07 - 09 - 2015 முதல் ஆசிரியர் பொறுப்பேற்பவர்

ரிஷபன்
இவரின் வலைப்பூ

ரிஷபன்

முந்தைய ஆசிரியர்கள்


சீனா ... (Cheena) - அசைபோடுவது

சிந்தாநதி

நன்றி!

திரட்டிகளின் தொகுப்பு

:: தமிழ் திரட்டுகளின் சங்கமம்<br/>:: Tamil blogs, news, ezines

வலைப்பதிவர் உதவிப்பக்கம்

தமிழில் எழுத மென்பொருள்

fb like

ஞானாலயா = புதுக்கோட்டை

www.gnanalaya-tamil.com
வலைச்சரத்தில் வெளியிடப்படும் இடுகைகள் வலைச்சரக் குழுவினரால் தணிக்கைக்கு உட்படாது. ஆனால், வலைச்சர விதிக்கு உட்படாத இடுகைகளை முன்னறிவிப்பின்றி நீக்க வலைச்சரக் குழுவினருக்கு உரிமை உள்ளது

Wednesday, April 20, 2011

அழகான வலைப்பூக்கள்/Beautiful blogs

நாம் உருவாக்கும் நம் வலைப்பூக்கள் நமக்கு ஒரு கற்பனை வீடு:)) மாதிரி தான்...அந்த வீட்டை கலர்புல் ஆ வச்சிருந்தால் அதுவும் ஒரு அழகு தான்...என் பார்வையில் என் கண்ணில் பட்ட சில அழகு வலைப்பூக்களை இங்கே பதிவுடுகிறேன்...நல்லா கவனிங்க..சில வலைப்பூக்கள் மட்டுமே...

வலைப்பூக்களுக்கு உருவாக்கும் லே அவுட் ..ஹெட்டர்ஸ் இல் இருந்து டெம்ப்ளேட்,font ..,theme,பொருத்தமான கலர்ஸ் ன்னு பார்த்து பார்த்து தேர்ந்தெடுத்து ப்லாக்கை கார்ஜியஸ் ஆ காமிக்கிறது ரசனை சார்ந்த விஷயம்....


அப்படி சில அழகு பூக்கள்..

1. பிரஷா...இந்த அம்மிணி எழுதும் கவிதை மாதிரியே இவங்க ப்லாக் கும் செம கலர்புல்...கருப்பு பின்னணியில்....ஆனால் உறுத்தவே உறுத்தாத டக்கரு ப்லாக்...லே அவுட் செம..

2.தெய்வ சுகந்தியின் ப்லாக்...செம நீட் அண்ட் பியுட்டிபுல்...எனக்கு ரொம்ப பிடிச்சது அவங்க போடும் போஸ்ட்டின் தலைப்புக்கு கீழே வரும் அழகு டிசைன் செம...

3.அமைதிசாரலில் அந்த ஹெட்டெர் (header poster)சூப்பர் ஓ சூப்பர்...


4.எல்.கே ப்லாக் இது...செம வசீகரம் ..

5. ஜலீலா அக்காவின் சமையல் போலவே அவங்க ப்லாக்கின் தோற்றமும் சூப்பர்..அதுவும் ஹெட்டெர் மற்றும் பேக் ரவுண்டு தீம் நல்லா செட் ஆகி இருந்தது...

6.வசந்த் ப்லாக்கின் header செம அசத்தல்..


7..சினேகிதி அவர்களின் வலைப்பூ...யப்பா...ஒவ்வொரு gadget ட்டும் பார்த்து பார்த்து அழகு படுத்தி இருக்கார்....


8. மேனகா அவர்களின் வலைப்பூ...இதுவும் ரொம்பவும் ஸ்டைலிஷ் ஆக செதுக்கப்பட்ட அழகு வலைப்பூ...

9.ரோஜா பூந்தோட்டம் பாரத் பாரதியின் தற்போது மாற்றியமைக்கப்பட்ட ப்லாக் தோற்றம் செம கலர்புல்...


