முத்தான முன்றாம் நாள்
➦➠ by:
Ramani
முதலில் என்னைக் கவர்ந்த ஒரு சிறுகதைச் சுருக்கம்
ஒரு சமயம் ஒரு நாட்டில் ஒரு கிராமத்தில்
பல வருடங்களாக மழை பொழியாது
பஞ்சம் தலைவிரித்தாடுகிறது
அவர்களும் எல்லா முயற்சிகளும் செய்து தோற்று
முடிவில் அந்த ஊரின் வயதான ஃபாதரை அணுகி
என்ன செய்யலாம் என ஆலோசனை செய்கிறார்கள்
அவரும்
" இதே போல ஒரு நிலைமை இந்த கிராமத்தில்
எங்கள்அப்பா சிறுவனாக இருந்த போது நேர்ந்ததாகவும்
ஊருக்கு வெளியில் உள்ள மைதானத்தில் பெரியவர்கள்
அனைவரும் மொத்தமாகக் கூடி
காலை முதல் மாலை வரை பிரார்த்தனை செய்ததாகவும்
அன்று மாலையே பெருமழை பெய்ததாகவும் சொல்லி கிறார்கள்
அதை வேண்டுமானால் செய்து பார்க்கலாம்
வேறு வழியில்லை " என்கிறார்
ஊர்க்காரர்களுக்கும் வேறு வழியில்லை என்பதால்சம்மதித்து
மறு நாள் காலையில் ஊருக்கு வெளியே உள்ள
மைதானத்தில் கூடி பிரார்த்தனை செய்யத் துவங்குகிறார்கள்
எல்லோரும் பிரர்ர்த்திப்பதும் வானத்தை பார்ப்பதும்
பின் ஃபாதரை பார்ப்பதுமாக இருக்கிறார்கள்
ஃபாதருக்கும் என்ன சொல்வது எனத் தெரியவில்லை
காரணம் எல்லா நாளையும் விட அன்று அதிக வெய்யில்
அடித்து நொறுக்குகிறது
அதே சமயம் ஊருக்குள் தனது இல்லத்து ஜன்னலில் அமர்ந்து
மழை வருவதைப்பார்க்கவேண்டும் என ஆவலுடன்
ஒரு சிறுமி அமர்ந்திருக்கிறாள்
திடுமென அந்தச்சிறுமிக்கு ஒரு கவலை
.எல்லோரும் கூடிப பிரார்த்தனை செய்தால் மழை வரும் என
ஃபாதர் சொலலி இருக்கிறாரே அப்படியானால் நிச்சயம்
மழை வரத்தானே செய்யும்.
அப்பா குடை எடுக்காமல் போயிருக்கிறாரே
அங்கிருந்து நனைந்து அல்லவா வர வேண்டும் என
குடையை எடுத்துக் கொண்டு மைதானம் நோக்கி
ஓடி வருகிறாள்
அவள் ஓடி வர வர குளிர்ந்த காற்று வீசத் துவங்குகிறது
மேகங்கள் திரளத் துவங்குகின்றன.
அவள் குடையுடன்மைதானத்துள் நுழைந்தவுடன்
இடியுடன் பெருமழை பெய்யத் துவங்குகிறது
மைதானத்துள் நுழைந்த சிறுமியைப் ஃபாதர்
அணைத்துக் கொள்கிறார்
பின் கூடி இருந்தவர்களை நோக்கி இப்படிச் சொல்கிறார்
"நாம் அனைவரும் கூடி இறைவனை வேண்டினால்
மழை வரும் என என் தந்தையார் சொல்லி இருக்கிறார்
செய்து பார்க்கலாமா எனச் சொன்னேன்
நீங்களும் ஃபாதர் சொல்கிறாரே செய்து பார்க்கலாம்
என இங்கே திரண்டு வந்து பிரார்த்தனை செய்து கொண்டு
வானத்தை வானத்தை பார்த்துக் கொண்டிருந்தீர்கள்
யாரும் உறுதியாக மழை வரும் என நம்பி இங்கே வரவில்லை
இதோ இந்தச் சிறுமி மட்டுமே உறுதியாக மழை வரும் என நம்பி
குடையுடன் வந்திருக்கிறாள் இப்போது பெய்யும் மழை
ஆண்டவன் இவள் நம்பிக்கைக்கு கொடுத்த வெகுமதி"
எனச் சொல்கிறார்
எல்லோரும் கனமழையில் நனைந்தபடி
வெட்கிக் குனிந்து கொள்கிறார்கள்
எதைச் செய்தாலும் நம்பிக்கையுடன் செய்யவேண்டும்
இல்லையேல் அந்தச் செயலால் எவ்வித பயனும் இல்லை
என்கிற கருத்தை மிக அழகாக இந்தக் கதை வலியுறுத்திச்
சொல்வதால் இந்தக் கதை எனக்கு ரொம்பப் பிடிக்கும்..
