வாரம் ஒரு ஆசிரியர் தனது பார்வையில் குறிப்பிடத்தக்க பதிவுகளை அறிமுகப் படுத்தும் தமிழ் வலைப்பூ கதம்பம்...
Sunday, September 27, 2009
நன்றி அவிய்ங்க ராஜா - வாங்க செல்வேந்திரன்
கடந்த ஒரு வார காலமாக ஆசிரியப் பொறுப்பேற்று - ஐந்து இடுகைகள் இட்டு ஏறத்தாழ நூற்றுப்பத்து மறுமொழிகள் பெற்று - பல பதிவர்களை புதிய முறையில் அறிமுகப்படுத்தி - வலைச்சர வார ஆசிரியர் தேர்வுக்கும் ஆலோசனை கூறி - நம்மிடமிருந்து விடை பெறுகிறார் நண்பர் அவிய்ங்க ராஜா .
அவருக்கு வலைச்சரம் சார்பாக நன்றி கலந்த நல்வாழ்த்துக்ளைத் தெரிவிப்பதில் பெரு மகிழ்ச்சி அடைகிறேன்.
நாளை - செப்டம்பர் 28ம் நாள் துவங்கும் வாரத்திற்கு ஆசிரியப் பொறுப்பேற்க இசைந்துள்ளார் நண்பர் செல்வேந்திரன். இவர் கோவையில் வசிக்கிறார். பிரபல ஆங்கில நாளிதழில் பணியாற்றுகிறார். இவரைப் பற்றி நான் அறிமுகம் செய்வதை விட அருமை நண்பர் பரிசல்காரனின் இடுகையினை அறிமுக இடுகையாக இடுகிறேன்.
நண்பர் செல்வேந்திரனை வருக வருக எனக் கூறி - பல பதிவர்களை - தங்களுக்கே உரித்தான முறையில் அறிமுகப் படுத்துக என வாழ்த்தி - வலைச்சரம் சார்பினில் வரவேற்பதில் பெருமை அடைகிறேன்.
சீனா
Saturday, September 26, 2009
பதிவர் சந்திப்பில் திடீர் திருப்பம்
இப்பதிவின் முதல் பாகத்தைப் படிக்க இங்கு கிளிக்கவும்
இப்பதிவின் இரண்டாம் பாகத்தைப் படிக்க இங்கு கிளிக்கவும்
இப்பதிவிம் மூன்றாம் பாகத்தைப் படிக்க இங்கு கிளிக்கவும்
(அவசரமாக எழுதுவதால் வழக்கம்போல் சுவையாக எழுதமுடியவில்லை..மன்னிக்கவும்..இந்தப் பதிவின் மூலம் நான் ரசித்த சில பதிவர்களை அறிமுகப்படுத்துவதில் பெருமை கொள்கிறேன்..)
பதிவர்களின் அட்டகாசம் தாங்காமல் பேரரசு எஸ்கேப் ஆக முயற்சி செய்கிறார்..அந்த நேரம் பார்த்து அவருடைய உதவியாளர் பரபரப்பாக வருகிறார்.
உதவியாளர் : அண்ணே….ஓடாதீங்க..எல்லாப் பதிவர்களும் இங்க லாக் ஆகியிருக்கிறதைக் கேள்விப்பட்டு தமிழ் நடிகர்கள் திரண்டு வந்துக்கிட்டு இருக்காங்க..
பேரரசு முகம் பிரைட் ஆகிறது..உதவியாளரைப் பார்த்து கத்துகிறார்..
பேரரசு : அந்த கதவை இழுத்து மூடுடா..இன்னைக்கு ஒரு பயலும் வெளியே போகக் கூடாது..மாட்டுனீங்களா..ஏய்யா..நாங்க கோடி, கோடியா போட்டு படத்தை எடுப்போம்..நல்லா காலை மடக்கி உக்கார்ந்துக்கிட்டு விமர்சனமா பண்றீங்க..இன்னிக்கு இருக்குடி உங்களுக்கு..
எல்லாப் பதிவர்களுக்கும் வேர்த்து கொட்டுகிறது..எல்லோரும் பயத்தில் அலறுகிறார்கள்..ஒரே நேரத்தில் வாயிலை நோக்கி ஓடுகிறார்கள்..கதவு மூடியிருப்பதைக் கண்டு கதவை பலம் கொண்ட மட்டும் தட்டுகிறார்கள்..திடிரென்று கதவு திறக்கிறது..பார்த்தால் கந்தசாமி விக்ரம் சேவல் வேஷத்தில் வருகிறார்..
விக்ரம்:கொக்கொ..கொக்..கொக்..கொ…மாட்டுனீங்களா..கொக்..கொக்...
இங்க யாருய்யா செந்தழல் ரவி..கொக்கொ..,கொக்..கொ..
செந்தழல் ரவி(பீதியுடன்) : அய்யா..ரொம்ப குளோசப்ல வராதீங்க..பயமா இருக்கு..நான் ரந்தழல் செவி..சீ..செந்தழல் செவி..அய்யோ..பயத்துல வாய் குழறுதே..நாந்தான் செந்தழல் ரவி..சார்..நான் விமர்சனம் எல்லாம் எழுதமாட்டேன்..இந்தா பக்கத்துல இருக்காரே உண்மைத்தமிழன்..அவரைப் புடிங்க..அவர்தான் மொக்கைப் படத்துக்கே 10 பக்கத்துக்கு விமர்சனம் எழுதுறாரு..(அப்பாடா, மாட்டி விட்டுட்டேன்..என்று நிம்மதி பெருமூச்சு விடுகிறார்)
எல்லாரும் உண்மைத் தமிழனை அடிக்க வர..”அவரை அடிக்காதீங்க..டோண்ட் பீட் ஹிம்..” ஸ்டைலான குரல் கேட்டு திரும்பினால் சூப்பர்ஸ்டார் ரஜினிகாந்த்..கூடவே “அமெரிக்க ஜனாதிபதி சூப்பர் ஸ்டார் வாழுக, வாழுக” என்ற கோஷத்துடன் "என் வழி" பதிவர்..ரஜினி நேராக உண்மைத் தமிழனிடம் வருகிறார்..
ரஜினி : தம்பி..இந்தா பாருங்க..உங்க வழியில நான் வரலை..அது போல எங்க வழியில குறுக்க வராதீங்க..எச்சச்ச கச்சச்ச எச்சச்ச..கச்சச்ச…”என் வழி..தனி வழி” என்று பாத்ரூம் நோக்கி கையைக் காட்டி அவசரமாக பாத்ரூம் நோக்கி செல்கிறார்..
என் வ்ழி: (விசில் அடிக்கிறார்) தன்மானம் காத்த தலைவர் வாழ்க..அவர் வழியே..எங்கள் வழி..என்று செல்ல எத்தனிக்க..
சுரேஷ் : அடப்பாவிகளா..அடப்பாவிகளா..ஆயிரம் பெரியார் வந்தாலும் உங்களை திருத்த முடியாதுய்யா..அவர் பாத்ரூம் போற வழியில உண்மைத் தமிழன் குறுக்க நிக்க, வழியில குறுக்க நிக்காதீங்கன்னு சொல்லிட்டு போறாரு..அதைத் தப்பா புரிஞ்சுகிட்டு விசில் அடிச்சிட்டு கூடவே போறீங்களேய்யா..தமிழ்நாடு திருந்தவே திருந்தாய்யா..ஆஹா..இவர் இருந்தா புரியாத மாதிரியே பேசுறதுக்கே ஒருத்தர் இருப்பாரே..ஆளைக் காணோம்..
கமலஹாசன் : வெல்..ஏன் தமிழ்நாடு திருந்தாது..சமூக ஒழுக்கங்களோடு தனிமனிதர் ஒருவர் வாழ்ந்து சமூகத்திற்கும் மாற்றம் கிடைக்கும் என்று நீங்கள் கருதினால், அதை இந்தப் பரமக்குடி மைந்தன் ஒத்துக் கொள்வேன் என்று உரக்க சொல்லும் அதே சமயத்தில்..
மஸ்தான் : ஆஹா..இப்பவே கண்ணைக் கட்டுதே..சார்..தெரியாத்தனமா விமர்சனம் எழுதிட்டோம் சார்..காலுல விழுறோம்..எங்களைக் காப்பாத்துங்க..(கமல் பக்கத்தில் நைசாக சென்று) சார்..உன்னைப் போல் ஒருவன் படத்துக்கு விமர்சனம் எழுதாத ஓரே பதிவர் நாந்தான்..என்னை மட்டும் விட்டுட்டு இவிங்களை எல்லாம் புடிச்சுக்கங்க சார்..என்னை மட்டும் மன்னிச்சு விட்டுடுங்க சார்..