10.இந்த தோழியின் ப்ளாக்கை நான் முதன் முதலில் பார்த்தபோது டெம்ப்ளேட் மட்டும் பார்த்து அசந்தேன்...ப்லாகின் தோற்றமே ஆன்மீகம்னு உணர்த்தியது..


11.மதிசுதா வின் ப்லாக்...இப்போது புது பொலிவுடன் கலக்கலாய் தோற்றம்...

12.ஜனா ப்லாகின் தோற்றம் வெரி வெரி ப்ரொபெஷனல் டச்...

13.வாரியர் தேவா ப்லாக்.....font சைஸ் ,பொருத்தமான கலர்ன்னு செம நீட்..


14.கணேஷ்...அறிவியல் கதைகள் எழுத்தாளர்:) அதுக்கு தகுந்தமாதிரியே ப்லாக் தோற்றம் வடிவமைப்பு...


ப்லாக் அழகாக்க சில டிப்ஸ்


15.பிலாசபி பிரபாகர் எப்படி தன் ப்லாக்கை அழகாக்கிக்க முயற்சித்தேன்னு இந்த பதிவில் சொல்றார்..

இன்னும் என் பார்வையில் படாத நிறைய அழகு வலைப்பூக்கள் இருக்கலாம்...இருந்தால் பின்னூட்டத்தில் நீங்க லிங்க் தரலாம்...


ok...bye for now...meet you tomorrow..:)))

37 comments:

  1. எப்போதும் நம்ம ப்ளாக் அழகா வைசுக்கணும் னா ஆசை தான் அதே மாதரி தான் நானும் யோசிச்சிட்டே இருப்பேன்....எந்த டேம்லேட் வைச்சா நல்லா இருக்கும்ன்னு நீங்க அதை வைத்தே ஒரு பதிவு போட்டது அதைவிட சூப்பர்.....கலக்குறீங்க

    ReplyDelete
  2. என்னுடைய வலைப்பூவையும் அறிமுகப் படுத்தியதுக்கு நன்றி

    ReplyDelete
  3. வலை ப்பூக்களின் தோட்டத்திற்கு இலவசமாய் அழைத்து சென்றதற்கு ......வாழ்த்துகள்.

    ReplyDelete
  4. இன்று அழகான டெம்பிளேட் ப்ளாக்குகள் பற்றி அலசியிருக்கிறீர்கள். அருமை. அருமை. தொடர்ந்தும் ஜமாய்ங்க.

    ReplyDelete
  5. வலைப்பூக்களுக்கு அறிமுகமும், பிரபலமாக்கலும் தேவை!
    வாழ்த்துகிறேன்! தொடரட்டும் மெச்சத் தக்க சேவை!

    ReplyDelete
  6. //பிலாசபி பிரபாகர் எப்படி தன் ப்லாக்கை அழகாக்கிக்க முயற்சித்தேன்னு இந்த பதிவில் சொல்றார்..
    //

    காதல் இளவரசன் பிரபாகரனுக்கு சொல்லியா தரணும்..

    ReplyDelete
  7. எல்லாருக்கும் எனது வாழ்த்துகள்....

    ReplyDelete
  8. எனது ப்ளாகையும் இதில் இணைத்தமைக்கு நன்றி...

    மற்ற நண்பர்களின் ப்ளாகையும் பார்வையிட்டேன்...உங்களின் தொகுப்பை போல் மிகவும் அழகு...

    நான் எனது ப்ளாக்கை நீங்கள் சொல்வது போல் அதனை ஒரு வீடு போல் தான் வைத்திருக்கேன்... அதிக விட்ஜெட் கள் சேர்ப்பதால் சில நேரங்களில் ப்ளாக் ஓப்பன் டைம் எடுப்பதால் தேவைக்கு மட்டும் வைத்திருக்கேன்

    ReplyDelete
  9. நீங்க அறிமுகப்படுத்திய அழகே அழகு..ரசித்திருக்கிறேன்....

    ReplyDelete
  10. எல்லா வலைப்பூக்களும் நிஜ பூக்களாய்
    அழகு காட்டுகின்றன..!

