மாப்பு வச்சுட்டான்யா ஆப்பு
➦➠ by:
சிந்திக்க,
ஜ.ரா.ரமேஷ் பாபு
அன்பார்ந்த வலையுலக நண்பர்களுக்கும் சக பதிவர்களுக்கு வணக்கம்.
இன்றைய செய்தி
ஒரு ரெப், ஒரு கிளெர்க் அப்புறம் அவங்க மேனேஜர் மூணு பேரும் மதிய உணவுக்கு ஒரு ஹோட்டலுக்கு போய்கிட்டு இருந்தாங்க வழியில ஒரு விளக்கு கெடைச்சது, அதை எடுத்து கிளெர்க் தேய்க்க ஒரு பூதம் வெளியே வந்துச்சு.
"சொல்லுங்க உங்களுக்கு என்ன செய்யணும்."
"நான் யாரும் இல்லாத தீவுக்கு போகணும், வேகமா போட் ரைட் (boat ride) பண்ணனும்." - கிளெர்க் கேட்டார்
"சரி ஜீ பூம் பா .." கிளெர்க் அவர் கேட்ட மாதிரி ஒரு தீவுக்கு போயிட்டார்
"அடுத்த விருப்பம் யாருடையது" ரெப் மற்றும் மேனேஜர்-ஐ பார்த்து பூதம் கேட்டுச்சு
"நானு நானு" - ரெப் அவசரமா சொன்னார்
"என்ன வேணும்?"
"நான் கூட ஒரு கூட்டம் இல்லாத பீச்சுக்கு என் காதலியோட போயி சன் பாத், ஆயில் மசாஜ் எல்லாம் பண்ணிக்கணும்"
"சரி ஜீ பூம் பா" - ரெப்பும் மறைஞ்சுட்டார்
"உங்களுக்கு என்ன பண்ணனும்" மேனேஜர்-ஐ பார்த்து பூதம் கேட்டுச்சு
"ம்... லஞ்ச் டைம் முடிஞ்ச உடனே நீ அனுப்பி வச்ச ரெண்டு பேரும் ஆஃபிஸ்க்கு திரும்பி வரணும்"
நீதி : எப்போதும் உங்கள் மேனேஜர்-ஐ முதலில் பேச அனுமதியுங்கள்
டிஸ்கி : இந்த வெஜிடபுள் பிரியாணி நல்லா இல்லைன்னா இங்கே சிக்கன் பிரியாணி இருக்கு..
இன்றைய வலைப்பூ நண்பர்கள்
1. இவர் வியாபாரம் / ஷேர் மார்க்கெட் / சுய வேலை வாய்ப்பு / அக்கவுண்டிங் பற்றிய வலைப்பதிவு நடத்துகிறார். டேலி (TALLY) கத்துக்கலாமா? இவருடைய சமீபத்திய பதிவு. இவரின் எளிதான எழுத்து நடையில் சிக்கலான விஷயங்களை புரிய வைக்கிறார்
2. அறிவியல் கட்டுரைகள் எழுதுவதில் இவர் சமர்த்தர். பிறப்பொக்கும் எல்லா உயிர்க்கும் என தலைப்பு வைத்துக்கொண்டு நாம் அறியாத பல செய்திகளை தருகிறார். அறிவியல் தவிர்த்து இவர் சமூக கட்டுரைகளும் எழுதி வருகிறார். இவர் எழுதிய கட்டுரைகளில் என்னை உலுக்கிய கட்டுரை இது தீண்டாமை தேசம் !
3. கவிதைகள் எழுதுவதில் விற்பன்னர் இவர், வசந்த மண்டபம் என்று தலைப்பிட்ட வலைப்பூ இவருடையது. இவரின் பதிவுகள் எல்லாம் இவரின் கலைகளின் மேல் உள்ள ஈடுபாட்டை எடுத்துரைக்கும். இவரின் இந்த பதிவு பதினொன் ஆடற்கலைகள்!!! இயவ்ரின் திறமைக்கு சான்று..
அன்புடன்
ஜ.ரா.ரமேஷ் பாபு
|
|
கதை அருமை நண்பரே...
ReplyDeleteநறுக்கென்று மூத்தான மூன்று அறிமுகங்கள்.
வாழ்த்துக்கள்.
நீதிதான் சூப்பர்.....!
ReplyDeleteஅறிமுகங்களுக்கு என் வாழ்த்துக்கள்...
ReplyDeleteபுதுமை. நல்லா இருக்குது. வாழ்த்துக்கள்!
ReplyDeleteஅறிமுகங்களுக்கு என் வாழ்த்துக்கள்...
ReplyDeleteஅருமையான அறிமுகங்கள்.
ReplyDeleteஅறிமுகப்படுத்தப்பட்ட வலையன்பர்களுக்கு வாழ்த்துக்கள்.
வித்தியாசமான அறிமுகங்கள்...
ReplyDeleteஇன்று அறிமுகமாகியிருக்கும்...
ReplyDeleteBusiness Press Mr Rain..
பிறப்போக்கும் எல்லா உயிருக்கும்..சிராஜடதீன்...
வசந்த மண்டபம் மகேந்திரன்...
ஆகிய மூவரு்ககும் என் வாழ்த்துக்கள்...
அறிமுகம் எல்லாமே கலக்கல்..ஜோக்கோட ஆரம்பிக்கிற ஸ்டைல் சூப்பர்
ReplyDeleteநல்ல அறிமுகங்கள்.
ReplyDeleteநல்ல கதை..
ReplyDeleteவலைப்பூ அறிமுகங்களிற்கு நன்றி....
அறிமுகமாகிய அனைத்து உறவுகளுக்கும் வாழ்த்துக்கள்..
நல்ல அறிமுகங்கள்.
ReplyDeleteவாழ்த்துக்கள்.
ஆஹா ஜீ பூம் பா அருமை நண்பா....
ReplyDeleteவாழ்த்துக்கள் ரமேஷ்...
ReplyDeleteஹரி முகம் கண்ட திருப்தி எம்மை அறிமுகம் செய்தமைக்கு.. மிக்க நன்றி நண்பரே..
ReplyDelete//நீதி : எப்போதும் உங்கள் மேனேஜர்-ஐ முதலில் பேச அனுமதியுங்கள்//
ReplyDeleteரமேஷ்,
நீதி ரொம்ப நல்லாயிருக்குண்ணே.
அறிமுகங்களுக்கு என் வாழ்த்துக்கள்.
ReplyDeleteவலைச்சரத்தில் எம்மை அறிமுகப் படுத்தியமைக்கு
ReplyDeleteகோடானுகோடி நன்றிகள் நண்பரே.
சிறிய ஒரு தத்துவக் கதையோடு சேர்ந்த அறிமுகம் ரசித்தேன்.
ReplyDelete//நீதி : எப்போதும் உங்கள் மேனேஜர்-ஐ முதலில் பேச அனுமதியுங்கள்//
ReplyDeleteஆமாம்பா.பேசவிடுங்க. பேசறதுதான் அவங்க வேலையே.