விஜய்காந்த் : விடாதீங்க சார்..தமிழிலே எனக்கு பிடிக்காத ஒரே வார்த்தை மன்னிப்பு..தமிழ்நாட்டுல மொத்தம் 1018 பதிவர்கள் இருக்காங்க….அதுல விமர்சனம்ற பெயரில மொக்கை போடுறவங்க..300 பேர்..”ரிப்பீட்டு, மீ த பர்ஸ்டு” பின்னூட்டம் போடுறவங்க 212 பேர்..அனானி பேரில கமெண்ட் போடுறவங்க..35 பேர்..தானே கேள்வியையும் பதிலையும் எழுதுறவுங்க..1 பேர்…
பதிவர் ஒருவர் ஆன் த ஸ்பாட் தூக்கு போட முயல..எல்லாரும் அவரை நோக்கி ஓடுகிறார்கள்….அதில் நடிகர் சிவக்குமார் பாசமாக தூக்கு போட முயன்றவரிடம் வருகிறார்
சிவக்குமார் : அப்பாஆஆஆஆ…ஏம்பாஆஆஆஆ..இப்பிபிபிடீடீடீ…
கலையரசன் : இப்படி பேசியே கொன்னா தூக்கு போடாம என்ன செய்வாரு..
நடிகர் கார்த்திக் : ஹே..ஹே..மிஸ்டர்..எங்களைப் பத்தி..விமர்சனம்..ஹே..எப்படி ..எழுதலாம்..ஹே..எங்க உங்க தலைவர் லக்கிலுக்…
எல்லாரும் லக்கிலுக்கை பார்க்க..லக்கி ஸ்டைலாக..
லக்கிலுக் : நான்..ஆளப்பிற….
பிரகாஷ்ராஜ் : ஏ..செல்லம்..ஐ லவ்யூடா..நீ ஏன் சொல்லுற..நீ ஏன் சொல்லுறா..அதெல்லாம் நீ சொல்லக் கூடாது..பஞ்ச் டயலாக் சொல்றதுக்குதான் ஒருத்தரை கூடவே வைச்சுருக்கோம்ல..செல்லம் எங்க இருக்க..
நடிகர் விஜய்: அண்ணா..வணக்கம்னா..இப்பதான்னா ராகுல் காந்தியோட டின்னர் சாப்பிட்டு வர்றேன்னா..வாழ்க்கை ஒரு வட்டம்னா..அதுல..
அஜீத் : அது…இவுங்களை எல்லாம் பேசித் தீர்க்க கூடாது..தீர்த்துட்டுதான் பேசனும்….விஜய்..உங்க வில்லு படம் டீ.விடி எங்க..இவிங்களை கட்டி வைச்சு..போட்டு காட்டுவோம்..அது…
“டே…கும்தலக்கடி கும்மாவா..சிம்புன்னா சும்மாவா….என் மகன் குறளரசனை விட்டுட்டு எப்படி வரலாம்..ஏ..டன்டனக்கா..ஏ..டனக்குனக்கா..” தலையைக் கோதியபடி டீ.ஆர்..டெர்ரராக என்டர் ஆக..பதிவர்கள் நாலா பக்கமும் தெறித்து ஓடுகிறார்கள்..ஓடும்போது உண்மைத் த்மிழன் வைத்திருந்த ஸ்கிரீன்ஷாட் ஆதாரங்கள் கீழே விழ அதை எடுக்க கீழே விழுகிறார்…
துளசி: அய்யா.அவனவன் உசிரைக் காப்பாத்துறதுக்கு குலையா ஓடுறோம்..அதை வைச்சிட்டு யாருகிட்ட நிரூபிக்க போறீங்க..வாங்க ஓடலாம்…
என்று உண்மைத்தமிழனை.இழுத்துக் கொண்டு ஓடுகிறார்..பத்து நிமிசத்தில் அனைத்துப் பதிவர்களும் இடத்தை காலி பண்ண பதிவர் சீனா மட்டும் அங்கேயே நிற்கிறார்..நடிகர்கள் திகைத்துப் போகிறார்கள்..
நடிகர் ராதாரவி : ஏம்பா..யாருப்பா நீயி..அவனவன் உசிரைக் காப்பாத்துறதுக்கு ஓடிக்கிட்டு இருக்கான்..ரத்த ஆறே ஓடிக்கிட்டு இருக்கு..ஷட்டர மூடிட்டு கடைய காலி பண்ணாம நிக்குறேயேப்பா..என்னப்பா வேணும்
பதிவர் சீனா : இல்ல சார்.எல்லாரும் ஓரே இடத்துல இருக்கீங்க..இதுதான் சந்தர்ப்பம்..நாங்க வலைச்சரம்னு ஒரு குழுமம் நடத்துறோம்..எல்லாரும் வாரத்துக்கு ஒருத்தரா அவிங்க ராசா மாதிரி மொக்கை பதிவு போட்டீங்கன்னா..ஒரு வருசத்துக்கு பிரச்சனையில்லை…
இப்போது நடிகர்கள் எல்லாரும் தலைதெறிக்க ஓடுகிறார்கள்..
(பதிவர்கள் சந்திப்பு முடிந்தது..நான் ஏற்கனவே சொல்லியபடி, யார் மனதையும் புண்படுத்தாமல் எழுதியிருக்கிறேன் என நினைக்கிறேன்..அதிக பிரசங்கித்தனமா ஏதாவது எழுதி யாருடைய மனதைக் காயப்படுத்தி இருந்தால் மன்னித்தருள்க)
Friday, September 25, 2009
இயக்குநர் பேரரசுவுடன் பதிவர்கள் சந்திப்பு-3
(பதிவின் முதல் பாகத்தைப் படிக்க இங்கு கிளிக்கவும்)
(பதிவின் இரண்டாம் பாகத்தைப் படிக்க இங்கு கிளிக்கவும்)
பேரரசு : ரெண்டு நாளா டிஸ்கசன் போய்க்கிட்டு இருக்கு, ஒரு உருப்படியான் சீன் கிடைக்கலை..சரி..உங்களுக்கெல்லாம் ஒரு கிப்ட்..யாராவது உருப்படியா ஒரு சீன் சொல்லுங்க..அட்லீஸ்ட் ஒரு பிட்டாவது சொல்லுங்க..என் படத்தில் நடிக்க வாய்ப்பு தர்ரேன்..
(எல்லாரும் பயத்தில் அலறுகிறார்கள்)
“ஆ..பிட்டா..எங்க போடுறாங்க..” சத்தம் கேட்டு எல்லாரும் திரும்பி பார்க்க..
(கேமிராவை எடுத்துக்கொண்டு ஜாக்கி சேகர் வர எல்லாரும் திரும்பவும் அலறுகிறார்கள்..)
பேரரசு : ஏ நீயாப்பா..நீ கேரளாவுக்கு போயிருக்கதாதானே சொன்னாயிங்க..அதுக்குள்ள எப்படிப்பா..
ஜாக்கிசேகர்: இல்ல சார்..ஏதோ பிட்டுன்னு காதுல விழுந்திச்சு..அதான்..நான் ஒரு மாசம் பதிவு எழுதமாட்டேன் சொன்னேன்..ஒரு பயபுள்ள வருத்தப்படலை..வருத்தப்படலைனாகூட பரவாயில்லை சார்..நேத்து ஒருத்தன் போன் பண்ணி “ரொம்ப நன்றி சார்..எங்க வயித்துல பாலை வார்த்தீங்க”ன்னு சொல்றான் சார்…மனசு வலிக்குது சார்..(கமல் மாதிரி பீலிங்க் காட்டுகிறார்)
கேபிள் சங்கர் : சார்..சீக்கிரம் முடிங்க..பல வேலைகளுக்கிடையில வந்து இருக்கேன்..நிறைய அட்டுப்படம் வந்திருக்கு..விமர்சனம் எழுதனும்…இதுல வேற ஜெயா டீ.வில நாந்தான் நடிச்சு ஆகனும்னு அடம்புடிக்கிறாயிங்க..ஒரே தொல்லை சார்..ஒரே போன் காலா இருக்கு..ஜெயா டீ.வியில லிப்ட் ஒர்க் ஆகலையாம்பா..அதுக்கு கூட என்னைத்தான் கூப்பிடுறாயிங்க..யூத்துன்னாலே பிரச்சனைதான்…
உடன்பிறப்பு: (நேரம் பார்த்து) : கேபிள் அண்ணே..வாசல்ல உங்க பேத்தி நிக்கிறாங்க பாருங்க..என்னான்னு கேளுங்க…
பேரரசு : அடப்பாவமே..பதிவர்க்ளை டிஸ்கசனுக்கு கூப்பிட்டது தப்பால்ல போச்சு..யாருமே உருப்படியா எதுவும் சொல்ல மாட்டீங்குறாயிங்களே….யாராவது உருப்படியா ஏதாவது சொல்லுங்கப்பா..
ஜோ : நீங்க கவலைப்படதீங்க சார்..ம.சோ, விக்டர் எழுதிய “பஹருளி முதல் யூப்ரடிஸ் வரை” புத்தகத்தில இருந்து ஏதாவது..
பேரரசு : கொலைவெறியைக் கிளப்பாதீங்க..எனக்கு சுவத்துல இருக்குற கவுளிதான் தெரியும்..ஏதாவது சூப்பர ரெண்டு சீன் சொல்லுங்கப்பா..
கேபிள் சங்கர் : சீனா..ஏங்க..என் பிளாக்குல ஹாட்ஸ்பாட் பார்த்தீங்களா..
