07 - 09 - 2015 முதல் ஆசிரியர் பொறுப்பேற்பவர்

ரிஷபன்
இவரின் வலைப்பூ

ரிஷபன்

முந்தைய ஆசிரியர்கள்


சீனா ... (Cheena) - அசைபோடுவது

சிந்தாநதி

நன்றி!

திரட்டிகளின் தொகுப்பு

:: தமிழ் திரட்டுகளின் சங்கமம்<br/>:: Tamil blogs, news, ezines

வலைப்பதிவர் உதவிப்பக்கம்

தமிழில் எழுத மென்பொருள்

fb like

ஞானாலயா = புதுக்கோட்டை

www.gnanalaya-tamil.com
வலைச்சரத்தில் வெளியிடப்படும் இடுகைகள் வலைச்சரக் குழுவினரால் தணிக்கைக்கு உட்படாது. ஆனால், வலைச்சர விதிக்கு உட்படாத இடுகைகளை முன்னறிவிப்பின்றி நீக்க வலைச்சரக் குழுவினருக்கு உரிமை உள்ளது

Wednesday, March 23, 2011

சுயம் - ஒரு அறிமுகம்...

நான் என்பதாக அறிமுகம் செய்து கொள்ளப் பயன்படுத்துவது "ராஜா ஜெய்சிங்". எம் அம்மையும் அப்பனும் ஈன்ற அவர் உயிர்க்கு இட்ட பெயர்தான் அது. ஒத்த விசைகள் கொண்ட காந்தப்புலம் ஒன்றையொன்று விலக்குவதுபோல், ஒன்றோடொன்று வேறுபட்ட இருவேறு சமூகங்களை இணைக்கும் ஒற்றை இரும்புப்புள்ளியாகப் பெற்றெடுத்தனர்.

அடர்ந்த மலைக்காடுகளிலும், அங்கு சுற்றிக்கொண்டிருக்கும் மென்தென்றல் காற்றுடனும் என் சிறுவயதுப் பருவத்தை தொலைத்தேன். பிழைப்புக்காகப் பெயர்ந்த சமூகத்தின் ஓர் அங்கமாக, வாழ்வை எதிர்நோக்கியபடி தற்போது நகரவாசம். மலையின் வனப்புகளை நெஞ்சில் நிறைத்து நடமாடிக்கொண்டிருக்கும் நகரத்து மனிதர்கள் வெகுசிலரில் நானும் ஒருவன்.

பகல்முழுதும் அலைந்து திரிந்து பின் பட்டியில் அடைபடும் ஆடுகளின் மனதையொத்தது என் நிலை. மீண்டும் கிராமங்களில் உறைந்து, உறக்கம் கொள்ளும் தருணம் எதிர்பார்த்துக் காத்திருக்கும் ஒரு சீவன்.

என் எண்ணங்களை வலையில் பதிக்க எண்ணியபோது தோன்றியதுதான் இந்த அகல்விளக்கு எனும் புனைப்பெயர். ஒற்றை மண்சுவர் தாங்கிய மாடம் சூழ எழுப்பிய ஓர் குடிசை. அங்கு நித்தமும் நிறைந்தது அகலின் ஒளி வெளிச்சம். அந்த வெளிச்சத்தில்தான் பிழைத்துக் கிடந்தது என் பள்ளிப்பிராயம்.

பள்ளிப்பிராயம் கடந்த பின் பெயர்ந்து விட்ட சில நண்பர்களை மீண்டும் சேர்த்த பெருமை இந்த இடுகைக்கு உண்டு - என் அவள்.

வலையுலகிலும், மின்னஞ்சல்குழுமங்களிலும் எனக்கொரு நற்பெயரைப் பெற்றுத்தந்த இன்னொரு இடுகை - வசனக்கோயில். 

அனைத்தும் தாண்டி தற்போதைய சமீபத்திய இடுகை - வெயிற்காலம்.

என் சில கவிதைகள்...

 
***************************-

சுயத்தைப் பற்றியெழுதும் இவ்வேளையில், என்னை வளர்த்த சில மோதிரக்கைகளுக்கு நன்றி நவிலும் நல்லதோர் தருணமாக, இதுவன்றி வேறெதும் இருக்கவியலாது.

