கண்கள் இரண்டால்..உன் கண்கள் இரண்டால்... :-))
➦➠ by:
வைகை
அனைவருக்கும் வணக்கம்,
நேற்று இசை மழையில் நனைந்த உங்கள் மனதுக்கு கொஞ்சம் ஜலதோஷம் பிடித்திருக்கும்! அதனால்தான் இன்று கொஞ்சம் மருந்துகளோடு வருகிறேன்! பெரும்பாலும் எல்லோருக்குமே நம் உடல் உறுப்புகள்மீது அதிக அக்கறை இருக்கும்! அற்புத கீர்த்தி வேண்டின்.. ஆனந்த வாழ்வு வேண்டின் என்ற காலம் போய்.. அற்புத கண்கள் வேண்டின்.. அளவான தொப்பை வேண்டின்..இப்படி வேண்டிக்கொள்ளும் நிலைக்கு வந்துவிட்டோம்! இதற்க்கு நமது வேலை சூழ்நிலையும் உணவு பழக்க வழக்கங்களும்தான் காரணம்! இந்த சூழ்நிலையிலும் நம் உடம்பை பராமரிப்பது எப்படி என்று பல பெரியவங்க இலவசமாகவே சொல்றாங்க.. என்னான்னுதான் கொஞ்சம் போய் பாருங்களேன்! :)
கண்... நம் உடம்பில் அதிமுக்கியமான உறுப்பு! ஒருவனின் வாயில் வரும் வார்த்தைகளை விட கண்களில் வரும் வார்த்தைகள் உண்மையை சொல்லிவிடும்! பல அழகான பெண்களின் கண்களை நேருக்கு நேர் பார்க்கமுடியாமல் தவித்த பல ஆண்களில் நானும் ஒருவன்.. அவ்வளவு கூர்மை.. நம்ம கஜோல் கண்கள் போல! அந்த கண்களை எப்படி பாதுகாப்பது? எப்படி சோர்வடைய விடாமல் செய்வது? அழகாக்குவது? இந்த கேள்விகளுக்கெல்லாம் விடை தெரிய வனப்பு தளத்தில் சந்திரகௌரி சொல்லுகிறார் போய் பாருங்கள்!
என்றுமே இளமையாக இருக்க வேண்டும்! இப்படி யாருக்குத்தான் ஆசை இருக்காது? ஆனால் அதற்க்கு என்ன செய்ய வேண்டும் என்று யாருக்குமே தெரியாது! மெடிக்கல் நியூஸ் என்ற இந்த தளத்தை சென்று பாருங்கள்.. அள்ள.. அள்ள குறையாத அமுத சுரபியாக மருத்துவ தகவல்கள் கொட்டி கிடக்கிறது!
முதுகுவலி.. இதுதான் இன்றைய பெரும்பாலோனரின் பிரச்னை! ஏனென்றால் நமது வேலைகளை நாம் அவ்வாறு அமைத்துக்கொண்டோம்! சில தமிழ் படங்களை உட்க்கார்ந்து பார்த்தாலும் முதுகு வலிதான் மிச்சம்! கவலைய விடுங்கள் எதுவுமே தப்பில்லை என்று சொல்லி டாக்டர் சுனில் முதுகு வலிக்கான காரணங்களையும் தீர்வையும் சொல்லுகிறார் போய் பாருங்கள்! அப்பறம் பாருங்க.. நீங்க தைரியமா பவர் ஸ்டார் படமே பார்க்கலாம்!
சில குழந்தைகளும் சரி.. டீன் ஏஜில் இருக்கும் குழந்தைகள் சிலருக்கும் இயல்பான சுறுசுறுப்பான நடவடிக்கை இல்லாமல்... ஒருவித சோகைத்தன்மையுடன் இருப்பார்கள்! இதற்க்கு ரத்த சோகையே காரணம் அதை எப்படி குணமாக்குவது என்று வழிமுறைகளுடன் ஆயுர்வேதமருத்துவத்தில் சொல்லுகிறார் சென்று பாருங்கள்!
மன அழுத்தம்.. இன்று சர்வ சாதாரணமாக இது அனைவருக்கும் உள்ளது! சில பேரோட பதிவ படிச்சா அது இன்னும் கூடும்.. அத விட்ருங்க! ஆனா.. வெளிப்படையான நோயை விட இது கொஞ்சம் ஆபத்தானது! கவனிக்காமல் விட்டால் குடும்பத்தையே சிதைக்கும் தன்மையுள்ளது! இந்த உளவியல் நோய்க்கு சித்த மருத்துவத்தில் தீர்வு உள்ளது என்று அடித்து கூறுகிறார் போளூர் தயாநிதி! இதை பார்க்காமல் விட்டோமே என்று மன அழுத்தத்துக்கு ஆளாகாமல் எதற்கும் சென்று பார்த்துவிடுங்கள்!
