சாப்பிடலாம் வாங்க
➦➠ by:
சே.குமார்
வலைச்சரத்தில் இது ஆறாவது நாள் நண்பர்களே... ஐந்து நாட்கள் உங்களுடன் பகிர்ந்து கொண்ட சந்தோஷத்துடன் இன்று எல்லாரும் சாப்பிடப் போகலாம் வாங்க என்று அழைக்கிறேன். வித்தியாசமான உணவு முறைகளை தங்களது தளத்தில் எழுதிவரும் நண்பர்கள் குறித்து இங்கு பகிர்ந்து கொள்வோம்.
சாப்பாடு...
எல்லோருக்கும் பிடித்த ஒன்று... யாரும் சாப்பாட்டை வெறுப்பதில்லை. தங்களது உடல் நலம் கருதி சாப்பாட்டில் கட்டுப்பாட்டை கடைபிடித்தாலும் மிகவும் பிடித்த பதார்த்தத்தை பார்த்ததும் நாவில் எச்சில் ஊறுவது என்பது இயற்கையே. அப்படிப்பட்ட சாப்பாட்டுக்கு பெயர் போனது எங்கள் செட்டிநாட்டுப் பகுதி, சாப்பாட்டுக்கு என்று அதிகம் செலவு செய்பவர்கள் நாங்கள். விருந்து விஷேசம் என்றால் தடபுடலான விருந்து சமைத்து வாழையிலையில் சாப்பாடு போட்டு உவசரிக்கும் அழகே தனிதான்.
சாப்பாடு குறித்த பகிர்வில் நாமும் அதனுடன் தொடர்பு உடையவர் குறித்து சில தகவல்களை பார்க்கலாம் என்றால் யாரைப்பற்றியும் என்னிடன் விரிவான தகவல்கள் இல்லை எனவே சிலரை வரிசைப்படுத்துகிறேன்.
உறவில்...
என் அம்மா
என் மனைவி
என் மனைவி
என் அத்தை
என் சமையல்கார மாமா
என் சமையல்கார மாமா
வலை உறவில்... (எல்லாரையும் பகிர்ந்து கொள்ள முடியாது, விடுபட்டவர்கள் மனதில் இருக்கிறீர்கள்)
மனோ சாமிநாதன் அம்மா
சகோதரி மேனகா இன்னும் பலர்.
இனி...
"அடியேய் இதுவரை ஆஸ்டல்ல தங்கி படிச்சே சரி... இப்ப படிப்பு முடிஞ்சாச்சு. உனக்கு கல்யாணம் பண்ணிப்போனா புருஷனுக்கு சமைச்சுப் போட வேணாமா... சும்மா டிவி முன்னால தூங்கி விழுகாம அம்மாகிட்ட கூடமாட நின்னு சமையல் கத்துக்கலாமே..?"
"போ பாட்டி சமையல் எதுக்கு கத்துக்கணும். கல்யாணம் ஆகி தனிக்குடித்தனம் போறப்ப சமையலுக்கு ஆள் வைப்போம். இல்ல பாக்குற மாப்பிள்ளைய சமைக்கத் தெரிந்தவரா பாத்து கட்டுங்க..."
"அடியேய்... எத்தனை சமையக்காரன் வைத்தாலும் பொண்டாட்டி கையால வரக்காப்பி வாங்கிக் குடிச்சா கிடைக்கிற சந்தோஷம் சமையல்காரி கொடுக்கிற எதுலயும் கிடைக்காது"
"பாட்டி விஜய் பாட்டு... சும்மா கத்தாத..."
"ஆமாண்டி நாளைக்கு அவன் தான் உன்னை கட்டிக்கப் போறான். இங்கவாடி..."
"போம்மா... பாட்டி மாதிரி நீயும் பாடம் நடத்தாதே"
"இங்க வாடின்னா... நம்ம கமலம் மக ரம்யா வீட்லதான் இருக்கா. நீ எனக்கிட்ட கத்துக்க வேண்டாம். அவ எதோ சமையல் படிப்பு படிச்சிருக்கா. அவகிட்ட தினமும் கொஞ்ச நேரம் போய் கத்துக்கோயேன்."
"என்னம்மா... சரி போறேன்... ஆனா வீட்ல சமச்சுக் காமின்னு சொல்லிடாதே"
மறுநாள்...
