முத்தமிழ் கவியே வருக! முக்கனிச் சுவையும் தருக!!
➦➠ by:
ஓட்ட வட நாராயணன்
மரணத்தின் பயம்தன்னை மறந்திடு என்றொரு
ரணம் சொட்டும் கவிவடித்தான் சித்தன்!
எங்கே நீ வாழ்ந்தாலும் சாவோன்றே முடிவென்று
செம்மண் தூரிகையில் எழுதுகிறான் ஜித்தன்!
குடிகாரக் கணவன்மேல் கொண்டுவிட்ட பாசம்தனை,
முடியாத துயரத்தில் மூண்டெழுந்த கவிதைதனை
பேரின்பா வலைப்பூவில் கண்டேன்! - கூரம்பாய்
ஓரம்போய் ஒருக்களித்து நின்றேன்!!
ஆளுக்கொரு சாமி வச்சு, அது அதுக்கு கோவில் வச்சு
பாழ் பட்டு போனதொரு கூட்டம் - அந்தப் பாவிகளை
மாற்றிநல்ல பகுத்தறிவை ஊட்டிவிட
எழுதி வைத்தான் இப்பதிவன் காட்டம்!!
மாற்றிநல்ல பகுத்தறிவை ஊட்டிவிட
எழுதி வைத்தான் இப்பதிவன் காட்டம்!!
பூப்பறித்து ஒரு சிறுமி, புரிகின்ற குறும்புகளை
காப்பியமாய் வடித்திடுதல் போலே - இங்கே
கதிர் என்பார் ஆக்கிட்ட கவி விருந்தை
எதிர்கொண்டு படித்திடுக பரவசமாய் நன்றே!
கதிர் என்பார் ஆக்கிட்ட கவி விருந்தை
எதிர்கொண்டு படித்திடுக பரவசமாய் நன்றே!
காதலுக்கு நிறமுண்டாம்! காதல் செய்து பார்க்கட்டாம!!
ஆதலினால் காதல் செய்து, அந்த நிறம் கண்டிடுக!
எண்ணி எண்ணி பார்க்கையிலே இனிக்குமிந்த கவியதனை
ஆதலினால் காதல் செய்து, அந்த நிறம் கண்டிடுக!
எண்ணி எண்ணி பார்க்கையிலே இனிக்குமிந்த கவியதனை
பலபேரும் படிக்கட்டும், பலமாக ரசிக்கட்டும்
எல்லோர்க்கும் இது நல்ல சொத்து!!
வாழ்க்கையின் பாதையிலே தான்விட்ட தவறுகளை
கோர்வையாய் சொல்லுகிறாள் வாணி! - இதைக்
காத்திருந்து படித்திடவே காலம் கூடி வந்தது போல்
ஆர்த்தெழுந்து சென்றிடுவீர் அங்கு!
எல்லோர்க்கும் இது நல்ல சொத்து!!
வாழ்க்கையின் பாதையிலே தான்விட்ட தவறுகளை
கோர்வையாய் சொல்லுகிறாள் வாணி! - இதைக்
காத்திருந்து படித்திடவே காலம் கூடி வந்தது போல்
ஆர்த்தெழுந்து சென்றிடுவீர் அங்கு!
கண்ணோரம் நீர் கொண்டு பார்த்து - அதை
கவிதையிலே வடித்திட்டார் சத்யா!
இது கவர்ன்மேண்டும் சேர்ந்து செய்யும் சதியா?
ஆசைக் கண்ணாளன் , அருமை மணாளன்
போய் விட்டான் பெண்ணிவளைப் பிரிந்து, - அவள்
ஓசைப் படாமல், ஒருத்தருக்கும் சொல்லாமல்
தேம்பித்தான் அழுகின்றாள் திரிந்து!
இக்கதையை கவிதையிலே வடித்திட்டார் பிரஷா
அக்கவிதை படிக்கையிலே இருந்திடுமே Fresh ஆ?
செல்லமாய் சிணுங்கியவள் வெல்லமாய் சுவை தந்தவள்
கள்ளமாய் எங்கோ சென்றாள்! - இவன் கண்களில் வெள்ளமாய்
கழிக்கிறான் பொழுதையே கனவிலும் அவள் முகம் கண்டு!
நல்லதாய் இக்கதை - கவிதையில் வந்தது
பனித்துளி சங்கரால் இன்று!!
காதலியாள் தந்திட்ட கலையாத நினைவுகளை
அசைபோடும் ஓர் மனது இன்று - அதை
கண்டுகொள்ள வந்திடுங்க கவிதைவீதி சௌந்தரிடம்
அவர்போடும் கணக்குகளும் நன்று!!
|
|
கடைசியில் உள்ள மூவர் தவிர்த்து மற்றவர்கள் புதுமுகங்கள்... நன்றி...
ReplyDeletenice introductions!
