07 - 09 - 2015 முதல் ஆசிரியர் பொறுப்பேற்பவர்

ரிஷபன்
இவரின் வலைப்பூ

ரிஷபன்

முந்தைய ஆசிரியர்கள்


சீனா ... (Cheena) - அசைபோடுவது

சிந்தாநதி

நன்றி!

திரட்டிகளின் தொகுப்பு

:: தமிழ் திரட்டுகளின் சங்கமம்<br/>:: Tamil blogs, news, ezines

வலைப்பதிவர் உதவிப்பக்கம்

தமிழில் எழுத மென்பொருள்

fb like

ஞானாலயா = புதுக்கோட்டை

www.gnanalaya-tamil.com
வலைச்சரத்தில் வெளியிடப்படும் இடுகைகள் வலைச்சரக் குழுவினரால் தணிக்கைக்கு உட்படாது. ஆனால், வலைச்சர விதிக்கு உட்படாத இடுகைகளை முன்னறிவிப்பின்றி நீக்க வலைச்சரக் குழுவினருக்கு உரிமை உள்ளது

Wednesday, August 31, 2011

கவிதை முத்துக்கள்

மகா கவி பாரதியாரிலிருந்து தொடங்கி பாரதி தாசன், கண்ணதாசனிலிருந்து ஆரம்பித்து இன்றைய மீரா, வைரமுத்து, மேத்தாவிலிருந்து தொடர்ந்து இன்றைக்கு தமிழ்த்தாய்க்கு கவிதை மலர்களால் அர்ச்சிப்பவர்கள் ஆயிரம் ஆயிரம்! இந்த அகன்ற ஆழியினின்று ஒரு சில நல்முத்துக்கள் மட்டும் எடுத்து இங்கே சமர்ப்பித்திருக்கிறேன்!

சமர்ப்பிக்கும் முன் எனது வலைப்பூவினின்று ஒரு மீள் கவிதை!

                         அன்பென்பது.. .. ..
அன்பென்பது தண்மை என்று புலவர் சொன்னார்- ஆனால்
                   அதுவும் தணலாய் சுட்டது சில நேரம்!

                   அன்பென்பது அழகென்று அறிஞர் சொன்னார்-ஆனால்
                   அதுவும் சிதைந்து அழிந்தது சில நேரம்!

                    அன்பென்பது மலரென்று கவிஞர் சொன்னார்-ஆனால்
                    அதுவும் சருகாய் உதிர்ந்தது சில நேரம்!

                    அன்பென்பது உண்மையென்று கற்றோர் சொன்னார்-ஆனால்
                     அதுவும் பொய்யாய்க் கரைந்தது சில நேரம்!

                    அன்பென்பது தெய்வமென்று பெரியோர் சொன்னார்-ஆனால்
                    அதுவும் சிலையாய்ப் போனது சில நேரம்!

                    அன்பென்பது அமுதமென்று சிலர் சொன்னார்-ஆனால்
                     அதுவும் விடமாய்ப்போனது சில நேரம்!

                    அன்பென்பது இசையென்று பலர் சொன்னார்-ஆனால்
                    அதுவும் ஸ்ருதி கலைந்து போனது சில நேரம்!

                    அன்பென்பது யாதென்று அலைந்து நின்றேன்!
                    அறிந்தபோது உர்ந்தபோது அசந்து நின்றேன்!

                    அன்பென்ற தண்மைதான் மழலைதன் விரல் தொடுகை!
                    அன்பென்ற உண்மைதான் மழலைதன் புன் சிரிப்பு!

                     அன்பென்ற அழகுதான் மழலைதன் தளிர் நடை!
                     அன்பென்ற கடவுள்தான் மழலைதன் குளிர்ப்பார்வை!
                     அன்பென்ற மலர்தான் மழலைதன் எழில்முகம்!

                     அருஞ்சுவைக் கற்கண்டும் அருமருந்தும் தோற்குமே
                     அன்பென்ற அமுதமாம் அழகு மழலைப் புன்சிரிப்பில்!


இனி கவிதை முத்துக்களின் சமர்ப்பணங்கள்!

1..http://yaathoramani.blogspot.com/  [ தீதும் நன்றும் பிறர் தர வரா]


கவிஞர் ரமணியின் அனைத்துக் கவிதைகளுமே அருமை என்றாலும் இந்த பதிவர் சக்தி அருமையிலும் அருமை! 