கிஷோர் : அண்ணே..சீன்னு சொன்ன உடனே அதுக்கு போயிருவீங்களே..இது வேற..பேரரசு சார்..நீங்கதான் ஹீரோவா நடிக்கனுமா..நான் பிரீயாத்தான் இருக்கேன்..கூலிங்கிளாஸ் போட்ட மாதிரி என் படத்தை கூட பிளாக்ல போட்டு இருக்கேன்..
பேரரசு : அடப்பாவி..நீதானா அது..5 வது படிக்குற எங்க அக்கா பொன்ணு, உன் பிளாக் பக்கம் வந்து ரெண்டு நாளா காய்ச்சல் வந்து கிடக்காயா..மனசாட்சி இல்லே..
வினோத் கௌதம் : சார்..உடனே பீலிங்க்ஸ் ஆப் இண்டியாவா மாறிட்டீங்களே..இப்படிதான் எங்க ஆயா..
செந்தில்வேலன் : ஆ..ஆயாவா..கமலுக்கு மேக்கப் மாத்தி, ஆயா வேசத்துல நடிக்க வைச்சிருவோம்..ஆயா கமல் பற்றி கமல் ரசிகன் பார்வையில்..
பேரரசு : தயவு செஞ்சு ஆளை விட்டுடுங்க..நான் வேற யாருக்கிட்டயாவது டிஸ்கசன் வைச்சிக்குறேன்..
பேரரசு ஓட முயற்சிக்க..
டோண்டு : சார்..நங்கநல்லூர் பஞ்சாமிர்தம் சாப்பிட்டு போகலாம்ல..
(பேரரசு உள்பட எல்லாரும் பேதியாகி ஓடுகிறார்கள்)
(முடிந்தால் அலும்பு நாளை தொடரும்)
Thursday, September 24, 2009
இயக்குநர் பேரரசுவுடன் பதிவர்கள் சந்திப்பு - 2
(இப்பதிவின் முதல் பகுதியைப் படிக்க இங்கு கிளிக்கவும்)
பேரரசு : கதையெல்லாம் ரெடியா இருக்குப்பா..ஓபன் பண்ணினா..ஷ்ரேயாவும் நானும் காலேஜ்ல முதல்தடவையா சந்திக்கிறோம்..அப்ப ஒரு கவிதை..
கதிர் : அட நம்ம ஏரியா..”இரத்தம் சிலிர்த்துக் கொண்டு இருக்கிறது..செதுக்கப்பட்ட கற்கள் கொண்டு..”
பேரரசு : அய்ய..என்னப்பா கவிதை இது..நான் ஒன்னு எழுதியிருக்கேன் பாரு….”தயிர்சாதாம் இந்தாங்க..வடுமாங்காய் ஊறுதுங்கோ..”
என்ன கொடுமை சார் : என்ன கொடுமை சார்….
பேரரசு: யோவ்..என்னைப் பார்த்தா கிண்டலா இருக்கா..
என்ன கொடுமை சார் : ஐயோ சார்..நான் என்பெயரை சொன்னேன் சார்..
(நான் ஆதவன் ஏதோ சொல்லுவதற்கு வாயைத் திறக்க)
பேரரசு : நீங்க..எதுவும் பேசாதீங்க..விட்டா, வடு மாங்காய்க்கும் பதிவு போடுவீங்க..
அப்பாவி முருகன்: யோவ்..என்னையா இங்க நடக்குது..அந்தப் பக்கம் பார்த்தா, தாமரை அப்படி எழுதுறாங்க..நீங்க தயிர்சாதம் கேக்குறீங்க..என்ன தமிழன்னா இழிச்சவாயனா..
சூரியன் : சார், தயிர்சாதத்துக்கு சைட்டிஷ் என்ன..சரக்குதானே..
பேரரசு : அடப்பாவி..தயிர்சாதத்துக்கு சைட்டிஷ்ஷா..எனக்கு இந்தப் படத்துல கேட்சியா ஏதாவது பஞ்ச் டயலாக் வேணுமேயா..
இராகவன் நைஜீரியா : பிப்ரவரிக்கு அப்புறம் மார்ச்..சூரியனுக்கு எதுக்குயா டார்ச்..
பேரரசு : எங்கயா புடிக்கிறீங்க, இதெல்லாம்
இராகவன் நைஜீரியா : வேறெங்க..பதிவர் சந்திப்புலதான்..சார்..நீங்க ஸ்டண்ட் சீன் எதுவும் எடுக்க வேணாம்..பதிவர் சந்திப்பு ஏற்பாடு பண்றதுக்கு முன்னாடி ரூமுல எங்கயாவது கேமிராவை ஒளிச்சி வைச்சிருவோம்..ஆக்சன் எல்லாம் செமையா இருக்கும்..செலவு மிச்சம்..
“கண்டுபிடிச்சுடேன்..சும்மா விட மாட்டேன்..இப்படி துரோகம் பண்ணிட்டாயிங்களே..” என்ற குரல் கேட்டு எல்லாரும் திரும்புகின்றனர்..
(கையில் பிரிண்ட் அவுட்டுக்களுடன் உண்மைத் தமிழன்)
உண்மைத் தமிழன் : சார்..நாந்தான் சார்..ரெண்டு மூணு ஸ்கிரீன்ஷாட் எடுக்கறதுல கொஞ்சம் வேலை அதிகமாயிடுச்சு..ஆதாரங்களை பிரிண்ட் அவுட் வேற எடுக்கனும் பாருங்க..ஜெராக்ஸ் கடையில பதிவர்கள் கூட்டம் வேற ஜாஸ்தி ஆகிடுச்சு..
பேரரசு : (தலையை சொரிந்து கொண்டு) ஒன்னும் புரியலையே..ஆபிஸ் வேலையெல்லாம் இப்ப எதுக்கு பார்க்குறீங்க..நீங்க பதிவுலகத்துலதானே இருக்கீங்க..
தாரு(பெரும்படை அய்யனார்) : இது வேற..வேணாம் விட்டிறுங்க..ஏற்கனவே பிரச்சனையாகி கிடக்கு..விடுங்கண்ணே..பிரபல பதிவர்னாலே இப்படித்தான் கஷ்டபட வேண்டியிருக்கும்.
உண்மைத்தமிழன் : அவரு மட்டும் அந்த டாபிக்கை பத்தி எழுதாம இருந்திருந்தா, இவ்வளவு பேச்சு வந்திருக்காது..
வால்பையன் : நீங்க யாரைச் சொல்லுறீங்கன்னு தெரிஞ்சு போச்சு..லக்கி, இது பத்தி உங்க கருத்து என்ன..
லக்கிலுக் : ஆளப்பிறந்தவன்..ஆத்திரப்படமாட்டேன்..
பேரரசு : ஆஹா..சூப்பர் டைட்டில் கிடைச்சுருச்சு..
லக்கிலுக் : ஆஹா..கேப்புல கடா வெட்டுறாரே,,,என்னைப் படிக்கும் ஏழரை லட்சம் வாசகர்களுக்கு நான் என்ன…
பரிசல்காரன் : ஆ..உங்களை படிக்கிறவங்களுக்கு ஏழரையா..வால்பையன் இவர் என்னங்க சொல்லுறாரு..
(வால் பையன் ஏதோ சொல்ல வர)
லக்கிலுக் : ஏ இருப்பா..நானே சொல்லிடுறேன்..ஏழரை லட்சம் வாசகர்களை சொன்னேன்..
அப்பாவி முருகன்(அப்பாவியாய்): ஏண்ணே..தமிழ்நாட்டுல மொத்தம் இன்டெர்நெட் படிக்கிறதே ஒரு லட்சம்தான் ஒரு ஆய்வு சொல்றதே..இதைப் பத்தி என்ன நினைக்கிறீங்க
ராம்ஜி யாகூ : முருகன்..தெலுங்கு, கன்னட, மலையாள இந்தி வாசகர்களை சேர்த்தா ஏழு லட்சம் வருதே..
டோண்டு : ஸ்,..,அப்பா..என்ன வெயிலு..ஒரு நாளைக்கு எத்தனை கேள்வி..பதில் சொல்லியே மாய்ஞ்சு போயிட்டேம்பா….
லக்கிலுக் : பின்ன..இருக்காதா..அம்புட்டு கேள்வியையும் எழுதிட்டு, பதிலும் எழுதுறது கஷ்டம்தானே..
(வால்பையன் திரும்பவும் ஏதோ சொல்லவர)
லக்கிலுக் : ஏ இருப்பா..நான் சும்மா ஜோக்குக்கு சொன்னேன்..
பேரரசு : அய்யா..என் படத்துக்கு ஐடியா கேட்டது தப்பாயா..ஒருத்தரும் நல்ல ஐடியா சொல்ல மாட்டிங்குறாயிங்க..சரி...எல்லாம் பசியில இருப்பீங்க போல..இருங்க கொரிக்க வேர்க்கடலையும், போலியும் கொண்டு வரச் சொல்லுறேன்..
“போலியா…” எல்லாரும் அலறி அடித்துக் கொண்டு ஓடுகிறார்கள்
(அலும்பு நாளை தொடரும்..)