"வா கவி... அத்தை சொன்னாங்க... சமையல் கத்துக் கொடுக்கிற அளவுக்கு நான் ஒண்ணும் பெரிய ஆளு இல்ல அதுவும் இல்லாம நான் படிச்சது பைவ் ஸ்டார் ஹோட்டல்லதான் யூசாகும். நம்ம சமையல்ல நானும் தத்துப்பித்துதான். இப்ப நெட்ல நிறையப் பேரு சமையல் குறித்த பகிர்வுக்காக வலைப்பூக்கள் வச்சிருக்காங்க. அதுல பார்த்துத்தான் கத்துக்கிறேன். வா உனக்கும் சில் பிளாக்ஸ் (வலைப்பூக்கள்) முகவரி தாரேன்."
இருவரும் கணிப்பொறி முன் அமர, 'நாம படம் பார்க்கவும் சாட்டிங் பண்ணவும் மட்டுமே பயன்படுத்துற கம்ப்யூட்டரை இவ பயனுள்ள வகையில பயன்படுத்துறாளே' என்று மனதிற்குள் நினைத்துக் கொண்டாள் கவிதா.
"இது தூயாவின்ட சமையல் கட்டு, இதுல போய் மீன் பொரியல் கத்துக்கிட்டேன். சாம்பார் வைக்க எங்க கத்துக்கிட்டேன் தெரியுமா யோகேஸோட சமையல்..சமையல்.. வலைப்பூவுலதான்."
"ம்"
"கல்யாணகமலாங்கிறவங்க தாளிக்கும் ஓசைன்னு சொல்லி பொடி வகைகள் செய்யிறது குறித்து சொல்லியிருக்காங்க.
"அது சரி... இதப் பாத்து சமையல் செய்தா சரியா வருமா..?"
"ஏன் சரியா வராது... இந்தா இந்த பணியாரத்தை சாப்பிடு... சொல்றேன்"
"ம்.. சூப்பரா இருக்குடி... அத்தை செஞ்சாங்களா?"
"நாந்தான் செஞ்சேன்..."
"நீயா?"
"ஆமா... Home of Indian Cuisine Recipes அனுராதா முரளிதரன் எழுதியிருந்த குறிப்பப் பார்த்து செஞ்சேன். எங்கம்மா செஞ்சா சட்டியில ஒட்டிக்கிட்டு பிச்சுதான் எடுக்கணும். இதை பார்த்து அம்மாவுக்கே ஆச்சர்யம். நிறைய சாப்பிட்டாங்க."
"அப்புறம் பூண்டுக்குழம்புக்கு தமிழ் சமையல் வலைப்பூ திரட்டிக்கு போனேன். கோழிப்பையன் சமையல் குறிப்பு பார்த்து கொத்தமல்லி சேமியா கூட பண்ணியிருக்கேன் தெரியுமா?
"அது என்னடி கொத்தமல்லி சேமியா... புதுசா இருக்கு..."
"ஆமா... புதுசு புதுசா திங்க் பண்றதுன்னா இவருக்கு ரொம்ப பிடிக்கும்."
"ஏண்டி சிக்கன், மட்டன்..."
"அதானே... சிக்கன் பிரியையில்ல நீ... அதுக்கும் ஒரு வலைப்பூ இருக்கு... ராகினியோட சமையல் குறிப்புகள் வலைக்குப் போ அழகாச் சொல்லித்தாராங்க."
"கவி... ஒரு கிராமமே சமையல் குறிப்புக்காக வலை ஆரம்பிச்சிருக்குன்னா பாரேன்."
"கிராமமா... என்னடி சொல்றே?"
"ஆமா.. காசாங்காடு கிராம சமையல்ன்னு வலைக்குப் பேருடி..."
"இணையத்துல இவ்வளவு இருக்கா... எனக்கு சாட்டிங் மட்டுந்தான் தெரியும்"
"சரி இனி கத்துக்க... அப்புறம் கீதா தெய்வசிகாமணிங்கிற அம்மா சமையல் குறித்து புத்தகமே போட்டிருக்காங்க. அது குறித்து அவங்க ILAKKIYA POONGAங்கிற இந்த தளத்துல பகிர்ந்து இருக்காங்க.
"சரிடி நான் போறேன்... எனக்கு கொஞ்சம் வேலையிருக்கு..."
"என்ன வேலை..."
"அது வந்து... தூங்கணும்... இங்க வந்தப்புறம் தினமும் கரெக்டா பதினொன்றை மணிக்கு படுத்து ரெண்டு மணிக்கு எந்தரிச்சு சாப்பிடுவேன்... அது பழக்கமாயிடுச்சு. நாளைக்கு பாக்கலாம்."
