சென்று வருக எஸ்.கே ; வருக ! வருக ராஜா ஜெய்சிங்.
➦➠ by:
* அறிமுகம்
அன்பு நண்பர்களே !
இன்றுடன் முடியும் வாரத்திற்கு ஆசிரியப் பொறுப்பேற்ற அருமை நண்பர் சுரேஷ் குமார் ( எஸ்.கே), தான் ஏற்ற பொறுப்பினை அழகாக, மன நிறைவுடன் நிறைவேற்றி, நம்மிடமிருந்து விடை பெறுகிறார். இவர் 14 இடுகைகள் இட்டு ஏறத்தாழ இருநூறுக்கும் மேலாக மறுமொழிகள் பெற்றிருக்கிறார்.
இவர் வித்தியாசமான முறையில், தொழில்நுட்பம், நகைச்சுவை, கதை, கவிதை, சமூகம், அறிவியல், சினிமா, காமிக்ஸ், புகைப்படம், பொழுது போக்கு ( பாடல், ஜோக், புதிர் மற்றும் காணொளிகள்), சிறுவர்கள் என பல்வேறு தலைப்புகளில், பல புதிய பதிவர்களைத் தேடிப் பிடித்து அறிமுகம் செய்திருக்கிறார். ஏறத்தாழ நூற்று இருபத்தைந்துக்கும் மேலாக பதிவர்களையும் இடுகைகளையும் அறிமுகப் படுத்தி உள்ளார். இவரது அயராத உழைப்பு பாராட்டுக்குரியது.
அருமை நண்பர் எஸ்,கேயினை, நன்றி கலந்த நல்வாழ்த்துகள் கூறி வழி அனுப்புவதில் பெருமை அடைகிறோம்.
நாளை 21.03.2011 துவங்கும் வாரத்திற்குப் பொறுப்பேற்க இசைந்துள்ள, ஈரோட்டினைச் சார்ந்த, 22 வயது இளைஞர் ராஜா ஜெய்சிங்கினை வருக வருக என வரவேற்பதில் பெரு மகிழ்ச்சி அடைகிறோம். இவர் தரவியல் ஆய்வாளராக பணி புரிகிறார். பெரும்பாலும் சிறுகதைகளூம் கவிதைகளும் 2009 ஆகஸ்டு முதல் அகல்விளக்கு என்னும் பதிவினில் எழுதி வருகிறார்.
நல்வாழ்த்துகள் எஸ்.கே
நல்வாழ்த்துகள் ராஜா ஜெய்சிங்
நட்புடன் சீனா
|
|
சோதனை மறுமொழி
ReplyDeleteநன்றி எஸ்.கே.... வருக ராஜா... வாழ்த்துகள்.
ReplyDeleteஎனது வலைபூவில் இன்று: வலைச்சரம் ஆசிரியர் சீனா சிறப்புப் பேட்டி - இரண்டு
நண்பர் எஸ்.கேவிற்கு பாராட்டும்.. நன்றிகளும்.
ReplyDeleteபுதிய ஆசிரியருக்கு வணக்கமும், வாழ்த்தும்..
அன்புள்ள இளவரசரே வருக ,
ReplyDeleteஉங்கள் பொறுப்பிற்கு ,பணி சிறக்க வாழ்த்துக்கள்
அன்புடன் ,
கோவை சக்தி
பட்டமேற்க வரும் ராஜாவிற்கு வாழ்த்துக்கள்
ReplyDeleteதரவியல் ஆய்வாளர்
ReplyDeleteராஜா இதைப்பற்றி கொஞ்சம் விளக்கமாக சொல்லுங்களேன். எந்த துறை?
வாழ்த்துகள் எஸ்.கே.... வருக ராஜா...
ReplyDeleteநன்றி அனைவருக்கும்!
ReplyDeleteராஜா அவர்களுக்கு வாழ்த்துக்கள்!
வாழ்த்துகள்
ReplyDeleteபாராட்டுக்கள்,எஸ்கே, அருமையான, முற்றிலும் வித்தியாசமான அறிமுகங்கள்!
ReplyDeleteவாழ்த்துக்கள் இந்த வார ஆசிரியார் ராஜ ஜெய்சிங் அவர்களுக்கு!
வாய்ப்பளித்த அய்யா அவர்களுக்கும், வாழ்த்து தெரிவித்த அனைவருக்கும் என் நன்றிகள்...
ReplyDeleteதொடர்வோம்....
@ஜோதிஜி...
ReplyDeleteData Analyzer என்பதுதான் தமிழ்ப்படுத்திக் கூறப்பட்டிருக்கிறது...
எனது துறை : ஆய்வறிக்கைகளுக்கான புள்ளியியல் மேலாண்மை...