.உங்களுக்கு...?
--------------------------
கதையைத் தொடர்ந்து பதிவர் அறிமுகம்
கிராமத்தில் ஒருவரின் உதவியைப் பெற்று உயர்ந்தவர்கள்
முன்னேறிய பின்னும் உதவியவரை எப்போதும்
மறக்க மாட்டார்கள்உதவியவர் என்பதைச் சுருக்கமாக
உறைமோர் தந்தவர் இவர்தா ன்
இவர் இல்லாவிட்டால் நான் நிச்சயமாக
உயர்ந்திருக்க முடியாது எனச் சொல்வார்கள்
அதைப்போல பதிவுலகில் நான் நுழைந்தபோது தங்கள்
பின்னூட்டத்தின் மூலம் என்னை பாராட்டி
உயர வைத்தவர்கள் இவர்கள்
இவர்களை இன்று நினைவு கூர்வதில் பெருமிதம் கொள்கிறேன்
பதிவுலகில் இவர்களை நான் அறிமுகம் செய்வது
புரட்சித் தலைவர் .M.G.R.அவர்களை
தமிழகத்துக்கு அறிமுகம் செய்வது போலத்தான் ஆயினும்
வலைச்சர மரபு கருதி ஒரு சிறிய அறிமுகம்
1 எண்ணங்கள் http://punnagaithesam.blogspot.com/
கடந்த நான்கு ஆண்டுகளாக தொடர்ந்து வரும் இப்பதிவு ஒரு
பல்சுவைப் பதிவு .சமூகப் பிரச்சனைகளை மிகத் தெளிவான
கண்ணோட்டத்தோடு பதிவிடும் இவரது பதிவு வலைத் தளத்தில்
கவனிக்கப்படத்தக்கது என்றால் மிகையாகாது
2.RVS http://www.rvsm.in/
எழுத்தாளர் சுஜாதா அவர்களின் வின் இழப்பை
தாங்க முடியாதவர்கள்இவரது விஞ்ஞான கதைகளையும்
அதைச சொல்லிச சொல்லும் விதத்தையும்
ஒருமுறை படித்தால் நிச்சயம் ஆறுதல் கொள்வார்கள்
கதைகள் நி கழ்வுகள் சமையல் குறிப்புகள் என அசத்தும்
இவர் பதிவு இயல்பானதாகவும் ரசிக்கத் தக்கதாகவும் இருக்கும்
நான் இவரது பரம ரசிகர்
யாழ்பாணத்தைச் சேர்ந்த இவரின் பதிவில்
வெளிப்புறத் தாக்கத்தால்ஏற்படும்
எவரிடத்தும் சொல்லமுடியாத எணணச் சிதறல்கள்
அருவியாகக் கொட்டிக்கிடக்கும் .
