கவி(தை) ஊர்வலம்
➦➠ by:
சே.குமார்
வணக்கம் நண்பர்களே... நேற்று தமிழ் அமுதம் பருகியிருப்பீர்கள் என்பதில் சந்தேகம் இல்லை. இன்று நாம் கவிதை ஊர்வலத்தில் கலந்து கொண்டு வரலாம் வாருங்கள்.
கவிதை என்றதும் ஞாபகத்தளத்தில் பாரதியார், பாரதிதாசன், கண்ணதாசன், பட்டுக்கோட்டையார், வைரமுத்து, கவிக்கோ அப்துல் ரஹ்மான், கவிஞர் மீரா, தாமரை உள்ளிட்ட பலரது முகங்கள் வலம் வந்தாலும் இன்று நாம் பார்க்கப் போவது மகாகவி பாரதியாரைப் பற்றி...
''யாமறிந்த மொழிகளிலே தமிழ்மொழி போல் இனிதாவ தெங்கும் காணோம்" என்று தனது தமிழ்க்காதலை வெளிப்படுத்திய எட்டையபுரத்துக் கவிஞன், நம் தேசியக்கவி பாரதி 1882ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் 11ம் தேதி சின்னச்சாமி ஐயருக்கும் லெட்சுமி அம்மாளுக்கும் மகனாகப் பிறந்தார். 11 வயது பாலகனாக இருக்கும் போதே கவிதை எழுதிய மகாகவியின் இயற்பெயர் சுப்பையா. தனது 15வது வயதில் செல்லம்மாவை மணந்தார்.
திருமணம் முடிந்த ஒரு வருடத்தில் தொழிலில் ஏற்பட்ட நஷ்டத்தால் வறுமை நிலைக்கு சென்றது பாரதியின் குடும்பம். தனது நிலையை எட்டயபுரத்து மன்னருக்கு கடிதம் மூலம் தெரிவித்து பொருளுதவி கேட்க, மன்னர் அரண்மனையில் வேலை கொடுத்தார். ஆனால் அந்த பணியில் அவரது மனம் லயிக்காததால் காசிக்கு சென்று ஏறத்தாழ நான்காண்டுகள் அங்கேயே கழிந்த சமயத்தில் எட்டையபுர மன்னனால் அழைக்கப்பட்டு காசி அரண்மனையில் தங்க வைக்கப்பட்டார். காசியில் வாழ்ந்த ஏழு வருடங்கள் அவர் கவிதைப் பக்கம் தலைவைத்துக்கூட படுக்கவில்லை என்பதே உண்மை.
வாழநாளின் பல்வேறு காலகட்டங்களில் பல பத்திரிக்கைகளில் ஆசிரியராக பணியாற்றிய பாரதி, சில காலம் மதுரை சேதுபதி மேல்நிலைப் பள்ளியில் தமிழாசிரியராகவும் பணியாற்றியுள்ளார்.
பாட்டுக்கொரு புலவன் நம் பாரதிதான் கவிதைகளில் யாப்பு, அணி போன்ற கட்டுக்களை உடைத்து புதுக்கவிதையை பிரசவித்தார். 'பெண்ணடிமை தீருமட்டும் பேசும் இத் திருநாட்டில் மண்ணடிமைதீருதல் முயற்கொம்பே' என்று அன்றே பெண்ணுரிமை பேசியவர் பாரதி.
பாரதியின் படைப்புக்களில் குயில் பாட்டு, கண்ணன் பாட்டு, பாஞ்சாலி சபதம் போன்றவை குறிப்பிடத்தக்கவை. சுதந்திரத்தாகத்துடன் பாடல்கள் இயற்றிய நம் பாரதி சுதந்திரத்துக்கு முன்பாக, அதாவது 1921 செப்டெம்பர் 11ஆம் தேதி மரணமடைந்தார். அவரது இறுதி ஊர்வலத்தில் சொற்ப நபர்களே கலந்து கொண்டனர் என்பது வருத்தமளிக்கும் விஷயம்.