குழல் இனிது.. யாழ் இனிது என்பார்..தன் மக்கள் மழலை சொல் கேளாதோர்.. இதைவிட குழந்தைகளின் அருமையை எப்படி சொல்லமுடியும்? இன்று பல தம்பதியர்களின் கவலையே குழந்தை இல்லை என்பதுதான்! இதற்க்கு உளவியல் ரீதியாகவும் மருத்துவ ரீதியாகவும் பல காரணங்கள் உள்ளன! இதைப்பற்றிய பல வாசகர்களின் சந்தேகங்களுக்கு பதிலையும் தீர்வையும் மருத்துவம் பேசுகிறது என்று சொல்லிக்கொண்டிருக்கிறார் பாருங்கள்!
எல்லாத்துக்கும் மருந்து சொல்லியாச்சு.. காதல் நோய்க்கு மருந்து எங்கன்னு கேக்குறவங்களுக்கு.. காதல் நோய்க்கு மருந்தும் காதல்தான்! கொஞ்சம் அதிகமாக உண்மையாக காதலித்துப்பாருங்கள்... அதுவே மருந்து போலதான்!
நன்றியுடனும் வாழ்த்துகளுடனும்..
வைகை.
|
|
வணக்கம்!
ReplyDeleteசோதனை மறுமொழி! :)
வணக்கம் வைகை பங்கு... நல்ல பயனுல்ல பதிவுகள் இன்று அருமை தொடருங்கள் உங்கள் பணியை ....
ReplyDeleteமாணவன் said...
ReplyDeleteவணக்கம்!
சோதனை மறுமொழி! :)
சோதனை = ஆய்வு
மாணவன் said...
ReplyDeleteவணக்கம்!
சோதனை மறுமொழி! :)//
நல்லா சோதனை பண்ணிக்கங்க சார் :))
நல்ல பயனுள்ள அறிமுகங்கள்..
ReplyDeleteஅறிமுகத்தின் விதங்களும் அருமை..
இதோ பார்க்கிறேன்..
தினேஷ்குமார் said...
ReplyDeleteவணக்கம் வைகை பங்கு... நல்ல பயனுல்ல பதிவுகள் இன்று அருமை தொடருங்கள் உங்கள் பணியை ....//
பங்கு வாங்க.. நன்றி..இதுல உங்களுக்கு பயனுள்ளது நிறைய இருக்கு :)
தினேஷ்குமார் said...
ReplyDeleteமாணவன் said...
வணக்கம்!
சோதனை மறுமொழி! :)
சோதனை = ஆய்வு//
மாணவா..இப்பிடி ஒரு தமிழ் கவிஞர வச்சிக்கிட்டு தப்பு பண்ணலாமா? :)
vidivelli said...
ReplyDeleteநல்ல பயனுள்ள அறிமுகங்கள்..
அறிமுகத்தின் விதங்களும் அருமை..
இதோ பார்க்கிறேன்..//
நன்றிங்க..அவசியம் சென்று பாருங்கள் :))
பல அழகான பெண்களின் கண்களை நேருக்கு நேர் பார்க்கமுடியாமல் தவித்த பல ஆண்களில் நானும் ஒருவன்..
ReplyDeleteஎன்னே தங்கள் வார்த்தை வர்ணிப்பு ஆஹா பங்கு பிச்சுட்டீங்க போங்க ... அங்க பாருங்க அண்ணி துறட்டிட்டு ஓடிவராங்க ஓடுங்க பங்கு ஓடுங்க ...
தினேஷ்குமார் said...
ReplyDeleteபல அழகான பெண்களின் கண்களை நேருக்கு நேர் பார்க்கமுடியாமல் தவித்த பல ஆண்களில் நானும் ஒருவன்..
என்னே தங்கள் வார்த்தை வர்ணிப்பு ஆஹா பங்கு பிச்சுட்டீங்க போங்க ... அங்க பாருங்க அண்ணி துறட்டிட்டு ஓடிவராங்க ஓடுங்க பங்கு ஓடுங்க ...//
நான் அழகான பொண்ணுன்னு சொன்னதே அண்ணியத்தானே? ( ஏன் இந்த கொலை வெறி?) :)
பயனுள்ள அறிமுகங்கள்!இணைந்துவிட்டேன்!பகிர்வுக்கு நன்றி!
