நாந்தாங்கோ |
நம் அனைவருக்கும் இறைவனின் சாந்தியும் அருளும் அளவில்லாமல் கிடைக்கட்டும்
அன்பு நெஞ்சங்களுக்கு என் மனமார்ந்த வாழ்த்துக்களோடும் இந்த மங்களகரமான மஞ்சள் மலர்களோடும் உங்களைக் காணவந்துள்ளேன். வலையில் சிக்கிட்டோம் இனி எப்படி வலைபின்னுறோமுன்னு பாருங்க அதுக்கு நீங்கதான் நூலெடுத்துக் கொடுக்கோனும் மறந்துறாதீங்கோ.
வலைசரத்தில் என்னையும் ஆசிரியர் பணிக்கு அழைத்த சீனாசார் அவர்களுக்கு நன்றி சொல்லிக்கொள்வதோடு. என் தளங்களுக்கு வந்து கருதுக்களையும் அன்பையும் அள்ளிதந்து என்னை இந்தப்பணிவரை கொண்டுவந்து நிறுத்தியிருக்கும் அனைத்து நல்நெஞ்சங்களுக்கும் நன்றிகளை தெரிவித்துகொள்கிறேன்.
பலமுறை பலரால் வலைச்சரத்தில் அறிமுகபடுத்தப்பட்ட நான் இன்று பலரை அறிமுகம் செய்வப்போவதில் மனம் மகிழ்கிறேன்.எனக்கு அறிந்தவர்கள் எனக்கும் அறியாத புதுமுகங்கள் என என் புத்திக்கும் அறிவுக்கும் எட்டியவரையில். பிறருக்கும் உபயோகமாக இருக்கும் தளங்களாக அறிமுகப்படுத்தபோகிறேன் என நம்புகிறேன் அதில் குறை நிறையிருப்பின் சுட்டிக்காட்டுங்கள்.
அதற்கு முன் என்னைபற்றியும் சிறுகுறிப்பு சொல்லவேண்டுமாம். அடடா இவுக என்ன சொல்லபோறாகன்னு நீங்க நினைப்பது தெரிகிறது பெரிசா ஒன்னுமில்லைங்கோ தமிழ்மீது காதல் அதை கவிதையாக்க இன்றுவரை விடாது முயற்ச்சி செய்கிறேன் [விடாது கருப்புபோல்] நீரோடை என்ற வலை ஆரம்பிக்க தமிழ்குடும்பம் என்ற தளம்தான் என் அடிதளமாக இருந்தது.தமிழ்குடும்பத்தில் என்னுடைய பல கவிதைகள். கலைகள். அரங்கேற்ற முழு பொறுப்புதந்த சகோதரர் அவர்களுக்கு இத்தருணதில் நன்றிகள் பல சொல்லிக்கொள்கிறேன்.
அதற்கு முன் என்னைபற்றியும் சிறுகுறிப்பு சொல்லவேண்டுமாம். அடடா இவுக என்ன சொல்லபோறாகன்னு நீங்க நினைப்பது தெரிகிறது பெரிசா ஒன்னுமில்லைங்கோ தமிழ்மீது காதல் அதை கவிதையாக்க இன்றுவரை விடாது முயற்ச்சி செய்கிறேன் [விடாது கருப்புபோல்] நீரோடை என்ற வலை ஆரம்பிக்க தமிழ்குடும்பம் என்ற தளம்தான் என் அடிதளமாக இருந்தது.தமிழ்குடும்பத்தில் என்னுடைய பல கவிதைகள். கலைகள். அரங்கேற்ற முழு பொறுப்புதந்த சகோதரர் அவர்களுக்கு இத்தருணதில் நன்றிகள் பல சொல்லிக்கொள்கிறேன்.
அப்படியே இந்த 1.1/2 வருடத்தில் நீரோடை யை கவிக்காக ஓடவிட்டு. அடுத்து நம்ம கலைகளை [ஏதோ பெரிய அளவில் கற்றதுபோல் பீற்றிக்கொள்வது இதெல்லாம் கொஞ்சம் ஓவர்தான் என்ன செய்யவேற வழி சொல்லிதானே ஆகனும் இதுவும் ஒரு விளம்பரம்தானுங்கோ ] நாளுபேருக்கு தெரிவிக்கலாமேன்னு கலைச்சாரல் அப்படின்னு ஒரு வலைபின்னி அதில் நமக்கு தெரிந்ததை பின்னிக்கிட்டு இருக்கும்போது. இப்படியே போறோமே நம்ம ஆன்மாவின் தேடலுக்காக ஒருதேடுதல் வேட்டையாக இனிய பாதையில் அப்படின்னு ஒரு வலைபோட்டு தேடுகிறேன்னுங்க. இந்த மூன்றிலேயும் 450 ,இடுகைக்கும் மேலோ கீழோ போட்டுவிட்டேன்னு நினைக்கிறேன்னுங்க அவ்வளவுதாங்க நம்ம ஹிஸ்ட்ரி.
