விளைச்சல்கள்
➦➠ by:
சே.குமார்
வலைச்சரத்தில் இன்று ஐந்தாவது நாள் நண்பர்களே... இதுவரை தமிழ், கவிதை, சிறுகதை என பல்வேறு விளைச்சல்களை பகிர்ந்து கொண்ட நாம் நம் நாட்டின் உயிர்நாடியாம் விவசாயம் குறித்த பதிவை பார்க்கலாம் தோழர்களே...
"கடவுள் என்னும் முதலாளி கண்டெடுத்த தொழிலாளி விவசாயி" என்றான் கவிஞன். அப்படிப்பட்ட விவசாயி குறித்து பார்க்கலாம் என்று விவசாயக் குடும்பத்தில் இருந்து வந்த எனக்குள் உதித்த எண்ணத்தை செயல் படுத்த நினைத்து விளைச்சல்கள் என்று தலைப்பிட்டு விளைச்சல்களை தேடிய எனக்குள் மிஞ்சியது ஏமாற்றமே...
ஒரு சிலர் மட்டுமே சில கட்டுரைகளை பகிர்ந்திருக்கிறார்கள். சிலர் விவசாயம் தொடர்பான வலைப்பூவை ஆரம்பித்து அதில் சில இடுகைகளை இட்டு பின் தொடர்பவர்கள் இல்லாமல் தாங்களும் தொடராமல் நம்ம ஊர் விவசாய நிலம் போல் வறண்டு போய் இருக்கின்றது.
நான் இங்கு பகிர இருக்கும் நண்பர்களிம் இடுகைகள் கூட 2009 ஆம் ஆண்டுக்கு முன்னர் எழுதியவைதான். நான் தேடியதில் கிடைக்காத விவசாயம் உங்களுக்குத் தெரிந்து விளைந்திருந்தால் எனக்குத் தெரியப் படுத்துங்கள்.
சரி... வழக்கம் போல் இந்த இடுகையின் தலைப்பு தொடர்பான ஒருவர் குறித்து பகிரலாமே... அந்த ஒருவர்....
விவசாயத்துறையில் எத்தனையோ ஜாம்பவான்கள் இருந்தாலும் எனக்கும் விவசாயம் பற்றி அறியத் தந்த எனது தந்தை என்னைப் பொறுத்தவரை விவசாயத்துறையில் வானுயர நிற்கிறார்.
கண்மாய் நிறைந்ததும் விதை நெல்லை சாக்கில் கட்டி தண்ணீருக்குள் வைத்து முளைக்க வைத்து நாற்றங்காலை உழுது விதை விதைத்து மறுநாள் விதை விதைத்த வயலில் தண்ணீரை வடித்து வயலை காயவைத்து பயிர் முளைத்தது முதல் அதை பறித்து நடுவது வரை பக்குவம் பார்ப்பதாகட்டும்...
நாற்றைப் பறித்து சிறு சிறு கட்டுகளாக கட்டி (நாற்று முடி) அவற்றை நூறு நூறாக எண்ணி (குப்பம் என்பார்கள்) நடவு வயலில் நட்டு, அதற்கு உரமிட்டு நட்ட பயிர் நிமிர்ந்த வளர்வதை (கருநடை திரும்புதல்) பார்த்து மகிழ்ந்து நீர் பாய்ச்சி, உரமிட்டு வளர்ப்பதாகட்டும்....
கதிர் பருவம் அடைந்து பால் பிடிக்கும் காலத்தில் (பொதி கட்டுதல்) அதற்கு வேண்டிய உரங்கள், மருந்துகள் இட்டு பார்த்துப் பார்த்து வளர்த்து கதிரானது அறுவடை செய்து கட்டுக் கட்டுகளாக கட்டி அவற்றை களத்திற்கு கொண்டு செல்வதாகட்டும்...