ReplyDeletegood efforts....Well-done.
ReplyDeleteகலக்கலான அறிமுகங்கள்..
ReplyDeleteஅனைவருக்கும் வாழ்த்துக்கள்.
wow..super...super...
ReplyDeleteஅனைத்து கவிஞர்களுக்கும் மனமார்ந்த வாழ்த்துகள்!!
ReplyDeleteகவிதைக்கு கவிதை! சூப்பர் ரஜீவன்.
ReplyDeleteநன்றி சார்! வித்தியாசமா ட்ரை பண்ணலாம் னு பார்த்தேன்!
வலைச்சரம் இந்த வாரம் வித்தியாசமான அறிமுகங்கள், வித்யாசமான கோணத்தில். கலக்குங்க.///
ReplyDeleteநன்றி சார்! ரொம்ப நன்றி!
அறிமுக படுத்தப்பட்ட அனைவருக்கும் வாழ்த்துக்கள்.
ReplyDeleteகடைசியில் உள்ள மூவர் தவிர்த்து மற்றவர்கள் புதுமுகங்கள்... நன்றி...///
ReplyDeleteஆமாண்ணே! அந்த மூன்று பேர் தவிர ஏனையோர் புதியவர்கள்!! நன்றி உங்கள் வருகைக்கு!!
nice introductions!
ReplyDeleteThanks Vanathi
good efforts....Well-done.
ReplyDeleteThanks sir thanks!
கலக்கலான அறிமுகங்கள்..
ReplyDeleteஅனைவருக்கும் வாழ்த்துக்கள்.///
நன்றி நண்பா!!
wow..super...super...
ReplyDeleteThanks sis......!!
அனைத்து கவிஞர்களுக்கும் மனமார்ந்த வாழ்த்துகள்!!///
ReplyDeleteநன்றி சிவகுமார்! நன்றி!!!
அறிமுக படுத்தப்பட்ட அனைவருக்கும் வாழ்த்துக்கள்.///
ReplyDeleteநன்றி சசி! நன்றி!!
அறிமுகங்கள் அனைவருக்கும் வாழ்த்துக்கள் :-)
ReplyDeleteஅறிமுகங்கள் அனைவருக்கும் வாழ்த்துக்கள்
ReplyDeleteவாய்ப்பே இல்லைங்க! அறிமுகங்களின் கவிதை நல்லா இருக்கும்கறது இரண்டாவது , அறிமுகம் செய்வதற்கு நீங்க பயன்படுத்திருக்கிற கவிதைகள் ரொம்ப அருமையா இருக்கு :-)
ReplyDeleteஇப்படி ஒரு அட்டகாசமான அறிமுக பதிவு அதுவும் கவிஉதை நடையில் நான் படித்ததில்லை..இது ஒரு மைல் கல்லாகும்
ReplyDeleteஅனைத்து அறிமுகங்களுக்கும் வாழ்த்துக்கள்
ReplyDeleteமிக நேர்த்தியான பதிவு
ReplyDeleteபார்ரா! அண்ணன் கவிதைலயே பேசறான்பா! கலக்கல்! அறிமுகங்களுக்கு வாழ்த்துக்கள்!
ReplyDeleteபுதுமுகங்களும் பிரபலங்களும்;- சிறந்த தொகுப்பு ரஜீவன்....
ReplyDeleteசகோ, உங்களுக்கு மரபுக் கவிதை எல்லாம் எழுத வருமா?
ReplyDeleteஅருமையாக இருக்கு சகோ. அகவல் பாவில் கவிஞர்களின் அறிமுகம் கலக்கல்.
கவிதை பாணியில் கவிதைகளை அறிமுகப்படுத்திய நண்பர்க்கு வாழ்த்துக்கள்...
ReplyDeleteஇன்று அறிமுகமான அனைவருக்கும் கவிதை வீதியின் வாழ்த்துக்கள்..
ReplyDeleteவாழ்த்துக்கள்.. கவிஞர்களுக்கும் கவிதை நடையில் அறிமுகப்படுத்திய நண்பன் ஜீவன்க்கும்
ReplyDeleteஅனைவருக்கும் வாழ்த்துக்கள்
ReplyDeleteஓட்ட வடை....செம கலக்கல் பதிவு.
ReplyDeleteஓ.வ.நா.[ஓ.ஆ.மா.யோ]
ReplyDeleteஅவர்களின் அறிமுகங்கள் யாவும் அருமை.
அனைவருக்கும் என் வாழ்த்துக்கள்.
புதுமுகக் கவிகளுக்கு வணக்கம்.அறியத்தந்த வடையண்ணாவுக்கு நன்றியும் !
ReplyDeleteஎன்னையும் அறிமுகம் செய்த வடையண்ணாவுக்கு நன்றி
ReplyDeleteஅனைவருக்கும் வாழ்த்துக்கள்.