சினிமா செவ்வாய் (வலைச்சரம் - இரண்டாம் நாள்)
வலையுலக மக்களுக்கு வணக்கம்.
நான் இப்படி டென்ஷன் ஆனதே இல்லை. ஒரு பொழுதுபோக்குக்காக மட்டுமே வலைப்பூவை உருவாக்கி எனக்குத் தோன்றியதை எழுதிக் கொண்டிருந்த நான் வலைச்சரத்தின் தற்காலிக ஆசிரியர் பொறுப்பேற்றதற்கு பின்னால்தானோ என்னவோ, அலுவலகத்தில் அதிக ஆணி. அறிமுகப் பதிவிற்குப் பின் இப்போது தான் புதிய பதிவு. எனவே, மன்னிக்க வேண்டுகிறேன்!
பொதுவாக நான் வளர்ந்த சூழலில் சினிமா பார்ப்பது மிகவும் அரிது. அப்படியே பார்த்தாலும், சம்பூர்ண ராமாயணம், பக்த பிரகலாதா போன்ற பக்திப் படங்கள்தான் பார்த்திருக்கிறேன். (அதற்காக நான் வருத்தப் பட்டதும் இல்லை.) பின்னாளில் சொந்தமாக டிவி வாங்கி அதன் உதவியால் பல புதிய பழைய திரைப்படங்கள் நிறைய பார்த்துவிட்டேன். ஆனாலும், அநேகமாக எல்லாத் திரைப்படங்களுக்கும் திரை விமரிசனங்கள் படித்துவிடுவேன். குறிப்பாக கேபிள் சங்கர் எழுதும் விமரிசனங்கள் பெரும்பாலும் நடுநிலையோடு இருக்கும். ஒருவேளை, இவர் துணை இயக்குனர் என்பதாலோ என்னவோ? தமிழ்ப் படம்தான் என்றில்லை, பீப்லி (லைவ்) என்ற ஹிந்தி படத்துக்கு இவர் எழுதியுள்ள விமரிசனத்தைப் படியுங்கள். அதேபோல், படங்களைப் பற்றிய விமரிசனத்தை விட, அந்தப் படம் பார்க்கும் போது தியேட்டரில் நடந்த சுவையான விஷயங்களை எழுதுவதில் நம்மை ஈர்க்கும் ஒரு தளம் பார்த்ததும் படித்ததும் ஜெட்லியின் இந்த லேட்டஸ்ட் விமரிசனம் படியுங்கள் புரியும். வேறு யாராவது திரைப்படங்களைப் பற்றி சுவையாக சொல்கிறார்களா என்று தேடியபோது கிடைத்தவர்தான் சார்லஸ். இவர் தொலைக்கட்சிகளில் தொடர்கள் இயக்குவதாக அறிவிக்கிறார். இவர் திரைத்துறையில் எடிட்டிங் செய்யும் மாயாஜாலங்களை இந்தப் பதிவில் எப்படி கூறுகிறார் பாருங்கள்!
ஓகே. நான்கூட திரை விமரிசனங்கள் எழுதியிருக்கிறேன். இங்கே பாருங்கள்:-
விமரிசனம் ஒன்று.
விமரிசனம் இரண்டு.
பிறகு சந்திப்போமா?
|
|
மர்ஃபியின் விதிப்படி இப்படித்தான் நடக்கும் :). தொடருங்கள்.
ReplyDeleteஉங்க திரைவிமர்சனம் சூப்பர்!
ReplyDeleteஉங்கள் திரை விமர்சனம் சூப்பர்.
ReplyDeleteவண்ணமயமான ஆரம்பம்!! தொடருங்கள்.
ReplyDeleteஎழுத்து நடை நன்றாக இருக்கிறது! வாழ்த்துக்கள்!
ReplyDeleteநன்றி பெயர் சொலல்விருப்பமில்லை..:))
ReplyDeleteSuper!!!! :-)
ReplyDeletegood writing style you have
ReplyDeleteஎழுத்து நடை நன்றாக இருக்கிறது! வாழ்த்துக்கள்!
ReplyDeleteநன்றி அண்ணே....
ReplyDeleteமர்ஃபியின் எந்த விதிப்படி என்று பின்னோக்கி சொல்லவில்லையே...!
ReplyDeleteதொடருங்கள் பெ.சொ.விருப்பமில்லை. வாழ்த்துக்கள்.
அன்பின் பெசொவி
ReplyDeleteதிரை விமர்சனங்கள் பற்றிய அறிமுகங்கள் அனைத்துமே அருமை - சென்று படித்தேன் - நல்வாழ்த்துகள் பெசொவி. நட்புடன் சீனா
கலக்கல்
ReplyDelete