உணர்வுப்பூ ர்வமான கவிதைகள் விரும்புவோருக்கான
அருமையான தளம் இது
5.நாஞ்சில் மனோhttp://nanjilmano.blogspot.com/
பதிவுலகின் குட்டி எம்.ஜி.ஆர் . இவர் என்றால் மிகை ஆகாது
அன்பால் அனைவரையும் கட்டிப்போட்டு பதிவுலகையே
ஒரு கலக்கு கலக்கி வருபவர் .ஒரு இளமைத் துடிப்பான
கலகலப்பான பதிவினை விரும்புவோர் இவரைத் தொடரலாம்
பதிவுலகில் அதிக நண்பர்களைப் பெற்றவரும் தரமான
பயணப் பதிவுகளை புகைப் படங்களுடனும் கொடுத்து
அசத்தும் இவரின் பதிவு அழகானது முதல் தர மானது
இவரது மனம் திறந்த பாராட்டே என் போன்ற
பல பதிவர்களுக்கு சக்தி தரும் டானிக்
7.சிவகுமாரன்http://sivakumarankavithaikal.blogspot.com/
தமிழ்த்தாயின் அருள் பெற்று கவிதை மழை பொழியும் சித்தர்
வெண் பா புலி .பதிவுலகில் கவிதை எழுத முயல்வோர்
அவசியம் இவர் பதிவைத் தொடர்வது நலம் பயக்கும்
8.கோபி ராமமூர்த்திhttp://ramamoorthygopi.blogspot.com/
ஒரு தரமான இலக்கியப் பத்திரிக்கைக்கு இணையானது என
இவர் வலைத்தளத்தைச் சொல்லலாம் .சிறுகதை சினிமா விமர்சனம்
பயணக்கட்டுரை என அனைத்து துறைகளையும் உள்ளடக்கிய,
இவரது தள ம் ஒரு பொக்கிஷம்
கவிச் சோலை என்ற வலைத்தளத்திற்கு பெயரிட்டு இருப்பது
மிக பொருத்தமே.இவரது படைப்புகளை ஒருமுறை
முழுமையாக படித்தோர் நிச்சயம் கவியாகி விடலாம்
10.மனோசாமினாதன்http://muthusidharal.blogspot.com/
சார்ஜாவில் வாழும் இவரின் பதிவுகள் அனைத்தும்
தரமான முத்துக்களே
அவரது பதிவின் பெயரான முத்துச் சிதறல் என்பதும் கூட
ஒரு காரணப பெயர்தான் என்பது
இவர் பதிவை படித்தாலே புரிந்து போகும்
பட்டியல் நாளையும் தொடரும் ............
|
|
எது செய்தாலும் நம்பிக்கையுடன் செய்ய வேண்டும் என்பதை சிறுகதை மூலமாக வலியுருத்தியிருக்கிறீர்கள்...நன்றியுடன் வாழ்த்துக்கள் சகோதரரே
ReplyDeleteவலைச்சரத்தில் அறிமுகமானவர்களுக்கு மனமார்ந்த நல்வாழ்த்துக்கள்
ReplyDeleteமாய உலக ராஜேஷ்
ReplyDeleteஉங்கள் முதல் வருகைக்கும்
வாழ்த்துக்கும் நன்றி
நன்றி ரமணி அய்யா. என்னை பற்றி சொன்னதற்கு நன்றிகள்
ReplyDeleteமிக்க நன்றி ரமணி சார். என் வலைப்பூ அறிமுகத்துக்கு..
ReplyDeleteநான் அதிகமாக பதிவுகள் எழுதுவதில்லை.. முக நூல் மற்றும் பஸ் களில் உடனுக்குடனே செய்திகள் கருத்து பகிர்வதால்..
இதனால் பதிவுலகின் நல்லவர்கள் பலரின் கட்டுரைகளும் கண்ணில் படாமல் போவது வருத்தமே..
இனி தொடர்கிறேன் தொடர்ந்து..
நல்ல கதை.. சிறப்பான மூன்று அறிந்தோம்.. வாழ்த்துகள் ரமணி சார்..
என்னையும் அறிமுகப்படுத்தியமைக்கு மிக்க நன்றிகள்.