    என் வலைப்பூ புதிது
    எப்படி இருக்கிறது
    எவ்வளவு மோசம்
    என்று பாருங்கள்???

    www.tamiltel.in

    ReplyDelete
  11. உண்மைதான்..எனக்கும் இதுபோல வைக்க தோன்றுகிறது..ஆனால் நேரமில்லை௧(எவ்வளவு எளிமையான பதில்?)

    ReplyDelete
  12. பொதுவா யாரையும் பாத்தவுடனே அவங்க தோற்றத்தைத்தான் முதலில் கவனிப்போம். அதேபோல, பிளாக்கின் தோற்றத்தை வைத்து வகைப் படுத்தியிருக்கீங்க, வித்தியாசமாருக்கு. வாழ்த்துகள்.

    ReplyDelete
  13. எங்களை வலைச்சரத்தில் அறிமுகப்படுத்தியதற்கு மிக்க நன்றிகள்..

    ReplyDelete
  14. எங்கள் வலைப்பூவின் வடிவமைப்பை பாராட்டியமைக்கு மிக்க நன்றி ஆனந்தி அவர்களே... இதற்கு முன்பு இருந்த வடிவமைப்பு, வலைப்பூ வேகமாக திறக்க தடையாக இருந்தது. தற்போது மற்றம் செய்த பின் சற்று வேகமாக திறக்க முடிகிறது. இப்போது நன்றாக இருப்பதாக உங்களிடம் பாராட்டு பெற்றது மனநிறைவை தருகிறது.

    ReplyDelete
  15. வித்தியாசமான அறிமுகங்கள்....புதுசா யோசிக்கறிங்க....வாழ்த்துக்கள்

    ReplyDelete
  16. ஆனந்தி நீங்கள் சொல்வது உண்மையே
    எனக்கும் முதலில் பிளாக் எத்தனை யோ முறை மாற்றினேன், முதலில் குறிப்பை விட முகப்பு டிசைன்ஸ் கலர் எல்லாம் அட்ராக்டிவா, நீட்டாக இருக்கனும். காம்பினேஷன் முதல்ல நல்ல இருக்கனும் அதான் மெயின் எனக்கு,
    நிறைய முறை மாற்றி ரொம்ப பாடு பாட்டு இருக்கேன், என்ன இதென்ன புடவையா புதுசு புதுசா மாற்ற என்றுசிலர் கிண்டலாக கூட பேசினார்,

    நான் எதையும் கண்டுகொள்ளவில்லை எனக்கு நல்ல இருக்குன்னு மனதில் படும் வரை மாற்றி கொண்டே இருந்தேன்,
    இப்ப தான் ஒகேஎ ஆச்சு அப்படியே கண்டினிவ் ஆகுது.

    //அன்புடன் ஆனந்தி என்னையும் அறிமுகப்படுதியத்தற்குமிக்க நன்றி+ சந்தோஷம் ..//

    ReplyDelete
  17. அக்கா என் ப்ளாக் விட்டுடீங்க (எவ்வளவு கஷ்ட்ட பட்டு டிசைன் பண்ணிருக்கேன் )

    ReplyDelete
  18. வித்தியாசமான அறிமுகம்....

    உண்மையில் இது மற்ற பதிவர்களுக்கு ஒரு தூண்டுகோளாக அமையும்...

    அறிமுகங்களு்க்கு என் வாழ்த்துக்ள்...

    ReplyDelete
  19. //எல்லா வலைப்பூக்களும் நிஜ பூக்களாய்
    அழகு காட்டுகின்றன..!

    என் வலைப்பூ புதிது
    எப்படி இருக்கிறது
    எவ்வளவு மோசம்
    என்று பாருங்கள்???

    www.tamiltel.in //

    ஹாய் மனோவி...உங்க ப்லாக் போயி பார்த்தேன்...header அசத்திட்டீங்க...பல்சுவை ப்லாக் ன்னு சொல்லாமல் சொல்லுது நீங்கள் தொகுத்த படங்கள்...சூப்பர் :))

    ReplyDelete
  20. உண்மையிலேயே அழகான அறிமுகங்கள் தான்..

