நம்பிக்கை நாற்றுகள்
➦➠ by:
ஈரோடு கதிர்
வெட்டிய மரம் கசிய விடும் கடும் வாசம், இந்த பூமிக்கான சாபக்கேடு என்பதில் துளியும் சந்தேகம் இல்லை. தன் வாழ்நாளில் எந்தவொரு கெடுதலையும் பூமிக்குத் தராமல், மனித சமூகம் சுவாசிக்கும் மூச்சுக்காற்றை உண்டு மீண்டும் சுவாசிக்க சுத்தமான காற்றைத் தரும் மரத்தின் மேல் நாம் காட்டும் துவேசம் படுபயங்கரமான ஒன்று…
மனதைத் தொட்டுச் சொல்வோம், நம்மில் எத்தனைபேர் இதுவரை விதை போட்டோ, செடியை நட்டோ ஒரு மரத்தை வளர்த்தெடுத்திருப்போம்
மண் – மரம் – மழை…….. இது இருந்தால்தான் மனிதன் என்பதை மறந்து வரும் நேரத்தில் இதற்காக
மண் மரம் மழை மனிதன்
எனும் அற்புதமான வலைப்பூவை நடத்தி வரும் மரியாதைக்குரிய மனிதர் திரு. வின்சென்ட் போற்றுதலுக்குரியவர்.
இவர் வலைப்பூவை அறிந்த நாள் முதல் வாசித்து வருகிறேன். 55 வருடங்களாய் மனிதனுக்கு விஷத்தை உண்டு அமுதத்தை தந்த அகலப் படர்ந்த அரச மரத்தை வெட்ட வந்த மனிதர்களுக்கு எதிராக மனிதர்கள் போர் தொடுக்க மறந்த நேரத்தில் ஒரு மாணவன் போர் தொடுத்தை, வெளிப்படுத்திய இடுகை எனக்கு மிகவும் பிடித்த ஒன்று. ”என்ன நடந்தா எனக்கென்ன” என்று ஒதுங்கிச் செல்லும் மனிதர்களுக்கு மத்தியில் நேயத்தோடு மரத்தைக் காப்பாற்றிய மாணவன் குறித்த இடுகை...
மாணவர்களின் விண்ணப்பமும், வெட்டுக்கு தப்பிய 55 வருட மரமும்
*************
நியாயமாக செய்ய வேண்டிய ஒரு அடிப்படை வேலைக்கு ஒரு கூலித் தொழிலாளியிடம், விவசாயிடம், அனாதை ஊதியம், மூப்பு ஊதியம் வாங்கும் சாமானியர்களிடம், ஏழைகளிடம் அரித்து பிடுங்கும் கையூட்டுப் பணம் மலம் தின்பதற்கு ஒப்பானது.
நியாயமான காரியங்களைக்கூட செய்வதற்கு கையூட்டு கொடுக்கும் நிலை வரும் போதும் மிக எளிதாக சகித்துக்கொண்டு போகிறோம். காரணம் இதற்கு தீர்வே இல்லை என்ற எதிர்மறை எண்ணம் மட்டுமே. ஆனால், தமிழகத்தின் ஏதாவது ஒரு மூலையில் கையூட்டு பெற்றதற்காக தினந்தோறும் ஒரு அதிகாரியாவது கைது செய்யப்படுகிறார். இந்தக் கைதுகளுக்கு அடிப்படையானது புகார்களே. அப்படிப்பட்ட கைதுகளைக் குறித்த செய்திகளைத் தேடித்தேடி தன்
வச்சுட்டான்யா ஆப்பு
வலைப்பூவில் வெளியிடுகிறார் திரு. ராம்.
இந்தக் கைதுகள் அரசாங்கம் குறித்து நழுவி வரும் நம்பிக்கைகளைச் சற்றே தாங்கிப் பிடிப்பதாகவே இருக்கின்றன. வாசித்துப் பாருங்கள், நீங்கள் கையூட்டு கொடுக்க வேண்டிய நிலைக்கு ஆட்படும் போது, அதற்கு எதிராக போராடும் எண்ணம் வந்தால் இந்த தளத்தில் உள்ள தகவல்கள் கை கொடுக்கும்
*************
தன் குறையைச் சொல்ல வரும் ஒரு விவசாயியை காக்க வைக்கக்கூடாது என்ற எண்ணத்தில், நேர்மையை தன் அடையாளமாகக் கொண்டு ஆட்சி செய்யும் நாமக்கல் மாவட்ட ஆட்சியர் திரு.சகாயம், தன் மாவட்டத்தில் வசிப்பவர்களுக்கான குறைகள் குறித்த மனுக்களை அளிக்க இணையத்தை மிக நேர்த்தியாக பயன்படுத்தி வருகிறார்.