ReplyDeleteஇவர் பதிவு இயல்பானதாகவும் ரசிக்கத் தக்கதாகவும் இருக்கும்
நான் இவரது பரம ரசிகர்//
பெரிய வார்த்தை சொல்லியிருக்கிறீங்க. மிக்க நன்றி, ரமணி அண்ணா. உங்களைப் போல பெரியவர்களின் பின்னூட்டங்கள் என்னை எழுத தூண்டுகின்றது என்றால் அது மிகையல்ல.
எல்லாமே சிறப்பான அறிமுகங்கள்.
நல்ல அறிமுகங்கள்
ReplyDeleteவாழ்த்துக்கள்.
நல்ல அறிமுகங்கள் :-)
ReplyDeleteஅவள் ஓடி வர வர குளிர்ந்த காற்று வீசத் துவங்குகிறது
ReplyDeleteமேகங்கள் திரளத் துவங்குகின்றன.
அவள் குடையுடன்மைதானத்துள் நுழைந்தவுடன்
இடியுடன் பெருமழை பெய்யத் துவங்குகிறது//
நம்பிக்கைதான் மனுஷனுக்கு தும்பிக்கை....!!!
குட்டி எம்ஜிஆரா.....?? அவ்வ்வ்வ் குரு மாட்டிவிடுரீங்களே அவ்வ்வ்வ்வ்....
ReplyDeleteஎன்னை இம்புட்டு உசரத்துக்கு அறிமுகபடுத்திய உங்கள் பெருந்தன்மைக்கு தலைவணங்குகிறேன் குரு....
ReplyDeleteஅறிமுகமானவர்களில் நிறைய பேர் நம் நண்பர்கள்,நண்பிகள்தான் என்றாலும், எல்லாருக்கும் வாழ்த்துக்கள்....
ReplyDeleteஎல்லாமே சிறப்பான அறிமுகங்கள்.
ReplyDeleteஅறிமுகங்கள் அருமை.
ReplyDeleteவெகுமதியாய் அருமையான ந்ம்பிக்கைக் கதைக்கும், சிறப்பான அறிமுகங்களுக்கும் பாராட்டுக்கள். வாழ்த்துக்கள்.
ReplyDeleteஅனைவருக்கும் வாழ்த்துக்கள்.
ReplyDeleteவலைச்சரத்தில் அறிமுகமானவர்களுக்கு மனமார்ந்த நல்வாழ்த்துக்கள்
ReplyDeleteரமணி சார் சிறுகதை சூப்பர்
ReplyDeleteசிறுகதையும், அறிமுகங்களும் சிறப்பாக இருந்தது ரமணி சார்.
ReplyDeleteஇப்போது பெய்யும் மழை
ReplyDeleteஆண்டவன் இவள் நம்பிக்கைக்கு கொடுத்த வெகுமதி"
எனச் சொல்கிறார் //
நம்பிக்கையின் மகத்துவத்தை விளக்கும் அருமையான கதை.
அறிமுகப்பட்டியலில் இடம்பெற்ற ஏற்கனவே அறிமுகமான நண்பர்கள் மனோ, எல்.கே, சித்ரா, ஹேமாவுக்கும் மற்றும் அறிமுகமாக வேண்டிய இதர நண்பர்களுக்கும் வாழ்த்துக்கள்.
ReplyDeleteஇன்றைய அறிமுகங்களும் கலக்கல்,குட்டி எம்ஜிஆர் பற்றிய அடைமொழியினையும் ரசித்தேன் ஐயா.
ReplyDeleteநம்பிக்கை பற்றிய குட்டிக்கதை அழகாக உள்ளது.
ReplyDelete”முத்தான மூன்றாம் நாள்” அடையாளம் காணப்பட்டுள்ள அனைவரும் முத்தான முத்துக்களே! முத்துச்சிதறல்களே!
அனைவருக்கும் பாராட்டுக்களும், வாழ்த்துக்களும்.
Nice.,
ReplyDeleteMobilil comment poduvathaal template comment thaan. sorry.