"இரு நான் காலிப்பிளவர் சூப் ரெடி பண்ணித்தாரேன். சாப்பிட்டுப் போய் தூங்கு.."
"காலிபிளவர் சூப் கூட வைப்பியா..."
"ஆமா... நேத்து அம்மாவின் சமையல் பாத்தேன். அதான் இன்னைக்கு செய்ய ரெடி பண்ணியிருக்கேன்."
"அத்தைக்கிட்ட கத்துக்கிட்டியா..."
"இல்லடி... இதுவும் வலைப்பூதான்.."
சமையல் அறைக்குள் நுழைந்த ரம்யா 'என் சமையல் அறையில்' என்று பாட,
"அடியேய் பாடுறேன்னு சூப்பை கெடுத்துடாதே" என்றபடி உள்ளே வந்தாள் கவிதா, "பாட்டில்லைடி இந்த சைட்ல கீதா, பீட்ரூட் ஜாமுன் அல்வா செய்ய சொல்லியிருந்தாங்க... ப்ரிட்ஜ்ல பீட் ரூட்டை பார்த்ததும் அவங்க வலை ஞாபகம் வந்துச்சு."
"இந்தா சூப்... அப்புறம் சிவாஜினி பாலராஜனின் சமையல் பொழுதுங்கிற வலைப்பூ பாரு... அப்பா... சமையல் வலைப்பூக்களின் தொகுப்பே இவர்கிட்ட இருக்கு. இது ஒண்ணு போதும் அழகா சமையல் கத்துக்கலாம்."
"சூப் சூப்பர்டி... நீ சமையல்ல கில்லிடி... நான் வர்றேன்"
வீட்டுக்குள் நுழைந்தவளிம் "என்னடி சமையல் கத்துக்கிட்டியா... இல்ல அவளையும் கெடுத்துட்டியா..." அம்மா கேட்க-
"ஒரே வாரத்துல நான் உனக்கு சமைச்சுக் காட்டுறேன். நானே கத்துக்குவேன்." என்றபடி மடிக் கணியை உயிர்பித்து வயர்லெஸ் நெட் கிடைக்குதான்னு தேட ஆரம்பித்தாள்.
சரி நண்பர்களே... சமையல் குறித்த தளங்களுக்குப் போய் பார்த்து பின்னூட்டம் இடுங்கள். நாளை விடைபெறும் நாள். வானவில் கோலங்களோடு வருகிறேன்.
ஆதங்கம்: மற்ற பதிவுகளுக்கு வந்தது போல் இல்லாமல் எனது விளைச்சல்கள் பதிவுக்கு வறண்ட வயல்களாய்தான் பின்னூட்டங்கள். விவசாயத்தை மறந்த நாம் அது குறித்த பதிவுகளுக்கும் ஊக்கம் அளிக்க ஏனோ மறுக்கிறோம். அதனால்தான் விவசாய வலைப்பூக்கள் விளைச்சலை தரவில்லை போலும். கருத்தளித்த நண்பர்கள் அனைவருக்கும் வாழ்த்துக்கள்.
ஆதங்கம்: மற்ற பதிவுகளுக்கு வந்தது போல் இல்லாமல் எனது விளைச்சல்கள் பதிவுக்கு வறண்ட வயல்களாய்தான் பின்னூட்டங்கள். விவசாயத்தை மறந்த நாம் அது குறித்த பதிவுகளுக்கும் ஊக்கம் அளிக்க ஏனோ மறுக்கிறோம். அதனால்தான் விவசாய வலைப்பூக்கள் விளைச்சலை தரவில்லை போலும். கருத்தளித்த நண்பர்கள் அனைவருக்கும் வாழ்த்துக்கள்.
நட்புடன்
சே.குமார்
|
|
இந்தப் பதிவு எனக்கு இல்லை. வேற டிபார்ட்மெண்ட் :). அவர்களுக்கு அனுப்பி விடுகிறேன்.
ReplyDeleteநிறைய பேர் படித்துவிட்டு, சிலர் பின்னூட்டமிட்டிருக்கலாம் விளைச்சல் பற்றிய பதிவுகளில்.
அருமை.என்னையும் குறிப்பிட்டமைக்கு மகிழ்ச்சி.அம்மாடி இத்தனை சமையல் வலைப்பூக்களா?இன்னும் நான் போய் பார்க்க வேண்டியது எவ்வளவு இருக்கு?கத்துக்க வேண்டியதும் இருக்கு.