குழந்தையின் சிரிப்பும் நட்சத்திரங்களுமாய் அழகிய ஒரு கவிதை!
நட்சத்திரங்கள்! இவற்றை  நீங்களும் பார்த்து ரசியுங்களேன்!

3. http://tamilamudam.blogspot.com/ [முத்துச்சரம்]

வாழ்க்கை முழுக்க வரும் பல வித நிகழ்வுகளை இங்கே 
ஆடுகளம் - நவீன விருட்சத்தில்..  ஒவ்வொரு வித விளையாட்டிலும் அழகுற இணைத்து அருமையாய் கவித பாடியிருக்கிறார் ராமலக்ஷ்மி!

4. http://kadambavanakuyil.blogspot.com/ [கடம்பவன பூங்கா]

தன் தவறுகளையெல்லாம் பொறுத்து, அன்பை மட்டுமே பொழிந்த கணவனுக்காக பிரிவுத்துயரில் ஒரு மனைவி பாடும் கவிதை இது!

யாதுமாகி நன்றாய்- எத்தனை அழகான தலைப்பு!

5. http://kavisolaii.blogspot.com/ [கவிச்சோலை]

சங்ககாலப்பாடல்களை இன்றைய தமிழ்க்கவிதையாய் எழுதி வருவது இவருடைய தனிச்சிறப்பு. இயற்கையின் சீற்றத்திற்கு உண்மையான காரணங்களை இங்கே இந்தப்பாடலில் அழகாய்ச் சித்தரிக்கிறார்.


6. http://mahizhampoosaram.blogspot.com/ [மகிழம்பூச்சரம்]

கவிதைகளும் பயன் மிக்க கட்டுரைகளும் உணர்வுகளுமாய் இங்கே சாகம்பரியின் மகிழம்பூக்கள் எப்போதும் மனம் வீசிக்கொண்டே இருக்கிறது. வளர்ந்த பின், சிறகடித்துப்பறப்பது தான் குழந்தைகளின் இயல்பு. ஆனால் அப்போதும் தாய்மை தன் குழந்தையின்
அரவணைப்புக்காக ஏங்கிக்கொண்டே இருக்கும். அந்த ஏக்கத்தை
தாய்மையின் தேடல் என்ற கவிதையாகக் கொடுத்து மனம் சிலிர்க்க வைக்கிறார்!

7. http://sundargprakash.blogspot.com/ [கைகள் அள்ளிய நீர்]

சுந்தர்ஜீயின் கவிதைகள் அழகு தமிழில் வெளிவரும் உணர்ச்சிப் பிரவாகங்கள். அவரின் இந்த தோல்வித்தேன் ஒரு அருமையான கவிதை. சுவைக்க ஒரு இனிமையான தேன்!


பரிவை குமாரின் எது சுதந்திரம்? எல்லோருடைய மனதிலிருக்கும் இன்றைய பொருமலை நெத்தியடியாய் பறைசாற்றுகிறது இங்கே!

9. http://krishnapriyakavithai.blogspot.com/ [தஞ்சை கவிதை]

 அம்மா என்ற கவிதையில் தன் மன உணர்வுகளை மிக அழகாக பிரதிபலிக்கிறார் கிருஷ்ணப்ரியா

10. http://sanvishblue.blogspot.com/ [வாசல்]

வாழ்க்கையின் உறவுகளைப்பற்றியும் உணர்வுகளைப்பற்றியும் அழகாய் விமர்சனம் செய்யும் கெளசல்யா தன் கவிதைகளிலும் ‘நச்’சென்று தன் அடையாளத்தை ஆழமாய்ப் பதிக்கிறார். அவருடைய பெண்மை கவிதையும் மனதை தாக்குகிறது!

11. http://pulavarkural.blogspot.com/ [கவிதைகள்]

செந்தமிழில் எதுகை மோனையுடன் கவிதை எழுதுபவர் புலவர் திரு.ராமானுஜம். சமுதாய நோக்குடன் அவர் எழுதிய இந்தக் கவிதையான எண்ணிப்பாரும் நல்லோரே ஒரு அருமையான படைப்பு!