என்ன தோழர்களே பாரதியை படித்தாச்சு... இனி நம் நவீன பாரதிகளைப் பற்றி பார்ப்போம்.
வலைப்பூவில் நான் வாசிக்கும் நபர்களில் பா.ராஜாராம், திருமதி. தேனம்மை, நேசமித்ரன், ராகவன், பூங்குன்றன், திருமதி மலிக்கா உள்ளிட்ட பிரபல கவிஞர்கள் மத்தியில் இவர்களும் அருமையாக கவிதை படைக்கிறார்கள்.
தனது பெயரையே வலைப்பூவுக்கும் வைத்துள்ள இவர் தனது 'இரவுப் பேருந்து' என்ற கவிதையில்
'காபிக்கும் கக்கூசுக்கும்
கால் மணி கிடைக்கும்
தொடரும் ஓட்டத்தில்
தலைகள் ஆடும்
வீடு வந்து சேர்ந்தாலும்
விடாது தூக்கம்'
என்று நீண்ட பேருந்துப் பயணத்தை அனுபவித்து கவிதையாக்கியுள்ளார்.
கால் மணி கிடைக்கும்
தொடரும் ஓட்டத்தில்
தலைகள் ஆடும்
வீடு வந்து சேர்ந்தாலும்
விடாது தூக்கம்'
என்று நீண்ட பேருந்துப் பயணத்தை அனுபவித்து கவிதையாக்கியுள்ளார்.
----------------------------------------------
காதலைக் கவிதையாக்கி...
காலங்கள் கடந்து நிற்கும் காதல் நினைவுகளை கவிதைகளாக வடிக்கிறார் செந்தில் குமார் (senkumars). உங்கள் பார்வைக்காக இவரது என் காதல் என்ற கவிதையின் வரிகள் கீழே...
காலங்கள் கடந்து நிற்கும் காதல் நினைவுகளை கவிதைகளாக வடிக்கிறார் செந்தில் குமார் (senkumars). உங்கள் பார்வைக்காக இவரது என் காதல் என்ற கவிதையின் வரிகள் கீழே...
'பறித்த மறு நொடி மரணம் என்றாலும்...
உன்புன்னகையால் உயிர்வாழ்வது...
இப்பூக்கள் மட்டுமல்ல.. என் காதலும்தான்...'
----------------------------------------------
அ.செய்யதுஅலி என்ற தனது பெயரை சுருக்கி செய்தாலி என்று வைத்திருக்கிறார். இவர் நாகரீக முரண்பாடு குறித்து இப்படி சிலாகிக்கிறார்.
'போர்த்திய உடைமைகளின்
அளவுகள் குறைத்து
வெட்கத்தலங்களை
விழிகள் பார்க்கும்...'
அளவுகள் குறைத்து
வெட்கத்தலங்களை
விழிகள் பார்க்கும்...'
----------------------------------------------
'காட்டுக்கோட்டை..
பெயரைப்போல காடில்லாவிட்டாலும்
அந்த ஊரில் காட்டுக்கொட்டாயில்தான் எங்கள் வீடு..
அளவான குடும்பம்…
பெயரைப்போல காடில்லாவிட்டாலும்
அந்த ஊரில் காட்டுக்கொட்டாயில்தான் எங்கள் வீடு..
அளவான குடும்பம்…
ஆறுமுகம், சந்திரமதியின் மூத்த புதல்வன் நான்.'
என்று கவிதையாகவே சொல்லியிருக்கிறார். ஆனால் தன் பெயர் என்ன என்பதை கடைசிவரை சொல்லவே இல்லை. ஒரு நண்பர் ஜெயசீலன் என்று இவரை விளிக்க, அதற்கும் அது என் தம்பி என்று ஜகா வாங்கிவிட்டார். ஆனால் கவிதைகள் மிக அருமை.