ReplyDeleteசமையல் ... சமையல் ...நல்லாருக்கு ..
ReplyDeleteஇண்ணைக்கு ஏதோ ஒண்ணு உறைப்பா நீங்கள் தந்த யாரோ ஒருவரினது குறிப்பிலிருந்து.
ReplyDeleteநன்றி குமார்.
குமார்,
ReplyDeleteஇந்த பதிவுக்கு கல்லா கட்டும்னு நெனைக்குறேன்.
விவசாயத்த மறந்த நாம, சாப்பாட்ட இன்னும் மறக்கல் பாருங்க. அந்த நம்பிக்கையில தான் சொல்றேன்.
நல்ல சமையல் தளங்கள் பற்றிய அறிமுகம்
ReplyDeleteசமையல் நல்லாருக்கு....
ReplyDeleteகுமார் பின்னோட்டத்தை வைத்து உணர்ந்தவர்களை எடை போட முடியாது. பலர் சிலவற்றை சேமித்து இருப்பதை பார்த்து வியந்து போயுள்ளேன். சந்தித்த போது ஏன் ஒரு தடவை கூட விமர்சனம் தரவில்லை என்றதுக்கு சில விசயங்களை விமர்சனத்திற்கு அப்பாற்பட்டது என்கிறார்கள்.
ReplyDeleteஓட்டு பின்னோட்டம் ஹிட் போன்றவற்றை கண்டு கொள்ள ஆரம்பித்தால் மனம் கலங்கி விடும். கருத்தில் கவனம் செல்லாது.
உங்கள் வலைச்சர ஆசிரியர் பணி எனக்கு தனிப்பட்ட முறையில் ஆச்சரியப்படுத்திய விசயம்.
அடேயப்பா... இவ்வளவு பேர் சமையல் பத்தி எழுதறாங்களா?
ReplyDeleteஅட!இவ்வ்ளோ சமையல் வலைப்பூக்களோ!
ReplyDeleteGreat sites. Thank you.
ReplyDeletegood . thanks for sharing.
ReplyDeleteவாங்க பின்னோக்கி...
ReplyDeleteவாங்க சகோதரி ஆயிஷா...
வாங்க செந்தில்...
வாங்க ஹேமா...
வாங்க சத்ரியன்...
வாங்க சக்தி...
வாங்க கலாநேசன்...
வாங்க ஜோதிஜி...
வாங்க மகேஷ்...
வாங்க அருணா...
வாங்க சித்ரா...
வாங்க மதுரை சரவணன்...
உங்கள் அனைவருக்கும் நன்றி.
அன்புச் சகோதரர் குமார்!
ReplyDeleteஎன்னைக் குறிப்பிட்டு எழுதியிருந்ததற்கு என் இதயங்கனிந்த நன்றி!!
தங்களின் வலைச்சர ஆய்வுகள் இதுவரை மிகவும் சுவாரஸ்யமாகவும் அருமையாகவும் இருந்தன!!
அன்புச் சகோதரர் குமார்!
என்னைக் குறிப்பிட்டு எழுதியிருந்ததற்கு என் இதயங்கனிந்த நன்றி!!
தங்களின் வலைச்சர ஆய்வுகள் இதுவரை மிகவும் சுவாரஸ்யமாகவும் அருமையாகவும் இருந்தன!!
சமையல் தளங்களின் தொகுப்புக்கு மறுபடியும் நன்றி!!
சாப்பாட்டுடன் கூடிய அறிமுக விருந்து அருமை
ReplyDeleteஎன்னையும் அறிமுகபடுத்தியதற்க்கு மிக்க நன்றி சகோ!!நிறைய சமையல் தளங்கள் அறிமுகபடுத்தியதற்கு பாராட்டுக்கள்!!
ReplyDeleteGood collection. Thanks for sharing
ReplyDeleteஅம்மாவின் சமையலை குறிப்பிட்டு எழுதியிருந்ததற்கு என் இதயங்கனிந்த நன்றி!!
ReplyDeleteஅடடா.. சமையல் பகிர்வுகள் எல்லாம் ருசி தான்.. :-))
ReplyDelete(மீதி 5 நாட்களின் பதிவும் படிக்க போறேன்.. வேலை அதிகம்...உடனே வர முடியலை)
வாழ்த்துக்கள்.. குமார். :-)