நிறைவான ஏழாம் நாள்
➦➠ by:
Ramani
தேவன் தாம் சிருஷ்டித்து உண்டு பண்ணின தன்னுடைய
கிரியைகளைஎல்லாம் முடித்த பின்புஅதிலே
ஓய்ந்திருந்த படியால் தேவன் ஏழாம் நாளை
ஆசி ர்வதித்து அதைப பரிசுத்தமாக்கினார் என
வேதாகமம் சொல்லும்
அதைப்போல நமக்கான கடைமைகளை முடித்து நிமிரும்
நாள் கூட நமக்கு நிறைவான நாள்தானே
அந்த வகையில் இன்று நான்
வலைச்சர ஆசிரியர் பணியை முடித்து
நிறைவான மனத்தோடு உங்களிடமிருந்து
விடைபெறுகிறேன்
சக்கரவர்த்தித் திருமகன் படத்தில் வரும் பாடல் போல
பல்லாயிரக் கணக்கான சிறந்த பதிவர்கள் இருக்கும்
வலைத்தளத்தில் ஒருவாரத்தில் அனைவரையும்
அறிமுகப் படுத்த நினைப்பதுவும்
"யானையைப் பிடித்து ஒரு
பானைக்குள் அடைத்து வைக்க
ஆத்திரப்படுபவன் " செயல் போலத்தான்
என நினைக்கிறேன்
நமது வீட்டு நிகழ்ச்சியின் போது பரிசுப் பொருட்களைவிட
நபர்கள் அதிகமாகிப் போகையில் நமக்கு மிகவும்
வேண்டியவர்களுக்கு பிறகு கொடுத்துக் கொள்ளலாம்
என முடிவு எடுத்தலைப் போல
புதிய பதிவர்கள்/பெண்பதிவர்கள்/ பிரபல பதிவர்களென
வரிசைப் படுத்தி வருகையில் எனக்கு மனத் தளவில்
மிகவும் நெருக்கமானவர்களின் தரமான பதிவினை
அறிமுகம் செய்யாது தவிர்க்க வேண்டி வந்தது.
தவிர்த்தும் இருக்கிறேன்
அவர்கள் என்னை மன்னிக்கவேண்டும்
அன்றாடப் பணிகள் /அவசரப் பணிகள்/ மின்சாரத் தடை
நெட் லொல்லு அத்தனையும் தாண்டித்தான் இந்த வாரம்
முழுவதும் வலைச்சர ஆசிரியர் பணியைத் தொடர வேண்டி
இருந்தது.எனவே பதிவில் தவறுகள் இருக்கும் பொறுத்தருள்க.
பிற பதிவர்களின் பதிவுகளோடு என் பதிவை ஒப்பிடுகையில்
பதிவின் எண்ணிக்கையில்/ தரத்தில்/
பின்தொடர்பவர்கள் எண்ணிக்கையில் என எதனுடனும்
என் பதிவு பின் தங்கித்தான் இருக்கும்
ஆயினும் ஏதோ ஒரு நம்பிக்கையில் எனக்கும்
ஆசிரியர் பொறுப்பை வழங்கி கௌரவம் செய்த
சீனா ஐயா அவர்களுக்கும் ஆசிரியர் குழுவினருக்கும் எனது
மனமார்ந்த நன்றியினைத் தெரிவித்து உங்கள் அனைவரிடம்
இருந்து விடை பெறுகிறேன்.மீண்டும் சந்திப்போம்
-----------@@@@@@@@@@@__________
நேற்றைய புதிருக்கான விளக்கம்
தனது அதிகாரத்தின் உச்சியில் இருந்த நேரத்தில் முடியாது என்ற
வார்த்தையை அகராதில் இருந்தே எடுக்கவேண்டும் எனச்
சொன்னவர் நெப்போலியன்.