Wednesday, September 23, 2009
இயக்குநர் பேரரசுவுடன் பதிவர்கள் சந்திப்பு
இந்தப் பதிவில் உள்ள அனைத்து பதிவர்களின் பதிவுகளையும் மிகவும் ரசித்திருக்கிறேன். கவிதை, கதை, அரசியல், இலக்கியம், நகைச்சுவை, தொழில்நுட்பம், சமையல்..அப்பப்பா..எத்தனைத் தளங்களில் அசத்தியிருக்கிறார்கள்..இவர்களை எழுத்தோடு ஒப்பிட்டால், நான் எழுதுவதெல்லாம் ஒரு எழுத்தே இல்லை..
நான் ரசிக்கும் பதிவர்களை எப்படி அறிமுகப்படுத்துவது..இதுதான் இவருடைய பிளாக், இதுதான் லிங்க் என்று கொடுத்தால் சாதரணமாக இருக்கும்..ஏதாவது வித்தியாசமாக செய்தால் என்ன என்று தோணியது..இந்தப் பதிவு நான் எதிர்பார்த்த அளவுக்கு நகைச்சுவையாக இருக்குமா என்று தெரியவில்லை..ஆனால் நான் ரசிக்கும் அனைத்துப் பதிவர்களும் இதில் வருவார்கள்..
நான் படிக்கும் பதிவர்களுடன் இயக்குனர் புயல், சீறும் சிங்கம்
(ஆத்தாடி.. இப்பவே கண்ணைக் கட்டுதே), இயக்குநர் பேரரசு கற்பனையாக சந்தித்தால் எப்படி இருக்கும் என்ற கற்பனையே இந்த பதிவு. இதில் உள்ளவர்கள் எல்லாம் நான் தினந்தோறும் ரசிக்கும் பதிவர்கள். கண்டிப்பாக தப்பாக எடுத்துக் கொள்ள மாட்டீர்கள் என்ற நம்பிக்கை உள்ளது. வழக்கமா என்னுடைய பதிவைப் படித்து முடித்து, உங்கள் உதட்டோரத்தில் வரும் புன்னகையே எனக்குப் போதும். இந்தப் பதிவுனை, மூன்று, நான்கு பகுதிகளாக பிரித்துக் கொடுக்கப் போகிறேன்..ஒவ்வொரு பதிவிலும் வேறு, வேறு பதிவர்களை அறிமுகம் செய்கிறேன்.
இயக்குநர் பேரரசு அடுத்த பட டிஸ்கசனுக்காக நான் ரசிக்கும் பதிவர்களை கூப்பிட்டிருக்கிறார்..
பேரரசு : வாங்க..வாங்க..எல்லாத்தையும் எதுக்கு கூப்பிட்டிருக்கேனா..
வானம்பாடிகள் : வேறெதுக்கு..எங்க உசிரை எடுக்குறதுக்கு..
பேரரசு : வேணாம்பு..ஏற்கனவே உங்களோட “நேத்து ஆப்பு..இன்னைக்கு சோப்பு” படிச்சுட்டு மிரண்டு போயிருக்கேன்..இதோட நிறுத்திக்குவோம்..சரி இப்ப மேட்டருக்கு வருவோம்..அடுத்த படத்துல நானே ஹீரோவா நடிக்கலாமுன்னு இருக்கேன்..ஷிரேயாவைத்தான் ஹீரோயினுக்கு பேசிக்கிட்டு இருக்கோம்..
(ஒரு பதிவர் அந்த இடத்திலேயே மயக்கம் போட்டு விழ)
யோ வாய்ஸ் : அருமை..அருமை..அப்படியே..என் நூடுல்ஸ் பதிவில் எழுதி இருக்குறதையும் சேர்த்து கோர்த்து விட்டோம்னா..சூப்பரா இருக்கும்ல சார்..
(பேரரசு முனுமுனுப்பாக)..என்னடா எலி இப்படி போகுதேன்னு பார்த்தேன்..
பேரரசு: அதில்லை தம்பி, கொஞ்சம் மசாலா தூக்கலா எதிர்பார்க்குறேன்..
நான் ஆதவன் : சார்..மசாலா என்ன சார் மசாலா..என் “பெசிர பப்பு” பதிவை பாருங்க..மசாலா பின்னி இருப்பேன்..
பேரரசு : (காண்டாகி) அடப்பாவி அது நீதானா..உன் பதிவை படிச்சுட்டு , நானே தயாரிக்கலாம்னு எல்லாம் பண்ணிட்டேன்யா..கடைசியில அடுப்பை மட்டும் பத்த வைக்காம விட்டுட்டேன்..சரி வேஸ்டாப் போகக்கூடாதுன்னு கண்ணை மூடிட்டு குடிச்சதுல ரெண்டு நாளா வயத்து வலியா..இங்கயே நிக்காத..கொலை வெறியாகிடும்..யாராவது உருப்படியா ஏதாவது சொல்லுங்கயா..என்ன லொகேஷன் போகலாம்..
ஞானப்பித்தன் : சார்..வைஷ்ணவதேவி கோயில், ஹரித்துவார், இமயமலை,,இப்படியே ஒரு ரவுண்ட் போகலாம்..அப்பப்ப, நீங்களும் ஸ்ரேயாவும் ஒவ்வொரு இடத்துலயும் குத்துப் பாட்டு போடுறீங்க..நானும் ஒரு பயணப்பதிவு போட்டுறேன்..ரைட்ஸ் எனக்கு குடுத்துருவீங்கள்ள..
பேரரசு : ம்..ரைட்டுலதான் கொடுப்பேன்..
துபாய் ராஜா : அதெல்லாம் விடுங்க சார்..துபாய் எப்படி…நீங்க கதைக்கு கூட அலைய வேண்டாம்..”ஏதோ மோகம்” ன்னு கலக்கலா ஒரு சிறுகதை எழுதுறேன்..ஒரு 1 லட்சம் கொடுத்தீங்கன்னா டீல் முடிச்சிடலாம்..
பேரரசு : அடப்பாவமே..ஒரு லட்சமா..
(வாசலில் இருந்து “கவலைப்படாதே மச்சான்..நான் இருக்கேன்..” என்ற குரல் வர, எட்டிப் பார்த்தால் சக்கரை சுரேஷ்..எல்லோரும் ஓட எத்தனிக்கிறார்கள்
செந்தழல் ரவி : அடப்பாவிங்களா..கொஞ்சம் மெதுவா பேசுங்கன்னு தலையால அடிச்சுக்கிட்டேன்..இப்படி எழுப்பி விட்டுட்டீங்களேயா….அது யாருய்யா சுரேஷ் பின்னாடி நிக்கிறது..
"எல்லா திரட்டிலயும் துரோகம் நடக்குது..தமிழன்னா அவ்வளவு மட்டமாயா"... சக்திவேல் “சிங்கம் ஒன்று புறப்பட்டதே” பேக்கிரவுண்ட்டில் வர
சென்ஷி : ))))
செந்தழல் ரவி : அடப்பாவி..இங்க ஒரு ரத்த ஆறே ஓடிக்கிட்டு இருக்கு..ஸ்மைலி போடுறேயா..இப்படித்தான் கொரியாவுல..
எல்லாரும் அலறி அடித்துக் கொண்டு ஓடுகிறார்கள்..
(அலும்பு நாளை தொடரும் இன்னும் புதிய பதிவர்களுடன்)
Tuesday, September 22, 2009
நானும் வாத்தியார் ஆகிட்டேன்
இதுதான் முதல்முறை, இப்படி ஆசிரியர் பணி ஏற்பது..இந்தப் பொறுப்பினை எனக்கு கொடுத்த நண்பர் சீனா அவர்களுக்கு ம்தல் நன்றி. எழுத வந்து ஆறு ஏழு மாதங்கள் இருக்கும் என் நினைக்கிறேன்..நடந்ததெல்லாம் கனவு போல் இருக்கிறது..முன்பெல்லாம் கூகிளில் என் பெயர் தட்டிப் பார்ப்பேன்..நான் தான் எதுவும் செய்யவில்லை..என் பெயரிலாவது யாரவது ஏதாவது செய்திருக்கிறீர்களா என்று..ஓரே ஒரு பக்கத்திற்கு ரிசல்ட் வரும்.
இப்பொது தட்டிப்பார்த்தால் 10 பக்கம் வருகிறது..10 பக்கம் வரைக்கும் வளந்திருப்பதை நினைத்து மகிழ்ச்சியாக இருக்கிற சமயத்தில் பயமாகவும் இருக்கிறது..ஆழம் தெரியாமல் காலை விட்டுவிட்டோமோ என்று
இந்த ஆசிரியர் பணியை முந்தைய பதிவர்கள் சிறப்பாக செய்திருக்கிறார்கள்..கண்டிப்பாக என்னால் அந்த அளவுக்கு செய்ய முடியாது..பிற பதிவர்களை ஊக்கப்படுத்துவதில்லை, பின்னூட்டம் போடுவதில்லை என்று நண்பர்கள் உரிமையுடன் கேட்டிருந்தார்கள்..கண்டிப்பாக என் தவறுதான்..அதற்கு பரிகாரமாக எனக்கு இந்த ஆசிரியர் பணி இருக்கட்டும்..நான் படிக்கும் பதிவர்களை அறிமுகம் செய்ய ஒரு வாய்ப்பாக இருக்கும் என்றே கருதுகிறேன்..