12. http://thmalathi.blogspot.com/ [மாலதியின் சிந்தனைகள்]

தனக்குரிய துணை எப்படி இருக்க வேண்டும் என்று ஒரு பெண்ணின் இதயக்கனவுகளை தேவை ஒரு காதலன் என்ற கவிதையில் மிக அழகாய்ச் செதுக்கியிருக்கிறார் மலதி இங்கே!

13. http://nisiyas.blogspot.com/ [ஷீ-நிசி கவிதைகள்]

ஒரு சித்தாளின் கனவை பேச்சுத்தமிழில் அருமையாய்ச் சொல்லியிருக்கிரார் ஷீ-நிசி
இங்கே தனது சித்தாள் கவிதையில்!

14. http://ilavenirkaalam.blogspot.com/ [வசந்த மண்டபம்]

காய்கறி விற்று உழைக்கும் ஒரு உழைப்பாளியின் மனதின் நேர்மையையும் நெஞ்சின் உரத்தையும் மகேந்திரன் அருமையாய் விவரிக்கிறார் தன் அழகிய நெஞ்சிலே உரமிருக்கு!! கவிதை மூலம்!

15.  http://rupika-rupika.blogspot.com/ [அம்பாளடியாள்]

வலைத்தளங்கள் எப்படிப்பட்ட வடிகால் தனக்கு என்று இந்த

வலைத்தளங்களும் தமிழும் வாழ்க வாழ்க வாழ்கவே கவிதையில் சொல்லிப் பூரிக்கிறார் அம்பாளடியாள்!

16. http://sivakumarankavithaikal.blogspot.com/ [சிவகுமாரன் கவிதைகள்]

சிவகுமாரனின் போதைப்பொருட்கள் அழகு தமிழில் அமைந்த ஒரு அருமையான கவிதை!

17. http://kavithaiveedhi.blogspot.com/ [கவிதை வீதி]

குழந்தையின் மழலைக்கு முன்னால் உலகின் மற்ற இனிமைகள் யாவுமே ஒன்றுமேயில்லாமல் போகிறது என்பதை செளந்தர் இந்த கவிதையில் சொல்லி மெய்மறந்திருக்கிறார் இங்கே! அருமையான கவிதை இது!

இந்த குழந்தை என்ன செய்திருக்கிறது உங்களை?

44 comments:

  1. வலைச்சர ஆசிரியருக்கு முதலில் எனது பாராட்டுக்கள். முதலில் உணவு. பிறகு கவிதையென சுவையாய் அன்போடு ஆரபித்திருக்கிரீர்கள் மனோ. வாழ்த்துக்கள்.

    ReplyDelete
  2. தங்களின் மீள் கவிதை இப்பொழுதுதான் படிக்கிறேன்.

    அற்புதமான பொருளைக் கொண்ட கவிதை.பகிர்விற்கு நன்றி.

    கவிதை முத்துக்களின் அறிமுகங்கள் அருமை.கவிதை முத்துக்களுக்கு வாழ்த்துக்கள்

    முத்துக்கள் தொடர்ந்து ஒளி வீசட்டும்

    ReplyDelete
  3. அம்மா...
    கவி முத்துக்களும் உங்கள் கவிதையும் அருமை.
    முத்துக்களில் எனது கவிதையையும் அறிமுகப்படுத்தியதற்கு நன்றி.
    அறிமுகமான அனைத்துக் கவிஞர்களுக்கும் வாழ்த்துக்கள்.

    ReplyDelete
  4. அருமையான கவிதை முத்துக்களின் அறிமுகங்கள்.
    வாழ்த்துக்கள்

    ReplyDelete
  5. -----------------------------------
    அன்பென்ற தண்மைதான் மழலைதன் விரல் தொடுகை!
    அன்பென்ற உண்மைதான் மழலைதன் புன் சிரிப்பு!
    அன்பென்ற அழகுதான் மழலைதன் தளிர் நடை!
    அன்பென்ற கடவுள்தான் மழலைதன் குளிர்ப்பார்வை!
    அன்பென்ற மலர்தான் மழலைதன் எழில்முகம்!
    -----------------------------------
    உண்மையான வார்த்தைகள் ......

    ReplyDelete
  6. அன்பென்ற அமுதமாம் அழகு மழலைப் புன்சிரிப்பில்!//

    அழகு வரிகள்.

    வலைச்சர ஆசிரியருக்கு அன்பு வாழ்த்துக்கள்.

