சினிமா
➦➠ by:
எஸ்.கே
வலைப்பூக்களில் அதிகம் படிக்கப்படும் தகவல்கள் சினிமா சம்பந்தப்பட்டவையாக இருக்கும். அப்படிப்பட்ட சினிமா சம்பந்தமான தகவல்கள்/விமர்சனங்களை எழுதும் வலைப்பூக்களை இங்கே அறிமுகப்படுத்துகிறேன்.
|கீதப்ப்ரியன்|Geethappriyan| |
---|
கீதப்பிரியன் அவர்கள் சினிமா, சமூகம் போன்ற பல பிரிவுகளில் பதிவுகள் எழுதி வருகிறார். இவரின் விமர்சனங்கள் விரிவாகவும் ஒரு தாக்கத்தை ஏற்படுத்தும் விதத்திலும் இருக்கும். உதாரணம்: ஷிண்ட்லர்ஸ் லிஸ்ட் |
கொழந்த's blog.. |
கொழந்த அவர்கள் சினிமா, இலக்கியம், அறிவியல் சம்பந்தமான பதிவுகள் எழுதி வருகிறார். இவரின் விமர்சனங்கள் புரியும்படியும் கோர்வையாகவும் இருக்கும். உதாரணம்: மால்கம் X |
CENTER of DISTRACTION - A "சென்"தமிழ் Blog |
கா.கி. அவர்கள் சினிமா, இலக்கியம், படைப்பு, சமூகம் என கலவையாக எழுதி வருகிறார். இவரின் விமர்சனங்கள் விளக்கமாகவும் புரியும்படியும் இருக்கும். உதாரணமாக இன்சப்சன் படம் பற்றி எல்லா வித கேள்விகள் சந்தேகங்களுக்கும் விளக்கமளிப்பத்தை படியுங்கள். |
பாரதிக்குமார் |
பாரதிக்குமார் அவர்கள் சினிமா, இலக்கியம், சமூகம், படைப்பு போன்ற பல பிரிவுகளில் எழுதி வருகிறார். இவரின் விமர்சனங்கள் நன்கு புரியும்படியும் அழகாகவும் இருக்கும் உதாரணம்: குட்பை சில்ரன் |
பிற மொழிப்படங்கள்... தமிழில்... |
ஜெய் அவர்கள் முழுக்க சினிமா பற்றி மட்டுமே எழுதுகிறார். சமீப காலமாக இவர் எழுதவில்லை. மீண்டும் எழுத வருவார் என நம்புகிறேன். இவரின் விமர்சனங்களும் வித்தியாசமான உணர்வை அளிக்கும். உதாரணம்: Monento |
உலக சினிமா ரசிகன் |
உலக சினிமா ரசிகன் அவர்களின் விமர்சனங்கள் தரமாகவும் வித்தியாசமாக்வும் இருக்கும். உதாரணம்: உதிரிப் பூக்கள். இவர் சினிமா, சமூகம், இலக்கியம் போன்ற பிரிவுகளில் எழுதி வருகிறார். |
ஹாலிவூட் பார்வை |
ஹாலிவூட் மயூ அவர்கள் சினிமா, இலக்கியம் சமூகம் ஆகியவை தொடர்பாக எழுதி வருகிறார். இவரின் விமர்சனங்கள் பொருள் நிறைந்தும் ஆழமாகவும் இருக்கும். உதாரணம்: 21 |
Lucky Limat |
லக்கி லிமட் அவர்கள் தொழிற்நுட்ப தகவல்களுக்கென தனி வலைப்பூ வைத்திருக்கிறார். இந்த வலைப்பூவில் சினிமா பற்றி மட்டுமே எழுதுகிறார். இவரின் விமர்சனங்களும் வித்தியாசமாகவும் புதுமையாகவும் உள்ளன. உதாரணம்: 12:01Car and vanCar and vanCar and vanCar and vanCar and van |
JZ சினிமா |
JZ அவர்கள் சினிமா, அறிவியல் பற்றி எழுதுகிறார். விளையாட்டு தகவல்களுக்காக தனி வலைப்பூ வைத்திருக்கிறார். இவரும் சமீப காலமாக எழுதவில்லை. மீண்டும் எழுத வருவார் என நம்புகிறேன். இவரின் விமர்சனங்களும் வித்தியாசமாகவும் தகவல் நிறைந்தும் இருக்கும். உதாரணம்: Shutter Island |
Tha Cinema - கனவுகளின் நீட்சி.. |
Memories of Murder | அவர்கள் பெரும்பாலும் சினிமா பற்றிய பதிவுகளே எழுதி வருகிறார். இவரின் விமர்சனங்கள் எளிமையாகவும் புரியும்படியும் உள்ளன. உதாரணம்:
யாழிசை ஓர் இலக்கிய பயணம்...... |
அகிராவின் ‘DREAMS’ | அவர்கள் சினிமா, இலக்கியம் சமூகம் பற்றிய பதிவுகள் எழுதி வருகிறார். இவரின் விமர்சனங்கள் புதிதாகவும் சிறப்பகவும் உள்ளன. உதாரணம்:
தமிழ் சினிமா பதிவுகளை உதாரணமாக அளிக்காததற்கு காரணம் அவற்றை நாம் பெரும்பாலும் படம் ரீலீஸ் ஆகும் சமயம் மட்டுமே படிப்போம் என்பதுதான்:-)))
அடுத்து காமிக்ஸ் பற்றிய வலைப்பூக்களை அறிமுகப்படுத்துகிறேன்.
|
|
காலை வணக்கங்கள் எஸ்.கே!
ReplyDeleteஅறிமுகமானவர்களுக்கு வாழ்த்துகள்!
ReplyDeleteஇன்றைய அறிமுகங்களுக்கு வாழ்த்துக்கள்
ReplyDeleteஇப்பலாம் நா அவ்வளா சினிமா பாக்குறதில்லை..
ReplyDeleteஇருந்தாலும்.. நீங்க அறிமுகப் படுத்துற விதம் அருமை.. அதை கண்டிப்பா பாராட்டணும்..
நல்ல அறிமுகங்கள் எஸ் கே.... எல்லாருமே புதுசு எனக்கு....
ReplyDeleteநன்றி எஸ்கே.இன்னும் சிறப்பாக செயல்பட தாங்கள் காட்டிய பரிவு... என்னை ஊக்கப்படுத்தியுள்ளது.
ReplyDeleteமிக்க நன்றி எஸ்.கே... :))))) உங்களுக்கு ஒரு சிலை ரெடி பண்றேன் :))
ReplyDeleteஅன்புள்ள நண்பா எஸ்கே
ReplyDeleteவலைச்சரம் ஆசிரியர் வாரத்துக்கு வாழ்த்துக்கள்.மிகச்சிறப்பான பகிர்வு.
சினிமா விமர்சமபதிவர்களை ஒருங்கே அறிமுகப்படுத்தியமைக்கு மிக்க நன்றி.சீனா ஐயாவுக்கும் நன்றி
அறிமுகங்கள் அருமை எஸ்.கே.. நன்றி..
ReplyDeleteநன்றி எஸ்.கே
ReplyDeleteஎஸ் .கே ..,
ReplyDeleteI really missed that schindlers list review ..,:((((((
NAAN ULGA CINEMA PAARPATHAKKU THOONDIYA ..,PADAM ..,ATHILUM ''AMON GOETH '' character la nadichirukkum RALPH FIENNES nadippu chance less..,THANKS S.K.
வலைச்சரம் இந்த வாரம் ஆசிரியர் பொறுப்பேற்ற உங்களுக்கு வாழ்த்துக்கள் எஸ்கே.வலைசரத்தில் என்னை அறிமுகப்படுத்தியமைக்கு நன்றி இன்னும் சிறப்பாக செயல்பட தாங்கள் காட்டிய பரிவு... என்னை ஊக்கப்படுத்தியுள்ளது.
ReplyDeleteநன்றி எஸ் கே :)
ReplyDeleteஅறிமுகங்கள் அருமை எஸ்.கே.. நன்றி..
ReplyDeleteAjith stills