    ReplyDelete
  21. கலக்குங்க ஆனந்தி.அருமையா தேடியெடுத்திருக்கீங்க !

    ReplyDelete
  22. அருமை!
    உண்மையிலேயே அழகான வலைப்பூக்கள்! அவற்றில் நான் அறிந்தவை சிலவே. இன்றுதான் பல அறிமுகம் எனக்கு! நன்றி அக்கா!

    ReplyDelete
  23. உங்கள் ரசனையே தனிதான்...என்னையும் அறிமுகபடுத்தியதற்க்கு மிக்க நன்றி ஆனந்தி!! வாழ்த்துக்கள்...

    ReplyDelete
  24. படிச்சவங்க கை வண்ணத்த காட்டுறிங்க
    நா....அரைகுறை .முயற்சிக்கிறேன்.

    ReplyDelete
  25. அனைவருக்கும் வாழ்த்துக்கள்!

    ReplyDelete
  26. //எல்லா வலைப்பூக்களும் நிஜ பூக்களாய்
    அழகு காட்டுகின்றன..!//
    பகிர்வுக்குப் பாராட்டுக்களும்,வாழ்த்துக்களும்.

    ReplyDelete
  27. எல்லாருக்கும் எனது வாழ்த்துகள்....

    ReplyDelete
  28. எனது தளத்தையும் அறிமுகம் செய்த ஆனந்தி அக்காவுக்கு நன்றி.. மற்றும் அனைவருக்கும் வாழ்த்துக்கள்.

    ReplyDelete
  29. ஒரு மனுஷனுக்கு டிரஸ் கோட் எவ்வளவு முக்கியமோ. ஒரு புக்கிற்கு அட்டைப்பட்ம் எவ்வளவு முக்கியமோ ,ஒரு சினிமாவுக்கு போஸ்டர் டிசைன் எவ்வளவு முக்கியமோ அவ்வளவு முக்கியம் ஒரு பிளாக்கிற்கு லே அவுட்ட் ரொம்ப முக்கியம்..


    எனக்குத்தெரிஞ்சு வலைச்சரத்துல லே அவுட்டை பேஸ் பண்ணி ஒரு தர வரிசை இப்போ தான் முதன் முதல்.. கிட்டத்தட்ட 80% டிஃப்ரண்ட் பிளாக்ஸை அறிமுகப்படுத்திட்டீங்க.. வாழ்த்துகள்

    ReplyDelete
  30. அப்போ, என் வலைப்பூ அழகா இல்லையா?..அவ்வ்வ்!

    ReplyDelete
  31. அழகான அறிமுகங்கள். வித்தியாசமான அறிமுகங்கள்....

    ReplyDelete
  32. நன்றிங்க ஆனந்தி!! எல்லாமே அழகான பூக்கள்!!

    ReplyDelete
  33. என்னுடைய தளத்தை அறிமுகப்படுத்தியதுக்கு நன்றிப்பா..

    ReplyDelete
  34. நன்றி அக்கா அந்தளவு அழகாகவா இருக்கிறது... ஆனால் அது ஒத்துவருகுதில்லை குமர்ப் பொண்ணுக்கு பட்டுச் சேலை கட்டியது போல கன விசயங்களில் மக்கர் பண்ணுது அக்கா...

    ReplyDelete
  35. அழகமைப்பில் அசத்தும் வரிசையினைத் தந்து அசத்தி விட்டீர்கள் ஆனந்தி. உண்மையிலேயே உங்கள் தேர்வு பிரமாதம். ஓர் ஆலோசனை.. வருட முடிவில் , அழகான வலைப் பூவிற்கு `ஆனந்தி அவார்டு' கூட வழங்கலாம். முதல் பரிசு ஒரு அண்டா மதுரை ஜிகர்தண்டா.. ( இது எப்படி இருக்கு ? ).

    ReplyDelete

தமிழ் மணத்தில் - தற்பொழுது