07 - 09 - 2015 முதல் ஆசிரியர் பொறுப்பேற்பவர்

ரிஷபன்
இவரின் வலைப்பூ

ரிஷபன்

முந்தைய ஆசிரியர்கள்


சீனா ... (Cheena) - அசைபோடுவது

சிந்தாநதி

நன்றி!

திரட்டிகளின் தொகுப்பு

:: தமிழ் திரட்டுகளின் சங்கமம்<br/>:: Tamil blogs, news, ezines

வலைப்பதிவர் உதவிப்பக்கம்

தமிழில் எழுத மென்பொருள்

fb like

ஞானாலயா = புதுக்கோட்டை

www.gnanalaya-tamil.com
வலைச்சரத்தில் வெளியிடப்படும் இடுகைகள் வலைச்சரக் குழுவினரால் தணிக்கைக்கு உட்படாது. ஆனால், வலைச்சர விதிக்கு உட்படாத இடுகைகளை முன்னறிவிப்பின்றி நீக்க வலைச்சரக் குழுவினருக்கு உரிமை உள்ளது

Tuesday, April 5, 2011

சாப்பிடலாம் வாங்க..




நேற்று என் அறிமுகத்தைப் பார்த்தோம் என் அறிமுகத்தைக் கேட்ட உங்களுக்கு சாப்பாடு போடாம இருந்தா எப்படி அதாங்க உடனே சாப்பாடு ரெடி பண்றேன்...யாரோ நான் சைவம்னு சொல்ற மாதரி கேக்குது.... சைவம் எல்லாம் தனித் தனியா நில்லுங்க....பஃபே சிஸ்டம்மாதிரிங்க உங்களுக்குத் தேவையானதைக் கூச்சப்படமா போட்டுச் சாப்பிடணும் என்ன சரியா..??? என்னங்க அமைதியா இருக்கீங்க சரின்னு சொல்லுங்க...

மேனகா செய்த கேசரி இருக்குங்க சாதாரண கேசரி இல்லைங்க ஆரஞ்சுபழகேசரி ரொம்ப ருசியா இருக்கும்ங்க இறால் வடை இருங்க இருங்க ரெண்டு ராகி தோசை வைச்சு போட்டி(ஆட்டுக்குடல்)குருமா  ஊத்தி சாப்பிட்டு பாருங்க ...சாப்பிட்டுட்டு சொல்லுங்க எப்படி இருக்குன்னு.....



யாருங்க அது சத்தம் போடுறது இருங்க உங்களுக்கு தான் சைவம் ரெடி ஆகுது இதோ சைவம்னு சொன்னதும் திவ்யாம்மா நான் செய்றேன்னு சொல்லி அஞ்சே  நிமிஷத்துல  கேரட்ஹல்வா  செய்துட்டாங்க .ம்ம்ம் எனக்கு ரொம்ப பிடிக்கும்...உங்களுக்கு தரலாமா இல்லை நானே சாப்பிடலாமான்னு பார்க்கிறேன்.. கடலைபருப்புவெல்லபோளி...கொஞ்சம் புளி அடை வைச்சுக்கோங்க...ரெண்டு புளிஅடை வைச்சு   சாப்பிட்டாப் போதுங்க... திவ்யாஅம்மா எல்லாம் நல்லா தான் செய்றாங்க ஆனா என்ன ரொம்ப சமைக்க மாட்டுறாங்க... 

எனக்கு என்ன குழம்பு வச்சாலும்  ரசம் இல்லைனா சாப்பாடே இறங்காதுங்க அந்த ரசம் வைக்கவே சிநேகிதியைக் கூப்பிட்டு வந்து இருக்கேன் கொஞ்சம் இந்த காயல்ஸ்பெஷல்ரசம் குடிச்சு பாருங்க. ரசம் எப்படி இருக்கு தெரியுமா...???அப்படியே இந்த  ஈரல் எலும்பு சூப் கொஞ்சம் குடிங்க உடம்புக்கு நல்லது..


சரி சரி டயட்ல இருப்பவங்களுக்கு புவனேஸ்வரி அக்கா சமையல் அரிசியில்மோர்கூழ் செய்து கொடுத்தாங்க..அதுக்கு கொள்ளுதுவையல்  துவையல் செம டேஸ்ட்ங்க.. ம்ம்ம் நார்ச் சத்து நிறைந்த வெந்தயக் கஞ்சி  எல்லாம் செய்தது வைச்சு இருக்காங்க.. 