ReplyDeleteஅறிமுகபடுத்தபட்ட வலைத்தளங்கள் அனைத்தும் அருமை... மிகவும் பயனுள்ள மருத்துவத்தகவல்களை கொண்ட வலைத்தளங்களை பகிர்ந்துகொண்ட உங்களின் இந்த உழைப்பிற்கு ஒரு சல்யூட்! :)
ReplyDeleteஇன்றைய சூழலுக்கு தேவையான மிகவும் பயனுள்ள மருத்துவத் தகவல்கள் கொண்ட வலைத்தளங்களை பகிர்ந்துகொண்டமைக்கு வாழ்த்துக்களும் நன்றிகளும் பல....
ReplyDelete//காதல் நோய்க்கு மருந்து எங்கன்னு கேக்குறவங்களுக்கு.. காதல் நோய்க்கு மருந்தும் காதல்தான்! கொஞ்சம் அதிகமாக உண்மையாக காதலித்துப்பாருங்கள்... அதுவே மருந்து போலதான்!///
ReplyDeleteஇத கொஞ்சம் ஒரைக்குற மாதிரி நம்ம தல டெரர்க்கும், டெரர்கும்மியின் புதிய தலைவர் சிரிப்பு போலீஸ் ரமேசுக்கும் கொஞ்சம் தெளிவா விளக்கி சொல்லுங்கண்ணே அப்பவாவது ஒரைக்குதான்னு பார்ப்போம்... :)
வழக்கம்போலவே தொடரட்டும் உங்கள் மகத்தான பணி!
ReplyDeleteவாய்ப்பிற்கு நன்றிகூறி விடைபெறுகிறேன்... நன்றி வணக்கம்! :)
கோகுல் said...
ReplyDeleteபயனுள்ள அறிமுகங்கள்!இணைந்துவிட்டேன்!பகிர்வுக்கு நன்றி!//
நன்றி..தொடர்ந்து வாங்க :))
மாணவன் said...
ReplyDeleteஅறிமுகபடுத்தபட்ட வலைத்தளங்கள் அனைத்தும் அருமை... மிகவும் பயனுள்ள மருத்துவத்தகவல்களை கொண்ட வலைத்தளங்களை பகிர்ந்துகொண்ட உங்களின் இந்த உழைப்பிற்கு ஒரு சல்யூட்! :)//
நன்றி திரு.மாணவன் அவர்களே :))
மாணவன் said...
ReplyDeleteஇன்றைய சூழலுக்கு தேவையான மிகவும் பயனுள்ள மருத்துவத் தகவல்கள் கொண்ட வலைத்தளங்களை பகிர்ந்துகொண்டமைக்கு வாழ்த்துக்களும் நன்றிகளும் பல....//
இங்கயே நன்றி சொல்லிக்கிட்டு இருந்தா எப்பிடி? அங்க போயும் பாருங்கண்ணே :))
மாப்ள பயனுள்ள தகவல்கள் அடங்கிய பதிவு....நன்றி மற்றும் வாழ்த்துக்கள்!
ReplyDeleteமாணவன் said...
ReplyDelete//காதல் நோய்க்கு மருந்து எங்கன்னு கேக்குறவங்களுக்கு.. காதல் நோய்க்கு மருந்தும் காதல்தான்! கொஞ்சம் அதிகமாக உண்மையாக காதலித்துப்பாருங்கள்... அதுவே மருந்து போலதான்!///
இத கொஞ்சம் ஒரைக்குற மாதிரி நம்ம தல டெரர்க்கும், டெரர்கும்மியின் புதிய தலைவர் சிரிப்பு போலீஸ் ரமேசுக்கும் கொஞ்சம் தெளிவா விளக்கி சொல்லுங்கண்ணே அப்பவாவது ஒரைக்குதான்னு பார்ப்போம்... :)//
உரைக்கிற மாதிரின்னா? கொஞ்சம் மொளகா பொடி கலந்து சொல்லவா? :)
மாணவன் said...
ReplyDeleteவழக்கம்போலவே தொடரட்டும் உங்கள் மகத்தான பணி!
வாய்ப்பிற்கு நன்றிகூறி விடைபெறுகிறேன்... நன்றி வணக்கம்! :)//
ரேடியோ ஸ்டேசன்ல வேலை பார்க்கிற மாதிரியே பேசுறியே? :)
விக்கியுலகம் said...