    ReplyDelete
  7. வசிஷ்டர் வாயால் பிரம்மரிஷி எனப்
    புகழப் பட்டதைப்போல் முத்துச் சரங்களை
    வாரி வழங்கும் தங்களால் அறிமுகப்பட்டதை
    பெரும் பாக்கியமாகக் கருதுகிறேன்
    மனமார்ந்த.நன்றி

    ReplyDelete
  8. வலைச்சரப் பொறுப்புக்கு என் அன்பான வாழ்த்துக்கள்! ஆடுகளம் அறிமுகத்துக்கு மனமார்ந்த நன்றி.

    மழலையின் புன்சிரிப்பில் அன்பை அடைந்த தங்கள் அனுபவக் கவிதையின் வரிகள் யாவும் அற்புதம்.

    ReplyDelete
  9. அன்பென்பது.. .. ..
    அன்பென்பது தண்மை என்று புலவர் சொன்னார்- ஆனால்
    அதுவும் தணலாய் சுட்டது சில நேரம்!

    அன்பென்பது அழகென்று அறிஞர் சொன்னார்-ஆனால்
    அதுவும் சிதைந்து அழிந்தது சில நேரம்!

    அன்பென்பது மலரென்று கவிஞர் சொன்னார்-ஆனால்
    அதுவும் சருகாய் உதிர்ந்தது சில நேரம்!

    அன்பென்பது உண்மையென்று கற்றோர் சொன்னார்-ஆனால்
    அதுவும் பொய்யாய்க் கரைந்தது சில நேரம்!

    அன்பென்பது தெய்வமென்று பெரியோர் சொன்னார்-ஆனால்
    அதுவும் சிலையாய்ப் போனது சில நேரம்!

    அன்பென்பது அமுதமென்று சிலர் சொன்னார்-ஆனால்
    அதுவும் விடமாய்ப்போனது சில நேரம்!

    அன்பென்பது இசையென்று பலர் சொன்னார்-ஆனால்
    அதுவும் ஸ்ருதி கலைந்து போனது சில நேரம்!

    அன்பென்பது யாதென்று அலைந்து நின்றேன்!
    அறிந்தபோது உணர்ந்தபோது அசந்து நின்றேன்!

    அன்பென்ற தண்மைதான் மழலைதன் விரல் தொடுகை!
    அன்பென்ற உண்மைதான் மழலைதன் புன் சிரிப்பு!

    அன்பென்ற அழகுதான் மழலைதன் தளிர் நடை!
    அன்பென்ற கடவுள்தான் மழலைதன் குளிர்ப்பார்வை!
    அன்பென்ற மலர்தான் மழலைதன் எழில்முகம்!

    அருஞ்சுவைக் கற்கண்டும் அருமருந்தும் தோற்குமே
    அன்பென்ற அமுதமாம் அழகு மழலைப் புன்சிரிப்பில்!

    வணக்கம் அம்மா .அருமையான கவிதைவரிகளுடன் இன்றைய உங்கள்
    வலைச்சர அறிமுகங்களையும் கண்டு மகிழ்ந்தேன் .மிக்க நன்றி அம்மா
    எனது வலைத்தளத்தினையும் இங்கு அறிமுகம் செய்து வைத்தமைக்கு .
    பாராட்டுக்கள் சக வலைத்தள அறிமுகங்களுக்கும் .நன்றி அம்மா பகிர்வுக்கு .

    ReplyDelete
  10. அன்பின் இனிய சகோதரி!

    அன்பைத்தேடி அலுத்து
    முடிவில் கண்டீர்
    மழலையிடம்
    குழலினிது, யாழினிது
    என்பவர் மக்கள் மழலைச் சொல்
    கேளாதவர் என வள்ளுவன் கூறிய சத்தான சொற்களை முத்தான
    கவிதையாக்கி அளித்துள்ளீர்
    மேலும் வலைச்சரத்தில்
    என்னை அறிமுகப் படுத்தியுள்ளீர்
    அதிகம் எழுத முதுகுவலி
    இடந்தரவில்லை மன்னிக்க!
    நன்றி!நன்றி! நன்றி!

    புலவர் சா இராமாநுசம்

    ReplyDelete
  11. வணக்கம் அம்மா

    அன்பிற்கோர் இலக்கணம் கூறி
    அழகிய கவிதை
    இயல்புடன் கொடுத்திருக்கிறீர்கள்.