அடுத்து டயட் தாங்க என் சமையல் அறையில்  தெய்வசுகந்தி எடுத்து கொண்டு வராங்க கம்மஞ்சோறு&கம்மங்கூழ்   நான் இதுவரை  கம்மங்கூழ் சாப்பிட்டதே இல்லை ..இனி மேல் தான் சாப்பிடப் போறேன்...



இன்றைய பிரபலம்:

ஆசியா உமர் இவங்க வீட்டுக்கு எப்போதும் போனாலும் மட்டன் சிக்கன்னு விதவிதமா செஞ்சு  தருவாங்க நாள் கிழமை எல்லாம் இல்லைங்க எப்போதும் non veg இவங்களிடம் பிடித்ததே இது தான்....உங்களுக்காவே ஸ்பெசலா செய்த வைத்திருக்கும் டிஷ் கிரில்டு சிக்கன் ப்ரெஸ்ட், அடுத்து  ப்லைன் பிரியாணி ரைஸ்&கிரில்டுசிக்கன்,டிக்கா...பிரியாணினா இது தாங்க...இந்தாங்க கொஞ்சம்  வெஜ்தயிர்பச்சடி வைச்சுக்கோங்க.... வேலைப்பளுவுக்கு இடையில் நமக்காக வந்து ரொம்ப அருமையா சமைத்து கொடுத்த ஆசியா உமர் அவர்களுக்கு சிறப்பு நன்றி...


என்னங்க உங்களுக்கு சாப்பாடு எல்லாம் திருப்தியா கிடைச்சுதா...உப்பு புளி காரம் ஏதாவது குறைவா இருந்தா மன்னிச்சுககோங்க....சரிங்க டைம் ஆச்சு நாளைக்கு கதையோடு வரேன் ...வெயிட் ( சாப்ட்டுட்டு வெய்ட் போட்டிராதீங்க ) பண்ணுங்க.....




51 comments:

  1. //என்னங்க அமைதியா இருக்கீங்க சரின்னு சொல்லுங்க...//

    ....சரி சொல்லிட்டேன்..
    அப்போ வர்ட்டா... :)

    ReplyDelete
  2. //யாருங்க அது சத்தம் போடுறது இருங்க உங்களுக்கு தான் சைவம் ரெடி ஆகுது//

    ...நா எப்போ சத்தம் போட்டேன்.. நீங்களே சவுண்ட் விட்டுக்கிட்டு, பில்ட் அப் வேறயா? சரி ரைட்ட்டு..

    கேரட் அல்வா சொல்லிட்டேங்க.. அதனால சும்மா விடுறேன். :)

    ReplyDelete
  3. Ananthi (அன்புடன் ஆனந்தி) said...
    //என்னங்க அமைதியா இருக்கீங்க சரின்னு சொல்லுங்க...//

    ....சரி சொல்லிட்டேன்..
    அப்போ வர்ட்டா... :)///

    வந்தது வந்துட்டீங்க சாப்பிட்டு போங்க...

    ReplyDelete
  4. Ananthi (அன்புடன் ஆனந்தி) said...
    //யாருங்க அது சத்தம் போடுறது இருங்க உங்களுக்கு தான் சைவம் ரெடி ஆகுது//

    ...நா எப்போ சத்தம் போட்டேன்.. நீங்களே சவுண்ட் விட்டுக்கிட்டு, பில்ட் அப் வேறயா? சரி ரைட்ட்டு..

    கேரட் அல்வா சொல்லிட்டேங்க.. அதனால சும்மா விடுறேன். :)///

    சத்தம் போட்டுட்டு இப்போ கேள்வியை பாரு..!!! சரி சரி அந்த கரண்டியை வைச்சுட்டு போங்க

    ReplyDelete
  5. என்னது சாப்பாடு கம்மியா இருக்கு :-))

    ReplyDelete
  6. //சத்தம் போட்டுட்டு இப்போ கேள்வியை பாரு..!!! சரி சரி அந்த கரண்டியை வைச்சுட்டு போங்க//

    ...ஹா ஹா ஹா.. ஹலோ கரண்டி எடுத்தது நான் இல்லிங்கோ..

    அனைவருக்கும் வாழ்த்துக்கள்.. நன்றி சௌந்தர் :)

    ReplyDelete
  7. ஜெய்லானி said...
    என்னது சாப்பாடு கம்மியா இருக்கு :-))////

    எவ்வளவு போட்டாலும் உனக்கு பத்தாதுய்யா...!!!