ReplyDeleteமாப்ள பயனுள்ள தகவல்கள் அடங்கிய பதிவு....நன்றி மற்றும் வாழ்த்துக்கள்!//
நன்றி மாப்ள.. :)
அனைவருக்கும் வாழ்த்துக்கள்!
ReplyDeleteநீங்கள் தொகுத்து, அறிமுகப்படுத்தும் விதத்தில் - உங்களின் உழைப்பு தெரிகிறது . பாராட்டுக்கள், வைகை சார்.
Chitra said...
ReplyDeleteஅனைவருக்கும் வாழ்த்துக்கள்!
நீங்கள் தொகுத்து, அறிமுகப்படுத்தும் விதத்தில் - உங்களின் உழைப்பு தெரிகிறது . பாராட்டுக்கள், வைகை சார்.//
நன்றிங்க..உண்மைய சொன்னா நான் படிக்காமல் விட்ட தளங்களை எனக்கு அடையாளம் காண கிடைத்த வாய்ப்பு இது :))
அருமையான தொகுப்பு ..ஒரு ரவுண்டு போய் பார்க்கிறேன்
ReplyDeleteஆனாலும் நீ சேலம் சித்த வைத்தியர பத்தி ஒரு வார்த்தை சொல்லாதது மிகுந்த வருத்தத்தை அளிக்கிறது
ReplyDeleteஇம்சைஅரசன் பாபு.. said...
ReplyDeleteஅருமையான தொகுப்பு ..ஒரு ரவுண்டு போய் பார்க்கிறேன்//
மக்கா..கேப்டன் போற ரவுண்டு போயிராதிங்க :))
இம்சைஅரசன் பாபு.. said...
ReplyDeleteஆனாலும் நீ சேலம் சித்த வைத்தியர பத்தி ஒரு வார்த்தை சொல்லாதது மிகுந்த வருத்தத்தை அளிக்கிறது//
ஹி..ஹி..அத யாருக்கு சொல்லணுமோ அவங்க ரெண்டு பேருக்கும் தனியா சொல்லிட்டேன் :)
:))
ReplyDeleteபகிர்வுக்கு நன்றி...
ReplyDeleteமாணவன் said...
ReplyDeleteவணக்கம்!
சோதனை மறுமொழி! :)/////
சத்தியா ச்சி சத்திய சோதனை. :)
வைகை said...
ReplyDeleteமாணவன் said...
வணக்கம்!
சோதனை மறுமொழி! :)//
நல்லா சோதனை பண்ணிக்கங்க சார் :))////
அப்போ சேலம் போக சொல்றீங்களா மாம்ஸ்?.. :))
இம்சைஅரசன் பாபு.. said...
ReplyDeleteஆனாலும் நீ சேலம் சித்த வைத்தியர பத்தி ஒரு வார்த்தை சொல்லாதது மிகுந்த வருத்தத்தை அளிக்கிறது///
ஹா ஹா பாபு மாம்ஸ் ராக்ஸ் .. :))
கலக்கற மச்சி....
ReplyDeleteஒரு டவுட்டு இருக்கு... விடு தனியா போரம்ல கேட்டுகறேன் :)
அருமையான அறிமுகங்கள்
ReplyDeleteஅன்புள்ள நண்பர்களே
ReplyDeleteஇன்று என் வலையில்
தங்கபாலுவின் சித்தப்பாவா காமராஜர்? நள்ளிரவில் குழப்பம்!
உண்மை சுடும் ப்ளாக்ல இந்த வாரம் பதிவே வராதுன்னு சந்தோசப்படுறதா? இல்லை வலைச்சரத்துக்கு இந்த நிலைமையான்னு வருத்தப்படுறதா?
ReplyDelete//உண்மை சுடும் ப்ளாக்ல இந்த வாரம் பதிவே வராதுன்னு சந்தோசப்படுறதா? இல்லை வலைச்சரத்துக்கு இந்த நிலைமையான்னு வருத்தப்படுறதா?//
ReplyDeleteஒரு நல்லது ஒரு கெட்டது .. :)
ஆனா ஒவ்வொரு பதிவுக்கும் நீங்க சொல்லிருக்கிற விதம் உண்மைலயே ரசிக்கும்படியா இருக்கு ணா :)
ReplyDeleteநன்றியுடனும் வாழ்த்துகளுடனும்..
ReplyDeleteபயனுள்ள அறிமுகங்கள்!
nice
தேவையானதொரு பதிவு.