    உங்களின் ஆசீர்வாதத்துடன்
    என் கவிதை இங்கே உங்களால்
    அறிமுகப்படுத்தப்பட்டதை
    பெருமையுடனும் பணிவுடனும் ஏற்றுக்கொள்கிறேன்.
    நன்றி அம்மா.

    ReplyDelete
  12. மிகவும் அருமையான, அசத்தலான, அழகான, அன்பான அறிமுகங்கள். அனைவருக்கும் என் மனமார்ந்த பாராட்டுக்கள். vgk

    ReplyDelete
  13. என் பதிவையும் இங்கே சுட்டி காட்டியமைக்கு நன்றி நண்பரே!

    ReplyDelete
  14. மதிப்புமிக்க தங்களின் இந்த அறிமுகம் மகிழ்வைத் தருகிறது, நன்றி மனோ மேடம். வலைச்சரத்தில் தாய்மையின் தேடலை அறிமுகப்படுத்திய விதம் கவிதைக்கு உயிர்ப்பைத் தருகிறது. அறிமுகமான மற்றவர்களுக்கும் வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்கிறேன்.

    ReplyDelete
  15. என்னை இங்கே அறிமுகப் படுத்தியதற்கு மிக்க நன்றி Mrs மனோ :)

    ReplyDelete
  16. அன்பு கவிதைக்கும் இன்று அறிமுகமாகியிருக்கும் அழகு கவிதை பதிவர்களுக்கும் வாழ்த்துக்கள்

    ReplyDelete
  17. கவிதையால் சரம் தொடுத்து மணக்கிறது பதிவு...

    என் கவிதையும் அறிமுகம் செய்த்ற்க்கு மிக்க மகிழ்ச்சி...

    அனைவருக்கு வாழ்த்துக்கள்...

    ReplyDelete
  18. மனோ அம்மா,

    உங்களால் இன்று சில புது வலைப்பதிவர்களை அறிந்துக் கொண்டேன். வாழ்த்துக்களும், நன்றியும்.

    ReplyDelete
  19. அன்பு கவிதை அருமை.
    குழந்தையின் சிரிப்பில் கோடி துக்கம் மறைந்துவிடும் என்று சொல்லுவார்கள்.
    வாழ்த்துக்கள் அறிமுக பதிவர்களுக்கு..

    ReplyDelete
  20. முத்துக்கள் அருமை!

    ReplyDelete
  21. நல்லதோர் அறிமுகம்..

    அறிமுகம் செய்யப்பட்ட பதிவர்களுக்கு வாழ்த்துக்கள்.

    ReplyDelete
  22. வலைச்சர ஆசிரியர் பணி சிறக்க வாழ்த்துக்கள் அம்மா. என்னையும் ஒரு பொருட்டெனவே எனது கவிதையும் அங்கீகரித்து என்னை வலைச்சரத்தில் அறிமுகப்படுத்தியமைக்கு என் நன்றிகளை உள்ளன்போடு தெரிவித்துக்கொள்கிறேன். அது கற்பனைக்கவிதையல்ல. என் நிகழ்கால உண்மை உணர்ச்சிகளின் வெளிப்பாடே.

    எனது நன்றிகளை வணக்கத்துடன் நவில்கிறேன்.

    ReplyDelete
  23. மனோ அக்கா என்னை இங்கே அறிமுகம் செய்து உங்கள் நினைவில் நான் இருப்பதை உணர்த்திய அன்பிற்கு நன்றிகள்.

    உங்கள் அறிமுகங்கள் ஒவ்வொன்றும் ஒவ்வொரு விதத்தில் சிறந்தவர்கள். சில தளங்கள் படித்திருக்கிறேன், பிறவற்றையும் படித்து விடுகிறேன்.

    மகிழ்வுடன் மீண்டும் நன்றிகள் அக்கா

    ReplyDelete
  24. உங்களது மீள் கவிதை அருமை...

    அறிமுகம் செய்திருக்கும் வலைப்பதிவர்களில் நிறைய பேர்கள் எனக்குப் புதியவர்கள்.... படிக்க வேண்டும்....

    பகிர்வுக்கு நன்றி.

    ReplyDelete
  25. கவிதைப் பக்கங்கள் அறிமுகங்கள் அருமை.