பின் நாளில் அவர் தோல்வியுற்று எல்பா தனிமைச் சிறையில்
அடைக்கப் பட்ட பின்பு அவரால் எதுவுமே முடியாது போகிறது
அப்போது அவரை சந்தித்தவர்
"இப்போது உங்களால்எதுவும் முடியாதே .இப்போது
முடியாது என்கிற வார்த்தை தேவையாகத் தானே
இருக்கிறது "என்கிறார்
அப்போது நெப்போலியன் முடியாது என்கிற வார்த்தையை
உபயோகிக்காமல் முடியாது என்பதை இப்படிச் சொல்கிறார்
"எல்பா சிறைக்கு வருவதற்கு முன்னால் என்னால்
எல்லாம் முடியும் " என்கிற பொருளுடைய அந்த வாக்கியத்தை
நமது "விகடகவி" போல பின்னிருந்து படித்தாலும்
அதைப் போலவே வரும்
_________@@@@@@@@@@_________
என் மன நிலையைச் சொல்லும்
என் ஒரு சிறு கவிதையுட னும்
வாழ்த்துக்களுடனும் ..............
தேடுதலையே...
நினைவுகளில் தீர்க்கமாய்
வாழ்வின் நோக்கமாய்
எக்கணமும் கொள்வதால்
அலுத்து அமரவோ
சலித்து ஒதுங்கவோ
நேர்வதில்லை எப்போதும்
இலக்குகளை....
எல்லைகளாகக் கொள்ளாமல்
இளைப்பாறிச் செல்லும்
இடமாகக் கொள்வதால்
தேங்கி நிற்கவோ
சோர்ந்து சாயவோ
தோன்றுவதில்லை எப்போதும்.
சிகரங்களை....
சாதனையாகக் கொள்ளாமல்
மறுசிகரம் காட்டுகின்ற
குறியீடாகக் கொள்வதால்
கிரீடங்களில் நாட்டமோ
சரிவுகளில் பதற்றமோ
வந்ததில்லை எப்போதும்.
விடியலை...,
மற்றுமொரு நாளாக
மனதினில் கொள்ளாது
புத்தம்புது நாளாக
புதியதொரு வாய்ப்பாக
எப்போதும் கொள்வதால்
வெற்றிக்கு தடையேதும்
கண்டதில்லை எப்போதும்.
தொடர்ந்து சந்திப்போம் ...........
|
|
வலைச்சர ஆசிரியர் பணியை நல்லமுறையில் திருப்திகரமாக பதிவுகளையும் , அறிமுகங்களையும் அழகாக வழங்கிய தங்களுக்கு மனமார்ந்த நன்றி சகோதரரே
ReplyDeleteதேவன் ஏழாம் நாளை ஆசிர்வதித்து பரிசுத்தமாக்கியது என்று சொன்னீர்கள்.. வலைச்சரத்தில் தாங்களும் இடம்பெற்று நிறைவுபெரும் இந்த ஏழாம் நாளில் அந்த தேவனுடைய ஆசிர்வாதம் தங்களை எப்பொழுதும் சூழ்ந்திருக்கட்டும்....
ReplyDelete//புத்தம்புது நாளாக புதியதொரு வாய்ப்பாக எப்போதும் கொள்வதால் வெற்றிக்கு தடையேதும்கண்டதில்லை தொடர்ந்து சந்திப்போம் ........... //
ReplyDeleteஅழகான வீருநடையுடன் கூடிய வெற்றிக்கான கவிதை.. அருமை சகோதரரே...தொடர்ந்து சந்திப்போம்.
அருமையான
ReplyDeleteநிறைவான பணி
மனப்பூர்வ வாழ்த்துக்கள்.
மாய உலகம் .//.
ReplyDeleteதங்கள்
மேலான வரவுக்கும்
மனம் திறந்த வாழ்த்துக்கும்
மிக்க நன்றி
Rathnavel //
ReplyDeleteதங்கள்
மேலான வரவுக்கும்
மனம் திறந்த வாழ்த்துக்கும்
மிக்க நன்றி
வலைச்சர ஆசிரியர் பணியைச் செவ்வனே செய்து முடித்திருக்கும் உங்களுக்கு எனது மனமார்ந்த வாழ்த்துகள்.
ReplyDeleteசிகரங்களை....
ReplyDeleteசாதனையாகக் கொள்ளாமல்
மறுசிகரம் காட்டுகின்ற
குறியீடாகக் கொள்வதால்
கிரீடங்களில் நாட்டமோ
சரிவுகளில் பதற்றமோ
வந்ததில்லை எப்போதும்.//
தொடர்ந்து வெற்றி பெற தூண்டும் வரிகள்.