ReplyDeleteஎடுத்துச் சொன்னவிதம் அருமை!
ReplyDeleteஅறிமுகமான பதிவர்களுக்கு வாழ்த்துக்கள்.
ReplyDeleteகாதல் நோய்க்கு மருந்து எங்கன்னு கேக்குறவங்களுக்கு.. காதல் நோய்க்கு மருந்தும் காதல்தான்!
ReplyDeleteஎன்னும் தங்கள் கருத்தை மெய்ப்பிக்கும்
இருபேராண்மைகள் என்னும் இடுகை..
http://gunathamizh.blogspot.com/2010/07/250.html
அனைத்தும் பயனுள்ள அறிமுகங்கள். நன்றி. தொடரட்டும் தங்கள் பணி.
ReplyDeleteநாகராஜசோழன் MA said...
ReplyDelete:))//
தமிழ்வாசி - Prakash said...
பகிர்வுக்கு நன்றி...//
இருவருக்கும் நன்றிகள் :))
karthikkumar said...
ReplyDeleteமாணவன் said...
வணக்கம்!
சோதனை மறுமொழி! :)/////
சத்தியா ச்சி சத்திய சோதனை. :)//
அது சத்யா இல்லை மச்சி சந்தியா :)
karthikkumar said...
ReplyDeleteவைகை said...
மாணவன் said...
வணக்கம்!
சோதனை மறுமொழி! :)//
நல்லா சோதனை பண்ணிக்கங்க சார் :))////
அப்போ சேலம் போக சொல்றீங்களா மாம்ஸ்?.. :))//
பப்ளிக்கா சொல்ல வேண்டாம்னு பார்த்தேன்.. சொல்லிட்ட :))
karthikkumar said...
ReplyDeleteஇம்சைஅரசன் பாபு.. said...
ஆனாலும் நீ சேலம் சித்த வைத்தியர பத்தி ஒரு வார்த்தை சொல்லாதது மிகுந்த வருத்தத்தை அளிக்கிறது///
ஹா ஹா பாபு மாம்ஸ் ராக்ஸ் .. :))//
ஆமா... நீண்ட கால கஸ்டமருக்கு கோவத்த பார்த்தியா? :))
அருண் பிரசாத் said...
ReplyDeleteகலக்கற மச்சி....
ஒரு டவுட்டு இருக்கு... விடு தனியா போரம்ல கேட்டுகறேன் :)//
நன்றி மச்சி..
நீ என டவுட் கேக்க போறேன்னு தெரிஞ்சு போச்சு :)
"என் ராஜபாட்டை"- ராஜா said...
ReplyDeleteஅருமையான அறிமுகங்கள்//
நன்றிங்க :))
ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) said...
ReplyDeleteஉண்மை சுடும் ப்ளாக்ல இந்த வாரம் பதிவே வராதுன்னு சந்தோசப்படுறதா? இல்லை வலைச்சரத்துக்கு இந்த நிலைமையான்னு வருத்தப்படுறதா?//
நீ ஏன் சிரமப்படற? சிரிப்பு போலிஸ் ப்ளாக்ல கொஞ்ச நாளா பதிவு இல்லாம மக்கள் நிம்மதியா இருக்காங்களாம் :))
கோமாளி செல்வா said...
ReplyDelete//உண்மை சுடும் ப்ளாக்ல இந்த வாரம் பதிவே வராதுன்னு சந்தோசப்படுறதா? இல்லை வலைச்சரத்துக்கு இந்த நிலைமையான்னு வருத்தப்படுறதா?//
ஒரு நல்லது ஒரு கெட்டது .. :)//
அடப்பாவி? யூ டூ கோமாளி? :))
கோமாளி செல்வா said...
ReplyDeleteஆனா ஒவ்வொரு பதிவுக்கும் நீங்க சொல்லிருக்கிற விதம் உண்மைலயே ரசிக்கும்படியா இருக்கு ணா :)//
நன்றி செல்வா :))
இராஜராஜேஸ்வரி said...
ReplyDeleteநன்றியுடனும் வாழ்த்துகளுடனும்..
பயனுள்ள அறிமுகங்கள்!
nice////
முனைவர்.இரா.குணசீலன் said...
எடுத்துச் சொன்னவிதம் அருமை!//
இருவருக்கும் நன்றிகள் :))
முனைவர்.இரா.குணசீலன் said...
ReplyDeleteகாதல் நோய்க்கு மருந்து எங்கன்னு கேக்குறவங்களுக்கு.. காதல் நோய்க்கு மருந்தும் காதல்தான்!
