதில் மகிழ்ச்சி அடைகிறேன்.
நல்வாழ்த்துகள் ராமலக்ஷ்மி
நல்வாழ்த்துகள் எஸ்,கே
நட்புடன் சீனா
|
|
சோதனை மறுமொழி
ReplyDeleteஆசிரியர் பொறுப்பு அளித்த சீனா அய்யா அவர்களுக்கும் வலைச்சர நிர்வாகத்தினர் அனைவருக்கும் மிக்க நன்றி!
ReplyDeleteஎஸ்.கே அவர்களுக்கு நல்வரவு!
ReplyDeleteஎஸ் கே யின் பதிவுகளும்... பின்னூட்டங்களும் சுவாரஸ்யமானவை...
ReplyDeleteஒரு சுவையான வித்தியாசமான வலைச்சர வாரத்தை நிச்சியம் எதிர்பார்க்கலாம்!
வருக வருக எஸ் கே!
மிக்க நன்றி. வாழ்த்துக்கள் எஸ்.கே!
ReplyDeleteசீனா அய்யா
ReplyDeleteசெங்கோவி
பிரபு எம்
ராமலக்ஷ்மி
அனைவருக்கும் மிக்க நன்றி!
வாழ்த்துக்கள் வலைச்சர ஆசிரியர் எஸ்.கே அவர்களுக்கு.
ReplyDelete