என்று கவிதையாகவே சொல்லியிருக்கிறார். ஆனால் தன் பெயர் என்ன என்பதை கடைசிவரை சொல்லவே இல்லை. ஒரு நண்பர் ஜெயசீலன் என்று இவரை விளிக்க, அதற்கும் அது என் தம்பி என்று ஜகா வாங்கிவிட்டார். ஆனால் கவிதைகள் மிக அருமை.
----------------------------------------------
தன் வாழ்க்கைப் பயணத்தின் பாதச்சுவடுகளை சுவடுகளாகவே பதியமிடுகிறார் பிரவீன் குமார். இவர் ஒரு தலைப்பின் கீழ் நிறையக் கவிதைகளை தொகுக்கிறார். என் விழியில் விழுந்த அவரது கவிதை வரிகள் இது...
'தடுக்கித்தான் விழுந்தேன்.
அவள் நெஞ்சம்,
புதைக்குழி என்றறியாமல்….'
அவள் நெஞ்சம்,
புதைக்குழி என்றறியாமல்….'
----------------------------------------------
இடி மின்னல் தாக்கி புயல் வரை நோக்கிய இதயத்தில் இனியெல்லாம் காதல் மழையே... (வலைப்பூவின் பெயரே கவிதையாய்)
தலைப்பே கவிதை சொல்லும்படியாக இருக்கிறது. சேராத இமைகளோடு தீராத இரவெல்லாம் தனக்குள் எரியும் நெருப்பிலே கவிதை சமைக்கத் துடிக்கிற நாவிஷ் செந்தில்குமார், தனது மனவெட்டி என்ற கவிதையில்,
'ஊருக்குப் போகும்போது
உனது நகவெட்டிய
மறந்து வைத்துவிட்டுப் போய்விட்டாய்
பார்க்கும்போதெல்லாம்
உனது நகவெட்டிய
மறந்து வைத்துவிட்டுப் போய்விட்டாய்
பார்க்கும்போதெல்லாம்
என் மனதை வெட்டிக்கொண்டிருக்கிறது' என்கிறார்.
----------------------------------------------
தனது செல்ல மகளின் பெயரையே வலைப்பூவிற்கு சூட்டி அழகு பார்க்கும் கார்த்திகேயன்,
'கவிதையும் காதலுமாய்
காத்திருப்பானுக்கு தேடுவது
கிடைப்பதில்லை. கூற்று உண்மை
கலியுலகம் அன்றோ இது'
காத்திருப்பானுக்கு தேடுவது
கிடைப்பதில்லை. கூற்று உண்மை
கலியுலகம் அன்றோ இது'
என்கிறார் தனது தூண்டில் புழுவைப் போல் என்ற கவிதையில்.
----------------------------------------------
இளங்கோ என்ற இந்த துணை இயக்குநர் எல்லா பதத்திலும் கால் பதித்தாலும் கவிதைக்காரன் என்பதை நிரூபிக்கும் விதமாக கவிதைகள் என்ற முகவரியில் மட்டும் 773 கவிதைகள். என்ன பிரமிக்க வைக்கிறதல்லவா.? அதிலிருந்து பார்வைக்காக
'வந்த போதும்
சென்ற போதும்..
தொடர்ந்து நீடிக்கிறது
அறை முழுக்க..
உன் மௌனத்தின் இருள்..!'
சென்ற போதும்..
தொடர்ந்து நீடிக்கிறது
அறை முழுக்க..
உன் மௌனத்தின் இருள்..!'
----------------------------------------------
இவர் தனது இதயத்தின் அடியில் இருந்து வருபவைதான் என் எழுத்துக்கள் என்கிறார். என்னுள் நீ என்பதை இவர் எப்படிச் சொல்கிறார் பாருங்கள்.
'என் ஐம்புலன்களும்
பற்றியெரிய
இன்றும் என்னுள்-நீயே..!
