எந்தரோ மகானுபாவுலு.............
➦➠ by:
* அறிமுகம்,
பெயர் சொல்ல விருப்பமில்லை
எந்தரோ மகானுபாவுலு அந்தரிகி வந்தனமு.....!
எத்தனையோ மகான்கள் இந்த வலை பூமியில், அவர்கள் அத்தனை பேருக்கும் என் வணக்கங்கள்!
என்னைப் பெற்ற தாய் தந்தையருக்கும், என் அறிவை வளர்த்த ஆசிரியர் பெருங்குழுவுக்கும் என்னை ஒரு நல்லோனாய், நன்மதிப்புடன் இந்த உலகத்தில் வலம் வரச் செய்து கொண்டிருக்கும் என் இறைவனுக்கும் என் நெஞ்சார்ந்த, சிரம் தாழ்ந்த வணக்கங்களை உரித்தாக்குகிறேன்.பல வருடங்களாக பிறருடைய வலைத்தளங்களைப் படித்துக் கொண்டிருந்த நான், எனக்கென்று ஒரு வலைத்தளம் அமைத்துக் கொள்ள விரும்பி சென்ற அக்டோபர் மாதம் முதல் வந்துட்டான்யா வந்துட்டான் என்ற பெயரில் ஆரம்பித்தேன்.
பெயர் சொல்லக் கூடாது என்றில்லை, ஆனால் ஒரு சுவாரசியத்திற்காக "பெயர் சொல்ல விருப்பமில்லை" என்ற பெயரில் பதிவுகளும் பின்னூட்டங்களும் இட்டு வருகிறேன். தெரிந்த ஒரு சிலரிடம் என் உண்மையான பெயரையும் தெரிவித்திருக்கிறேன்.
பதிவுலகம் ஒரு அருமையான மேடை. இதில் நமது தனித்திறமைகளையும் சில பொதுவான விஷயங்களில் நம்முடைய கருத்துகளையும் பகிர்ந்துகொள்ளத் தோதான இந்த பதிவுலகத்தில் தான் எத்தனை விதமான மனிதர்களைப் பார்க்க, படிக்க முடிகிறது!
அன்பின் சீனா அவர்கள், இந்த வாரம் என்னை ஆசிரியர் பொறுப்பேற்கச் சொன்ன போது, முதலில் கொஞ்சம் தயங்கினேன். ஆனாலும் இது ஒரு அருமையான வாய்ப்பு என்பதால் ஒப்புக் கொண்டேன். இத்தனை ஆயிரம் பதிவர்கள் இருக்க, பல பதிவுலக ஜாம்பவான்கள் எழுதிய ஒரு வலைத்தளத்தில் எனக்கும் ஒரு வாய்ப்பு வருகின்றபோது அதை ஏற்றுக் கொள்ளவேண்டியதுதான் என்று உள்மனம் என்னை உசுப்ப, இந்த வாரம் உங்கள் வலைச்சரத்தின் ஆசிரியர் பொறுப்பேற்கிறேன்!
பிறிதொரு பதிவில் மீண்டும் சிந்திப்போம்!
|
|
வாங்க... வாங்க...
ReplyDeleteவலைச்சர ஆசிரியருக்கு என் மனமார்ந்த வாழ்த்துக்கள்.....
இந்தாங்க 'stirrer ' கலக்குங்க..
ReplyDeleteவாங்க தல, கலக்குங்க...
ReplyDeleteபேரை சொல்லிட்டு போங்க....
வாருங்கள்!! பணி சிறக்க வாழ்த்துக்கள்!!
ReplyDeleteவாழ்த்துக்கள்!
ReplyDeleteவருக தோழரே! வருக!
ReplyDeleteபுதிய வலைச்சர ஆசிரியருக்கு என் மனமார்ந்த வாழ்த்துக்கள்.....
தொடரட்டும் உங்கள் பணி
படிக்க காத்திருக்கிறோம் இனி
(என்ன ஒரு ரைமிங்க் இல்ல நண்பரே!)
வந்தனம் வந்தனம் வாங்க வாங்க வாழ்த்துக்கள் சிறப்பா செய்யுங்கள்...
ReplyDeleteவாழ்த்துகள் :)
ReplyDeleteஅண்ணா ரொம்ப அருமையான தகவல்கள்...
ReplyDeleteவாங்க..
ReplyDeleteவாழ்த்துகள்..
வாழ்த்துகள் ஜூனியர்!
ReplyDeleteவருக வருக அன்பின் பெ.சொ.வி
ReplyDeleteசுய அறிமுகம் பதிவின் சுட்டியைத் தந்து தப்பித்தாயிற்றா ? வாசகர்கள் படித்துத் தேர்ந்தெடுத்துக் கொள்ள விட்டு விட்டீர்கள். நன்று நன்று.
நல்வாழ்த்துகள் பெசொவி
நட்புடன் சீனா
வாழ்த்துக்கள் நண்பா....
ReplyDeleteவாழ்த்துகள்.
ReplyDeleteவாழ்த்துகள் பெயர் சொல்ல விருப்பமில்லை...
ReplyDeleteநண்பரே...
ReplyDeleteஉங்களை நான் கழுகின் வழியாக அறிந்தேன்.
நீங்கள் திருப்பத்தூரா... நான் தேவகோட்டை.
நானும் தற்போது அபுதாபியில் இருக்கிறேன். அழகப்பா பல்கலையில் எழுதிய கதை அருமையாகவும் எதார்த்தமாகவும் உள்ளது.
நட்பு தொடரும் நண்பரே...
நட்புடன்,
சே.குமார்
வாழ்த்துகள்
ReplyDelete