உண்மையைச் சொல்லப்போனால், நான் கணினித் துறையில் இருந்தாலும், பதிவுலகம் என்பதைப்பற்றி ஒன்று கூடத் தெரியாது. என் நண்பன் “பிரதீப்” மூலமாகத்தான் அப்படி ஒன்று இருப்பதே தெரியவந்தது..அவனுடைய பதிவுகளைப் பார்த்தபோது அதிர்ந்து போனேன்..எவ்வளவு அழகாக எழுதுகிறான்..படிக்க படிக்க சுவாரஸ்யமாக இருக்கவே , நம்மளும் எழுதித்தான் பார்ப்போமே என்று வந்த ஆவலே என் பதிவுகள்…என் நண்பன் “ரஜினிகாந்த்(சீ..சீ..அவர் இல்லீங்க)” அறிமுகம் செய்த பதிவர்கள் இன்னும் எழுதத் தூண்டியது..
முதலில் எழுதிய “என் முதல் பதிவும் ஏர்டெல் சூப்பர் சிங்கரும்” ஏதோ ஒரு ஆர்வத்தில் எழுதியது..
என்னோட எழுத்துகளில் எனக்குப் பிடித்தது
1. என் ஓட்டு அம்மாவுக்குதாண்ணே
2. இந்திப் படிக்காத்தது தப்புங்களாயா
4. “எல்லாரும் பார்த்துங்கப்பா, நாங்களும் என்.ஆர்.ஐ..தான்”
5. பிரபல பதிவர்களோடு ஒரு படகுப்பயணம்
7. கருப்பனுங்க
ஏண்டா எழுதினேன்னு நினைத்தது
3. தமிழ்மணத்தில் அதிக ஓட்டு வாங்குவது எப்படி
4. பிரபல பதிவர்களிம் ஸ்கூல் அனுபவங்கள்
நாளை பார்ப்போமா..???
Monday, September 21, 2009
விடை அளித்தலும் வரவேற்றலும்
சென்ற ஒரு வார காலமாக, நண்பர் அத்திரி ஆசிரியப் பொறுப்பேற்று, ஏழு இடுகைகள் இட்டு , ஏறத்தாழ எண்பதுக்கும் மேலாக மறுமொழிகள் பெற்று, பல புதிய பதிவர்களையும் - பல் இடுகைகளையும் அறிமுகப் படுத்தி, மன மகிழ்வுடன் நம்மிடமிருந்து விடை பெறுகிறார்.
அவருக்கும் வலைச்சரம் சார்பினில் நன்றி கலந்த நல்வாழ்த்துகளைத் தெரிவிப்பதில் மட்டற்ற மகிழ்ச்சி அடைகிறேன்.
அடுத்து இன்று துவங்கும் வாரத்திற்கு அமெரிக்காவில் வசிக்கும் நண்பர் ராஜா ஆசிரியப் பொறுப்பேற்கிறார். இவர் அவிய்ங்க என்னும் பதிவினில் எழுதி வருகிறார். ஆறுமாத காலத்தில் ஏறத்தாழ அறுபதுக்கும் மேலாக இடுகைகள் இட்டுள்ளார். ஏறத்தாழ நூற்றுக்கும் மேற்பட்டோர் இவரைப் பின் தொடர்கின்றனர்.
அன்பர் ராஜா வினை வலைச்சரம் சார்பினில் வரூக வருக - பதிவர்களை அறிமுகப்படுத்துக என வரவேற்பதில் பெருமை அடைகிறேன்.
நல் வாழ்த்துகள் ராஜா
Sunday, September 20, 2009
வலைச்சரத்தில் ஏழாம் நாள் -- நன்றியோடு விடைபெறுகிறேன்
நான் பதிவுலகிற்கு வந்த புதிதில் என்னை ( அதுவரைக்கும் காப்பி பேஸ்ட் தான்)சொந்தமாக எழுத ஊக்கமளித்த மூவரை அறிமுகப்ப்படுத்துகிறேன்..
இவர்களை அறிமுகப்படுத்துவது என்பது சூரியனுக்கே டார்ச் அடிப்பது மாதிரி.......
முரளிகண்ணன் --இவரின் ஒவ்வொரு பதிவும் சினிமாவை நுணுக்கமாக விவரிக்கும்......கதையும் நன்றாக எழுதுவார்.........இந்த கதையை படிங்க...
கார்க்கி -- ஹைதை புயல் ........புட்டிக்கதைகள் மூலம் ரொம்ப பிரபலம்.....இவரின் புட்டிக்கதை ஒன்று
கேபிள் சங்கர் --- அண்ணனின் விமர்சனத்தை படித்து நல்ல தமிழ் சினிமா படங்களை நம்பி பார்க்கலாம்.....வாராவாரம் கொத்து பரோட்டா போடுபவர்..... இவரின் நகைச்சுவையான ஒரு பதிவு......
மீண்டும் அனைவருக்கும் நன்றி...........
அன்புடன்
அத்திரி
Saturday, September 19, 2009
வலைச்சரத்தில் ஆறாம் நாள்
தராசு அண்ணன் --அடிக்கடி ஏரோப்பிளேனில் பறப்பவர்....கிடைக்கும் நேரத்தில் பதிவு எழுதிவருபவர்.........வலையுலகில் யூத்தான பதிவர்
சுரேஷ்--பழனியில் இருந்து எழுதுபவர்..இவரின் இந்த கதை கொஞ்சம் அதிச்சியாக இருக்கும்
வண்ணத்துப்பூச்சியார்-- உலகசினிமாக்களை அழகாக விமர்சிப்பவர்......இந்த படத்து விமர்சனத்தை படியுங்க...
றேடியோஸ்பதி-- தமிழ் சினிமா பாடல்களை பற்றி இவர் எழுதும் ஒவ்வொரு பதிவும் சுவாரஸ்யமாக இருக்கும். அதுவும் இளையராஜாவின் பாடல்களை பற்றி இவரின் ஒரு பதிவு
தேவன் மாயம் ---காரைக்குடி டாக்டர்--- மருத்துவ பதிவுகளோடு நகைச்சுவையிலும் கலக்குபவர்...இவரின் நகைச்சுவை பதிவு
ப்ரியமுடன் வசந்த்---இவரின் பதிவுகள் பல நகைச்சுவை பதிவாக இருந்தாலும் இந்த பதிவு கண்ணீரை வரவழைக்கும்
கதிர் ---ஈரோட்டு பதிவர்..இவரின் இந்த பதிவு இவரை பேச வைத்தது.
வால் பையன் ---பெயருக்கு ஏற்றார்போல் சரக்கு கவுஜைகளில் நம்மை கிறங்கடிப்பவர்.
Friday, September 18, 2009
வலைச்சரத்தில் அஞ்சாவது நாள்
இன்றைய அறிமுகங்கள்
ஜீவன் -- மரங்கள் பற்றிய இவரின் பதிவை படிச்சிபாருங்க..உங்களுக்கு பிடிக்கும்
கீதா ஆச்சல் -- இவரின் சமையல் பதிவுகள் அருமையாக இருக்கும்.
சமையல் 1
சமையல் 2
சமையல் 3
முத்துராமலிங்கம் --- இவரின் ஈழம் பற்றிய இவரின் கவிதைகள் நம்மை அழவைக்கும்
கவிதை 1
கவிதை 2
கவிதை 3
சுரேஷ் ஜீவானந்தம் -- இவரின் அரசியல் பதிவுகள் கொஞ்சம் சூடா இருக்கும்
பதிவு 1
பதிவு 2
லவ்டேல் மேடி--கவிதைமன்னன் என்றே சொல்லலாம்....... இவரின் கவிதைகள் சில.
கவிதை1
கவிதை2
கவிதை3
Thursday, September 17, 2009
நாலாவது நாளில் ஏலேய் எங்க ஊரு பதிவருங்க
பதிவுலகில் தங்கமணி என்றாலே ஆதி அண்ணன் தான் ஞாபகத்திற்கு வருவார்....தற்போது அச்சு ஊடகத்துறையிலும் கலக்கி வருகிறார்...அன்றாட வாழ்க்கையில் கணவன் மனைவிக்கு இடையில் நிகழும் சம்பவங்களை நகைச்சுவையோடு எழுதுவதில் இவருக்கு நிகர் இவரே.......
பதிவு 1
பதிவு 2
கடையம் ஆனந்த் எனது ஊருக்கு மிக அருகில் உள்ளவர்..என்னோட மாப்பிள்ளை...எந்த விசயத்தையும் மென்மையாக எழுதக்கூடியவன்..
பதிவு 1
பதிவு 2
புளியங்குடி புயல் நசரேயன் அண்ணாச்சி அமெரிக்காவில் இருந்தாலும் இவர் பதிவில் எங்க ஊர்வாசம் தூக்கலா இருக்கும்
பதிவு 1
பதிவு 2
துபாய் ராஜா இவரின் கவிதைகள் மிக அருமையாக இருக்கும்.........
பதிவு 1
பதிவு 2
ஆடுமாடு இவரின் கதைகளில் நெல்லை மாவட்டத்து வட்டார மொழி கலகலக்கும்.