பயணித்துக் கொண்டிருக்கிறாய்'
பற்றியெரிய
இன்றும் என்னுள்-நீயே..!
பயணித்துக் கொண்டிருக்கிறாய்'
----------------------------------------------
மிகையான வருமானம் தேடி விவசாயத்தை விளைநிலத்திலேயே விட்டுவிட்டு சென்னைக்கு வந்திருக்கும் கிராமத்துவாசிகளில் ஒருவன் என்று சொல்லும் வத்திராயிருப்பு தெ.சு.கவுதமன், வறுமை பற்றி இப்படிச் சொல்லுகிறார்.
'உலகம் சுருங்குகிறதாம்;
உடற்சுருக்கங்கள் சிரிக்கின்றன
எனைப் பார்த்து! '
உடற்சுருக்கங்கள் சிரிக்கின்றன
எனைப் பார்த்து! '
----------------------------------------------
"இன்றைய சமுதாயத்தின் தியாகம் நாளைய சமுதாயத்தின் வளர்ச்சி" என்று குறிப்பிடும் இலங்கை மாணவி தோழி,
'சுரங்கம் தோண்டாமலே
தங்கம் எடுக்கின்றனர்
தங்கம் எடுக்கின்றனர்
மாப்பிள்ளை வீட்டார்'
என்று வரதட்சணை கேட்போரை சாடுகிறார்.
----------------------------------------------
இவரும் இலங்கையில் இருந்து எழுதுகிறார். இவரது கவிதைகள் எல்லாம் ஆழமானவை. காதலை எப்படிச் சொல்கிறார் பாருங்கள்.
'தாயை கண்டு உணர்கிறேன் தாய்மையை
உன்னை கண்டு உணர்ந்தேன் என் பெண்மையை'
உன்னை கண்டு உணர்ந்தேன் என் பெண்மையை'
----------------------------------------------
மனச்சாட்சிதான் என் முதல் கடவுள் என்று சொல்லும் கண்ணகி தான் பார்த்ததையும் கேட்டதையும் கவிதையாக்கியிருக்கிறார். இவரது கவிதைகளில் என்னைக் கவர்ந்தது இந்த வரிகள்...
இறந்துவிட்டது பாம்பு....
கடிபட்டதை சொல்லிக்கொண்டே இருக்கிறது வடு...
----------------------------------------------
இவரும் ஈழத்துக்காரர்தான். இவரின் கவிதைகள் மிகவும் வலி நிறைந்தவை. என்னை மிகவும் கவர்ந்த கவிஞர் இவர். சில நாட்கள் எழுதாமல் இருந்து மீண்டும் தொடர்கிறார். இவரது மௌன வலியை பாருங்கள்.
'மெது மெதுவான அனுகல்
வெளித்தெரியாத முனகல்
தலையணைக்கும் .......
படுக்கைக்கும் மட்டுமே -அதன்
பாசைகள் புரிந்துகொள்ளமுடிகிறது...'
வெளித்தெரியாத முனகல்
தலையணைக்கும் .......
படுக்கைக்கும் மட்டுமே -அதன்
பாசைகள் புரிந்துகொள்ளமுடிகிறது...'
----------------------------------------------
SanSiv என்ற பெயரில் எழுதும் SangiSiva (சங்கீதா சிவா என்று நினைக்கிறேன்) நினைவுகளும் என்னை சுற்றிய நிகழ்வுகளும்தான் எனது கவிதைகள் என்று சொல்லும் இவரின் கவிதை இது.
'உன்னை போலவே உன் கோபங்கள்
பிரசவிக்கும் வார்த்தைகளுக்கும்
என் வலிகள் புரிவதில்லை...'
பிரசவிக்கும் வார்த்தைகளுக்கும்
என் வலிகள் புரிவதில்லை...'
----------------------------------------------
பிடித்த மற்றும் கவர்ந்த கவிதைகளைப் படைக்கும் நாமக்கல் சக்தி குமார், பெரும்பாலும் சிறிய கவிதைகளையே விரும்பி எழுதுகிறார். உங்கள் பார்வைக்காக ஒன்று...