சார் உங்கள் அன்புக்கு மிக்க நன்றி. என்னை ரொம்ப உயரத்தில் தூக்கி உட்காரவைத்துவிட்டீர்கள். அறிமுகத்திற்கு மிக்க நன்றி!! :-)
ReplyDeleteமிக உயர்ந்த சிறுகதையை உங்களுக்கே உரித்தான நடையில் மனதில் சிம்மாசனம் போட்டு அமர வைத்ததற்கு அன்பு நன்றி!
ReplyDeleteவலைச்சர ஆசிரியர் பதவிக்கு என் அன்பு வாழ்த்துக்கள்!
என்னை அழகான வார்த்தைச் சரங்களால் பாராட்டி அறிமுகம் செய்ததற்கு இதயம் நிறைந்த நன்றி!
முதலில் சொன்ன குட்டி கதை, எனக்கு ரொம்ப பிடித்து இருக்கிறது.
ReplyDeleteமேலும், என்னையும் அறிமுகப்படுத்தி உள்ளமைக்கு மிக்க நன்றி. :-)
குட்டிக்கதை அருமை.குழந்தைகளோடு பகிர்ந்துகொள்ளலாம்.அறிமுகங்கள் தெரிந்தவர்களானாலும் திறமையானவர்கள்.அவர்களோடு நானும்.நன்றி !
ReplyDeleteஅறிமுகங்கள் அருமை
ReplyDeleteஅறிமுகமானவர்களுக்கு வாழ்த்துக்கள்.
வாழ்த்துக்கள்!
ReplyDeleteஎல் கே //.
ReplyDeleteதங்கள் வரவுக்கும்
வாழ்த்துக்கும் மிக்க நன்றி
vanathy //.
ReplyDeleteதங்கள் வரவுக்கும்
வாழ்த்துக்கும் மிக்க நன்றி
முனைவர்.இரா.குணசீலன்//
ReplyDeleteதங்கள் வரவுக்கும்
வாழ்த்துக்கும் மிக்க நன்றி
அமைதிச்சாரல்/
ReplyDeleteதங்கள் வரவுக்கும்
வாழ்த்துக்கும் மிக்க நன்றி
MANO நாஞ்சில் மனோ//
ReplyDeleteதங்கள் வரவுக்கும்
வாழ்த்துக்கும் மிக்க நன்றி
சே.குமார் //
ReplyDeleteதங்கள் வரவுக்கும்
வாழ்த்துக்கும் மிக்க நன்றி
ஸாதிகா//
ReplyDeleteதங்கள் வரவுக்கும்
வாழ்த்துக்கும் மிக்க நன்றி
நம்பிக்கை!!
ReplyDeletestory proves that!
இராஜராஜேஸ்வரி//
ReplyDeleteதங்கள் மேலான வரவுக்கும்
இனிய வாழ்த்துக்கும்
மனம் கனிந்த நன்றி
தமிழ்வாசி - Prakash//
ReplyDeleteதங்கள் மேலான வரவுக்கும்
இனிய வாழ்த்துக்கும்
மனம் கனிந்த நன்றி
ரியாஸ் அஹமது//
ReplyDeleteதங்கள் மேலான வரவுக்கும்
இனிய வாழ்த்துக்கும்
மனம் கனிந்த நன்றி
தமிழ் உதயம்//
ReplyDeleteதங்கள் மேலான வரவுக்கும்
இனிய வாழ்த்துக்கும்
மனம் கனிந்த நன்றி
நிரூபன் said..
ReplyDeleteதங்கள் மேலான வரவுக்கும்
இனிய வாழ்த்துக்கும்
மனம் கனிந்த நன்றி
RVS//
ReplyDeleteதங்கள் மேலான வரவுக்கும்
இனிய வாழ்த்துக்கும்
மனம் கனிந்த நன்றி //
நல்ல அறிமுகங்கள்.
ReplyDeleteசிறியவனான என்னையும் அறிமுகப்படுத்தியதற்கு மிக்க நன்றி சார். தங்களைப் போன்றோர் என் வலைக்கு கிடைத்ததே என் பாக்கியம்.
ReplyDeleteநல்லதொரு கதை சொன்னீர்கள் ரமணி சார்! நல்ல அறிமுகங்கள்.