பதிவு 1
பதிவு 2
ராமலஷ்மி அக்கா கதை கவிதை என கலக்குவார்
பதிவு 1
பதிவு 2
நையாண்டி நைனா பெயருக்கேற்றார்போல் நையாண்டியில் கலக்குபவர் மும்பையில் இருந்தாலும் சொந்த ஊர் நெல்லை..
பதிவு 1
பதிவு 2
கா.பா என்று அன்போடு அழைக்கப்படும் அன்பு நண்பர் பன்முகப்பதிவர்
பதிவு 1
பதிவு 2
அறிவிழி தற்போது இவர் எழுதுவதில்லை.....இவரின் அரசியல் பதிவுகளில் தீப்பொறி பறக்கும்
பதிவு 1
பதிவு 2
ஸ்ரீ இவரும் பன்முகப்பதிவர்தான்
பதிவு 1
பதிவு 2
டக்ளஸ் கதை கவிதை நையாண்டி என்று கலந்து கட்டி எழுதுபவர்
பதிவு 1
பதிவு 2
அன்பு மதி--- பயபுள்ள கடுகு சிறுத்தாலும் காரம் குறையாது என்பதற்கு இவன்தான் உதாரணம்.......எதிர்காலத்தில் பிரபலமாகக்கூடிய அளவுக்கு திறமை இருக்கு இந்த சிவகாசி பொடியனிடம்
பதிவு 1
பதிவு 2
Wednesday, September 16, 2009
வலைச்சரத்தில் மூனாவது நாள்
இந்த பதிவர் சென்னையில் இருக்கிறார்...கதை கவிதைகளில் இவருக்கென தனி பாணியில் எழுதியிருப்பார்....படிங்க
பதிவு 1
பதிவு 2
பதிவு 3
பதிவு 4
பதிவு 5
இந்த பதிவரின் வலைப்பூ குழந்தை பெயரில் இருந்தாலும், இவரது எழுத்தில் இருக்கும் முதிர்ச்சி நீங்களே படியுங்கள்
பதிவு 1
பதிவு 2
பதிவு 3
பதிவு 4
பதிவு 5
மெல்போர்னில் இருக்கும் இந்த பதிவரின் வலைப்பூவில் ஈழத்தமிழ் கமகமக்கும்.......அதோடு ஈழத்தின் வலிகளும் நிறைந்திருக்கும்
பதிவு 1
பதிவு 2
பதிவு 3
பதிவு 4
கவிதை மற்றும் எதிர் கவுஜை எழுதுவதில் மன்னரான இந்த தஞ்சை பதிவரை வாசித்து பாருங்கள்
கவிதை 1
கவிதை 2
கவிதை 3
கவிதை 4
கவிதை 5
வட இந்தியாவில் இருக்கும் இந்த பதிவரின் அரசியல் பதிவுகள் சூடாகவும், விவேகமாகவும் இருக்கும்.......அவற்றில் சில
பதிவு 1
பதிவு 2
பதிவு 3
பதிவு 4
பதிவு 5
அயல்நாட்டில் இருந்தாலும் இவரின் தாயகத்து கவிதைகள் சொல்லும் வலிகள் பல மடங்குஅவற்றில் சில உங்கள் பார்வைக்கு
கவிதை 1
கவிதை 2
கவிதை 3
கவிதை 4
கவிதை 5
வட சென்னையில் இருக்கும் இந்த பன்முக பதிவர் கடுகு சிறுத்தாலும் காரம் குறையாது என்பதற்கு சிறந்த உதாரணம்
பதிவு 1
பதிவு 2
பதிவு 3
பதிவு 4
பதிவு 5
Tuesday, September 15, 2009
வெற்றிகரமான ரெண்டாவது நாள்
இந்தப்பதிவர் பதிவு எழுதி மாசக்கணக்காவுது...ஏன் நிறுத்தினார் என்று தெரியவில்லை......இவரின் கவிதைகளை படித்தால் நாமளும் ரொமான்ஸ் மூடுக்கு மாறிவிடுவோம்.......
கவிதை ஒன்னு
கவிதை ரெண்டு
கவிதை மூனு
கவிதை நாலு
இந்த பதிவர் பின்னூட்டம் வாங்குவதில் கில்லாடி.... தற்போது இவருடைய வலைப்பூ முகவரியை மாற்றிவிட்டார்.....அதனால் இவரின் பழைய பதிவுகளை கொடுக்க முடியவில்லை.....
பதிவு ஒன்னு
பதிவு ரெண்டு
இந்த அண்ணாச்சி ஆப்பிரிக்காவில் இருக்கார்.....சமூக அக்கறையுடன் கூடிய பதிவு மட்டுமல்லாமல் நகைச்சுவையிலும் கலக்குவார்....... இவரோடது
ஒன்னு
ரெண்டு
மூனு
நாலு
ஈரோட்டை சேர்ந்த இந்த பதிவர் ஈழ பிரச்சினை பற்றி எழுதிய பதிவுகள் கவனிக்க படவேண்டிய ஒன்று......இப்ப இவர் பதிவு எழுதுவதில்லை
பதிவு 1
பதிவு 2
கோவையை சேர்ந்த இந்த பதிவர் கவிதைகளை படிச்சி பாருங்க
கவிதை 1
கவிதை 2
கவிதை 3
கவிதை 4
ஷார்ஜாவில் இருக்கும் இந்த பதிவர் ஸ்லம்டாக் மில்லியனர் படத்தை ஆறு மாதங்களுக்கு முன்பே ரீமேக் பண்ணிவிட்டார் .......படிச்சு ரசிங்க
ஸ்லம்டாக் மில்லியனர்
கதை
இன்னைக்கு போதும் நாளை சந்திக்கலாம்
அன்புடன்
அத்திரி
Monday, September 14, 2009
வலைச்சரத்தில் மொத நாளு--- சுய தம்பட்டம்
கதை,கவிதை எழுதவெல்லாம் முயற்சி பண்ணிட்டு இருக்கேன்....அய்யய்யோ கவலைப்படாதிங்க அதுஎல்லாம் வரவே மாட்டேங்குது... கவலைப்படாதிங்க...
நான் எழுதிய பதிவில் எனக்கு பிடித்தது
1.ஒன்னு
2.ரெண்டு
3.மூனு
4.நாலு
5.அஞ்சு
அன்புடன்
அத்திரி
Sunday, September 13, 2009
விடை அளித்தலும் வரவேற்றலும்
கடந்த ஒரு வார காலமாக் இளையவர் கோவை சுரேஷ் குமார் ஆசிரியப் பொறுப்பேற்று - தன் கடமையினைச் செவ்வனே செய்து மனமகிழ்வுடன் விடை பெறுகிறார். இவர் ஏறத்தாழ முப்பதுக்கும் மேற்பட்ட புதிய பதிவர்களைத் தேடிப் பிடித்து அறிமுகப் படுத்தி உள்ளார். சற்றேரக்குறைய 314 மறுமொழிகள் பெற்றுள்ளார். கடும் உழைப்பினை வெளிப்படுத்தி பணியினைச் செய்த நண்பர் சுரேஷ் குமாருக்கு நன்றி கலந்த நல்வாழ்த்துகளைக் கூறி வலைச்சரத்தின் சார்பில் விடை அளிப்பதில் பெருமை அடைகிறோம்.
அடுத்து 14ம் நாள் துவங்கும் இவ்வாரத்திற்கு நண்பர் அத்திரி ஆசிரியப் பொறுப்பேற்கிறார். இவர் திருநெல்வேலி மாவட்டம் ஆழ்வார்க்குறிச்சி அருகில் பொதிகை மலையடிவாரத்தில் இருக்கும் சின்னஞ்சிறிய கிராமத்தினைச் சேர்ந்தவர். சென்னைக்கு வந்து 10 வருடங்கள் ஆகிறது.முண்ணனி நிறுவனத்தில் சீனியர் இஞ்சினியராக பணிபுரிகிறார். வலைப்பூ எழுத வந்து ஒரு வருடம் ஆகிறது....
நண்பர் அத்திரிக்கு நல்வாழ்த்துகளைக் கூறி வருக வருக என வரவேற்பதில் பெருமை அடைகிறோம்.
சீனா
வலைச்சரத்தில் என் ஏழாம்நாள் ஆசிரியப்பணி..
அதிகப்படியான வேலைப்பளுவின் காரணமாக நேற்று வலைச்சரத்தில் வலைப்பூக்களை விளக்கமாக அறிமுகப்படுத்த இயலவில்லை..
எனினும், நேற்று பணிக்கே வராமல் இருந்திருப்பதைவிட, வந்து என்னால் இயன்றவாறு சில வலைப்பூக்களை உங்களுக்கு அறிமுகப்படுத்திய திருப்தியோடு இன்று ஏழாம்நாள் பணியினை தொடங்குகிறேன்..
மேலும் கடந்த ஆறுநாட்களுக்கு இட்டபணியை திருப்திகரமாகவும், வெற்றிகரமாகவும், பல பதிவர்களுக்கு உபயோகமானதாகவும் செய்துமுடித்ததில் மிக்க மகிழ்ச்சியே..