ஆங் சொல்ல மறந்துட்டேனே.கொஞ்சமிருங்கோ ஓடிடாம இன்னுமும் கொஞ்சம் சொல்லனுமுல்ல நம்ம கிறிக்கினதுலயும் கொஞ்சூண்டு சொல்லிகிறேனே.
நம்ம எழுத்துக்கு கிடைத்த அங்கீகாரமாய் கிடைத்த மறக்க முடியாத முதல் விருது அப்புறம் ஆசை யாரைவிட்டது கவிதை எழுதுவதோடு சும்மாசிக்கும் ஒரு சிறுகதை எழுதுவோமேன்னு சின்ன குட்டிக்கதையும் கிறுக்கியிருக்கோமுல்ல. அப்புறம் பொறந்த ஊருக்கு பெருமைதேடித் தரவேண்டாமா ஏதோ நம்மாள முடிஞ்சது .வலையுலகில் நமக்கு கிடைத்த சந்தோஷங்கள் பெரிய கருத்து கருப்பாயி இவருக்கு சந்தேகமெல்லாம் வந்து கேட்ட கேள்வியிருக்கே ஸ்ஸ் அப்பப்பா அப்படியே .
சில குழப்பங்களை தெளிவுபடுத்தலாமுன்னு. சரி படிச்சி களைச்சிருப்பீங்க. அப்படி இந்த வாடா செய்வது எப்படின்னு பார்க்க என்ன மரியாதை குறையுதுன்னெல்லாம் நினைக்கக்கூடாது. அதாவது பஜ்ஜி வடைபோல் இதுவும் ஒன்னு. அப்படியே அரபிசாப்பாட்டும் . சாப்பிட்டாச்சா. அப்படியே என் கைவண்ணம்மும் கொஞ்சம் பாருங்கோ அப்படியே இதுவும் இதுவும்தாங்கோ அப்படி என்னதானிருக்கு .இது என் அன்பு செல்லத்தின் அழகிய கைவண்ணங்கள் சரி சரி அப்படியே
ஊர்சுற்ற வாங்க அச்சோ நாங்க சுற்றிபார்த்தத பார்க்க வாங்கோன்னேன் . பார்த்தாச்சா. அப்புறம் நம்ம ஆன்மாவுக்கான சிலதேடல்கள்.என்னத்த சொன்னாலும் ஒன்னும் ஆவதுன்னு தெரிந்தும். . இதுநமக்கு மிக முக்கியமுன்னு நெனச்சி எழுதியது.
அப்படி இப்படின்னு நம்ம பக்கத்தில் அதாவது மூன்று வலையிலும் பின்னியிருப்பதில் கொஞ்சம் சொல்லிட்டேனுங்க முதல் வருகையே அறுவையான்னு நினைக்ககூடாது ஓகே.இனி எல்லாம் கரகீட்டா செய்வோமுல்ல . அதுக்குமுன்னாலா உங்க ஆதரவென்னும் அன்பை தந்துவிட்டுபோங்க அப்பதானே தெம்பா அடுத்தவாளபத்தி கூட்டிக்கொறச்சி எழுதமுடியும். மத்தவாளபத்தி பத்தி பத்தியா எழுதுறதுன்னா கேக்கவா வேணும்.
சரி எல்லாத்தையும் படிச்சீங்களா இப்ப எல்லாம் சேர்ந்த இந்த தளத்தை பார்த்துட்டுபோங்க நன்றி மறப்பது நன்றன்றுஅதான் ..அப்புறம் நாளைக்கு அடுத்தவாளையும் அவாளோட டீட்டியலையும் பாக்கலாம் கொஞ்ச கொஞ்சமா 1 வாரத்துக்கு அலசனுமில்ல ஓகே.
நீரில்தான் வலை சிக்கும். இங்கே
நீரே வலையில் சிக்கிகிச்சே..
அப்ப நான் வரட்டா..டாட்டா..
நீரில்தான் வலை சிக்கும். இங்கே
நீரே வலையில் சிக்கிகிச்சே..
அப்ப நான் வரட்டா..டாட்டா..
என்றும் உங்கள்
அன்புடன் மலிக்கா