    ReplyDelete
  8. // சாப்ட்டுட்டு வெய்ட் போட்டிராதீங்க //

    அது, இந்த விருந்துக்கு நீங்க யூஸ் பண்ண பொருட்களோட தரத்தைப் பொறுத்தது..

    ReplyDelete
  9. Madhavan Srinivasagopalan said...
    // சாப்ட்டுட்டு வெய்ட் போட்டிராதீங்க //

    அது, இந்த விருந்துக்கு நீங்க யூஸ் பண்ண பொருட்களோட தரத்தைப் பொறுத்தது..///

    எல்லாம் தரமான பொருள் தாங்க...பயப்படாதீங்க

    ReplyDelete
  10. படங்களே கலக்கல்.... அறிமுகங்கள் அதை விட சிறப்புத்தான். அனைவருக்கும் வாழ்த்துக்கள்!

    ReplyDelete
  11. @@@Chitra மிக்க நன்றி வருகைக்கும் வாழ்த்திற்கும்...

    ReplyDelete
  12. எல்லாம் சூப்பர் மச்சி ......என்ன நீ ஒரு சாப்பாட்டு ராமன்க்றது தெரியுது.........:))

    ReplyDelete
  13. சைவ அசைவ அறிமுகங்களும் சமையலும் அருமை,என்னையும் அறிமுகப்படுத்தியமைக்கு மிக்க நன்றி சௌந்தர்.

    ReplyDelete
  14. நல்லா சாப்பிட்டோம்...பீடா கிடைக்குமா?

    ReplyDelete
  15. சோறு சோறு சாமி சோறு
    சோறு சோறு சாமி சோறு
    சோறு சோறு சாமி சோறு
    சோறு சோறு சாமி சோறு
    சோறு சோறு சாமி சோறு
    சோறு சோறு சாமி சோறு
    சோறு சோறு சாமி சோறு

    ReplyDelete
  16. karthikkumar said...
    எல்லாம் சூப்பர் மச்சி ......என்ன நீ ஒரு சாப்பாட்டு ராமன்க்றது தெரியுது.........:))///

    அப்படியெல்லாம் இல்லை மச்சி...சாப்பாடுண்ணா என்னனு கேப்பேன்

    ReplyDelete
  17. ஷர்புதீன் said...
    :)//

    நன்றி..!!!

    ReplyDelete
  18. siya omar said...
    சைவ அசைவ அறிமுகங்களும் சமையலும் அருமை,என்னையும் அறிமுகப்படுத்தியமைக்கு மிக்க நன்றி சௌந்தர்.///

    வருகைக்கு மிக்க நன்றி....

    ReplyDelete
  19. தமிழ்வாசி - Prakash said...
    நல்லா சாப்பிட்டோம்...பீடா கிடைக்குமா?///

    கிடைக்கும் கிடைக்கும்....ரொம்ப நன்றிங்க...!!!

    ReplyDelete
  20. ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) said...
    சோறு சோறு சாமி சோறு
    சோறு சோறு சாமி சோறு
    சோறு சோறு சாமி சோறு
    சோறு சோறு சாமி சோறு
    சோறு சோறு சாமி சோறு
    சோறு சோறு சாமி சோறு
    சோறு சோறு சாமி சோறு////


    ஆமா ஆமா பொறுமையா சாப்பிடுங்க...பாத்து அந்த தண்ணியை குடிங்க...!!!

    ReplyDelete
  21. ஹி ஹி .. சாப்பாடு நல்லாத்தான் இருக்கு :-)

    ReplyDelete
  22. என்ன தம்பி முகூர்த்தத்துக்கு முன்னாடியே சோறு போட்டுட்ட? சரி சரி நல்லாதான் இருக்குது இந்த விருந்தும் :)

    ReplyDelete
  23. ஹி..ஹி..ஹி.. பலமான விருந்துகளுடன்... சாப்பாடும் அருமை..!!! ஹி..ஹி...

    ReplyDelete
  24. சமையல் குறிப்பு எழுதுபவர்களின் இணைப்புகளை சீராக தொகுத்து அறிமுகப்படுத்திய விதம் அருமை சவுந்தர்..!!! கலக்குங்க...