இது என்னுடைய தனி முயற்சியால் மட்டும் சாத்தியபட்டிருக்காது.. வலைச்சரத்தில் எழுதிய கடந்த ஆறு நாட்களுக்கும் தவறாமல் வந்து பின்னூட்டம் மூலம் ஊக்கப்படுத்திய நண்பர்கள் மற்றும் சகோதர சகோதரிகள் அனைவரின் கூட்டு முயற்சியாலேயே இலக்கை அடைய முடிந்தது..
ஆரம்ப காலம் முதல் சிறுக சிறுக கிடைத்த நண்பர்கள் பலரின் அன்பிற்கும் ஆதரவிற்கும் இங்கு அவர்களின் பெயர்களை குறிப்பிட்டு நன்றிகள் சொல்ல விருப்பமிருப்பினும், தவறுதலாக யாருடைய பெயராவது விடுபட்டுவிட்டால் அதுவே அவர்களுக்கு பெரியதொரு வருத்தத்தை, மனக்குறையை உண்டுபண்ணிட வாய்ப்பாக அமைந்துவிடுமென்று எண்ணியதால், என் வலைப்பூவில் ஆதரவும் ஊக்கமும் தந்துகொண்டுள்ள நண்பர்களுக்கும், இந்த ஒருவார காலமும் ஒரு இடுகைக்கேனும் வந்து ஆதரவளித்து ஊக்கப்படுத்திய அனைத்து அன்பு உள்ளங்களுக்கும் நன்றிகள் பலவற்றை தெரிவித்துக்கொள்கிறேன்..
என் ஆசிரியப்பணி இன்றோடு முடிவடைந்தாலும், வலைச்சரம் கடந்துசெல்லவேண்டிய தொலைவு இன்னும் எவ்வளவோ இருக்கின்றது..
பல புதிய பதிவர்களையும் அவர்களின் வலைப்பூக்களையும் பதிவுலகில் பலரும் அறியக்கொடுக்கும் பணியினை தொடர்ந்து பல ஆசிரியர்களைகொண்டு செம்மையாய் செய்விக்கும் ஐயா சீனா அவர்களின் பணி உண்மையில் அபாரமான பாராட்டத்தக்க செயல் / சேவை..
சீனா ஐயா'வின், வலைச்சரத்தின் சேவை என்னைபோன்ற புதிய பதிவர்கள் பலரையும் இந்த வலையுலகிற்கு அறிமுகப்படுத்த எப்போதும் தேவை என்பதில் ஐயமில்லை..
தொடர்ந்து உங்களின் பணி சிறப்பாய் அமைந்து செயல்பட வாழ்த்தி, உங்களின் சேவையில் என்னையும் ஒரு சிறு பொறுப்பினையேற்று உதவிட வாய்ப்பளித்த சீனா ஐயாவின் அன்புக்கு நன்றியினை தெரிவித்துக்கொண்டு, எழுதத்தொடங்கிய முதல்நாள் முதல் இன்றுவரை அங்கும் இங்கும் ஆதரவளித்து ஊக்கப்படுத்திய அனைத்து அன்பு உள்ளங்களுக்கும் மீண்டுமொருமுறை நன்றியினையும், அடுத்து வலைச்சர சேவையில் இணையவரும் ஆசிரியருக்கு வாழ்த்துக்களையும் தெரிவித்துக்கொண்டு வீடு திரும்புகிறேன்..
இனி மீண்டும் எப்போதும் எழுதுவதெல்லாம் எழுத்தல்ல.. வில் சந்திப்போம்..
நன்றி நண்பர்களே..
Saturday, September 12, 2009
வலைச்சரத்தில் என் ஆறாம்நாள் ஆசிரியப்பணி..
கொஞ்சம் அதிகப்படியான பணிச்சுமையின் காரணமாக இன்று அறிமுகப்படுத்தப்படுபவர்களின் வலைப்பூபற்றி விளக்கமாக கூற நேரமின்மையால் அவர்களின் வலைப்பூ முகவரிகள்மட்டும் இங்கே..
இன்று ஒருநாள் ஆசிரியப்பணிக்கு விடுப்பெடுத்துக்கொள்ளலாம் என்றே நினைத்திருந்தேன்..
ஆனாலும், அரிதினும் அரிதாக, சக, புதிய பதிவர்களை பலருக்கும் அறிமுகப்படுத்த கிடைத்த ஒருவாரகால அவகாசத்தில் ஒருநாளை பணிச்சுமையின் காரணமாக வீணாக்குவதில் உடன்பாடு இல்லாமையால் இன்று சில வலைப்பூக்களை சுருக்கமாக அறிமுகப்படுத்தி இன்றைய பணியினை செய்யத்திட்டமிட்டுள்ளேன்..
ஆதரவு தந்து ஊக்கப்படுத்துவீர்களென்ற நம்பிக்கையில் இன்றைய படையலை சுவைப்போம்..
முதலில், கடந்த மூன்று மாதங்களாக எழுதப்பட்டுவரும் ஒரு புது வலைப்பூ..
வலைப்பூவின் பெயர் எதிர் வீட்டு ஜன்னல்
முகவரி http://ethirveettujannal.blogspot.com/
அடுத்து வண்ண வண்ண படங்களைக்கொண்ட இடுகைகளால் அலங்கரிக்கப்பட்டுள்ள புதியதொரு வலைப்பூ..
வலைப்பூவின் பெயர் PARTHATHUM KETATHUM
முகவரி http://vazhavazhamudan-viswam.blogspot.com/
அடுத்து 2008'ன் இறுதியில் எழுதத்துவங்கியுள்ள ஒருவரின் வலைப்பூ..
வலைப்பூவின் பெயர் This is buzz in a pit for biz
முகவரி http://pitbuzz.blogspot.com/
எந்தவித விளக்கமும் இல்லாமல் இப்படி வெறுமனே வலைப்பூவின் பெயர் மற்றும் முகவரியை தருவதில் உடன்பாடு இல்லைதான் எனினும், விடுப்பெடுத்துக்கொண்டு பதிவர்களை அறிமுகப்படுத்தாமல் இருப்பதைவிட இது எவ்வளோமேலான செயல் என்று தோன்றியதால் பணியினை தொடர்கிறேன்..
அடுத்து, கடந்த நான்கே மாதங்களில் 142 இடுகைகளிட்டு கலக்கிவரும் இவர் வசிக்கும் உலகம் தமிழன் உலகம்..
முகவரி http://tamilanulagam.blogspot.com/
அடுத்து இரவினில் ஒளிரும் ஆற்றல் படைத்த மின்மினிப்பூச்சிகளின் பெயரில் அமைந்த மின்மினிப்பூச்சிகள் என்ற வலைப்பூ..
இவர் 2006 யிலேயே எழுததுவக்கப்பட்டுவிட்ட எனக்கு மிகவும் சீனியர் பதிவர்தான் எனினும் அறிமுகப்படுத்துவதில் தவறில்லைஎன்றே எண்ணுகிறேன்..
வலைப்பூ முகவரி http://minminipoochchigal.blogspot.com/
அடுத்து சமையல் தொடர்பான வலைப்பூ..
இவர் சமீப காலத்தில், அதாவது கடந்த ஐந்து மாதங்களாக எழுதத்துவங்கி, வலைப்பூக்கள் பலவற்றில் மானாவாரியாக ஃபாலோவராகி தனது வலைப்பூவிற்கும் பல ஃபாலோவர்களை பெற்றுவரும் என் சமையல் அறையில் என்ற வலைப்பூ..
வலைப்பூ முகவரி http://geethaachalrecipe.blogspot.com/
நண்பர்களே.. இப்படி அவசரகதியாய் வலைப்பூக்களை அறிமுகப்படுத்தியமைக்கு மீண்டுமொருமுறை வருத்தங்களை தெரிவித்துக்கொள்கிறேன்..
இன்று அறிமுகப்படுத்தப்பட்டுள்ள அனைத்து வலைப்பூக்களுக்கும் வாழ்த்துக்களை தெரிவித்துக்கொண்டு, இன்றைய பணியினை நிறைவு செய்து நன்றியுடன் விடைபெறுகிறேன்..
நன்றி நண்பர்களே..
மீண்டும் நாளை சந்திப்போம்..
Friday, September 11, 2009
வலைச்சரத்தில் என் ஐந்தாம்நாள் ஆசிரியப்பணி..
நான்குநாட்கள் வெற்றிகரமாய் உற்சாகமாய் எழுத ஆதரவுதந்து ஊக்கப்படுத்திய அனைத்து நண்பர்களுக்கும் நன்றியைதெறிவித்துகொண்டு ஐந்தாம்நாள் பணியை இனிதே தொடங்குகிறேன்..
இதுக்கு அப்புறம் என்னத்த எழுதினாலும் டெம்ப்ளேட் பின்னூட்டங்கள்தான் வருமென நினைக்கிறேன்..
அதுக்காக இப்டி சிக்கல்ல சிக்கவெச்ச சீனாவ நொந்துகிட்டு எழுதாம இருக்கமுடியுமா..
வழக்கம்போல இன்னைக்கும் எழுதிவெக்கிறேன்..