கதிரை அடித்து நெல்லை எடுத்து அவற்றை தூற்றி காற்று போதவில்லை என்பதால் சொளகு (முறம்) வீசி தூசிகளை நீக்கி மூடைகளில் பிடித்து வீட்டிற்கு கொண்டு வருவதாகட்டும்...
இப்படி அந்த மூன்று மாதங்கள் வயல் வேலையில் வெயில் மழை பாராது உழைத்துக் களிக்கும் மனிதர்கள் என் தந்தை போல் பலருண்டு. அவரிடம் இருந்து விவசாய வேலைகள் நான் கற்றபோது அவர் சொல்லும் வேலையை செய்ய மறுத்து திட்டு வாங்கிய அனுபவங்கள் இருந்தாலும் தற்போது விவசாயம் இழந்த பூமிக்கு நடுவே இருக்கும் எங்கள் ஊரைப் பார்க்கும் போது மனசு வலிக்கத்தான் செய்கிறது.
சரிங்க... இனி விவசாயம் சம்பந்தமான இடுகைகள் இடும் நண்பர்கள் குறித்து பார்ப்போமா?.
விவசாயம் அழிவதற்கு அரசியல்வாதிகள்தான் காரணம் என்று அடித்துச் சொல்கிறார் வலைப்பூவில் இயற்கை விவசாயம் செய்யும் ராஜராம்குமார். தனது கட்டுரையில்
"இன்றைய தேதியில் விவசாயியாக பிறக்க யாருக்குமே விருப்பம் இல்லை. இந்த ஈனத் தொழில் என்னோடு போகட்டும். என் மகன் விவசாயம் செய்ய வரவே கூடாது. எப்பாடு பட்டாவது எட்டாவதோ, பத்தாவதோ படிக்க வைத்து, ஏதாவது ஒரு வேலைக்கு அனுப்பிவிட வேண்டும் என்றுதான் ஒவ்வொரு தந்தையும் நினைக்கிறான். மில் வேலையில் கிடைக்கும் இரண்டாயிரம் ரூபாய் சம்பளத்தை வாங்கத்தான் ஒவ்வொரு இளைஞனும் ஆசைப்படுகிறானே தவிர, வேளாண்மை செய்ய ஆசைப்படுவதில்லை. அவ்வளவு ஏன், பட்டரை வேலைக்கெல்லாம் தயாராக இருக்கிறார்கள். மண்வெட்டியை எடுத்து வரப்பை வெட்ட வேண்டும் என்றால் சிதறி ஓடி விடுகிறார்கள்." என்று தனது வேதனையை விதைத்து இருக்கிறார்.
என்ன நண்பர்களே இவர் கூறுவது உண்மைதானே...
விவசாயம் - லாபம் மிக்க தொழில் என்று சொல்லும் செந்தில்நாதன் செல்லம்மாள், அதற்குத் தேவை ஒரு விவசாயப் புரட்சி மட்டுமே என்கிறார். இவரது பதிவில்
"இந்தியாவின் இதயம் கிராமம்.
இந்தியர்களின் தேசியத் தொழில் விவசாயம்.
அடடா...
ஒரு புறம் மாதம் 30,000 ரூபாய் வாங்கும் IT Engineer..
மறுபுறம் வருடம் முழுவதும் உழைத்தும்,
விதை நெல்லுக்கு தாலியை அடகு வைக்கும் அவலம்...
தகவல் தொழில்நுட்ப பயனை விவசாயிக்கு தருவோம்...
விவசாயத்தை லாபம் மிக்க தொழில் ஆக்குவோம்... " என்கிறார். மேலும் என்ன சொல்கிறார் என்று படித்துப்பாருங்கள் தெரியும்.
இந்தியர்களின் தேசியத் தொழில் விவசாயம்.
அடடா...
ஒரு புறம் மாதம் 30,000 ரூபாய் வாங்கும் IT Engineer..
மறுபுறம் வருடம் முழுவதும் உழைத்தும்,
விதை நெல்லுக்கு தாலியை அடகு வைக்கும் அவலம்...