தேர்ந்தெடுக்கப்பட்ட கிராமங்களில் கனிணிகளை நிறுவி, அதைப் பயன்படுத்த பயிற்சியளிக்கப்பட்டுள்ளது. புகார்களை கனிணி மூலம் நேரிடையாக ஆட்சியருக்கு அனுப்பலாம். பெற்ற புகார்கள் குறித்த விபரங்களை வெளியிட்டு, அதற்கான தீர்வை எட்டிய விபரங்கள் அனைத்தையும்
தொடுவானம்
வலைப்பூவில் பதிந்து வைத்திருக்கின்றனர்
இது வரை தொடுவானம் திட்டம் மூலம் 1630 புகார்கள் பெறப்பட்டு அதில் 1454 புகார்கள் தீர்வு காணப்பட்டுள்ளது போற்றுதலுக்குரியது.
வலைப்பூ மூலம் குறைகளை / மனுக்களை தெரிவிக்கலாம் என்பதை நாமக்கல் மாவட்ட மக்களுக்கு எடுத்துச் சொல்வதும், இது போல் எல்லாத் துறைகளிலும் பயன்படுத்தலாம் என்பதை அதிகாரிகளுக்கு உணர்த்துவதும் நம் கடமை
*************************
|
|
நல்ல அறிமுகங்கள். நன்றி கதிர்.
ReplyDeleteதொடுவானம் பற்றி அறிந்ததில் மகிழ்ச்சி.
ReplyDeleteநன்றிகளுடன் கலாநேசன்
முதலாமவரை இதுவரை படித்ததில்லை. பயனுள்ள இடுகைகளை எழுதியிருக்கிறார் இப்போதுதான் பார்த்தேன்...
ReplyDeleteமற்றவர்களும் நல்ல அறிமுகங்கள்.
அன்பின் கதிர்
ReplyDeleteநல்ல அறிமுகங்கள் - மண் மரம் மழை மனிதன் உண்மையிலேயே நல்ல சிந்தனையில் - இயற்கையினைப் பாதுகாக்க துவக்கப்பட்ட பதிவு. இலஞ்சம் ஒழிக்கப் பட வேண்டிய ஒன்று. நாமக்கல் ஆட்சியர் பாராட்டுக்குரியவர்.
நல்வாழ்த்துகள் கதிர்
நட்புடன் சீனா
Great Kathir.
ReplyDeleteநல்ல அறிமுகங்கள்
ReplyDeleteநல்ல அறிமுகங்களுக்கு நன்றி கதிர் அண்ணா.
ReplyDeleteGood introductions!!!
ReplyDeleteநல்ல அறிமுகங்கள்
ReplyDeleteஅருமையான அறிமுகங்கள்.
ReplyDeleteபயனுள்ள இடுகைகள். வாழ்த்துக்கள்
ReplyDeleteபுதிய அறிமுகங்கள் எனக்கு ...
ReplyDeleteநல்ல அறிமுகங்கள். நன்றி கதிர்.
ReplyDeleteபயனுள்ள பதிவர்கள் கதிர்.நன்றி.
ReplyDeleteநல்ல பதிவுகளை அறிமுகப்படுத்துவதற்கு நன்றி.
ReplyDeleteவின்சென்ட் அவர்களின் வலைப்பக்கத்தை பார்த்தேன். அறிமுகத்திற்க்கு நன்றி கதிர்...
ReplyDeleteவாழ்த்துக்கள்
ReplyDeleteவிஜய்
மிக அருமையான அறிமுகங்கள்
ReplyDeleteகதிர்,
ReplyDeleteதரமான அறிமுகங்கள். நன்றி.
ஸ்ரீ....
அனைத்தும் புதிய அறிமுகங்கள்
ReplyDeleteமண் – மரம் – மழை…….. இது இருந்தால்தான் மனிதன் என்பதை மறந்து வரும் நேரத்தில் இதற்காக
ReplyDeleteமண் மரம் மழை மனிதன்
எனும் அற்புதமான வலைப்பூவை நடத்தி வரும் மரியாதைக்குரிய மனிதர் திரு. வின்சென்ட் போற்றுதலுக்குரியவர்.
அறிமுகப்படுத்தியமைக்கு நன்றி
ஒவ்வொரு அறிமுகமும் பயனுள்ள தகவல்களை எமக்கு தந்திருக்கிறது.
ReplyDeleteபயனுள்ள பகிர்வு.
வாழ்த்துக்கள் கதிர்.
பாராட்டுகள, கருத்துகள், வாழ்த்துகளைப் பகிர்ந்த அனைத்து உள்ளங்களுக்கும் மிக்க நன்றி
ReplyDeleteநல்ல அறிமுகங்கள்
ReplyDeleteநன்றி கதிர். இப்போதுதான் அறிந்தேன். அறிமுகப்படுத்தியற்கு நன்றி.
ReplyDeleteநன்றி கதிர். இப்போதுதான் அறிந்தேன். அறிமுகப்படுத்தியற்கு நன்றி.
ReplyDelete