ஆனா நீங்க வழக்கத்துக்குமாறாக நல்லபுள்ளைங்களா இடுகைய முழுசா படிச்சுட்டு கருத்துசொல்லுங்க..
நேத்தாவது ஃபாலோவர் விட்ஜெட் இல்லாத வலைப்பூக்கள் 33.33 சதவிகிதம்..
இன்னைக்கு அறிமுகப்படுத்தப்போகும் வலைப்பூக்களில் 83.33 சதவிகிதம் வலைப்பூக்கள் ஃபாலோவர் விட்ஜெட் இல்லாத வலைப்பூக்களாக உள்ளன..
ஒரே ஒரு வலைப்பூ மட்டும் விதிவிலக்காக ஃபாலோவர் விட்ஜெட் கொண்டுள்ளது..
இன்றைய படையலை குட்டிக்கதைகள் சொல்லும் வலைப்பூவுடன் தொடங்கலாம்..
இவர் தனது வலைப்பூவினை குட்டிகுட்டி கதைகள் சொல்வதற்காகவே கொண்டுள்ளார் போலும்..
இதற்காகவே வலைப்பூவிற்கு குட்டி கதைகள் என்று பெயரிட்டுள்ளார்..
இவரின் வலைப்பூ முகவரி http://tamil-kutti-kathaikal.blogspot.com/
இதுவரை இவரின் வலைப்பூவில் இடுகைகள் ஏதும் பின்னூட்டம் என்ற ஒன்றை கண்டதே இல்லை..
ஆனாலும் தளராமல் எழுத்தும் இவர், தனது வாசகர்கள் தொடர்ந்து இவரை தொடர ஃபாலோவர் விட்ஜெட்டும் கொடுக்கவில்லை..
நீங்கள் எப்போது சென்றாலும் தாராளமாய் மீ த ஃபஸ்ட்டேய் போடலாம்..
ஆனால் நம்மின் வருகை அவருக்கு பிடிக்குமா இல்லையா, வாசகர்களின் பின்னூட்டத்தை விரும்புகிறாரா இல்லையா என்பதே எனக்கு சந்தேகமாய் உள்ளது..
விருப்பமிருப்பின் முயற்சித்துபாருங்களேன்..
அடுத்து பல அறிய புகைப்படங்களின் தொகுப்புகள், கலக்கல் கதைகள் என்ற பெயரில் சிலபல கதைகள், சில நகைச்சுவையான இடுகைகள் என்று நம்மை எப்போதும் ஒரு புன்சிரிப்புடனேயே தனது வலைப்பூவை வாசிக்கவைக்கிறார்..
இவரின் வலைப்பூவின் பெயர் கீ த ப் ப் ரி ய ன்..
வலைப்பூ முகவரி http://geethappriyan.blogspot.com/
கலக்கல் கதையில் இது தமிழனால் மட்டுமே முடியும் (கலக்கல் கதைகள்) என்ற கதையில் ஒரு தமிழனின் வாய்சாமார்த்தியம் பற்றி நகைச்சுவையாய் சொல்லியுள்ளார்..
இதுபோல் ஒவ்வொரு கலக்கல் கதையுமே பெயருக்கு ஏற்றாற்போல் கலக்கல்தான்..
பல இடுகைகளில் இவர் தொகுத்துள்ள படங்களும் மிக அருமை..
முன்பே கூறியதைபோல் இந்த வலைப்பூவிலும் ஃபாலோவர் விட்ஜெட் இல்லை.. இருப்பினும் அவரின் வலைப்பூ சென்று உற்சாகப்படுத்துங்கள்..
(அதற்கு முன், ஒழுங்கா இந்த ஐந்தாம்நாள் இடுகை முழுதும் படித்து என்னை உற்சாகப்படுத்துங்கள்..)
அடுத்து, காலப்பறவை என்ற வலைப்பூவில் 2007'இலேயே எழுதத்தொடங்கிவிட்ட இவர் தற்போதுதான் ஏக்டிவாக எழுதிவருகிறார்..
இவரின் வலைப்பூ முகவரி http://stalinfelix.blogspot.com
அடுக்குமாடி குடியிருப்பில் அண்டைவீட்டாரின் செயல்பாடுகளை பற்றி தனது சொந்த அனுபவத்தினை எதிர் வீட்டுக்காரம்மா என்ற இடுகையில் பகிர்கிறார்..
இவர் ஆகஸ்ட்டு மாதத்தில் சொந்த அனுபவங்கள் சார்ந்த இடுகைகள் பல இட்டுள்ளார்..
ரம்பா ரசிகர்களுக்கு மட்டும் என்ற இடுகையில் ரம்பா'வின்விரிவான ஆனால் சுருக்கமான பயோடேட்டா, M.R.ராதாயணம் என்ற இடுகையில் M.R.ராதா'வின் வாழ்வினில் சில முக்கிய கணங்களை பகிரும் இடுகையொன்றும் இருப்பினும், பெரும்பாலான இடுகைகள் இவரின் சொந்த அனுபவங்களை பகிர்வனவாகவும், கவிதைகள் பல நிறைந்ததாகவும் உள்ளன.
அதனால் இவரின் வலைப்பூவை அனுபவம் என்ற பிரிவின்கீழ் சேர்க்கிறேன்..
பிழையிருந்தால் மன்னிக்கவும்..
அடுத்து இந்த ஐந்தாம் நாள் இடுகையை படிக்காமலே களைத்துவிட்ட உள்ளங்களுக்காக சமையல் குறிப்புகளை அள்ளித்தரும் வலைப்பூ ஒன்றினை காண்போம்..
tamilvili என்றபெயரில் உள்ள இந்த வலைப்பூ கடந்த இரண்டு மாதங்களாக மட்டுமே எழுதப்பட்டுவரும், ஃபாலோவர் விட்ஜெட் கொண்டிராத ஒரு புதிய வலைப்பூவாகும்..
சமையல் குறிப்புகள் மட்டுமின்றி அழகு குறிப்புகளையும் வாரிவழங்குகிறது இந்த வலைப்பூ..
இவரின் வலைப்பூ முகவரி http://tamilvilihal.blogspot.com
இதற்குமேல் அங்குசென்று அழகுபடுத்திக்கொள்ளுங்கள்..
நான் (நீங்களும் இருக்கலாம்) பெரும்பாலும் கேட்டறியாத வரலாற்று நிகழ்வுகள் பலவற்றை தேவியர் இல்லம். திருப்பூர். என்ற வலைப்பூவில் புதைக்கப்பட்ட தெரியாத ரகஸ்யங்கள் என்ற பெயரில் தொடரிடுகையாகேவே எழுதி வருகிறார்..
இவரின் வலைப்பூ முகவரி http://texlords.wordpress.com/
நக்கீரன் கோபாலின் இருண்ட பக்கங்கள்'இல் அவரைபோட்டு பயங்கரமாக பாராட்டிதள்ளியுள்ளார்..
இவர் Blog Archive விட்ஜெட் கொடுக்காததால் இந்த இடுகைஎன எதையும் தெரிவுசெய்து படிக்க இயலவில்லை..
எனினும், நமக்கு தெரியாத பல வரலாற்று நிகழ்வுகளின் செய்திகளை இவரின் வலைப்பூவில் பெறலாம்..
அடுத்த வலைப்பூ நம்மை பின்னோக்கி அழைக்கிறது..
இவரின் இடுகைகள் பல வித்தியாசமாய் உள்ளது..
இவரின் வலைப்பூ முகவரி http://pinnokki.blogspot.com
காலத்தின் குரல் என்ற இடுகையில் கற்ப்பனையாக கால இயந்திரத்தில் பயணிக்கிறார் நண்பர்..
2 நாட்கள் முதல் 500 கோடி வருடங்கள் வரை என்ற இடுகையில் மனிதன் மறைந்து 2 நாட்களில் இருந்து, 500 கோடி வருடங்கள் வரை, உலகம் மாறும் விதங்களைப் பட்டியலிட்டுள்ள ஆலன் வைஸ்மேன் என்ற ஆங்கில அறிவியல் எழுத்தாளர் எழுதிய புத்தகத்தின் சாரத்தை படங்களுடன் பகிர்ந்துள்ளார்..
சிட்டு குருவி பிடிப்பது எப்படி ? – 4 எளிய முறைகள் என்ற இவரின் சமீபத்திய இடுகையில் தனக்கு சிட்டுக்குருவி பிடிப்பதில் சிறுவயதில் ஏற்பட்ட அனுபவங்களை அழகாக விவரித்துள்ளார்..
அங்கு ஃபாலோவராகவழிஇல்லை.. சென்று உற்சாகப்படுத்த இடுகைகள் உள்ளன.. சென்று வலைச்சரம் சார்பில் வாழ்த்திடுங்கள்..
அப்புறம், வழக்கம்போல பெரும்பாலான வலைச்சர நண்பர்களுக்கு நுனிப்புல்மேய இத்தகைய அறிமுகநடைபோதுமென நினைக்கிறேன்.. அப்படித்தானே..
சரி நண்பர்களே.. இன்றைய பணியை நல்லமுறையில் முடித்திருப்பேன் என்ற நம்பிக்கையில் விடைபெறுகிறேன்..
மீண்டும் நாளை சந்திப்போம்.. நன்றி..