தொடரும் பயணங்கள் - வலைச்சரம் - 4ஆம் நாள்
➦➠ by:
பின்னோக்கி
நண்பர்களே ! நேற்று சொன்னது போல, சுவாரசியமான பயணத்திற்கு தயாராகிவிட்டீர்கள் என்று நினைக்கிறேன். வழக்கம் போல, ரயிலில் டிக்கெட் கிடைக்கவில்லை. என்ன செய்வது ?. கவலை வேண்டாம். நமக்காக மற்றவர்கள் வரலாற்றுச் சிறப்பு வாய்ந்த இடங்களுக்குச் சென்று வந்திருக்கிறார்கள். நுணுக்கமான தகவல்கள்; அழகான புகைப்படங்கள்; ரசிக்கவைக்கும் வர்ணனைகள்; இவை தவிர வேறென்ன வேண்டும். வியர்வை சிந்தாமல் அனைத்து இடங்களுக்கும் சென்று வரலாம். வாருங்கள் !!!
ஒரு பயணக்கட்டுரையின் முக்கியமானது - புகைப்படங்கள். 10 வரிகள் சொல்லும் செய்தியை, ஒரு புகைப்படம் சொல்லிவிடும். ஆனால், இந்தப் பதிவினைப் படித்துப் பாருங்கள். படம் இல்லை. ஆனால், சென்னைக்கு அருகில் இப்படி ஒரு இடம் இருக்கிறதா ?. போகும் இடங்களை இப்படியும் விவரிக்க முடியுமா என்ற ஆச்சரியத்தை ஏற்படுத்தும். மிகப் பெரிய ஒரு பயணம் - காலம் மற்றும் தூரம் வகையில்.
ஒரு படம் 10 வரிச் செய்தியைச் சொல்லிவிடும். ஆனால், இவரின் பயணக் கட்டுரைகளில், படங்கள் இடம் பெறாமல், வர்ணனைகளையே படமாக வாசகனின் கண்முன்னே நிறுத்துவார். கண்டிப்பாக படிக்க வேண்டிய ஒரு பயணக் கட்டுரை இது.
(இந்த பதிவு திறக்க சற்றுக் கால தாமதமாகலாம்)
சித்தன்ன வாசல் ஓவியங்களைப் பார்ப்பதற்காக இவர் மேற்கொண்ட பயணப் பதிவு இது. அரிய தகவல்கள், புகைப்படங்கள் - அதுவும், அந்த மலைமேலே இருந்து, தொலைவில் கீழே தெரியும் ஊரை இவர் புகைப்படம் எடுத்திருக்கும் விதம் அருமை.
இன்றைய பதிவுகளை நீங்கள் ரசித்திருப்பீர்கள் என நம்புகிறேன். நாளை, பதிவுலக அர்ஜீனன்களைப் பார்ப்போம்.
சந்திப்போம் நண்பர்களே !!
|
|
நீங்கள் உருவாக்கிக் கொண்டுருக்கும் வடிவமைப்பு ரொம்ப அற்புதமா இருக்கு,
ReplyDeleteமறுபடியும் ஒவ்வொரு பதிவா வந்து படிக்கின்றேன்.
பயணங்கள் என்றுமே அழகு. பகிர்வுக்கு நன்றி
ReplyDeleteஅன்பின் பின்னோக்கி
ReplyDeleteதேர்ந்தெடுத்த அத்தனை இடுகைகளும் முத்துகள் - படிக்கப் படிக்க மகிழ்ச்சி - நல்ல தேர்வு - நல்வாழ்த்துகள் - நட்புடன் சீனா
ஆழி, அட்சரம், செப்புப் பட்டயம்.... நல்ல அறிமுகங்கள் பின்னோக்கி...
ReplyDeleteபாராட்டுக்கள் .. பயணங்களை நேசிப்பவன் என்ற வகையில் ...
ReplyDeleteநன்றிகள்
ReplyDelete@ஜோதிஜி - தொடர்வாசிப்பிற்கு
@கலாநேசன் - நேசத்திற்கு
@ஸ்ரீராம் - அனைத்தையும் படித்ததற்கு.
@சீனா சார் - பாராட்டுதலுக்கு
@கே.ஆர்.பி. செந்தில் - தவறாமல் படிப்பதற்கு
நான்காம் நாளின் பயணக் கட்டுரைகள் படித்தாயிற்று.நல்ல பகிர்வு
ReplyDeleteநல்ல பகிர்வு
ReplyDeleteஅருமை நண்பரே
ReplyDeleteகலக்கலான அறிமுகங்கள்.புக்மார்க் செய்தே விட்டேன்.தலைகீஇழாக படிக்கிறேன்.கண்டுகொள்ளாதீர்கள்.
நன்றிகள்
ReplyDelete@விசா
@Mahi_Granny
@கீதப்ப்ரியன் - வார இறுதியில் அவகாசம் கிடைக்கும் போது படியுங்கள்.
தேர்ந்தெடுத்த அத்தனை இடுகைகளும் முத்துகள்.
ReplyDeleteபயணங்கள் என்றுமே அழகு. பகிர்வுக்கு நன்றி.
@ஜோதிஜி - தொடர்வாசிப்பிற்கு
ReplyDelete@கலாநேசன் - நேசத்திற்கு
@ஸ்ரீராம் - அனைத்தையும் படித்ததற்கு.
@சீனா சார் - பாராட்டுதலுக்கு
@கே.ஆர்.பி. செந்தில் - தவறாமல் படிப்பதற்கு
அட இதில் கூட கவிதை போல புதுமை.
பயணங்கள் அனைத்தும் அருமை.அறிமுகத்திற்கு வாழ்த்துக்கள்
ReplyDelete