என்னும் தங்கள் கருத்தை மெய்ப்பிக்கும்
இருபேராண்மைகள் என்னும் இடுகை..
http://gunathamizh.blogspot.com/2010/07/250.html//
நல்ல வேள ஒத்துக்கினிங்க.. பயந்துகிட்டே இருந்தேன் :))
காந்தி பனங்கூர் said...
ReplyDeleteஅனைத்தும் பயனுள்ள அறிமுகங்கள். நன்றி. தொடரட்டும் தங்கள் பணி.//
நன்றி காந்தி :)
வலைச்சரம் மூலம் எனது பதிவுகளை அறிமுகம் செய்ததற்கு மிக்க நன்றி வைகை
ReplyDeleteநான் கேட்க வேண்டிய கேள்வியை பாபு கேட்டுவிட்டதால்.... தால்...ல்....
ReplyDeleteஎம்மை வலைச்சரத்தில் அறிமுகப்படுத்தியமைக்கு உளம் கனிந்த பாராட்டுகளும் நன்றிகளும் .எம்மோடு அறிமுகமானவர்களுக்கு உளம் கனிந்த வாழ்த்துகள் நன்றி .
ReplyDeleteஅறிமுகம் செய்தவிதம் அருமை...
ReplyDeleteஅறிமுகங்களுக்கு வாழ்த்துக்கள்.
பல அழகான பெண்களின் கண்களை நேருக்கு நேர் பார்க்கமுடியாமல் தவித்த பல ஆண்களில் நானும் ஒருவன்.. //
ReplyDeleteஎன்னையும் கூட சேத்துக்குங்க
dr suneel krishnan said...
ReplyDeleteவலைச்சரம் மூலம் எனது பதிவுகளை அறிமுகம் செய்ததற்கு மிக்க நன்றி வைகை//
நன்றி.. பயனுள்ள தகவல்கள் தொடர்ந்து எழுதுங்கள் :))
பன்னிக்குட்டி ராம்சாமி said...
ReplyDeleteநான் கேட்க வேண்டிய கேள்வியை பாபு கேட்டுவிட்டதால்.... தால்...ல்....///
பாபு கேட்டதுக்கு நான் பதில் சொல்லிவிட்டதால்... தால்....ல்....
போளூர் தயாநிதி said...
ReplyDeleteஎம்மை வலைச்சரத்தில் அறிமுகப்படுத்தியமைக்கு உளம் கனிந்த பாராட்டுகளும் நன்றிகளும் .எம்மோடு அறிமுகமானவர்களுக்கு உளம் கனிந்த வாழ்த்துகள் நன்றி .///
நன்றி.. பயனுள்ள தகவல்கள் தொடர்ந்து எழுதுங்கள் :))
சே.குமார் said...
ReplyDeleteஅறிமுகம் செய்தவிதம் அருமை...
அறிமுகங்களுக்கு வாழ்த்துக்கள்.//
நன்றிங்க... தொடர்ந்து வாங்க :)
மாய உலகம் said...
ReplyDeleteபல அழகான பெண்களின் கண்களை நேருக்கு நேர் பார்க்கமுடியாமல் தவித்த பல ஆண்களில் நானும் ஒருவன்.. //
என்னையும் கூட சேத்துக்குங்க//
நம்ம சொல்லிட்டோம்..பல பேர் சொல்லல..அவ்வளவுதான் :)
வலைச்சரத்தில் வாசம் செய்து, வருவோரை அழைத்தெடுத்து தெரிந்த சில தகவல்களைப் பலர் அறியத் தெரிவித்து வாழுகின்ற என்னை, என் தளத்தை அறியவைத்த ஆசிரியர் வைகைக்கு நன்றி பல பகிர்ந்து நிற்கின்றேன். மற்றைய வலைகளையும் அறிமுகப்படுத்தியிருக்கின்றீர்கள். அனைத்தையும் பர்வையிட வேண்டும் என்று ஆசை மேலிடுகின்றது. ஆனால், ஏனோ இந்த நாள் மணித்துளிகளை மட்டுப்படுத்தியிருக்கின்றார்களோ தெரியவில்லை. ஓடுகின்ற கடிகாரத்துடன் சேர்ந்தே ஓடுகின்றோம். கிடைக்கும் நேரத்தில் பலரைத் தேடுகின்றோம். வலைச்சரத்துக்கும் வைகை அவர்களுக்கும் வாழ்த்துகள்
ReplyDelete