'உன் குழந்தைக்கு என் பெயரை வைக்க ஆசை படாதே
உன் கணவனும் காத்திருப்பான் இன்னொரு பெண்ணின் பெயரோடு'
உன் கணவனும் காத்திருப்பான் இன்னொரு பெண்ணின் பெயரோடு'
எவ்வளவு கவிஞர்கள்... எண்ணற்ற கவிதைகள்... எதை எடுப்பது... எதை விடுவது... என்ற தவிப்பில் நிறைய நண்பர்களின் பெயர்களை தேர்வு செய்து பதிவின் நீளம் கருதி விட்டுவிட்டேன்.
நாளை சிறுகதை சிற்பிகளை சந்திக்கப் போகும்வரை கவிதைகளை வாசியுங்கள்.
நட்புடன்
-சே.குமார்
|
|
நல்ல அறிமுகங்கள் . பகிர்வுக்கு நன்றி நண்ப!
ReplyDeleteநிறையபேர் எனக்கு புதியவர்கள்.. அனைவருக்கும் பாராட்டுக்கள்
ReplyDeleteஎல்லோருமே புது முகங்கள்.
ReplyDeleteஅனைவருக்கும் வாழ்த்துக்கள்.
நல்ல தேர்ந்தெடுத்து போட்டு இருக்கீங்க. வாழ்த்துக்கள்
ஆஹா..... அருமையான கவிதைகள்!
ReplyDeleteஆகா...கவிஞர் லிஸ்டில் என்பேருமா...
ReplyDeleteநன்றி....நன்றி....ஊக்கம் கொடுத்தற்கும் புதியவர்களின் அறிமுகத்திற்கும் நன்றி....சார்...
arumaiyana arimugamgal palar ariyapattavargal palar puthiyavargal..periya thedalil thaan padaithu kondu irukirergal valaisaraththai...
ReplyDeleteஎமக்கும் உம் இதயத்தில் ஓர் இடம் கொடுத்தாய்..நன்றி நண்பா..
ReplyDeleteநல்ல அறிமுகங்கள். கவிதைக்காரனை வாசித்திருக்கிறேன். அழகான எழுத்து அவருடையது.. வாழ்த்துக்கள்.
ReplyDeleteவாழ்த்துக்கள் சே.குமார்
ReplyDeleteநன்றி நண்பரே. என்னையும் இந்த பட்டியலில் சேர்த்ததிற்கு
ReplyDeleteஅறிமுகத்திற்கு நன்றி குமார்.. கவிஞர் லிஸ்ட்ல என் பேர பார்த்து ஒரே சந்தோஷம்தான்..ஆனா என் மனசாட்சி நீயெல்லாமான்னு கதறுறது எனக்கு மட்டும் கேக்குது :-)
ReplyDeleteசக பதிவர்களுக்கு ஊக்கமளிக்கும் உங்கள் மேலான பணி தொடர வாழ்த்துககள்...
நன்றி நண்பா..
ReplyDeleteபட்டியலில் என்னையும் சேர்த்ததிற்கு, நன்றி நண்பரே.!
ReplyDelete:) :) :)
நிரைய புதியவர்கள். பகிர்விற்க்கு நன்றி :)
ReplyDeleteஅட!நிறைய புதிய பதிவர்கள்..நன்றி!
ReplyDeleteஅன்பின் குமார்
ReplyDeleteஅறிமுகங்கள் அருமை - கவிதைகளூம் அருமை
புதிய பதிவர்கள் - அனைவருக்கும் நல்வாழ்த்துகள்
நன்று குமார்
நட்புடன் சீனா
மிக்க நன்றி நண்பா.. என் வலைப்பூவையும் உங்களது வலைசரத்தில் இனைத்தமைக்கு....