தகவல் தொழில்நுட்ப பயனை விவசாயிக்கு தருவோம்...
விவசாயத்தை லாபம் மிக்க தொழில் ஆக்குவோம்... " என்கிறார். மேலும் என்ன சொல்கிறார் என்று படித்துப்பாருங்கள் தெரியும்.
பருத்திக் காடு - விவசாயம் பற்றி போகிற போக்கில் சொல்லிச் செல்கிறார் கோயமுத்தூர்க்காரரான சஞ்சய்காந்தி. இவர் சொல்லும் பருத்தி விவசாயம் செய்வதை எவ்வளவு அழகா சொல்கிறார் பாருங்கள்.
"வயலின் இரு எல்லைகளுக்கும் எட்டும் வகையில் நீளமான ஒரு கயிறில் இரண்டு அடி இடைவெளிவிட்டு சிறு சிறு துணிகளை இடையில் திணித்துவைத்துக் கொள்வோம். கயிறின் இரண்டு முனைகளையும் ஆளுக்கொருவராகப் பிடித்துக் கொண்டு வயலின் இரண்டு எல்லைகளிலும் இருவர் நின்றுக் கொள்வார்கள். பருத்தி நட வேண்டிய வயல்களின் பரப்பளவுக்கு ஏற்ற மாதிரி கயிறுகளின் எண்ணிக்கையும் நடுபவர்களின் எண்ணிக்கையும் இருக்கும். கயிற்றில் இரண்டடிக்கு ஒரு துணி வைத்திருபப்து போல் கயிறு பிடித்திருப்பவர்களின் கையிலும் இரண்டடி நீளத்தில் ஆளுக்கொரு குச்சி வைத்திருப்பார்கள். அப்போது தான் எல்லாப் பக்கமும் இரண்டு அடி சீரான இடைவெளி இருக்கும். ". என்று பருத்தி விவசாயம் குறித்து பக்குவமாக விளக்குகிறார்.
எல்லோரும் எல்லாமும் பெற வேண்டும் என்று சொல்லும் மா. சிவக்குமார், விவசாயி - ஒரு சிறு முயற்சி என்று தலைப்பில் இப்படி வரிசைப்படுத்துகிறார்.
அ. விவசாயத் திட்டமிடல்
ஆ. ஆண்டின் சராசரி நுகர்வு மற்றும் ஒரு ஆண்டின் சராசரி நுகர்வின் அதிகரிப்பு (உதாரணம்: ஒரு ஆண்டிற்கு 1000 கிலோ நுகர்வு மற்றும் ஒரு ஆண்டிற்கு 10 கிலோ நுகர்வின் அதிகரிப்பு என்று கொள்ளலாம்.)
இ. விளைவுத்திறன் (10 % இயற்கையின் பாதிப்பு என்று கொள்ளலாம்). இது 1000 + 10 % க்கு அதிகமாக இருந்தால் அதனை விளைவிக்க கட்டுப்பாடு அவசியம். குறைவாக இருந்தால் அதிகரிக்க ஆராய்ச்சிகள் தேவை. நாம் இப்போதைக்கு 1000 +10 % சரியாக விளைவிக்கபடுவதாகக் கொள்ளலாம்.
ஈ. இந்த விளைவுத் திறனை சமச்சீராக 360 நாட்களுக்குப் பிரித்தால் நாளுக்கு 3 கிலோ வருவதாக் கொள்வோம்.
ஆ. ஆண்டின் சராசரி நுகர்வு மற்றும் ஒரு ஆண்டின் சராசரி நுகர்வின் அதிகரிப்பு (உதாரணம்: ஒரு ஆண்டிற்கு 1000 கிலோ நுகர்வு மற்றும் ஒரு ஆண்டிற்கு 10 கிலோ நுகர்வின் அதிகரிப்பு என்று கொள்ளலாம்.)
இ. விளைவுத்திறன் (10 % இயற்கையின் பாதிப்பு என்று கொள்ளலாம்). இது 1000 + 10 % க்கு அதிகமாக இருந்தால் அதனை விளைவிக்க கட்டுப்பாடு அவசியம். குறைவாக இருந்தால் அதிகரிக்க ஆராய்ச்சிகள் தேவை. நாம் இப்போதைக்கு 1000 +10 % சரியாக விளைவிக்கபடுவதாகக் கொள்ளலாம்.
ஈ. இந்த விளைவுத் திறனை சமச்சீராக 360 நாட்களுக்குப் பிரித்தால் நாளுக்கு 3 கிலோ வருவதாக் கொள்வோம்.
சுடுவது சுகம் (Its HOT...yaa!!) என்ற வலைப்பூவில் ஆசிரியர் யாரென்று சொல்லவில்லை ஆனால் இந்தக் கட்டுரையின் கீழே சந்திப்பு: வி.சி.வில்வம் என்று கொடுத்துள்ளார். இவர்தான் ஆசிரியர் என்று நினைக்கிறேன். இவர் நம்மாழ்வார் என்ற விவசாயியின் பேட்டியை அழகாக தொடுத்துள்ளார்.
"என் பெயர் கோ. நம்மாழ்வார். பிறந்தது தஞ்சாவூர் மாவட்டம், திருக்காட்டுப்பள்ளி அருகில் இளங்காடு கிராமம். கோவிந்தசாமி - ரெங்கநாயகி என் பெற்றோர்கள். தொடக்கக் கல்வியைக் கிராமத்தில் முடித்த நான், இளங்கலை வேளாண்மைப் பட்டப் படிப்பை அண்ணாமலைப் பல்கலைக் கழகத்தில் முடித்தேன். பின்னர் 1963 இல் கோவில்பட்டியில் மண்டல வேளாண் ஆராய்ச்சி நிறுவனத்தில் பணிபுரிந்தேன்" என திரு. நம்மாழ்வாரின் பேட்டி பயிராய் வளர்கிறது.
ரமீஸ் ஹுசேன் இப்படியும் விவசாயம் செய்யலாம் என்கிறார். நீங்களும் பாருங்களேன். (இது ஜாலிக்காக...)
விவசாயம் குறித்த இந்த இடுகைகள் எல்லாம் புதுப்பிக்கப்படாத வலைகளில்தான் இருக்கின்றன என்ற வருத்தத்துடன் இன்னும் சில வலைகளை பார்க்கலாம் என்று தேடியதில் கண்ணில் பட்டது விவசாயம்/விவசாயி (கூட்டுப்பதிவு) என்ற வலைப்பூ.
இதை டண்டணக்கா மற்றும் ஸ்ரீ இருவரும் இணைந்து ஆரம்பித்து "இது விவசாய வாழ்கை, உணர்வுகள், செய்திகள், செய்முறை, தகவல்கள், பரிந்துரைகள், மற்றும் விவசாயம் சார்ந்த எழுத்துக்ள் கொண்ட கூட்டுப் பதிவு ... இங்கு எழுத உங்களையும் மகிழ்வுடன் வரவேற்கிறோம் !!!" என்று நாற்றுப் பாவியதுடன் விட்டுவிட்டார்கள். அதில் விளைச்சலைக் கொண்டு வந்தால் நல்லாயிருக்கும்.
சரி நண்பர்களே... விவசாயம் தொடர்பான இந்த இடுகையில் விவசாயம் செய்து அறுக்காத வயல்களே அதிகம். வாசிப்பதோடு நிறுத்திவிடாமல் தொடர்பதிவுகளை சில நாட்கள் தள்ளிவைத்து விட்டு விவசாயம் குறித்து ஒரு பதிவிடலாமே.
சரி நண்பர்களே இன்று விவசாயம் பண்ணியாச்சு... நாளை புத்தரிசி இட்டு புதுப்பொங்கல் வைத்து கூட்டு பொரியல் என விதவிதமாக சமைத்து ஒரு விருந்தே படைக்கலாம் என்றிருக்கிறேன். மறக்காம நட்பும் - சுற்றமும் வந்துருங்க.
நட்புடன்,
சே.குமார்.
|
|
என்ன மக்களே நலமா?
ReplyDeleteஉலகின் உயிர்நாடியான விவசாயம் பற்றிய பதிவுகளை பகிர்ந்தமைக்கும், எழுதும் பதிவர்களுக்கும் என் வந்தனம்..
ReplyDeleteஎல்லாப் பதிவர்களையும் புக் மார்க்கில் சேமித்துக் கொண்டேன்...
மிக்க நன்றி.நானும் ஒரு வேளாண் பட்டதாரி என்பதால் மிக்க பெருமிதமாக உள்ளது.வேளாண் துறையின் தொடர்பில்லாமல் போய்விட்டேன்.எனக்கு பிடித்த நாள் இதுவே.நேரம் கிடைக்கும் பொழுது பார்வை இடவேண்டும்.
ReplyDeleteரயில்வேக்குல்லாம் பட்ஜெட் போடும் நாட்டுல வேளாண்மைக்கு சரியான பட்ஜெட் திட்டங்கள் இல்லை.
ReplyDeleteநல்லா சொல்லியிருக்கிங்க:)
விவசாயக் கலைச்சொற்கள் பலதும் உங்க பதிவு படிச்சுதான் புரிஞ்சிகிட்டேன். சின்னப்ப வயக்கால் பம்புசெட்டுல குளிக்கப் போனதோட நின்னது என்னோட வயலிறக்கம். உங்க பதிவ படிச்சதும் கொஞ்சம் வெக்கமா தான் இருக்கு - வயக்காட்டை ஒதுக்கினமேனு. நல்ல நினைவுகளைக் கிண்டி விட்டீங்க. கரும்பு, நெல் சாகுபடி டயத்துல எங்க தாத்தாங்களோட சொந்த, குத்தகை நிலங்கள்ள விழா எடுத்த நாளுங்கள்ள ஒண்ணு ரெண்டு தடவை போய் வெளியே நின்னு பொங்கலும் பானகமும் நீர்மோரும் சாப்பிட்ட நினைவும் வருது. கூட்டுறவு விவசாயம் வளரவில்லையா? எனக்கு அதிகம் விவரம் தெரியாது - விவசாய ஆர்வம் குறைந்ததுக்கு இந்தியாவுல விவசாயம் லாபகரமா இல்லாதது ஒரு காரணம்னு நினைக்கிறேன்; சப்லை செயின் அங்கங்கே துண்டிக்கப்பட்டு கொள்முதல் விலைக்கும் கன்சம்ப்ஷன் விலைக்கும் இடையே பெரிய வித்தியாசம் இருப்பதாக நினைக்கிறேன்; நல்ல ஸ்டோரேஜ் வசதி இல்லாததால் அதிக விரயமும் ஏற்படுவதாக நினைக்கிறேன். தமிழ்நாட்டுல விவசாயக் கல்லூரி தொடங்கினா நல்லா இருக்கும்.
ReplyDeleteநல்ல பதிவு.
அருமையான படிக்க நிறைவான அறிமுகங்கள்.
ReplyDeleteஅனைவருக்கும் பாராட்டுக்கள்!
ReplyDeleteகுமார், நல்ல பதிவு.
ReplyDeleteவாங்க செந்தில்...
ReplyDeleteவாங்க ஆயிஷா மேடம்...
வாங்க ரசிகன்...
வாங்க அப்பாதுரை...
வாங்க பின்னோக்கி...
வாங்க சித்ரா...
வாங்க வானதி...
உங்கள் வருகைக்கும் கருத்துக்கு நன்றி.
விவசாயம், மற்றும் விளைச்சல் குறித்த பகிர்வு நல்ல இருக்குங்க..
ReplyDeleteவாழ்த்துக்கள். :-)