    ReplyDelete
  26. அன்போடு பாராட்டி, வாழ்த்து சொல்லியிருக்கும் உங்களின் அன்பிற்கு இதய‌ம் நிறைந்த நன்றி வித்யா!

    ReplyDelete
  27. என் கவிதையை அன்புடன் பாராட்டியதற்கு இனிய நன்றி ராஜி!

    ReplyDelete
  28. எனது கவிதையை பாராட்டியதற்கு அன்பு நன்றி சகோதரர் குமார்!

    ReplyDelete
  29. பாராட்டிற்கு அன்பு நன்றி ஜலீலா!

    ReplyDelete
  30. கருத்துரைக்கு அன்பு நன்றி சகோதரர் மூர்த்தி!

    ReplyDelete
  31. பாராட்டிற்கும் வாழ்த்துக்களுக்கும் இதயன் நிறைந்த நன்றி ராஜராஜேஸ்வ‌ரி!

    ReplyDelete
  32. பூக்கடைக்கு விள‌ம்பரம் தேவையில்லை என்பது போல தங்களது கவிதைகளுக்கு உண்மையாகவே விமர்சனமோ அறிமுகமோ தேவையில்லை சகோதரர் ரமணி! தங்களின் வலைத்தளத்தை இங்கே மறக்காமல் குறிப்பிட வேண்டும் என்பதனால் மட்டுமே ஒரு கவிதையை மட்டும் குறிப்பிட்டு தங்களை அறிமுகம் செய்தேன். மற்றபடி நான் மிகவும் சாதாரணமானவள். ‌

    ReplyDelete
  33. என் கவிதைக்கான பாராட்டிற்கும் வலைச்சர ஆசிரியருக்கான வாழ்த்துக்களுக்கும் அன்பு நிறைந்த நன்றி ராமலக்ஷ்மி!

    ReplyDelete
  34. பாராட்டிற்கு அன்பார்ந்த நன்றி அம்பாளடியாள்!!

    ReplyDelete
  35. அன்பான பாராட்டிற்கு உளமார்ந்த நன்றி சகோதர‌ர் ராமானுஜம்!

    ReplyDelete
  36. அன்பான பாராட்டிற்கு அன்பு நன்றி மகேந்திரன்!

    ReplyDelete
  37. வாழ்த்துக்களுக்கு அன்பு நன்றி ராஜேஷ்!

    ReplyDelete
  38. அன்பு பாராட்டிற்கு இனிய நன்றி ராம்வி!

    ReplyDelete
  39. வாழ்த்துக்களுக்கு அன்பு நன்றி கடம்பவன் குயில்!

    ReplyDelete
  40. பாராட்டிற்கு அன்பு நன்றி சகோதரர் வெங்கட் நாகராஜ்!

    ReplyDelete
  41. அன்புடனும் அழகிய கருத்துக்களுடனும் பின்னூட்டங்கள் தந்த அன்புத் தோழமைகளுக்கு இதயப்பூர்வமான நன்றி!

    ReplyDelete
  42. தங்களை போல என்னால் எழுத இயலாது... இருந்தாலும் என் மனதில் தோன்றியவைகளை எழுதி இருக்கிறேன் .... என்னுடைய வலை தளம் உங்கள் பார்வைக்காக....
    http://moovjabi.blogspot.com/

    ReplyDelete
  43. முன்னுரையும் சுருக்கமாக ஆயினும் மிகச் சரியாக
    அறிமுகம் செய்த விதமும் மிக மிக அருமை
    அறிமுகம் செய்யப்பட்ட அனைவருக்கும் எனது
    மனமார்ந்த வாழ்த்துக்கள்
    நல்ல பதிவர்களைஅறிமுகம் செய்துவைத்த தங்களுக்கு
    சதுர்த்தி சிறப்பு வாழ்த்துக்கள்

    ReplyDelete
  44. // அன்பென்ற அமுதமாம் அழகு மழலைப் புன்சிரிப்பில்! //

    எவ்வளவு அழகான கவிதை வரிகள்!

    அன்பும், அமுதமும், அழகும், மழலையும், புன்சிரிப்பும் ஒரேயடியாகச் சேர்ந்து சொக்க வைத்துள்ளது.


    பாராட்டுக்கள். வாழ்த்துக்கள்.

    ReplyDelete

தமிழ் மணத்தில் - தற்பொழுது