சிறப்பான பணி.வாழ்த்துக்கள்.
வெங்கட் நாகராஜ் //.
ReplyDeleteதங்கள் மேலான வரவுக்கும்
வாழ்த்துக்கும் மனம் கனிந்த
வாழ்த்துக்கள்
கோகுல் //
ReplyDeleteதங்கள் மேலான வரவுக்கும்
வாழ்த்துக்கும் மனம் கனிந்த
வாழ்த்துக்கள்
மிக சிறப்பான அறிமுகங்கள் ..
ReplyDeleteசுவாரஸ்யமான தகவல்கள்
வலைசரத்தில் ஒரு அசத்தல் வாரம் இது
நன்றி நன்றி
மேற்கொண்ட பணியை சிறப்பாய் முடித்துள்ளீர்கள். முத்தாய்ப்பாய் உங்களின் கவிதை மனசை இன்னமும் வருடிக் கொண்டிருக்கிறது. வாழ்த்துக்கள் நண்பரே!
ReplyDeleteவலைச்சர ஆசிரியராய் அருமையான பணியாற்றிய ரமணி ஐயா அவர்களுக்கு வாழ்த்துக்கள்.
ReplyDeleteவெங்கட் நாகராஜ் //
ReplyDeleteதங்கள் மேலான வரவுக்கும்
மனம் கனிந்த வாழ்த்துக்கும்
நன்றி
மோகன்ஜி//
ReplyDeleteதங்கள் மேலான வரவுக்கும்
மனம் கனிந்த வாழ்த்துக்கும்
நன்றி
'பரிவை' சே.குமார்//
ReplyDeleteதங்கள் மேலான வரவுக்கும்
மனம் கனிந்த வாழ்த்துக்கும்
நன்றி
அருமையான நிறைவான பணி
ReplyDeleteமனப்பூர்வமான பாராட்டுக்களும் வாழ்த்துக்கள். அன்புடன் vgk
வலைச்சர ஆசிரியர் பணி மிகவும் பொறுப்புடைய ஒன்று என்று நாங்களும் உணரும் வகையில் அழகாக கையாண்டு ஒரு நிறைவான வாரத்தை முடித்திருக்கிறீர்கள். நீங்கள் அறிமுகம் செய்திருக்கும் ஒவ்வொரு வலைப்பூவையும் திறந்து பார்த்து மீளா வியப்பில் ஆழ்ந்திருக்கிறேன்.
ReplyDeleteநன்றி.
நிறைவான பகிர்வுகளுக்குப் பாராட்டுக்கள். வாழ்த்துக்கள்.
ReplyDeleteவெற்றிக்கு தடையேதும்
கண்டதில்லை எப்போதும்.
வலைச்சரம் அருமையான நிறைவு... வாழ்த்துக்கள்.
ReplyDeleteவை.கோபாலகிருஷ்ண//
ReplyDeleteதங்கள் வரவுக்கும் வாழ்த்துக்கும்
மிக்க நன்றி
VENKAT //
ReplyDeleteதங்கள் வரவுக்கும் வாழ்த்துக்கும்
மிக்க நன்றி
இராஜராஜேஸ்வரி //.
ReplyDeleteதங்கள் வரவுக்கும் வாழ்த்துக்கும்
மிக்க நன்றி
தமிழ்வாசி - Prakash//
ReplyDeleteதங்கள் வரவுக்கும் வாழ்த்துக்கும்
மிக்க நன்றி
உங்கள் அறிமுகப்பணிக்கு வாழ்த்துக்கள்..
ReplyDeleteசிகரங்களை....
சாதனையாகக் கொள்ளாமல்
மறுசிகரம் காட்டுகின்ற
குறியீடாகக் கொள்வதால்
கிரீடங்களில் நாட்டமோ
சரிவுகளில் பதற்றமோ
வந்ததில்லை எப்போதும்.
.
உண்மையிலேயே நல்ல கவிதை.....