    ReplyDelete
  25. //ஜெய்லானி said...
    என்னது சாப்பாடு கம்மியா இருக்கு :-))//

    எங்கே சாப்பாடுன்னாலும் ஒட்டகத்தை அப்பிடியே விட்டுட்டு ஓடி போயிடுராய்யா....

    ReplyDelete
  26. நான் நான்வெஜ் ஆளுங்கோ....
    ம்ம்ம் அன்லிமிடெட் ஆளுங்க எல்லாம் என் பக்கம் வந்துருங்க....

    ReplyDelete
  27. ஐயோ...படங்களையும்,குறிப்புகளையும் பார்க்கும்போதே செம எச்சில் ஊறுது:))) நடத்து...நடத்து...;)))

    ReplyDelete
  28. அறிமுகத்திற்க்கு மிக்க நன்றி சௌந்தர்!! நீங்க போட்ட சாப்பாட்டை நல்லா சாப்பிட்டேன்...

    ReplyDelete
  29. படம் எல்லாம் சூப்பரா இருக்குதுங்க!! என்னையும் அறிமுகப்படுத்தியதற்கு நன்றி!!

    ReplyDelete
  30. எல்லா மெனுவும் ஓ.கே.. எனக்கு ஒரே ஒரு டவுட் இருக்கு தம்பி..........!!!! சமையல் குறிப்பு கொடுத்து இருகவுக எல்லாம் நெசமாவே சமைக்க தெரிஞ்சவுகளா இல்லை.......ச்ச்சும்மா குறிப்ப கொடுத்து நம்மள டெஸ்ட் பண்றாங்களா...ஹா ஹா ஹா

    ஜோக்ஸ் அப்பார்ட்........கிரேட் கலெக்சன்........உழைப்பு தெரிகிறது... (சாப்பாடுன்னா யாருதான் உழைக்கமாட்டா...அவ்வ்வ்வ்வ்வ்வ்)

    ReplyDelete
  31. அன்லிமிட்டட் மீல்ஸ் இருந்தா வர்ரேன்........

    ReplyDelete
  32. ஆமா எல்லாமே லேடிஸ் சமையலா இருக்கே? ஒரு ஆண்பதிவர் கூட சமையல் குறிப்பு எழுதலியா? என்ன ஒரு பெண்ணாதிக்கம், சே.. ஆணாதிக்கம்....?

    ReplyDelete
  33. //////MANO நாஞ்சில் மனோ said...
    நான் நான்வெஜ் ஆளுங்கோ....
    ம்ம்ம் அன்லிமிடெட் ஆளுங்க எல்லாம் என் பக்கம் வந்துருங்க....
    /////////

    மக்கா இதுலாம் வெறும் சைடு டிஸ்தான், நீ மெயின் டிஸ்சுக்கு ஏற்பாடு பண்ணுய்யா...........!

    ReplyDelete
  34. ///////ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) said...
    சோறு சோறு சாமி சோறு
    சோறு சோறு சாமி சோறு
    சோறு சோறு சாமி சோறு
    சோறு சோறு சாமி சோறு
    சோறு சோறு சாமி சோறு
    சோறு சோறு சாமி சோறு
    சோறு சோறு சாமி சோறு//////////

    கன்பர்ம் பண்றாம்பாரு.........!

    ReplyDelete
  35. கோமாளி செல்வா said...
    ஹி ஹி .. சாப்பாடு நல்லாத்தான் இருக்கு :-)////

    ரொம்ப நன்றிங்கோ....

    ReplyDelete
  36. அருண் பிரசாத் said...
    என்ன தம்பி முகூர்த்தத்துக்கு முன்னாடியே சோறு போட்டுட்ட? சரி சரி நல்லாதான் இருக்குது இந்த விருந்தும் :)///

    நாங்க எப்பவும் வந்தவங்களு சாப்பாடு போட்டுட்டு தான் மறுவேலை அதான்...விருந்துக்கு வந்ததற்கு ரொம்ப நன்றி...அண்ணா...!!!

    ReplyDelete
  37. பிரவின்குமார் said...
    சமையல் குறிப்பு எழுதுபவர்களின் இணைப்புகளை சீராக தொகுத்து அறிமுகப்படுத்திய விதம் அருமை சவுந்தர்..!!! கலக்குங்க...////

    மிக்க நன்றி வருகைக்கும் கருத்திற்கும்...