ReplyDeleteஎனது கவிதைக்கு ஒர் அறிமுகம் கொடுத்தமைக்கு மிக்க நன்றி....
நல்ல அறிமுகங்கள்!
ReplyDeleteநல்ல அறிமுகங்கள்
ReplyDeleteவாங்க நேசமித்ரன் சார்...
ReplyDeleteவாங்க செந்தில்...
வாங்க ஜலீலா கமல்...
வாங்க சித்ரா மேடம்...
வாங்க கண்ணகி...
வாங்க தமிழரசி...
வாங்க படைப்பாளி....
வாங்க அமைதிச்சாரல்...
உங்கள் அனைவருக்கும் நன்றிகள்.
வாங்க உழவன்...
ReplyDeleteவாங்க இட்ஸ்மீனா...
வாங்க சன்சிவ்...
வாங்க நாகேந்திர பாரதி...
வாங்க நாவிஷ் செந்தில்குமார்...
வாங்க இராமசாமி கண்ணன்...
வாங்க அன்புடன் அருணா மேடம்...
உங்கள் அனைவருக்கும் நன்றிகள்.
வாங்க சீனா ஐயா...
ReplyDeleteகருத்துக்கும் வாழ்த்துக்கும் நன்றி...
எப்படி கொஞ்சமாவது தேறியிருக்கேனான்னு தனியா மின்னஞ்சல் செய்யுங்கள்.
வாங்க வானதி...
வாங்க் கலாநேசன்...
உங்களுக்கும் எனது நன்றிகள்.
என் கவிதையையும் உங்கள் பதிவில் பகிர்ந்து கொண்டமைக்கு மிக்க நன்றி தோழரே ....................:)
ReplyDeleteதோழரே உங்கள் வலைச்சரத்தில் என் கவிதையை பகிர்ந்து என்னையும் என்னைப்போன்ற கவிஞர்களையும் அறிமுகபடுத்தியதற்க்கு என் மனமார்ந்த நன்றிகள்
ReplyDeleteஅனைவரும் எனக்குப் புதியவர்களே. நன்றி அறிமுகத்திற்கு.
ReplyDeleteThis comment has been removed by the author.
ReplyDeleteஎனது வலைத்தளத்திற்கு அறிமுகம் கொடுத்த தங்கள் ரசனைக்கு நன்றி நண்பரே!
ReplyDeleteஅன்புடன் வத்திராயிருப்பு தெ.சு.கவுதமன் (கரிசல்குளத்தான்)
நேசமிகு நட்புக்கு..
ReplyDeleteஎத்தனை அறிமுகங்கள்..!
நேர்த்தியான குறிப்புகள்..!!
வியந்து போனேன்...இவ்வளவு அருமையாக இத்தனை பேர் எழுதுகிறார்கள்...
பொறுமையாக வாசிப்பதற்கும்...பொறுப்புடன் அதை ரசிப்பதற்கும்...ஒரு மிக நீண்ட அவகாசம் அவசியமாகும்..
எழுத்துக்காக வலிந்து மெனக்கெட மனிதர்கள் இருக்கும் வரை...
நவீனப் படைப்புகள்...தொடர்ந்து உயிர்வாழும்...
அதில் உங்கள் பங்கு..பாராட்டுதலுக்குரியது...
நன்றி...சே.குமார்..
( லிஸ்டில் விடுப்பட்ட எழுத்தாள நண்பர்களையும் அறிந்து கொள்ள அவா கொள்கிறேன் )
[ நறுக்கென்று கட் செய்த அழகிய ட்ரைலர் மாதிரி இருந்தது உங்கள் பதிவு...( ரசித்தேன் ) மீண்டும் நன்றி..!! ]
வாங்க இந்து...
ReplyDeleteவாங்க செய்யதுஅலி...
வாங்க பின்னோக்கி...
வாங்க வத்திராயிருப்பு கவுதமன்...
வாங்க இளங்கோ...
உங்கள் அனைவரின் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி.