நன்றி நண்பர்களே - வலைச்சரத்தில் 7- ம் நாள்!
➦➠ by:
பலா பட்டறை ஷங்கர்
ஆதரவிற்கும், அன்பிற்கும் மிக்க நன்றி நண்பர்களே. வலைச்சரம் என்பது ஒரு மதிப்பு மிக்க இடம். என்னைப் போல் நிறைய பதிவர்கள் மோதிர விரல்களால் குட்டுப்பட்ட இடம். நம்மையும் ஒருவர் கவனித்து, படித்து இதுபோன்ற ஒரு தளத்தில் அறிமுகப் படுத்துவது என்பது புதியதாய் எழுத வருபவர்களுக்கு மிகவும் உற்சாகம் தரும்.
என்னுடைய நிறைய யோசிப்புகள் மற்றும் புதிய வலைப்பூக்கள் அறிமுகம் என எல்லாமே என் தந்தையின் திடீர் சுகவீனத்தால் பாதிக்கப் பட்டது. புரிந்துகொண்ட சீனா அய்யாவிற்கும் நண்பர்களாகிய உங்களுக்கும் நன்றி.
என்னுடைய வலைச்சர இடுகைகளுக்கான பின்னூட்டம் அனைத்திற்கும் தனித் தனியே நன்றி சொல்ல விரும்பினேன். நேரமில்லை. நண்பர்கள் மன்னிக்கவும். பின்னூட்டமிட்டு, படித்து, ஆதரவளித்த அனைவருக்கும் நன்றி. மேலும் அறிமுகப் படுத்திய பதிவர்களின் பக்கங்கள் சென்று படித்து அவர்களுக்கும் ஆதரவுதருவீர்கள் என்ற நம்பிக்கை எனக்கு உண்டு.
அடுத்து வரும் ஆசிரியர் வழக்கம் போலவே சிறப்பாக பணியாற்றுவார் என்ற நம்பிக்கையுடன் அவருக்கு வாழ்த்து கூறி இப்பொழுதைக்கு வலைச்சரத்திலிருந்து விடை பெறுகிறேன்.
நன்றி.
வணக்கம்.
அன்புடன்
ஷங்கர்..
:-)
.
.
|
|
உங்கள் தந்தை குணமடைய வேண்டுகிறேன்.
ReplyDeleteஅன்பின் ஷங்கர்
ReplyDeleteநலல் முறையில் பொறுப்பினை நிறைவேற்றியதற்கு நன்றி
நல்வாழ்த்துகள் ஷங்கர்
நட்புடன் சீனா
தந்தையின் உடல் நலம் பேணுக
ஒரு நாளைப்போல ஒரு நாள் இருக்கா என்ன?
ReplyDeleteபரவாயில்லை. செய்தவரையில் அருமையாகக் கவனத்துடன் உங்கள் பணியைச் செய்துவிட்டீர்கள்.
அதற்கு இனிய பாராட்டுகளும், தங்கள் தந்தை விரைவில் குணமாக என் வேண்டுதல்களும்.
இனிய பாராட்டுகளும், தங்கள் தந்தை விரைவில் குணமாக என் வேண்டுதல்களும்
ReplyDeleteசகோ! அப்பாவின் உடல் நலம் சிறக்க இறைவனை வேண்டுகிறேன். இருந்தாலும் சிறப்பான நானறியாத தளங்களை அறிமுகப்படுத்தியுள்ளதற்கு நன்றி.
ReplyDeleteசில இடுகைகள் என்றாலும் நிறைவான அறுமுகங்கள் ஷங்கர்ஜி... உங்கள் தந்தையை கவனியுங்கள். விரைவில் நலம் பெற வேண்டுகிறேன்.
ReplyDeleteஉங்கள் தந்தை உடல் நலம் பெற இறைவன் அருள் புரிவார்.
ReplyDeleteவிரைவில் நலம் வாழ்த்துக்கள்.
இப்போதுதான் பார்த்தேன்...வாழ்த்துக்கள்..அப்பா குணமடைய வேண்டுகிறேன்.
ReplyDeleteவாழ்த்துக்கள் ஷங்கர்.
ReplyDeleteஅப்பா குணமடைய வேண்டுகிறேன்.
உங்கள் பணியைச் சிரமத்தின் நடுவிலும் அழகாகச் செய்து முடித்திருக்கிறீர்கள் ஷங்கர்.
ReplyDeleteபாராட்டுக்கள்.இனி உங்கள் வலைப்பக்கத்தோடு தொடர்வோம்.
சிறப்பான பதிவுகளை அடையாளம் காட்டியிருக்கிறீர்கள் ஷங்கர். வாழ்த்துகள்.
ReplyDeleteதந்தை நலமடைந்திருப்பார் என நம்புகிறேன். என் பிரார்த்தனைகள்.