    ReplyDelete
  38. MANO நாஞ்சில் மனோ said...
    நான் நான்வெஜ் ஆளுங்கோ....
    ம்ம்ம் அன்லிமிடெட் ஆளுங்க எல்லாம் என் பக்கம் வந்துருங்க....///

    iii நீங்க நான் வெஜ்ன் சொல்றீங்க ஆனா அசைவம் பக்கம் நீக்குறீங்க... :))) சரி சரி கறி உங்களுக்கு தான் :)

    ReplyDelete
  39. romba thanks soundar. Eluthuvatharkku neram kidaippathu illai. papavuku school leave vittachu avva kooda aadave neram correcta irukku. thanks

    ReplyDelete
  40. ஆனந்தி.. said...
    ஐயோ...படங்களையும்,குறிப்புகளையும் பார்க்கும்போதே செம எச்சில் ஊறுது:))) நடத்து...நடத்து...;)))////

    ரொம்ப ரொம்ப நன்றி நல்லா சாப்பிடுங்க எல்லாம் உங்களுக்கு தான்...!!!

    ReplyDelete
  41. ஓ.வ.நாராயணன் ஓனர் ஆப் மாத்தியோசி said...
    super. .. i like it so much///

    thank you so much ....

    ReplyDelete
  42. S.Menaga said...
    அறிமுகத்திற்க்கு மிக்க நன்றி சௌந்தர்!! நீங்க போட்ட சாப்பாட்டை நல்லா சாப்பிட்டேன்...////

    ரொம்ப ரொம்ப நன்றி.... சாப்பாடு நல்லா இருந்ததா...???

    ReplyDelete
  43. தெய்வசுகந்தி said...
    படம் எல்லாம் சூப்பரா இருக்குதுங்க!! என்னையும் அறிமுகப்படுத்தியதற்கு நன்றி!!////

    ரொம்ப நன்றிங்க படத்தை ஒருத்தங்க செலக்ட் பண்ணி கொடுத்தாங்க....

    ReplyDelete
  44. dheva said...
    எல்லா மெனுவும் ஓ.கே.. எனக்கு ஒரே ஒரு டவுட் இருக்கு தம்பி..........!!!! சமையல் குறிப்பு கொடுத்து இருகவுக எல்லாம் நெசமாவே சமைக்க தெரிஞ்சவுகளா இல்லை.......ச்ச்சும்மா குறிப்ப கொடுத்து நம்மள டெஸ்ட் பண்றாங்களா...ஹா ஹா ஹா

    ஜோக்ஸ் அப்பார்ட்........கிரேட் கலெக்சன்........உழைப்பு தெரிகிறது... (சாப்பாடுன்னா யாருதான் உழைக்கமாட்டா...அவ்வ்வ்வ்வ்வ்வ்)///


    எல்லா ப்ளாக்ல தான் டிப்ஸ் தருவாங்க வீட்டில் நாம தான் சமைக்கணும்....!!!!வருகைக்கும் கருத்திற்கும் ரொம்ப நன்றி அண்ணா..!!!

    ReplyDelete
  45. Super Intros Soundar... got some nice recipes in one stop...thanks for compiling...good one...:)

    ReplyDelete
  46. பன்னிக்குட்டி ராம்சாமி said...
    அன்லிமிட்டட் மீல்ஸ் இருந்தா வர்ரேன்........///


    இங்க எதுவும் லிமிட் இல்லை எல்லாமே அன் லிமிட் தான்...!!!!

    ReplyDelete
  47. பன்னிக்குட்டி ராம்சாமி said...
    ஆமா எல்லாமே லேடிஸ் சமையலா இருக்கே? ஒரு ஆண்பதிவர் கூட சமையல் குறிப்பு எழுதலியா? என்ன ஒரு பெண்ணாதிக்கம், சே.. ஆணாதிக்கம்....?////

    ஆமா ஒரு ஆண் பதிவர் கூட இல்லை நானும் எவ்வளவு தான் தேடி பாக்குறது...!!!!

    ReplyDelete
  48. திவ்யாம்மா said...
    romba thanks soundar. Eluthuvatharkku neram kidaippathu illai. papavuku school leave vittachu avva kooda aadave neram correcta irukku. thanks///

    rompa rompa thanks ka.....

    ReplyDelete
  49. அப்பாவி தங்கமணி said...
    Super Intros Soundar... got some nice recipes in one stop...thanks for compiling...good one...:)///

    thanks thanks thanks.... :)

    ReplyDelete

தமிழ் மணத்தில் - தற்பொழுது