வலைச்சரம் - பெருமைக்கும், பிரம்மிப்புக்கும் உரித்தான இடம். மரகதங்களும், மாணிக்க மலர்களும் அலங்கரித்த கோபுரம். அத்ததைய பெருமைமிகு கோபுரத்தின் உச்சியில் வைக்கப்பட்ட ஓர் சிறு கூழாங்கல்லாக உணர்ந்துகொண்டிருக்கிறேன்.

வளர்ந்த மாணவனை வகுப்பெடுக்கச் சொல்லிவிட்டு தள்ளி நின்று பார்க்கும் இணையில்லா ஆசிரியராய் திரு.சீனா அய்யா அவர்கள். எம்மை இந்த சிம்மாசனத்தில் ஏற்றி விட்டு அழகுபார்க்கிறார்.

அவருக்கு நன்றி என்ற ஒற்றைச்சொல்லால் குருதட்சனை கொடுப்பது முறையா எனத்தெரியவில்லை.

ஆனாலும் இப்போது அவர் இட்ட பணியை செவ்வனே நிறைவேற்றுவதுதான் சாலச் சிறந்த கைமாறாக இருக்கும் என எண்ணுகிறேன்...

வலைச்சரத்தில் வாய்ப்பளித்த அதன் நிர்வாகிகளுக்கும், திரு.சீனா அய்யா அவர்களுக்கும் என் நன்றியை உரித்தாக்கி இப்பணியைத் துவக்குகிறேன்...

11 comments:

  1. வாங்க...லேட்டா வந்தாலும் சும்மா அதிரடியா வந்திருக்கிங்க....வாழ்த்துக்கள்.


    எனது வலைபூவில் இன்று: தனபாலு...கோபாலு.... அரட்டை மூணு!

    ReplyDelete
  2. வருக வருக - ஜெய்சிங் - தொடர்க இடுகைகளை - பணிச்சுமை - திருவிழா - தந்தையின் உடல் நிலை - இத்தனைக்கும் இடையே வலைச்சர ஆசிரியர் பொறுப்பு ம்ம்ம்ம் - வாழ்க வளமுடன். நட்புடன் சீனா

    ReplyDelete
  3. //நான் என்பதாக அறிமுகம் செய்து கொள்ளப் பயன்படுத்துவது "ராஜா ஜெய்சிங்".//

    -- பெயரை இப்படியும் சொல்லிக்க முடியும்ன்னு உங்க்கிட்ட இருந்து தான் கத்துக்கனும்..

    உங்க 'அவன் என்னும் உன்னதம்' - பதிவைப் சொல்லாமல் விட்டுவிட்டீர்களே!!!...


    தொடர்ந்து கலக்குங்க...

    ReplyDelete
  4. வாழ்த்துகள் தொடருங்கள்

    ReplyDelete
  5. வாய்யா வா... இனி நம்ம டேஸ்ட்டுக்கு தகுந்த பதிவுகளா ஒரு வாரத்துக்கு கிடைக்கும்.. ஜாலி....
    :-)

    ReplyDelete
  6. @ பிரகாஷ்
    @ சீனா அய்யா
    @ ஹாசிம்
    @ கோபால்
    @ ஸ்வர்ணரேகா
    @ முரளிகுமார்

    அனைவருக்கும் நன்றி...


    @ஸ்வர்ண ரேகா... அட ஆமாங்க விட்டுட்டேன்ல... :-)

    @முரளி - கண்டிப்பா கலக்கிப்புடலாம்...:-)

    ReplyDelete
  7. ராஜா... சிறப்பான அறிமுகம்.. ஆசியருக்கு வாழ்த்துக்கள்.. தொடருங்கள்..

    ReplyDelete
  8. ராஜா ஜெய்சிங் என்கிற ராசா

    வாழ்த்துக்கள்

    மேன்மேலும் உன் எழுத்தில் ஏற்றங்கள் பெருகட்டும்

    ReplyDelete
  9. வாழ்த்துகள் ராஜா. அறிமுகமே கலக்கல். இந்த ஒரு வாரம் விருந்துதான்:)

    ReplyDelete
  10. - இரும்புப்புள்ளி -

    நல்ல அழகான கைகுலுக்கல்

    ReplyDelete

தமிழ் மணத்தில் - தற்பொழுது