ReplyDeleteஅருமையான கதையும் அற்புதமான அறிமுகங்களும்
ReplyDeleteதொகுத்து தந்திருக்கிறீர்கள்.பகிர்விற்கு நன்றி
அறிமுகங்கள் செய்வதற்கு முன்னர் சொல்லிய கதை அருமை. இது புதிய உத்தியாக இருக்கிறது. அறிமுகம் ஆன அனைவருக்கும் வாழ்த்துகள்.
ReplyDeleteஅறிமுகம் அனைத்தும் அறிந்த முகங்களே(பிரபலங்கள்)!
ReplyDeleteஅனைவருக்கும் வாழ்த்துகள்.
குட்டியூண்டு கதையில் குட்டியூண்டு பெண்ணால் ஒரு பெரிய கருத்தே அடங்கி இருக்கிறது...
ReplyDeleteஎந்த காரியமும் செய்யுமுன் ஈடுபாடு, முயற்சி அதனுடன் செய்து முடித்தால் நன்மை கிடைக்கும் என்ற நம்பிக்கை இறுதியில் தெய்வ அருள் இது எல்லாமும் மிக மிக அவசியம் ஏதாவது காரியம் தொடங்க மட்டும் தானா என்றால் அது தான் இல்லை நம்மிலிருந்து நம்பிக்கையுடன் வெளிபடும் எந்த ஒரு விஷயமும் இறுதியில் தருவது சத்தியமான வெற்றி உறுதின்னு இந்த கதையில்எளிய நடையில் அழுத்தமா சொல்லி இருக்கீங்க ரமணி சார்...
மிக அருமையான முத்தான பகிர்வுக்கு என் அன்பு நன்றிகள் ரமணி சார்....
வலைச்சரத்தில் உங்களால் அறிமுகப்படுத்தப்படும் நண்பர்களின் வலைப்பூவை நீங்கள் ரசித்து யாம் பெற்ற இன்பம் பெறுக இவ்வயகம் என்ற நல்ல மனதுடன் நல்லவை நான் மட்டும் கண்டால் அனுபவித்தால் போதுமா? நீங்களும் சென்று பாருங்கள் என்று தூய மனதுடன் மிக அருமையாக அறிமுகப்படுத்தப்பட்டவிதம் அற்புதம் ரமணி சார்..
அறிமுகப்படுத்தப்பட்ட நண்பர்கள் அனைவருக்கும் என் அன்பு வாழ்த்துகள்...
கதையின் மூலம் நல்லவை மிக அருமையாக படைத்தமைக்கு என் அன்பு நன்றிகள் ரமணி சார்....
ஸ்ரீராம்.//
ReplyDeleteதங்கள் மேலான வரவுக்கும் வாழ்த்துக்கும்
மனமார்ந்த நன்றி
சிவகுமாரன் //
ReplyDeleteதங்கள் மேலான வரவுக்கும் வாழ்த்துக்கும்
மனமார்ந்த நன்றி
மோகன்ஜி //
ReplyDeleteதங்கள் மேலான வரவுக்கும் வாழ்த்துக்கும்
மனமார்ந்த நன்றி
raji //
ReplyDeleteதங்கள் மேலான வரவுக்கும் வாழ்த்துக்கும்
மனமார்ந்த நன்றி
வெங்கட் நாகராஜ் //
ReplyDeleteதங்கள் மேலான வரவுக்கும் வாழ்த்துக்கும்
மனமார்ந்த நன்றி
அமைதி அப்பா//
ReplyDeleteதங்கள் மேலான வரவுக்கும் வாழ்த்துக்கும்
மனமார்ந்த நன்றி
மஞ்சுபாஷிணி //
ReplyDeleteதங்கள் மேலான வரவுக்கும்
விரிவான வாழ்த்துக்கும்
மனமார்ந்த நன்றி
ஏகப்பட்ட தாமதத்திற்கு வருந்துகிறேன்.
ReplyDeleteமிக்க நன்றி ரமணி சார்.