மனதை தொட்டு நிற்கிறது
வரிகள் அனைத்தும்...
vidivelli //
ReplyDeleteதங்கள் வரவுக்கும் வாழ்த்துக்கும்
மிக்க நன்றி
கொடுத்த பணியை சிறப்பாக செய்து முடித்தது மட்டுமல்லாது தான் படித்து பயனுற்ற ரசித்த மகிழ்ந்த பதிவர்களையும் அவர்களின் வலைப்பூவையும் அறிமுகப்படுத்தி அழகிய கவிதை ஒன்றில் கூட செய்ய நினைப்பவை சிறப்பாக செய்வது மட்டுமல்லாது அதில் இறுமாப்பு கொள்ளாமல் தன்னடக்கத்தில் அமிழவும் கத்துக்கொடுத்திருக்கீங்க ரமணி சார்....
ReplyDeleteநல்லவை எல்லாம் எங்களுக்கு கொடுத்தீர் படித்து பயனுற....
நன்றிகளெல்லாம் உங்களுக்கு சமர்ப்பிக்கிறோம்.. இடைவிடாத எத்தனையோ பிரச்சனைகளுக்கும் இடையில் நெட் சொதப்பல், கரெண்ட் கட் உடல் உபாதை இப்படி எல்லாவற்றையும் ஒரு பக்கம் தள்ளிவெச்சிட்டு மிக அருமையாக மனநிறைவாக ஏழாம் நாள் பகிர்வை தந்த உங்களுக்கு என் அன்பு நன்றிகள் ரமணி சார்....
அருமையான கவிதை விடைபெறுதலின் சிறப்பான முத்தாய்ப்பு. நிறைவான வாழ்த்துக்கள் ரமணி சார்.
ReplyDeleteஅருமையான வாரத்தை எங்களுக்கு வழங்கியதுக்கு நன்றிகள்.. கவிதையுடன் முடித்தது ஜூப்பரு :-)
ReplyDeleteஎப்போதும் போலவே
ReplyDeleteதப்பேதும் இல்லாமல்
இப்போதும் பாடினீர்
ஒப்பேதும் இல்லாரமணி
புலவர் சா இராமாநுசம்
மஞ்சுபாஷிணி //
ReplyDeleteதங்கள் மேலான வரவுக்கும்
மனம் கனிந்த வாழ்த்துக்கும்
மனப் பூர்வமான நன்றி
சாகம்பரி //
ReplyDeleteதங்கள் மேலான வரவுக்கும்
மனம் கனிந்த வாழ்த்துக்கும்
மனப் பூர்வமான நன்றி
அமைதிச்சாரல்//.
ReplyDeleteதங்கள் மேலான வரவுக்கும்
மனம் கனிந்த வாழ்த்துக்கும்
மனப் பூர்வமான நன்றி
புலவர் சா இராமாநுசம் //
ReplyDeleteதங்கள் மேலான வரவுக்கும்
மனம் கனிந்த வாழ்த்துக்கும்
மனப் பூர்வமான நன்றி
சிறப்பாகச் செய்து முடித்த பணி
ReplyDeleteசிறந்து விளங்கியது. உங்கள் மனநிறைவு
உங்கள் கவிதையில் தெரிகிறது. மனமார்ந்த வாழ்த்துக்கள் .
தங்கள் மேலான வரவுக்கும் வாழ்த்துக்கும்
ReplyDeleteமனமார்ந்த நன்றி
G.M Balasubramaniam //
ReplyDeleteதங்கள் மேலான வரவுக்கும் வாழ்த்துக்கும்
மனமார்ந்த நன்றி
சிறப்பான அறிமுகங்கள் நிறைவான பணி செய்துள்ளீர்கள். பாராட்டு மற்றும் வாழ்த்துகள்.
ReplyDeleteசிறப்பான பணி.அருமையாய்ச் செய்துள்ளீர்கள்.வழக்கமாய் உங்கள் கவிதை சிறப்பாக இருக்கும்.நிறைவு நாளில் தந்துள்ள கவிதை வெகு சிறப்பு.
ReplyDeleteநிறைவான பணி வாழ்த்துகள்.
ReplyDeleteநல்ல பல அறிமுகங்கள் செய்து நன்றாகவே ஒரு வாரத்தை நிறைவு செய்திருக்கிறீர்கள். கவிதை பிரமாதம்.
ReplyDelete